May 20, 2009

கூட்டுப்பொரியல்

சில ஹைக்கூக்கள்

அகிலஉலகமே என்னுள்
அடக்கம்
கூகுள்

அகத்தின் அழகு முகத்திலே தெரியும்
கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்

இருக்க இடம் கொடுத்தால்
படுக்க பாய் கேட்ப்பான்
வைரஸ்

ஒரு கவிதை


முதல் சந்திப்பில்
முற்றும் இழந்தபின்
முழுதும் அவள்தானென
மூடிவிட்டேன்..
முகங்களைத் தேடும் முயற்சிகளை..


சில கடிகள்

"'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்கார‎ன்'னு சொ‎ன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு"

"ஏ‎ன்.. என்னாச்சு?"

"அவ‎ன் கேரளாக்கார‎ன். அங்கே 'பட்டி'‎ன்னா நாயாமே!!"


ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டுப் பார்க்கிறேன்... கையிலே காசில்ல.

ஐய்யோ! அப்புறம்?

அப்புறம் என்ன? பையிலிருந்து எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.

யுவர் ஆனர்...
மிகவும் ஒல்லியான என் கட்சிக்காரர்மீது
குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ்
வழக்கு பதிவு செய்தது செல்லாது
என தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


காட்டு வழியா 10 பேர் போய்ட்டு இருந்தாங்க. அந்த வழியா வந்த
சிங்கம் 6 பேரை கொன்னுட்டு 4 பேரை மட்டும் விட்டுட்டு. ஏன்?

ஏன்னா அவங்க 4பேரும் Lyons Club Member ஆச்சே.


பெயிண்ட் ஏன் அழுகிறது
பெயிண்ட் ஐ நாம அடிக்கிறோம்ல அதான்


ஐப்பசியில எல்லாருக்கும் இலவசமா டிபன் கிடைக்கும் ஏன்?
ஐப்பசில தான் `அடை` மழை பெய்யுமே...
.
.
.

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"அவ‎ன் கேரளாக்கார‎ன்.//

ஹா... ஹா...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

இராகவன் நைஜிரியா said...

// பெயிண்ட் ஏன் அழுகிறது
பெயிண்ட் ஐ நாம அடிக்கிறோம்ல அதான்//

:)

Anonymous said...

ஹாய் வசந்த் உண்மையாவே உங்க ரசனை something different அட்டகாச ஹைகூ....அமைதியா ஒரு கவிதை வயிறு வலிக்க சிரிக்க நகைச்சுவை எல்லாம் கலந்து nice breakfast

கலையரசன் said...

நல்ல கூட்டுபொறியலுங்கோ...
சாப்பாடு எப்ப போட போறீங்க வசந்த்?
www.kalakalkalai.blogspot.com

சுந்தர் said...

ஹை கூ , அருமை. கடி வலிக்குது

ஜெட்லி... said...

அருமையான பொறியல்.....
நம்ம பொடிமாஸ் வந்து பாருங்க...


http://nee-kelen.blogspot.com/2009/05/blog-post_20.html

கார்த்திகைப் பாண்டியன் said...

அநியாயத்துக்கு கடியப் போட்டு இருக்கீங்களே நண்பா..;-)கவிதை நல்லா இருக்கு

ரமேஷ் வைத்யா said...

thambi,
nallaa irukku. Lions spelling thiruththavum.

தீப்பெட்டி said...

செம கடி...

தேவன் மாயம் said...

கடி அருமை!! வலிக்காத கடி!!

நட்புடன் ஜமால் said...

\\முதல் சந்திப்பில்
முற்றும் இழந்தபின்
முழுதும் அவள்தானென
மூடிவிட்டேன்..
முகங்களைத் தேடும் முயற்சிகளை.\\

மிக அருமை நண்பரே.


தங்களை அறிமுகம் செய்த தமிழரசிக்கும் நன்றி.

வால்பையன் said...

எல்லாமே நல்லாயிருக்கு வசந்த்!

தொடர்ந்து கலக்குங்க!

அப்புறம் இன்றைய அழகின்னு ஒரு கிழவி படம் வச்சிருக்கிங்க மாத்துங்க!

Anonymous said...

ஹாய் வசந்த் உங்களைத் தொடர்பதிவு எழுத அழைத்துள்ளேன்...தொடரவும் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சுரேஷ்

ராகவன்

தமிழ்

கலயரசன்

ஜெட்லி

சுந்தர் தேவன்மாயம்

ஜமால்

கார்த்திகை பாண்டியன்

தீப்பெட்டி

வால் பையன்

ரமேஷ்வைத்தியா