பிறந்த போது குடும்பத்துக்கு
சுமையென பெற்றோரால்
தள்ளிவைக்கப்பட்டேன்
திருமணத்திற்க்கு பிறகு
பிள்ளைகள் எனும் சுமைகளை
சுமந்தேன்
இப்போதும் அதே பிள்ளைகளால்
வீட்டுக்கு சுமையென தூக்கி எறியப்பட்டு
வயிற்று பசிக்கு
சுமைகளை சுமக்கிறேன்
தேவியே இன்னும் எத்துணை
தினங்களுக்கு
எனக்கும் சுமைக்குமான பந்தம்......
மண் என்னை சுமக்கும் வரையிலுமா?
16 comments:
படம்... இடுகைக்கு வலு!
படமே சொல்லுது செய்தி..
அருமை வசந்த் ..படம் உட்பட
அருமை
really touchable...
படம் தேர்வும் அதற்கான உங்கள் சிந்தனையும் ஈர்ப்புடையதாக இருக்கின்றது.
படத்துக்கான கவிதையா?
கவிதைக்கான பட்மா?
கூட்டணி அபாரம்
மிகவும் ரசித்தேன் வசந்த்...
"எனக்கும் சுமைக்குமான பந்தம்......
மண் என்னை சுமக்கும் வரையிலுமா?"
மனதைத் தொடுகிறது.
என்ன நண்பரே படிப்போர் மனதில் சுமையை இறக்கி வைத்துவிட்டீர்களே.....
மனதை தொட்டது.. வலிக்குது ஒரு தாயின் புலம்பல்.. இதி நிதர்சனம்
அருமை தல
மனதை தொட்டது.
படிக்கும் போதே கண்கள் ஈரமாகிறது வசந்த்... கவிதையும் படமும் அருமை...
அருமை நண்பா.. பாரத்தை சொல்லும் வரிகள்
ரொம்ப அருமையான மனதை தொடுற வரிகள்.வாழ்த்துக்கள் அண்ணா..!!.படமும் நல்ல இருக்கு அண்ணா..
நன்றி
@பழமைபேசி
@வினோத் கெளதம்
@கிரி
@திகழ்மிளிர்
@கிஷோர்
@முத்துராமலிங்கம்
@சுரேஷ்
@வேத்தியன்
@மாதேவி
@குணா
@அபு
@அருணா
@ நாணல்
@ கார்த்திகேய பாண்டியன்
@தென்றல்
Post a Comment