June 26, 2009

சக்கரம் @ மோசடி

முதன் முதலில் சிறுகதை பக்கம் நான்.......

சக்கரம் @ மோசடி

ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அது 9ஆம் வகுப்பு வகுப்பறையில் அமைதி நிலவியது.மாணவர்கள் ஆசிரியர் நடத்திய பாடங்களுக்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தனர். வகுப்பு முடிந்தது.

கலை இவன் ஆர்வக்கோளாறு மிக்கவன்...ஆதி இவன் அவனுக்கு அடுத்தபடி... இவர்கள் இருவரும் ஆசிரியர் நடத்தியஅறிவியல் பாடங்களை அசை போட்டபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்

முதல்ல ஆதி கலைகிட்ட டேய் கலை நம்ம ஆசிரியர் அறிவியல் பாடத்துல பலபேரு பல பொருட்கள் கண்டு பிடித்ததை பார்த்து எனக்கு சில பொருட்கள்கண்டுபிடிக்க வேண்டும் என்றுதோணுதுடா...

என்னடா ஆதி?

நம்ம நண்பன் அறிவழகன பாத்தியா கால் ஊனமா நொண்டி நொண்டி நடக்குறான்...

ஆமா அதுக்கென்ன இப்போ?

இல்லடா அவன் அப்படி நடக்கும்போது என் மனசு நெருடுதுடா..

இந்த மாதிரி நடக்குறவங்களுக்கு,கால் இல்லாதவங்களுக்கு ஒரு மருந்து கண்டுபிடிச்சா எப்படி இருக்கும்? கால்ல இந்த மருந்து தடவுன உடனே கால் சரியாடுற மாதிரி...

நல்லாத்தாண்டா இருக்கும் ஆதி...!?

ஆனா நம்ம சமூகத்துல இந்த மருந்த கண்டுபிடிச்சவன் இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு ரைட்ஸ் வாங்கி வச்சுட்டு ஏதாவது நல்ல பணமுள்ள கம்பெனிக்கு நல்ல விலைக்கு வித்துடுவான்...

இப்பிடியெல்லாம் நடக்குமாடா கலை?

பின்ன என்ன நான் இது மாதிரி கண்டுபிடிப்பாளர்கள் வரலாறு படிக்கும்போது நிறைய பேரு இது மாதிரி தாண்டா பண்ணி நல்லா காசு சம்பாதிச்சுருக்காங்க...

அப்பிடியாடா?

ஆமாடா ஆதி இந்த கண்டுபிடிப்பை வாங்கி மருந்து தயாரிக்குற கம்பெனி முதல்ல நல்ல முறையில தயாரிப்பாங்களாம் பின்ன அதோட வளர்ச்சிய பொருத்து அதன் விலையை ஏற்றிவிடுவார்களாம் அதுக்கப்பறம் அதுல கலப்படம் கலந்து கொள்ளை லாபம் சம்பாதிப்பார்களாம்.

இது மாதிரியெல்லாம் பண்ணுறதுக்கு அவங்க மன சாட்சி ஓத்துகிடாதாடா கலை?

டேய் இதெல்லாம் இந்தகாலத்துல சர்வ சாதாரணமா நடக்குதுடா ஆதி...

சரிடா கலை அப்ப நாம இப்பிடி கண்டு பிடிப்போம் உலகத்துல இது மாதிரி கொள்ளையடிப்பவர்களை கண்டிபிடிக்குறதுக்கு ஒரு மெஷின் தயாரிக்கலாம்!...

போடா டேய் அவங்க அதையும் லஞ்சம் கொடுத்து வாங்கிடுவாங்கடா!..

என்ன தாண்டா பண்ணுறது?

சரி லஞ்சம் வாங்குறவங்கள கண்டுபிடிக்குறதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கலாம்!...

டேய் அவங்க அதெல்லாம் போலீஸ் மூலமா ஒழிச்சுக்கட்டிடுவாங்கடா?

அய்யோ எப்பிடியெல்லாம் முறைகேடு பண்ணுறாங்கடா கலை?

சரி அதையும் விட்டுத்தள்ளு அந்த மாதிரி முறைகேடா நடக்குறவங்கள கண்டு
பிடிச்சு அரசுக்கு தெரியப்படுத்துற மாதிரி ஒரு ஒரு மெஷின் கண்டுபிடிக்கலாமா?

அதையும் அரசுஅதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒண்ணுமேயில்லாம பண்ணிடுவாங்கடா!...

சரி விடு லஞ்சம் வாங்குற அதிகாரிகள கண்டுபிடிக்க மெஷின் கண்டு பிடிச்சுடலாம்...

அதையும் அரசியல்வாதிகள் மூலமா தடுத்துடுவாங்கடா!...

இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல எங்கப்பா லாயர் தான கோர்ட்ல கேஸ் போட்டுட்டா என்ன பண்ணுவாங்க?

அங்க எங்கப்பாதானே ஜட்ஜ் அவரையும் உங்கப்பாவையும் கூட நம்மள கடத்தி கொண்டு போய் வச்சு மிரட்டி கேஸ் ஒண்ணும் இல்லாம பண்ணிடுவாங்க!...

திரும்ப நம்ம ஆரம்பிச்சது நம்மகிட்டயே முடியுது பாத்தியா இதுதாண்டா மோசடி வாழ்க்கை ....

அப்ப இதுக்கு என்னதாண்டா வழி?

ஒண்ணுமே பண்ண முடியாதாடா?

திருடனா பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மாதிரி இதுக்கு லஞ்சம் வாங்குறவங்களும் கொடுக்குறவங்களும் இருக்குறவரை மக்களுக்கு நல்லது நடக்காதுடா ஆதி..

சரியா சொன்னடா கலை ...



11 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நாந்தான் முதல்ல

கதை நல்லா போய்க்கிட்டுருக்கு....

இராகவன் நைஜிரியா said...

நான் தான் இரண்டாவாதாக வந்தேன்..

கதை நல்லா கீதுப்பா..

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்

நசரேயன் said...

வாழ்த்துக்கள்.. வெற்றி பெற

அப்துல்மாலிக் said...

நல்ல கருத்து உங்க கதையோட்டத்தில்

முதல் கதையா நல்லாயிருக்கு

வெற்றிபெற வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கருவிப் பட்டையை எப்படி தல கீழே கொண்டுவருவது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உரையாடலிலேயே கதை

வாழ்த்துக்கள்

கடைசியில் எம்.ஜி.ஆர். பன்ஞ்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து.!!

அப்பாவி முரு said...

கதையும், கருத்தும் நன்றாக உள்ளது வசந்த்.

மயாதி said...

விததியாசமாகவே சிந்திப்பது வசந்த் பன்ச்...

முதல் கதையா ?

கலையரசன் said...

தினமும் ஒரு பதிவா?
எப்படிதான் முடியுதோ...

என் பேர வச்சி கதை எழுதிட்ட,
ஹூம்.. வேற என்ன சொல்ல?
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு!!

Anonymous said...

வாழ்த்துக்கள்..வெற்றிப்பெற...
நல்ல முயற்சிப்பா...அதுவும் எடுத்து இருக்க கரு நல்லாயிருக்கு....