August 31, 2011

தக்கர் தக்க தக்க தும் - வேலாயுதம் பாடல் விமர்சனம்

வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் அத்தனை சிடிக்களும் விற்றுத்தீர்ந்து சாதனை படைத்திருக்கிறது வேலாயுதம் படத்தின் பாடல் சிடிக்கள்.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் இளையதளபதி விஜய் , ஜெனிலியா , ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் , இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசையில்,தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் வேலாயுதம் திரைப்படத்தின் பாடல்கள் பற்றிய ஒரு பார்வை.




1.இரத்தத்தின் இரத்தமே 




''இரத்தத்தின் இரத்தமே
என் இனிய உடன்பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உடன் பிறப்பே..!''

அண்ணன் தங்கைக்கிடையேயான சகோதர பாசத்தை விளக்கும் பாடல், ஹரிச்சரண் , மதுமிதா பாடியிருக்கிறார்கள் , கவிஞர் அண்ணாமலை பாடலை எழுதியிருக்கிறார் விஜய் ரசிகர்களுக்கு என்று எழுதப்பட்ட பாடலைப்போல் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம் , உணர்ச்சிவசமான பாடல்.

Rating : 4.5/5



-------------------------------------------------------------

2. முளைச்சு மூணு இலைய விடல





''முளைச்சு மூணு இலைய விடல
தருவேன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்காய்
உன்காது அவரைக்காய்
மூக்கு மொளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய்த்தோட்டம் நீதானா ?''

ரசித்து எழுதியிருக்கிறார் கவிஞர் விவேகா , பிரசன்னா , சுப்ரியா ஜோஷி பாடியிருக்கிறார்கள் , மெலடி ரகம் யாராக இருந்தாலும் முதல் தடவை கேட்டதும் மிகப் பிடித்துப்போகும் , மெலடி பாடல் விரும்பிகள் ரிப்பீட்டடடா கேட்டுக்கிட்டே இருக்கப்போறாங்க குடும்பத்திலுள்ள அனைவராலும் விரும்பி கேட்கப்படும் பாடலாக அமையும் எனபதில் சந்தேகமில்லை.

பாடலில் பிடித்த வரி

''மேடான பள்ளத்தாக்கே 
மிதமான சூறைக்காற்றே 
முடியாத எல்லைக்கோடே 
முத்தச்சூடே..!''


''முழுசு முழுசா
என்னை முழுங்க நினைக்கிறியே
உடம்ப முறுக்கி வளையலை நொறுக்கி
கதைய முடிக்கிறியே..!''

Rating :5/5



-------------------------------------------------------------



3.சில்லாக்ஸ் 





''மஞ்சநெத்தி மரத்துக்கட்ட
மைய வச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட
ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும் உருட்டுக்கட்ட
கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட''


''சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ்''

இந்த பாடலை எழுதியவர் அண்ணாமலை , கார்த்திக்கும் ,சாருலதா மணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.வழக்கம்போலவே விஜய் ஆண்டனியின் குத்துப்பாடல்கள் ஆட்டம்போடவைக்கும் , அதில் இந்தப்பாடலில் விஜயும் சேர்ந்து இருப்பதால் குத்துப்பாடல் விரும்பிகளுக்கு மிகப்பிடித்தமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகள், திருவிழா மேடை நடனங்களில் இந்தப்பாடல் அதிகம் இடம்பெறலாம், குழந்தைகள் இனி சில்லாக்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பதை பார்க்கலாம்.இந்தப்பாடலில் கொஞ்சம் வேட்டைக்காரன் கரிகாலன் பாடல் வாசம் வீசுகிறது..!

Rating : 4.5/5



-------------------------------------------------------------



4.மாயம் செய்தாயோ



''தக்கர் தக்க தக்க தும்
மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல வந்தாயோ
பதில் சொல்லவந்தாயோ''

என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலை எழுதியவர் கவிஞர் விவேகா, சங்கீதா ராஜேஸ்வரன் தனது ரொமாண்டிக்கான குரலில் பாடியிருக்கிறார் வசியம் செய்கிறது இவரது குரல் , எந்தப்பாடல் மாதிரியும் இல்லாமல் புதுவிதமாகவே இருக்கிறது , இளைஞர்கள் இளைஞிகளுக்கு மிகப்பிடிக்கும் எஃப் எம் , இசைச்சேனல்களில் அதிகமுறை இடம்பெற்று சாதனை புரியலாம்.

பாடலில் பிடித்த வரிகள் .

''நாணச்செடி வளரும் தோட்டமானேன்
யானை வந்து போன சோலையானேன்''

Rating : 5/5


-------------------------------------------------------------


5. சொன்னாப்புரியாது 



''சொன்னாப்புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கள்லாம் எம்மேல வச்ச பாசம்
ஒண்ணா பொறந்தாலும் இதுபோல இருக்காது
நான் உங்கக மேல எல்லாம் வச்ச நேசம்''

விஜயோட ஓபனிங் பாடல் எப்பவுமே மாஸ் ஹிட் ஆகும் அந்த வரிசையில் இந்தப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம் பாடலை சிவ சண்முகம் எழுதியிருக்கிறார் ரசிகர்கள் தியேட்டரில் ஆட்டம் போடவைக்கும் குத்துப்பாடல்.பாடலை விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார், வீர சங்கர் பாடலின் ஆரம்பத்தில் பாடியிருக்கிறார் அந்த இடத்தில் ரசிகர்களுக்கு விஜய் சாமி பிடித்து ஆடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

பாடலில் பிடித்த வரிகள்

''தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கனந்தான் இருந்ததில்லை''


''தாரை தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டந்தான் போட்டதில்லை''

Rating : 5/5

6.வேலா வேலா வேலாயுதம் என்ற தீம் சாங்கும் கேட்க நன்றாக இருக்கிறது இதை விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார் .

-------------------------------------------------------------

இசை வெளியீட்டுவிழா ஒரு பார்வை..!

தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா முதன் முறையாக மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் ரசிகர்களாலே வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியது.



வெறும் இசை வெளியீடாக மட்டுமின்றி ஏழை எளியவர்களுக்கு இலவச கணிப்பொறி, தையல் மெஷின்கள், பசு என்று நலத்திட்ட உதவிகளும் விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது.



வரப்ப மிதிச்சு ராப்பகலா உழைச்சு 
வாழற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோஷப்படுத்த
தப்பு நீ செஞ்சாலும் ரைட்டு மச்சி..!








Courtesy : http://www.facebook.com/VijayTheActor




August 25, 2011

Deer Prema...! - ரதி வீதி பாகம் - 2



நீண்ட நாட்களாக பிரேமாவை பார்க்கவில்லையென்பதால் அவளைப்பற்றிய நினைவுகளை ஒரு கடிதத்தில் எழுதி அவள் படிக்கும் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைத்து அவளின் பதில் கடிதத்திற்கு காத்திருந்த நேரம் தொலைபேசி அழைப்பு , அவள்தான் எடுத்ததும் ''என்னை பிடிச்ச பிசாசே கடுதாசி எழுதுறீங்களாக்கும் கடுதாசி , அதென்ன கடுதாசி முழுவதும் தமிழ்ல எழுதிட்டு ஆரம்பிக்கறப்போ மட்டும் Dear Prema அப்படின்னு எழுதாம a வரவேண்டிய இடத்துல e போட்டு Deer Prema அப்படின்னு இங்க்லீஷ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதியிருக்க , ஃப்ரண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டு செம கிண்டல் பண்ணிட்டாங்க எப்பவும் போலவே 'ப்ரிய பிரேமா'ன்னு எழுதியிருக்கலாம்தானேடான்னு'' கொஞ்சலாக கேட்டவளிடம் ''அவங்களுக்குத்தான் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா தெரியுதுன்னா உனக்குமா புரியலை ? யென்றதும், 'ம்ஹ்ஹும் அப்படியென்ன இருக்கு அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல' என்று கேட்டவளிடம், ''துள்ளி ஓடுற மானுக்கு இங்க்லீஷ்ல Deerன்னு அர்த்தம்'' என்றேன் புரிந்து கொண்டவளின் 'இச்'சை அப்படியே எனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தது தொலைபேசி..!

'டேய் வர்ற நவம்பர்09 செமஸ்டர்முடிஞ்சு ஊருக்கு வர்றேன்'னு அவள் சொன்னதிலிருந்து மனது வானத்துக்கும் பூமிக்கும் ராட்டினம் ஆடிக்கொண்டிருந்தது, நவம்பர் 10  என் வீட்டிற்கு வந்தவள் என் அம்மாவிடம் ''அத்தை நான் ஊருக்கு வர்றேன்னு சொல்லியிருந்தும் உங்க புள்ளை என்னை கூட்டிட்டு வர்றதுக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கம் கூட வரலை என்னாச்சு உங்க புள்ளைக்கு ? என்னை நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துட்டாரா?''அப்படின்னதும் 'அவன்கிட்டயே கேளும்மா'ன்னு அம்மா சொன்னங்க,முகம் சிவந்த கோவத்துடன் என் பக்கம் திரும்பியவளிடம், ஹும் உன்னை கூப்பிடத்தான் பஸ் ஸ்டாண்ட் வந்தேன் அங்க இருக்குற டைம் கீப்பர்கிட்ட நீ வரும் பஸ் பேர் சொல்லி எப்போ வரும்ன்னு கேட்டேன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னுட்டான்னு அப்பாவியாக சொன்னேன் , அப்படி என்ன பஸ் பேர் சொன்ன அவன்கிட்டன்னு கேட்டவளிடம் அதுவா ''ரதி ட்ரான்ஸ் போர்ட் எப்போ வரும்ன்னுதான்'' கேட்டேன் , அதுக்குத்தான் அவன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னு பதில் சொன்னான் கோவத்துல வீட்டுக்கு வந்துட்டேன்ன்னேன், நீயே சொல்லு ''நீ வரும் பஸ் ரதி ட்ரான்ஸ்போர்ட்டா மட்டும்தானே இருக்கும்''ன்னதும் சுத்தி முத்தி பார்த்துட்டு அம்மா சமையலைறைக்கு போயிட்டாங்கன்னதும் கன்னத்துல செல்ல முத்தம் கொடுத்துவிட்டு ஓடியே போய்விட்டாள்...

திருமணத்திற்க்கு பின்பு நானும் பிரேமாவும் குடியிருப்பதற்க்காக எங்கள் தெருவில் புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் ஒரு மனை முன்பதிவு செய்திருந்தேன் , ஒரு நாள் அந்த அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் பிரேமாவிடம் , 'நாங்க கட்டிக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஐந்து மனைகள் ப்ளான் பண்ணி கட்டிக்கொண்டிருக்கிறோம் நீங்கள் முன்பதிவு செய்த மனை தவிர மீதமிருக்கும் நான்கு மனைகளுக்கும் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல்ன்னு பெயர் வைத்துவிட்டோம் நீங்கள் வாங்கிய மனைக்கு எதாவது பெயர் சஜ்ஜெக்சன் கொடுங்களேன்; என்று கேட்டிருப்பார்கள் போல என்னிடம் பிரேமா சொன்னதும் , ''மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி'' , ''காடும் காடு சார்ந்ததும் முல்லை'' , ''வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்'' , ''கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்'' அப்படியென்றால் ''நீயும் நீ சார்ந்த இடமும் தேன்கூடாய்த்தான் இருக்கமுடியும்'' அதனால் ''தேன்கூடு'' அப்படின்ற பெயர்வைக்கச்சொல்லி அவங்ககிட்ட சொல்லிடு பிரேமான்னதும் வாயடைத்துப் போய்விட்(டோம்)டாள்...! தேனும் கிடைத்தது ...!

பிரேமா ஒருநாள் காலை நேரம் அந்த புதிய வீட்டின் மொட்டை மாடியில்  துணிகளை துவைத்து காயவைத்துக்கொண்டிருந்தாள் நான் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்படியே பிரேமாவை பார்த்து அங்க பார் பிரேமா எப்பவும் நாந்தான் உன்னை சில்மிஷம் செய்வேன் ஆனா இங்க பார் ,''உன் புடவை என் சட்டையை சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறது'', என்றதும் நமுட்டு சிரிப்பு சிரித்தவளிடம் அவளைப்பற்றி எழுதிய சில கவிதைகளை காண்பித்தேன் படிப்பதற்க்கு முன்பு ''காலையில எல்லாரும் காலைக்கடன் வரும்ன்னா உங்களுக்கு கவிதைக்கடன் வருதாக்கும்'' என்று நக்கல் பண்ணியவள் படிக்க ஆரம்பித்தாள்...

''துணி உலர்த்துகையில்,
தன் இறகுகளை
தானே துவைத்து
உலரவைக்கும்
அதிசய மயிலாக நீ''

''வேடந்தாங்கல்
பறவைகள் சரணாலயம்
நீ
அழகுகள் சரணாலயம்''


''அமாவாசையன்று
உன்னருகிலிருக்கும்
தன் குழந்தைக்கு 
நிலாச்சோறு
ஊட்டுகிறாள் 
அடுத்தவீட்டுப்பெண்''


''உன்னை 
சந்திக்கும்பொழுதெல்லாம்
அழகை அதன் குகையிலே
சென்று சந்திப்பது
போன்றுதானிருக்கிறது''


''பள்ளிக்கூடம் போனால்
ஒரே படிப்பு படிப்பு
உன்கூடம் வந்தால்
ஒரே இனிப்பு இனிப்பு''


''காமத்தை
போஸ்டலிலும்
முத்தத்தை
கூரியரிலும்
அனுப்பும் 
சமயோசிதக்காரி நீ''




நன்றி வணக்கம்.
.

August 5, 2011

ஞாயிறு பொழுதும் உன்னோடு..! (U/A)



அலாரம் இல்லாத ஞாயிறில் நீண்ட தூக்கம் நாயகனது பழக்கம் , ஆனால் திருமணத்திற்கு பிறகு மிருதுளாவோடான ஞாயிறுகள் சுவாரஸ்யம் மிகுந்தவைகளாக இருப்பதினால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உற்சாகத்தோடு எழும்பிவிடுகிறான் , ஒரு ஞாயிறு நாயகனுக்கும் மிருதுளாவுக்கும் நடக்கும் சுவாரஸ்யங்களின் கற்பனைகள் இதோ.. கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கும் ரசிகர்களே டேக் கேர் ..!!!!

*******************************************************

காலை 7 மணி 

ஹேய் மிர்து இங்க வாயேன் என்றேன் என்ன என்று கொஞ்சலாக வினவியவளிடம், இல்ல இன்னிக்கு சண்டே தெரியும்ல என்றேன் கண் சிமிட்டியபடி , தெரியும் தெரியும் அதான் பயமா இருக்கு என்றபடி ''வெட்கத்தை முக முழுக்காட்சியாக ரிலீஸ் செய்கிறாள்''. ம்ம் பின்ன ஆக வேண்டியதை பார்ப்போமே என்றேன் ஸ்ஸ்ஸப்பா இன்னிக்கு உன்னோட சமையலை சாப்பிடணும்ன்னு விதி வேற வழி ஆரம்பிடா ஆரம்பி இன்று உன்னுடைய மெனுவில் காலை டிஃபன் என்ன என்று வினவியவளிடம் ''எனக்கு டிஃபன் நீதான்'',  உனக்கு சூடா நெய் தோசையும் , தக்காளி சட்னியும் , தேங்காய் சட்னியும் , தால் பவுடரும் வித் காஃபி ஒகேவா மிர்து? என்றதும் '' என் டிஃபன் ஒகே ஆனா உனக்கு சொன்ன டிஃபன் கிடைக்காது கிடைக்காது முதுகுல டின்னுதான் கிடைக்கும்'', ஆமா ஆளப்பார் ஆள, ''சரி விடு லஞ்சா இருந்துட்டுப்போ'' என்றேன்,  'அட ராமா' என்று தலையில் கைவத்தவளிடம் ம்ஹ்ஹும் 'அட காமா' ன்னு சொல்லிப்பார் அட்டகாசமா இருக்கும் என்றதும்  ரைட்டு இன்னிக்கு மதியம் டிவிடில 'வாரணம் ஆயிரம்' படம் பார்க்கலாம்ன்னு இருந்தேன் நீ 'தோரணம் ஆயிரம் 'அப்படின்ற நடக்கட்டும் நடக்கட்டும் மகனே உன் சமர்த்து என்று வெட்கசிரிப்பு சிரிக்கிறாள்.

காலை 10 மணி

நான் சோஃபாவின் ஹேண்டில் பக்கம்  அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் , அருகில் வந்து அமர்ந்த மிருதுளா ''தோசையில என்னடா கலந்த ஒரே கிறக்கமா இருக்கு'', என்றபடி என் மடியில் தலைவைத்து கால் நீட்டி சொகுசாக டிவி பார்த்தவளிடம் ஒன்னும் இல்ல ''கொஞ்சம் அன்பு அதிகமா கலந்திட்டேன் போல'' அதான் என்றேன். டிவியில் சாமி திரைப்படத்தில் விக்ரம் த்ரிஷா நடித்த இவன்தானா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது விக்ரம் திரிஷா தக்காளிபழம் சீன் வந்ததும் 'அய்யய்யோ' என்றேன் , ஏண்டா என்னாச்சு என்று கேட்டவளிடம் , ''இன்னிக்கு தக்காளி சட்னி வைக்கிறப்போ இந்த சீனை மிஸ் பண்ணிட்டேனே மிருதுளா மிஸ் பண்ணிட்டேனே'', என்றதும் 'ச்சீய்ய் எப்போ பாரு இதே நினைப்புத்தானா உனக்கு' சரி சரி இன்னிக்கு லஞ்ச் டின்னர் எதுலயுமே தக்காளி வாசமே இருக்கக்கூடாது புரிஞ்சதா? ரைட்டு தக்காளி இல்லைனா என்ன ட்ரம்ஸ்டிக் சேர்த்திடறேன் என்றதும்தான் தாமதம் என்ன நினைத்தாளோ தெரியவில்லை ஓடிச்சென்று ஃப்ரிட்ஜில் இருக்கும் ட்ரம்ஸ்டிக் அத்தனையையும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு ''இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ''  என்று வக்கனை காட்டுகிறாள்..!

பிற்பகல் 1 மணி

'மிருதுளா லஞ்ச் ரெடி சாப்பிடலாமா'' என்றேன் ம்ம் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு வந்திடறேன் என்றாள் ஏண்டி குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் அப்படின்றது உனக்கே ஓவரா இல்லையா? என்றேன், என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா ''தேவதையாக்கும் நான்'' ஒரு மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா வெயிட் பண்ணு இல்லைனா துன்னுட்டு குப்புறபடுத்து தூங்கிடு ஐ டோண்ட் கேர்ன்னு சாதாரணமா சொன்னவளின் தந்திரம் வெகுவாகவே புரிந்தது , என்னை இந்த பகலில் தூங்க வைத்திட வேண்டுமென்ற அவளின் ஆசையை தகர்க்கவும் எனக்கும் தெரியுமென்பது அவளுக்கெப்படி தெரியும், இன்று இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போமே என்று நினைத்தபடி தூங்குவது போல் பாசாங்கு செய்தேன், உடை மாற்றிவிட்டு வந்தவள் என்னை நோக்கி வரும் சத்தம் கேட்கிறது கொரட்டை சத்தத்தை அதிகப்படுத்தினேன் கிட்ட வந்தவள்  என் தலையை கோதியபடி 'சமர்த்து தூங்கிட்டான்' என்று குதூகளித்தவளை, அப்படிலாம் நினைச்சுடாத என்றபடி எழுந்து வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்று திகட்ட திகட்ட அத்தனை உணவுகளை பரிமாறினேன். 'நீ சாப்பிட்டயா? என்று கேட்டவளிடம், இல்லை ''நீ சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறதாம்'' என்றதும் நான் எதிர்பார்த்தபடியே 'லஞ்சாக ப்ரஞ்சு முத்தம் கிடைத்தது'.

மாலை 6 மணி

வா வெளில ஷாப்பிங் போகலாம் என்று அவளை பைக்கில் அழைத்து சென்றேன் அவள் நிறத்துக்கேற்ற இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் என் ட்ரெஸ் எப்படிடா இருக்கு என்றவளிடம் , 'இப்போ நீ தேவதை', 'இந்த பைக் தேர்' , 'நான் தேரோட்டுபவன் ', ''தேவதையுலா வருகிறாள் வழிவிடுங்கள் என்றபடிதான் ஹாரன் ஒலிக்கிறது'', ''சாலைகளின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் உன்னிடம் அழகுபிச்சையேந்தி கையேந்தி நிற்கின்றன'' , ''செல்லும் வழியெங்குமிருக்கும் பாதைகளின் பெயர்களெல்லாம் தேவதைவீதி 1, தேவதை வீதி 2,  தேவதை வீதி 3 என்றபடி பெயர் மாறுகின்றன'' , ''துணிக்கடை பொம்மைகள் சந்தோஷப்பட்டுக்கொள்கின்றன தனக்கு பதில் இன்னொருத்தி வந்துவிட்டாளென்று'' , உன் வாசம் கலந்த காற்று ஊரெங்கும் உன் அழகை பரப்பி ''உன் அழகுபரப்பு செயலாளர் தான் தான் என்று நிரூபிக்கிறது'' , இப்படி சொல்லி அவளின் அத்தனை வெட்கத்தையும் ஒரே நாளில் அனுபவித்தேன். வீட்டிற்கு வா உனக்கு இருக்கு மவனே என்றவளிடம் அதான் எனக்கு தெரியுமே தெரியுமே என்றதும் ''எமகாதகன்டா நீ'', என்றவளிடம் இல்லை ''காமகாதகன்'' என்றதும் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள் ..! 




இரவு 9 மணி

''மணி 9 ஆச்சு சரி வா டின்னர் சாப்பிடலாம்'', என்றேன். டின்னர்தான் வெளியில சாப்பிட்டோமே இன்னும் என்ன டின்னர் ? ஹும் அது என்ன டின்னர் அதுல ''நிறமில்ல சுவையில்ல, திடமும் இல்ல'',  இப்போ நான் கொடுக்கிற டின்னர்ல '' நிறம் நீ இருக்க , சுவையாய் முத்தம் இருக்க, திடமாய் நான் இருக்க'', 'இனிக்க இனிக்க பசியாறலாம் வா',  என்றேன் . 'எப்படிடா இப்படி எல்லாத்தையும் கவிதையாவே பேசற எனக்கு உன்னைப்பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு உனக்காக நான் ஒன்னுமே செய்யலை சொல்லலைன்றதும் வருத்தமா இருக்கு, என்றவளின் தலை கோதி அட லூசு ''திருமண வாழ்க்கையில் யாராவது கணவன் மனைவி இரண்டு பேரில் யாராவது ஒருத்தர்தான் ரசிகனாக இருக்க முடியும்'', இப்போ இங்க நமக்குள்ள நடக்குற திருமண வாழ்க்கையில ''நான் உன்னோட ரசிகன் எப்பவும் உன்னை மட்டுமே ரசிக்கும் ரசிகன்'', என்று விளக்கமளித்ததுதான் தாமதம் கையைப்பிடித்து விறு விறுவென்று இழுத்துச்சென்று 'டின்னர்  பரிமாறினாள்' ..


திரும்பவும் வாசிக்கணும்னா இதோ இந்த பாடலை கேட்டபடியே வாசியுங்கள் Enjoy The Holiday..!