June 30, 2010

கற்பனை The Imagination & Creativity...

கற்பனை The Imagination & Creativity...


என்னுடைய பெரும்பாலான போஸ்ட்களில் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க , ரூம் போட்டு யோசிச்சீங்களா? , ரொம்ப யோசிக்கிறீங்க இப்படியான பின்னூட்டங்களே நிறைய வந்திருக்கின்றன...எப்படி யோசிக்கிறேன் என்பதைப்பற்றி  பார்ப்போமா? 


நான் டிப்ளோமா எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிக்கும்பொழுது என்னுடைய முதல் டெக்னிகல் ட்ராயிங் வகுப்பிலே என்னுடைய டெக்னிகல் ட்ராயிங் ஆசிரியர் சொன்னது ட்ராயிங் வரைவதற்க்கு பேப்பரோ பென்சிலோ ட்ராஃப்டரோ முக்கியம் இல்லை இமேஜினேசன்தான் முக்கியம் எனவும் அது இருந்தால் பேப்பர் பென்சில் ட்ராஃப்டர் இவைகள் இல்லாமலே நம்மால் படம் வரைய முடியும் என்பதுதான்...


இந்த டெக்னிக்கல் ட்ராயிங் படிக்கும்பொழுதுதான் நான் என்னுடைய இமேஜினேசனை வளர்த்து கொண்டேன் என கூறலாம். அதிலும் Orthographic Projection என்னும் 3டி dimension Drawings செம்ம இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். இதில் ஒரு Object ன் 3டி view நமக்கு கொடுத்து விட்டு அதன் front view, top view, side view வரையச்சொல்லுவார்கள் அல்லது இந்த மூன்று viewsம் கொடுத்துவிட்டு 3டி view வரைய சொல்லுவார்கள் பார்க்க படம்...




இந்த படத்துக்குபதிலா நீங்க மனிதனோட படத்தை வைத்து பார்ப்பது தவறு..ஆமா சொல்ட்டேன் இப்போ மேட்டருக்கு வருவோம்... 


இதே போலதாங்க நம்ம வாழ்க்கையும் நிறைய பக்கங்கள் நிறைந்து ஒரு முழுமையான வாழ்க்கையா அமைகிறது,சிலர் என்னுடைய இன்னொரு பக்கதை நீ பார்த்ததில்லையே என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்,அதேதான் இப்போ நான் சொல்லவருவதும். 


நான் கார்ல(என்னோடதில்ல) கொடைக்கானல் போயிட்டிருக்கேன்னு வச்சுக்கங்க கார் நல்லாத்தாங்க போயிட்டு இருக்கும் ஆனா என்னோட மனசு இருக்குல்ல அது என்னா நினைக்கும் தெரியுமா ? ஒரு வேளை இந்த கார் இப்படியே கவுந்துடுச்சுன்னான்னு ஆரம்பிச்சு நான் மலை அடிவாரத்தில் விழுந்து கிடப்பது மாதிரியும் எனக்கு காயமாகி மயக்கமடைந்து கிடக்கும்பொழுது சிலர் என்னுடைய பணம் நகைகளை எடுத்துகொண்டு ஓடுவது போலவும் இருக்கும் . அந்த நொடி நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு நான் பயணம் செய்து கொண்டிருக்கும் கார் டிரைவரை கவனமாக காரை செலுத்துமாறும், என்னுடைய பணத்தை பாக்கெட்டில் தொட்டு பார்த்து கொள்வதுமாகவும், அந்த பணம் போனாலும் ஏடிஎம் கார்ட் இருக்கிறதா என்றும், விபத்து அவசர அழைப்பு எண் என்ன என்பதை மனதில் ஓடவிட்டவாறும் பயணம் செய்வது வழக்கம்.இப்போ இந்த விபரீத கற்பனை எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தருகிறது...இது ஒரு நெகடிவ்இமேஜினேசனாக இருந்த பொழுதிலும் பெரிய ஆபத்தில் சிக்கினால் என்ன செய்வது என்பதற்க்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது...


இதே போல ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துகொள்வோம் அந்த இளைஞன் ஒரு சாதியை சேர்ந்தவன் அவனுடைய காதலி வேறொரு சாதியை சேர்ந்தவள் எனவும் கொள்வோம் இப்போ இரண்டு பேரும் திருமணம் செய்வதற்க்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்த பின் அவர்கள் இருவர் குடும்பத்தில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் அல்லது இரு வீட்டார்களும் அடித்துகொள்வார்களா? அல்லது சிறிது காலம் கழித்து அக்காதலர்களுக்கு குழந்தை பிறந்த பின்னாவது இரு குடும்பமும் ஒன்றாக செர்ந்து கொள்வார்களா? இப்படி பல விதமாக கற்பனை செய்து பார்த்தால் அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துகொள்வதற்க்கு முக்கிய நிகழ்வாக கற்பனை உதவுகிறது...


சில நேரம் இந்த கற்பனை சக்தி நாம் செய்யும் தொழிலில், அந்த தொழிலை மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் இப்படி செய்தால் என்ன அப்படி செய்து பார்த்தால் என்ன என்று புதுமைகள் புகுத்துவதன் மூலம் கண்டிப்பாக தொழில் வெற்றி பெற முடியும் இது தொழில்துறையில் வெற்றி பெற்ற பலரின் கூற்று...


நம்ம உலகத்திலே ரொம்பவும் ஃபாஸ்ட்டானது நம்ம கற்பனைதாங்க நம்ம நினைச்ச நேரத்தில் நிலாவுக்கு கூட போய்வரும் சக்தி கற்பனைக்கு இருக்கிறது...இந்தகற்பனைக்கு வானமே எல்லை என்று கூட சொல்லல்லாம்.....


இங்க ஒரு வீடியோ இருக்கு பாருங்க ....




இது ஒரு சின்ன மார்க்கர் விளம்பரம்தான் அதை எப்படி எதோட பொருத்தி பர்த்திருக்கிறார் இந்த விளம்பர இயக்குனர் இதுதாங்க இமேஜினேசன்...இப்போ புரிஞ்சுச்சா? இல்லியா சரி விடுங்க இன்னும் சொல்றேன்...


12B படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள் இயக்குனர் ஜீவா அதில் ஷ்யாம் பஸ்ஸை பிடிச்சு ஏறிப்போனா என்ன என்ன எல்லாம் நடக்கும் பஸ்ஸை மிஸ் பண்ணா என்ன என்ன எல்லாம் நடக்கும் என்று சூப்பரா சொல்லியிருப்பார் அருமையான ட்ரெண்ட் செட்டர் திரைக்கதை அது ஆனா யாருமே அதுக்கடுத்து அதை முயற்சி செய்யவே 
இல்லை...அந்தப்படம் இந்த இமேஜினேசனுக்கு சிறந்த ஒரு படமா சொல்லலாம் ...    




இந்த படத்தைப்பாருங்க இது வெறும் கேலிச்சித்திரம் இல்லீங்க அடுத்த நொடி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம் உலகத்தில் இன்னும் சில நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு மனிதனுக்கு தேவையான உடல் பாகங்களை வாங்கி நம் உடலில் பொருத்திக்கொள்ளலாம் என்ற நிலைவரும் பொழுது பல உடல் பாகங்கள் அந்தந்த ப்ராண்ட் பெயர்களின் பிரிண்டோட வரலாம்ன்னு நச்சுன்னு சொல்ற படம்தான் இது . இதுதாங்க கிரியேட்டிவிட்டி....




இப்போ இங்க பார்க்கும் படத்தில் சிகரெட் ஸ்மோக் பண்ணுவது தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்வது போன்ற ஒரு மெச்சேஜ் சூப்பரா சொல்லியிருக்காங்க பாருங்க...
இதுவும் கிரியேட்டிவிட்டி தாங்க...



சாதாரண பஸ்ல சின்னதா ரசிக்கும்படியான கிரியேட்டிவிட்டி மனித வாயிலிருந்து புகை வர்ற மாதிரி இன்னும் இது மாதிரி நிறைய கிரியேட்டிவிட்டி இருக்குங்க...




இப்போ புரிஞ்சுதா இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி ஏதோ எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லியிருக்கேன்...
சரி இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி பற்றி சொல்லியாச்சு அதை உங்களையும் எப்படி செய்ய வைக்கிறது நிறைய இருக்குங்க நிறைய டாபிக் யோசிச்சி எழுதணும்ன்னு மைண்ட்ல வச்சுருக்கேங்க ஆனா பாருங்க நேரம் கிடைக்குறது கஷ்டமா இருக்கு சரி நம்ம யோசிச்சா இப்படித்தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் அதையே உங்களை யோசிக்க வச்சு எழுத சொன்னா என்ன?


முதல் தலைப்பு


நம்ம கைகள் இரண்டும் இருக்குள்ள அதோட ஆரம்பம் நம்ம தோள்பட்டையில இருக்குன்னு தெரியும் அதே கைகள் நம்ம வயிற்றோட பக்கவாட்டில் முளைத்திருந்தால் நம்ம அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவர் நம்ம சீமான்கனி மாப்ள கனவுப்பட்டறைன்னு பேர் வச்சுருந்தா போதுமா மாப்ள எழுதுங்க மாட்டுனீங்களா? தலைப்பு மாறிய கைகள்...


இரண்டாவது தலைப்பு


தெருவெல்லாம் போஸ்ட்லைட் பாத்துருப்பீங்க ஒரு நாளைக்கு இதே மனித ஆறறிவோட அந்த போஸ்ட் மரமா நீங்க மாறினா நீங்க என்ன பார்க்குறீங்க? என்ன செய்வீங்க ? இந்த டாபிக் எழுதப்போறவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ்... தலைப்பு நானொரு தெருவிளக்கு...


மூன்றாவது தலைப்பு 


ஊரெல்லாம் ஆலமரம் அரசமரம்ன்னு பிள்ளையார் இருக்குறது எல்லாருக்கும் தெரியும் இந்த பிள்ளையாருக்கு உயிர் இருந்து எல்லா ஊர்லயும் ஒரு மனுஷ உருவுல பிள்ளையார்கள் உட்கார்ந்திருக்கிக்காங்கன்னு வச்சுக்கங்க(சில சாமியார் அப்படித்தான் இருக்காங்கன்னு சொல்லக்கூடாது ஆமா) அப்போ நடக்குற சம்பவங்கள் பற்றி எழுதப்போறவர் நம்ம நாஞ்சில் பிரதாப் (இந்த டாபிக் இவரத்தவிர காமெடியா யாராலயும் எழுத முடியாதுங்க) தலைப்பு ஆல மரத்து பிள்ளையார்கள்


நாலாவது தலைப்பு


நம்ம குழந்தையா பிறந்து படிச்சு வேலைக்கு போயி கல்யாணம் பண்ணி குழந்த பெற்று அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு கடைசில செத்துடறோம் ரொடேசனா போயிட்டு இருக்கு இதுவே தலைகீழா இறக்கும்போது இருக்குற வயசுல பிறந்து ஒவ்வொரு நாளும் பின்னோக்கி வர்றீங்க கடைசியில இறக்குறது அம்மாவோட மடியிலன்னு வச்சுட்டு இடையில என்ன சம்பவங்கள் நடக்கும்ன்னு எழுதப்போறவர்( கொஞ்சம் கஷ்டம்தான் மாப்ள ஆனாலும் நாமெல்லாம் யாரு எழுதுவோம்ல)  நம்ம கே ஆர் பி செந்தில்... தலைப்பு தலைகீழ் விதிகள்...


ஐந்தாவது தலைப்பு 


இது வெறும் ஈஸிங்க நீங்க ஆறறிவுடைய பட்டாம்பூச்சியா பிறந்துட்டீங்க உங்க ஆசைகள் எப்படியிருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவங்க ராமலக்ஷ்மி மேடம்...
தலைப்பு பட்டாம்பூச்சியின் கனவுகள்...


ஆறாவது தலைப்பு 


இந்த உலகம் சுற்றும் திசையில இருந்து ஆப்போசிட் திசையில சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் இது பற்றி எழுதப்போறவங்க எங்கள் பிளாக் ...
தலைப்பு மாறுதிசை...


ஏழாவது தலைப்பு


இந்த உலகத்தில் கரண்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திட்டு இருக்கும் யாரும் திரும்பவும் கரண்ட் கண்டுபிடிக்காத பட்சத்தில் ... இந்த டாபிக் எழுதப்போறவங்க யாவரும் நலம் சுசி....தலைப்பு வித் அவுட் கரண்ட்...


எட்டாவது தலைப்பு


இந்த உலகத்தில் இப்போ கடலில் வாழும் மீன்போலவே உங்களாலயும் பேசமுடியாதுன்ற மாதிரி ஒரு வாய் பேசமுடியாத பெண்ணின் மன ஆசைகள் எப்படியிருக்கும்... அவள் வாழ்க்கையில்  அதனால் பெறும் இன்ப துன்பங்கள் பற்றி எழுதப்போறவர் அமைதிச்சாரல் மேடம் தலைப்பு.. முள்ளில்லாத மீன்


அவ்ளோதாங்க இன்னும் இருக்கு அதெல்லாம் எனக்கு...


நிபந்தனைகள்


ஒருவர் இருவரை தொடரச்சொல்லி அழையுங்கள் கண்டிப்பாக இருவர் மட்டுமே ரொம்ப கூப்பிட்டீங்கன்னு வச்சுக்கங்க போரடிச்சுடும் ஆமா தலைப்பும் அதன் உட்கருவும் நீங்கதான் அவங்களுக்கு சொல்லணும்...ஆரம்பிங்க உங்க கிரியேட்டிவிட்டிய பட்டைய கிளப்புங்க .. கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் முழுவதும் கிரியேட்டிவ் கிங்கள் ராஜ்யமா அமையட்டும் வாழ்த்துகள் ...


புதியதாக எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.. தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பிளாக்கராக இருந்தாலும் சரி நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....







கண்டிப்பா இங்கு தொடர்பதிவெழுத அழைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அழைப்பை ஏற்று எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

ப்ரியமுடன்...வசந்த்








June 28, 2010

என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே

எல்லாருக்கும் வணக்கம் இந்த பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு அந்த மெட்டிலே கீழுள்ள பாடல்களை வாசிச்சுட்டு எப்பிடி மேட்ச் ஆச்சா இல்லியான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ்....




வீடியோ ஓபன் ஆகதவங்க இங்க கிளிக்குங்க...


*******************************





என் பூரிக்கட்டையே என் பூரிக்கட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கோதுமை என்று தெரிந்தும் நீ
ஏன் உருண்டையொன்று கேட்கிறாய்
வட்டங்கள் கோளங்கள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
உருட்டுவதை உருட்டிவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- கோதுமை

**********************************************************








என் தோசைக்கல்லே என் தோசைக்கல்லே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் இட்லி மாவு என்று தெரிந்தும் நீ
ஏன் தோசை சுடப்போகிறாய்?
வெங்காய தோசை,மசால் தோசை இரண்டில்
என்ன சுடப்போகிறாய்
சுடுவதை சுட்டுவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- இட்லி மாவு


*********************************************************








என் மிக்ஸியே என் மிக்ஸியே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் தக்காளி என்று தெரிந்தும் நீ
ஏன் அரைக்கப்பார்க்கிறாய்?
தக்களிச்சட்னி, காரசட்னி இரண்டில்
என்ன அரைக்கப்போகிறாய்?
அரைப்பதை அரைத்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- தக்காளி

*********************************************************



என் கொடநாடே என்கொடநாடே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் அரசியல்வாதியென்று தெரிந்தும் நீ
ஏன் என் கையில் சிக்கினாய்?
களிக்கஞ்சி , ஜெயில் கம்பி இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் என்னிடமே இருக்கிறாய்?


- ஜெ.ஜெ.


*********************************************************




என் மட்டையே என் மட்டையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் பந்தென்று தெரிந்தும் நீ
ஏன் அடிக்கப்பார்க்கிறாய்?
சிக்ஸர்கள்,பவுண்டரிகள் இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
அடிப்பதை அடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?


- பந்து

*********************************************************






என் போலீஸே என் போலீஸே
என்னை என்ன செய்யப்போகிறாய்?
நான் சாமானியன் என்று தெரிந்தும் நீ
ஏன் லஞ்சம் கேட்கிறாய்?
அபராதமா, அவமானமா இரண்டில்
என்னத்தரப்போகிறாய்?
வாங்குவதை வாங்கிவிட்டு 
ஏன் இன்னும் கேட்கிறாய்?


- சாமானியன்

*********************************************************












என் கீ போர்டே என் கீ போர்டே
என்னை என்ன செய்ய போகிறாய்?
நான் பிளாக்கர் என்று தெரிந்தும் நீ
ஏன் வேலைசெய்யமறுக்கிறாய்?
கவிதைகள், காமெடிகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்?
எழுதியவை எழுதியபின்
ஏன் பப்ளிஷ் ஆக மறுக்கிறாய்?

- பிளாக்கர்

********************************************************




என் ஈழமே என் ஈழமே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நன் தமிழன் என்று தெரிந்தும் நீ
ஏன் உயிரை கேட்கிறாய்?
மண்ணா, மரணமா இரண்டில் 
எதை தரப்போகிறாய்?
தருவதை தந்துவிட்டு
ஏன் இன்னும் உயிர்பலிகள் கேட்கிறாய்?


- ஈழத்தமிழன் (மன்னிக்கவும்)

*********************************************************


June 25, 2010

செம்மொழியான தமிழுக்காக பிரபலங்களின் அர்ப்பணிப்பு....

சில பிரபலங்கள்கிட்ட செம்மொழியான தமிழுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்கன்ன்னு கேட்டதும் அதற்க்கு அவங்களின் பதிலடியும்...

முதலில் வருபவர் ஒபாமா...



அடுத்ததாக சீன அதிபர் ஹூ ஜிண்டோ...


அடுத்ததாக வருபவர் கற்பு புகழ் குஷ்பூ...


நம்ம தமனாவோட அர்ப்பணிப்பு...



நம்ம கேப்டன் வாய்ல 'ழ' வராதுன்றதால எழுதியே காட்டிட்டார்


வைகைப்புயல் வடிவேல் எவ்ளோ அழகா தமிழ் மீசை வளர்த்திருக்கார் பாருங்க..


இவங்களையெல்லாம் மீட் பண்ணிட்டு வர்ற வழியில சாலையில் எல்லாம் மாடுகள் கோஷம் போட்டுகிட்டே ஊர்வலம் போய்ட்டு  இருந்துச்சு அவங்கள்ல ஒருத்தர நிறுத்தி என்னான்னு கேட்டா?


 Behind the Post : இந்த போட்டோஷாப் இப்போதாங்க எல்.கே.ஜி படிச்சுட்டு இருக்கேன் இந்த படங்கள் உருவாக்க காரணமான திரு மோகன் குமார் அவர்களின் புதுவைன்ற இணையத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும், திரு வேலன் அவர்கள் அவரின் தளத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும் முக்கிய காரணம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் இந்த துறையில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கு .. உங்களுக்கு தெரிந்த போட்டோஷாப் பற்றிய தளங்கள் தமிழ் ஆங்கிலம் எதில் இருப்பின் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்,... நன்றி நன்றி..படைப்பை ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.....

June 22, 2010

நான் ஒரு விஜய் ரசிகன்...


 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவான்னு ஈஸியா அஞ்சு வார்த்தையில சொல்லிட்டு பத்தோட பதினொன்னா நானும் உன்னோட ரசிகன்னு சொல்லிட்டு போக மனசு வரலை அதான் ஒரு சில வார்த்தைகள் இதோ....

உன்னுடைய தோட்டத்தில் வேண்டுமானால் ஐம்பது வித செடியில் ஐம்பது மலர்கள் பூத்திருக்கலாம் ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது...

ஒவ்வொரு தடவையும் நீ ஒவ்வொரு விதமாக பூக்கும்பொழுதும் என் ஒருவனை மட்டுமல்ல என் வீட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷப்புன்னகை வரவழைத்துவிடுகிறாய்...

உன் செடியில் பூத்த அத்தனை மலர்களின் வாசத்தையும் நுகர்ந்தவன் என்கிற முறையில் சில மலர்களின் வாசனை அறவே பிடிக்காது போனாலும் அதையெடுத்து நுகர்ந்து பார்க்கமறுப்பதில்லை...உன் சில மலர்கள் நறுமணம் தரவில்லை என்பதற்க்காக என்றாவது ஒரு நாள் அனைவரும் வியக்கும் வாசனை தரப்போகும் மலரை தரப்போகும் செடியை அவ்வளவு சீக்கிரத்தில் பிடுங்கி எறிய மனமில்லை...

உன் ஒவ்வொரு மலர்வைப்பற்றிய அவதூறுகள் காற்றைவிட வேகமாக பரவியபொழுதும் அந்த அவதூறுகள் அதே வேகத்தில் காணாமலும் போகின்றன...நானும் அதை நீ பூத்திருக்கும் வனத்தின் வழியில் நடந்துபோகும்பொழுது இருக்கும் சிறு முட்களாக நினைத்து தூறப்போட்டுவிட்டு உன் அருகில் எப்பொழுதும்போல் வந்து செல்கிறேன்...

என் அம்மாவையும் சேர்த்து மொத்தம் என் தெருவிலிருக்கும் ஆறு அம்மாக்களுக்கும் நீ தான் மூத்தமகனாம் அவ்வளவு பிடிக்கிறது உன்னை அவர்களுக்கு தினமும் எப்படியும் என் வீட்டு வரவேற்பறை வரை ஐந்து முறையாவது வந்து செல்லும் உன்னை புறந்தள்ளி செல்ல மனசு வரலை...

உன்னால் மலர்ந்த மலர்களால் எந்த வித பயனில்லாத பொழுதும் மலரும் தருணத்தில் ஓராயிரம் கண்களை சந்தோஷமாய் காக்கவைத்து பூக்கின்ற அதிசிய செடியாகவே தெரிகிறாய்...முதல் பூ தந்த சந்தோஷம் வந்து போன சில நாட்களிலே உன்னில் மலரப்போகும் அடுத்த மலரைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் வந்து நிற்கிறது..போன ஐம்பதாவது மலர் வெகு மோசமான நறுமணத்தை தந்த பொழுது இனி உன் பக்கமே வரக்கூடாது என்ற என் முடிவு உன் அடுத்த மலரின் எதிர்பார்ப்பில் மாயமாகிறது எப்பொழுதும் போல...

உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன? மதுரையில் மதுரை மாவட்ட தலைவி உற்சாகமாய் கட் அவுட் வரை வந்து உன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் இதுவும் கடந்து இன்னும் நிறைய கட் அவுட்களில் பெண்களை மலரச்செய்வாய் என்ற நம்பிக்கையிருக்கிறது...

இவ்வளவு சந்தோஷம் தரும் உனக்கு இன்று பிறந்தநாள் எப்பவும் போல் இதே மாதிரியே சந்தோஷமாய்  என் வீட்டில் இருக்கும் செடி போன்ற லட்சக்கணக்கான வீடுகளிலும் இருக்கும் செடிகளிலும் இவ்வாண்டும் அதி நறுமணம் தரும் மலர்கள் பூக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..




June 18, 2010

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்...



ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...



ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...




**************************



கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...







**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?



**************************


அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...






**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...






*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...



**************************



விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...








**************************


சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..



*************************


தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...



*************************