Showing posts with label 200வது நாள் பிரம்மாண்ட வெற்றி. Show all posts
Showing posts with label 200வது நாள் பிரம்மாண்ட வெற்றி. Show all posts

July 9, 2010

என் மனைவிக்கொரு கடிதம்...!

என் ஆசை பொண்டாட்டியே நீ உன்னோட அப்பா வீட்டுக்கு போன இந்த நேரத்தில் நான் இங்க நான் உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் திரும்பி நினைச்சுப்பார்த்து உனக்கே உனக்குன்னு எழுதும் கடுதாசி..

ஒரு நாள் அது நமக்கு திருமணமாகி ஒரு மூணு மாசமாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் ஆசையா புடவை வாங்கி கொடுங்கன்னு சொன்ன உன்னை என்னோட பல்சர்ல உட்கார வச்சு கடைக்கு கூட்டிட்டு போனேன் அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச வயலட் கலர் புடவை கட்டியிருந்த கடைக்கு போனதும் உனக்கு பிடிச்ச புடவை எடுத்துக்கோடின்னு சொன்னேன் நான், நீ அங்க இருந்ததுலயே ரொம்பவும் வெயிட்லெஸ் புடவை எடுத்த ஏண்டி நல்லா வெயிட்டா இருக்குற புடவை எடுக்க வேண்டியதுதானேன்னு கேட்ட என் கிட்ட நீ சொன்ன நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதாங்கன்னு , இத்தனைக்கும் அது ஒண்ணும் அவ்ளோ விலை குறைஞ்ச புடவையும் இல்ல , பின்ன ஏன் அப்படி சொன்னன்னு வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு புரியவே இல்லை கிட்டதட்ட ஒரு வாரம் கழிச்சு ஒரு ஞாயிற்றுகிழமை துணியெல்லாம் ஊற வச்சுருக்கேன் மறக்காம துவைச்சு போட்டுடுங்கன்னு சொல்லிட்டு மகளிர் சங்கத்துக்கு நீ கிளம்பி போனப்பத்தாண்டி எனக்கு புரிஞ்சுச்சு உன்னோட திட்டம்...

ஒரு நாள் நம்ம வீட்டுக்கு முன்னாடி பக்கத்துவீட்டு மாமியோட சேர்ந்து  பாத்திரம் விக்க வந்தவன்கிட்ட பாத்திரம் வாங்கிட்டு இருந்த அப்போ நான் காம்பவுண்ட் சுவத்துல கையவச்சு கன்னத்துக்கு முட்டுகுடுத்துட்டு நின்னுட்டு இருந்தேன் அப்போ பாத்திரக்காரன் ஒரு பெரிய சம்பாவை காட்டி இது எடுத்துக்கங்க மேடம் எதுவேணும்னாலும் கொட்டிவச்சுகிடலாம்ன்னு சொன்னான் அப்போ நீ சொன்ன அது ஏற்கனவே எங்க வீட்ல எதுவேணும்னாலும் கொட்டிக்கிற  ஒரு சம்பா இருக்கு நீ நான் கேட்ட ஃபரை பேன் இருக்கான்னு காட்டுன்னு சொல்லிட்டு பக்கத்து வீட்டு மாமியப்பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்ச நான் கூட உங்க அம்மா வீட்ல இருந்து கொண்டுவந்த சம்பாவைத்தான் சொல்றயாக்கும்ன்னு நினைச்சேன் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்ட கோவிச்சுகிட்டு பேசாம இருந்த ஒரு நாள்  ஆறிப்போன வத்தகொழம்பையும் சோத்தையும் வச்சுட்டு நம்ம பெட்ரூம் சுவத்தப்பார்த்து கொட்டிக்கங்கன்னு மூஞ்சிய சிலுப்பிட்டு நீ சொன்னப்பத்தான்டி புரிஞ்சுச்சு நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..

போன மாசம்ங்கூட உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ்க்காக வெளியூர் போயிருந்த நீ , போயிட்டு வந்ததும் நீ சொன்ன உங்க அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் மேரேஜ்க்கு போன இடத்துல பாத்தேன் எல்லாருக்கும் அவங்க சாப்பிடுறதுக்கு வேண்டியதை  வாங்கி கொடுத்து நல்லா கவனிச்சுகிட்டேன்னு சொன்ன எனக்கு ஆச்சரியமா போச்சு என்னடா இது அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் கூட கண்டுக்காத நம்ம பொண்டாட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டாளேன்னு சந்தோஷப்பட்டு உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ் மதுரையிலா நடந்துச்சுன்னு கேட்ட எனக்கு நீ சொன்ன பதில் குற்றாலம் ஹும் ...


அப்புறம் ஒரு நாள் உன்னோட உயிர்த்தோழி போனவாரம் ஒரு படத்துக்கு போனோம் நல்லா இருக்குன்னு  நம்ம இரண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போனப்ப சொன்னாங்க நானும் சரி வாடி இந்த வார சண்டே அந்த படத்துக்கு போகலாம் அதான் உன் ஃப்ரண்ட் அந்த படம் நல்லாருக்குன்னு சொல்றாளேன்னு சொன்னேன் அதுக்கு நீ சொன்ன அவ சொல்றதெல்லாம் நான் கொஞ்ச நாளா நம்புறதே இல்லீங்க வர வர பொய்யா சொல்றான்னு சொன்ன , உன்னை பொண்ணு பாக்க வந்த என்னை ரொம்ப அழகா இருக்கேன்னு உன்கிட்ட சொன்னது அவங்கதான்னு ஒரு நாள் அவங்க என்கிட்ட சொன்னப்பத்தாண்டி  தெரிஞ்சுச்சு நீ அன்னிக்கு ஏன் அவங்க சொன்னதை நம்பமாட்டேன்னு சொன்னன்னு...


போன மாச டெலிபோன் பில் ஏண்டி என்கிட்ட காட்டலைன்னு கேட்டேன் கொஞ்ச நாளா ஞாபக மறதியா இருக்குங்கன்னு சொன்ன அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாளுன்னு வாழ்த்து சொன்ன நான் சொன்னேன் நாளைக்குத்தானே எனக்கு பிறந்த நாள் இன்னிக்கு ஏன் சொல்ற உனக்கு கிறுக்கா பிடிச்சுருக்குன்னு கேட்டேன் ஆமாங்கன்ன...பிறகொரு நாள் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் சண்டைன்னு வந்தப்போ இவ்ளோ என் மேல கோபம் வச்சு என்கூட சண்டை போடற அப்புறம் ஏண்டி என்னை கட்டிகிட்டன்னு கேட்டேன் நீ சொன்ன நாந்தான் கிறுக்கியாச்சேன்னு சொல்லிட்டு கோவிச்சுகிட்டு உன் அம்மா வீட்டுக்கு போயிட்ட அதுதான் உன்கிட்ட நான் போட்ட கடைசி சண்டையும் கூட ...


இந்த சண்டையெல்லாம் நாம வாழ்ற வாழ்க்கையோட மறக்கமுடியாத ஞாபகமாத்தான் இருக்கே ஒழிய உன்மேல கொஞ்சங்கூட வெறுப்பு வரவே இல்லடி...உன்னை பிரிஞ்சு இந்த ஒரு மாசம் ரொம்ப கஷ்டமா இருக்குடி , ஆசையா நாம போட்டுகிட்ட சண்டை , ஒருத்தர் மேல ஒருத்தர் செல்லமா எடக்கு பேசிகிட்டது ,இது மட்டுமில்ல என்னதான் நீ சண்டை போட்டாலும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்த சமையல் , இதுமட்டுமில்லாமல் எப்பவாது நான் உனக்காக எழுதுன கவிதையெல்லாம் எனக்கு தெரியாம எடுத்து படிச்சு அதுக்கு நீ எழுதுன பதில் கவிதையெல்லாம் உன்னோட பெர்சனல் லாக்கர்ல வச்சுருக்குறதை பார்த்த பிறகு,  உன்மேல இருக்குற அன்பு இன்னும் ஜாஸ்தியாகிடுச்சுடி இந்த லெட்டர் உன்கிட்ட சேருமா சேராதான்னு தெரியலை ஆனா என்னோட மனசு உனக்கு தெரிஞ்சு திரும்பி வருவன்னு நினைக்கிறேன் அட்லீஸ்ட் திரும்ப இந்த கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது போஸ்ட் பண்றேன்...


ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012



June 25, 2010

செம்மொழியான தமிழுக்காக பிரபலங்களின் அர்ப்பணிப்பு....

சில பிரபலங்கள்கிட்ட செம்மொழியான தமிழுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்கன்ன்னு கேட்டதும் அதற்க்கு அவங்களின் பதிலடியும்...

முதலில் வருபவர் ஒபாமா...



அடுத்ததாக சீன அதிபர் ஹூ ஜிண்டோ...


அடுத்ததாக வருபவர் கற்பு புகழ் குஷ்பூ...


நம்ம தமனாவோட அர்ப்பணிப்பு...



நம்ம கேப்டன் வாய்ல 'ழ' வராதுன்றதால எழுதியே காட்டிட்டார்


வைகைப்புயல் வடிவேல் எவ்ளோ அழகா தமிழ் மீசை வளர்த்திருக்கார் பாருங்க..


இவங்களையெல்லாம் மீட் பண்ணிட்டு வர்ற வழியில சாலையில் எல்லாம் மாடுகள் கோஷம் போட்டுகிட்டே ஊர்வலம் போய்ட்டு  இருந்துச்சு அவங்கள்ல ஒருத்தர நிறுத்தி என்னான்னு கேட்டா?


 Behind the Post : இந்த போட்டோஷாப் இப்போதாங்க எல்.கே.ஜி படிச்சுட்டு இருக்கேன் இந்த படங்கள் உருவாக்க காரணமான திரு மோகன் குமார் அவர்களின் புதுவைன்ற இணையத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும், திரு வேலன் அவர்கள் அவரின் தளத்தில் சொல்லிக்கொடுத்த பாடங்களும் முக்கிய காரணம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இன்னும் இந்த துறையில் நிறைய கற்றுக்கொள்ள இருக்கு .. உங்களுக்கு தெரிந்த போட்டோஷாப் பற்றிய தளங்கள் தமிழ் ஆங்கிலம் எதில் இருப்பின் எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்,... நன்றி நன்றி..படைப்பை ரசித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.....

December 24, 2009

பிள்ளையின் கனவு...!


(அம்மாக்கும் புள்ளைக்கும் நடக்குற உரையாடல் புள்ளைக்கு எத்தனை வயசு தெரியுமா ஒரு மணி நேரம் தான் பிறக்குற குழந்தை பிறக்கும் போதே பேசுற சக்தியோட பொறந்துருந்தா எப்படியிருக்கும்? )

மகன் : அம்மா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........ம்க்கும் ம்க்கும் ம்க்கும்......

அம்மா: ஏண்டா ராஸா வரும்போதே அழுதுட்டே வர்ற கண்ணை துடைச்சுக்க என் செல்லம்ல ..! வாடா ராஸா இவ்வளவு நாளா உன்னை பாக்காம சோறும் இறங்கலை தண்ணியும் இறங்கலை...! எப்பிடி ராஸா இருக்க நல்லாயிருக்கியா?

மகன் : ஏதோ உன் புண்ணியத்தில ரொம்ப நல்லாயிருந்தே(கே)ன்...!நீ எப்படிம்மா இருக்க? ஆமா இங்கன சுத்தி நிக்கிற பய புள்ளைகல்லாம் யாரும்மா?

அம்மா : அடப்பாவி ரொம்ப வாயாடியா இருக்க உங்கப்பா மாதிரியே அவங்களையெல்லாம் உனக்கு தெரியாது எல்லாம் நம்ம சொந்த பந்தம்தான் ரொம்ப நாள் கழிச்சு நீ வந்துருக்கியா அதான் உன்னைய பார்க்க வந்துருக்காங்க ராஸா...!

மகன் : ஓஹ் அப்படியா ஆமா அப்பா எங்கம்மா எங்க போயிருக்கார் எப்படியிருப்பார்?

அம்மா : நல்லா இருக்கார் ராஸா நீ இன்னிக்கு வந்துடுவேன்னு தெரிஞ்சதும் நல்ல கைகால் சுகத்தோட வரணும்ன்னு கோவிலுக்கு அர்ச்சனை பண்ண போயிருக்கார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்...!

மகன் : அம்மா வர்ற வழியில பயணம் ரொம்ப களைப்பா இருந்துச்சும்மா குளிப்பாட்டி விடுறியா?

அம்மா : அப்படியா ராஸா ரொம்ப கஷ்டமா? இரு ராஸா பாட்டி உனக்காக வெந்நீர் போடபோயிருக்கா வரட்டும் அவ கையாலே குளிப்பாட்டி விடச்சொல்றேன்...!

மகன் : ம்ம் ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருந்தியா உன்னைய இவ்வளவு நேரம் காக்க வச்சு கஷ்டப்படுத்திட்டேனாம்மா?

அம்மா : இது என்னப்பா கஷ்டம் எல்லா அம்மாக்களும் அனுபவிக்கிற பாசவலிதானே சுகமான சுகம் ராஸா அதெல்லாம் ஒண்ணும் கவலையில்லை நீ நல்ல கை கால் சுகத்தோட வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம் இதுக்காக உங்கப்பாவும் நானும் வேண்டாத சாமியே இல்லைப்பா...!

மகன் : சரிம்மா அதான் வந்துட்டேன்ல நான் எப்டிம்மா இருக்கேன் ?உனக்கெல்லாம் நீளமா முடியிருக்கு எனக்கு முடியவே காணோம்...!

அம்மா : ம்ம் உங்கப்பா மாதிரியே நல்ல கலராத்தான் வந்துருக்க ! முடியா அது இனிமேல்தாண்டா வரும் இப்போ உனக்கெதுக்கு அந்த ஆசையெல்லாம்..!

மகன் : கலர்ல அப்பா மாதிரியே இருந்தாலும் குணத்துல உன்னை மாதிரியேதாம்மா இருக்கணும்ன்னு ஆசை...!

அம்மா : சரி ராஸா இதுலயும் அப்படியே உங்கப்பா மாதிரியேதான், உங்கப்பாவும் அம்மா புள்ளையாக்கும் ....!

மகன் : சரிம்மா என்னைய இந்த அக்கா யாருன்னே தெரில என்னைய ரொம்ப நேரம் பின் தொடர்ந்து வர்றாங்க முறைச்சு முறைச்சு பாக்குறாங்க யாருன்னு நீதான் கேளும்மா...!

அம்மா : டேய் அவங்கள உன்னைய பத்திரமா கூட்டிட்டு வர்றதுக்கு நாங்கதாண்டா அனுப்புனோம் ...!

மகன் : ஓஹ் அப்டியா சரி என்னைய அப்பிடி முறைச்சு பாக்க வேணாம்ன்னு சொல்லும்மா எனக்கு அவங்கள பாக்க பிடிக்கலை அவங்களும் அவங்க ட்ரெஸ்ஸும் குண்டுக்கத்திரிக்காய் ம்க்கும்...!

அம்மா : ராஸ்கல் குட்டிக்கத்திரிக்காயாட்டம் இருந்துட்டு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பெரியவங்கள ...!

மகன் : அம்மா பசிக்குதும்மா...!

அம்மா : ராஸா இரு ராஸா முதன் முதல்ல வந்துருக்க மாமா கையால கொஞ்சம் சக்கரையள்ளி குடுப்பாரு வாயில போட்டுட்டு அப்பறமா சாப்பிடலாம் சரியா?

மகன் : யாரும்மா அது ?க்கும் ம்க்கும் ம்க்கும்..!

அம்மா :அடேய் ரொம்ப பேசுற நீ அவரு என்னோட அண்ணன் தெரியுமா? அழாதடா செல்லம் ...!

மகன் : சரிம்மா அம்மா என்னோட வயித்துல சின்னதா ஒண்ணு தொங்கிட்டே இருக்கேம்மா என்னாதிது உங்களுக்கு யாருக்குமே இல்லை எனக்கு மட்டுமிருக்கு ஏன்?

அம்மா : ஹ ஹ ஹா டேய் பொறுடா இன்னும் ரெண்டு நாள்ல அதை எடுத்துடலாம்...!

மகன் : ஓஹ் அப்டியா சரி இந்தக்கா அப்போல இருந்து முத்தம் வேற கொடுத்துட்டு இருக்கு எனக்கு பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லு அவங்க மட்டுமில்லை உன்னைய தவிர யார் தொட்டாலும் அழுகையா இருக்கு...

அம்மா : என்னடா நீ எல்லாம் உம்மேல இருக்குற பாசத்துலதான அழகா வேற இருக்க அதான் போல...!

மகன் : யம்மா என்னம்மா இடம் இது பினாயில் நாத்தம் ரொம்ப கப்பு அடிக்குது உவ்வே...!

அம்மா : உனக்கு ரொம்ப லொள்ளு ராஸா...!

மகன் : சரிம்மா ரொம்ப நேரமாச்சு அப்பா வந்ததும் சொல்லு நான் இப்போ தூங்கப்போறேன் சரியா...!

அம்மா : சரி ராஸா நல்லா தூங்கு அப்பா வந்ததும் உசுப்புறேன்...!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
எங்கண்ணுறங்கு...

மகன் : யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!

அம்மா : டேய் இப்போ நீ உதை வாங்காம துங்கப்போறியா இல்லியா ரொம்ப பேசுற நீ....!




October 21, 2009

அவமானம்


தங்க கோபுரவாசலில்
வலுவாய் இருந்தும்...
திண்டாய் கல்லில் கிடைத்தவனின்
ஆளுமைக்குட்ப்பட்டு வாசலில் அநாதையாய்...

சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...

கயமைக்கு பல முறை அடிபணிந்து
சல சல வென்று சில பல முறை மணியடித்து
விழுந்து கிடக்க வாயிலிருக்க

திங்களொருமுறை கூட்டியும் பெருக்கியும்
படைத்தழித்து காத்து
தூணில் துரும்பில் திரிந்தாலும்
சொந்தமாய் நான் மட்டும் யாசிக்க புசிக்க

கறுப்பு வெளுக்க
உ லோகமால்
ஈகைக்காய் சிறைவைத்த
ஈயென்று சிரித்தவனுக்கு
அடிமையாய் நான்


September 9, 2009

தேவதையின் வரங்கள்.....

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?








எங்கிட்ட இந்த தேவதை வந்த பொழுது நான் கேட்ட வரங்கள்..

*****************************


லண்டன் போகணும்ன்னு கேட்பேன்....

**************************************************************************************


ஒரு வருசம் என்னோட கல்லூரி வாழ்க்கை திரும்ப வாழணும்ன்னு கேட்பேன்
*************************************************************************************


எல்லா மக்களுக்கும் குடிக்க உலகம் உள்ளவரை இலவசமா குடிநீர் கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

***********************************************************************************

இறந்து போன தங்கை மீண்டு வர கேட்பேன்

**************************************************************************************


ஜாதியில்லாத தமிழ்நாடு கேட்பேன்

************************************************************************************


உலக மக்கள் எல்லார்கிட்டயும் சம வசதி வாய்ப்பு கிடைக்கணும்ன்னு கேட்பேன்...

*************************************************************************************

எஸ்.பி.பால சுப்ரமணியம் குரல் வேணுன்னு கேட்பேன்

*************************************************************************************


அப்துல் கலாம் மாதிரி ஒரு நாளாவது வாழும் வாய்ப்பு கேட்பேன்...

***********************************************************************************

என்னோட அம்மா அப்பா எப்பவும் என்கூடவே இருக்கணும்ம்னு கேட்பேன்

***********************************************************************************

பணத்துக்காக இல்லாம அன்புக்கு மட்டுமே ஆசைப்படுற அழகான மனைவி கேட்பேன்....

***********************************************************************************

இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....





தொடருங்கள் நண்பர்களே

July 21, 2009

அஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10


1.எவனப்பாத்தாலும் தல தலன்றது அது அவங்க தெரு பிச்சக்காரனா இருந்தாலும்...


2.அவங்க லவ்வர் விஜய் ரசிகையா இருந்தால் உடனே எனக்கும் விஜய் பிடிக்கும்ன்னு பீலாவுடுறது......

3.பிளேடு பக்கிரி மாதிரி கழுத்துலயும் கையிலயும் பிளேடோட அலையுறது கேட்டா பேஷனாம்.....

4.ஃப்ரீயா எஸ் எம் எஸ் ன்றதுனால கேவலமா ஒரு மெச்சேஜ் டைப் பண்ணி பரப்புறது

5.தியேட்டரையே மூடி மறைக்குற அளவுக்கு பேனர கட்டி அதுல வர்றான் எங்க தல பண்ணப்போறான் உங்கள கொலைன்னு வாசகத்தோட அப்பன் காச காத்துல பறக்க விடுறது.....

6.இப்போ புதுசா ஒரு வார்த்தை வேற சொல்லிக்கிறாய்ங்க ஐ ஆம் பேக்குன்னு அவங்களே அவங்கள தப்பா சொல்லிக்கிறாய்ங்க......

7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......

8.எந்த சுவத்தப்பாத்தாலும் விஜயப்பத்தி அசிங்க அசிங்கமா கிறுக்குறது அது பொது இடமுன்னு கூட பாக்காம...... நாய் மூத்திரம் போனது மாதிரி...

9. ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......


10.படம் பாக்கமயே படத்த பத்தி தப்பா பேசுறது......




மகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்

இவ்விடுகை இளமை விகடனின் குட் பிலாக்ஸ் பகுதியில்






1.காலேஜ் போயிட்டு வந்ததும் எதும் சாப்டுறியாடான்னு கேக்குற பரிவு...

2.அதிகாலையில் தூக்கத்தை எழுப்பிவிட்டு முடி கோதியபடி இன்னும் என்னடா தூக்கம்ன்னு சொல்லி பெட்ல வைக்கிற காபி....

3.சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் போட்டுக்கடான்ற பாசம்...

4.வீட்டுக்கு லேட் நைட் வந்தாலும் , தன்னோட தூக்கம் கெட்டாலும்... பரவாயில்லன்னு நினைச்சு சாப்ட்டியாடா ந்னு கேட்டு சாப்பாடு போடுற அன்பு...

5.கேட்ட பணம் அப்பா கொடுக்காத போது தன்னோட சேமிப்பு டப்பால இருந்து மீதி பணம் கொடுக்குற அன்பு...

6. நம்ம எவ்வளவு சேட்டை செய்தாலும் சொந்தபந்தங்க கிட்ட நம்மல இவன் நல்லவன்னு அறிமுகப்படுத்துறது...

7.தனக்கு பிடித்த சீரியல் போய்ட்டு இருந்தாலும் நமக்காக சன் மியூசிக் பாக்க அனுமதிக்கிறது...

8.டேய் இன்னைக்கு ஞாயிற்றுகிழமை என்ன கறி வேணும் சிக்கன் வேணுமா,மட்டன் வேணுமான்னு கேட்டுட்டு சமைக்கிறது...

9.பரீட்சை டைமில நைட் பூரா மாங்கு மாங்குன்னு படிக்கும் போது அப்போ அப்போ கொடுக்குற டீ...

10.கோவிலுக்கு கூட்டிட்டு போயி அங்க எதுனா அழகான பொண்ணு வந்தா இந்த மாதிரிதாண்டா உனக்கு பொண்ணு பாக்கணும்ன்னு சொல்லுறது...


June 30, 2009

இதுதான் உண்மையா?

கண் முழி பிதுங்குதுன்னா இப்படியா?



காசை கரியாக்குறது இப்படியா?



பல்ல புடிங்கிடுவேன்றது இதுதானா?





மரமண்டையான்னு சொல்லுறது இவரையா?




உடன்பிறப்புகளேன்னு சொல்லுறது இவங்களையா?




பச்சைதண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறவங்க சொல்லுற பச்சைத்தண்ணி இது தானா?



ஈ மெயில் இப்படித்தான் இருக்குமா?








இதுதான் குரங்கு சேட்டையா?





June 25, 2009

சில கிடைக்கலத்துவங்கள்

இங்க சிக்னல் விளக்குக்கு போஸ்ட் கிடைக்கல



இவருக்கு போஸ் குடுக்க இடம் கிடைக்கல




இவருக்கு சாப்பிட சாப்பாடு கிடைக்கல



இவருக்கு உட்க்கார இடம் கிடைக்கல



இவருக்கு படம் வரைய அளவுகோல் கிடைக்கல



இவருக்கு கர்ச்சீப் கிடைக்கல





இங்க கார பார்க் பண்ண இடம் கிடைக்கல




இவருக்கு படுக்க இடம் கிடைக்கல



இவங்களுக்கு மிடில் ஸ்டம்ப் கிடைக்கல




இவருக்கு லைட்டர் கிடைக்கல

June 12, 2009

வலைத்தளப்பெயர்கள் பார்ட் 3 (DIRECTORS SPECIAL)

இந்த வாரம் நம்ம டைரக்டர்களின் வலைத்தள பெயர்கள்







செல்வராகவன்


ஜெயம்ராஜா

அமீர்


பாலா


மணிரத்னம்


ஷங்கர்


சேரன்

பாரதிராஜா