December 14, 2012

நீதானே என் பொன்வசந்தம் - விமர்சனம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் முக்கியமாக சமந்தாவுக்காகவேனும் பார்த்தே தீருவது என்று முதல் நாள் முதல் ஷோ பார்த்தாச்சு...பார்த்தாச்சு...

படம் எப்படிங்க இருந்துச்சு?

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல நல்ல வேளை டைரக்டர் கௌதம் இதுவரைக்கும் சொல்லாத கதை அப்படி இப்படின்னு எந்த பில்டப்பும் கொடுக்கலை அந்தளவுக்கு தப்பிச்சாண்டா சேகரு....சீ டைரக்டரு...

படத்தப்பத்தி சொல்லுங்கன்னா டைரக்டர் பத்தி சொல்றீங்களே??

யோவ் சொல்றேன்யா அதான் நெம்புகோல் தூக்கிட்டு வந்தாச்சு இல்ல நெம்பிடுவோம்.இந்த சமந்தாவும் ஜீவாவும் இஸ்கூல்ல இருந்தே பழகுறாங்கப்பா அப்பறம் பிரியுறாங்க இண்டர் காலேஜ் ஃபங்க்சன்ல திரும்பவும் சந்திக்கிறாங்க பழகறாங்க காதல் தொடருது ஜீவாவின் குடும்பத்துக்காக திரும்ப ஒரு பிரிவு அதுக்கப்பறம் சேர்றதுக்கு ஜீவா ட்ரை பண்றார் முடியலை, இதற்க்குப்பிறகு வேறொரு பொண்ணோட ஜீவாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்குது.கடைசியில சமந்தாவும் ஜீவாவும் சேர்ந்தாங்களா இல்லியா இதை எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாம ஒரு உணர்ச்சியே இல்லாம எடுத்துருக்கார்யா நம்ம டைரக்டரு....

ஜீவாவும் சமந்தாவும் ஏன் அடிக்கடி பிரியுறாங்க?

சமந்தாவும் ஜீவாவும் பிரியுறதுக்கு அவங்களும் அவங்க ஈகோவும்தான் ரீசன் வில்லன்களோ அப்பாக்களோ கிடையாது அந்தளவுக்கு சந்தோஷம் டைரக்டரே

அப்ப படம் தேறாதா?

பொதுவா காதல் படங்கள்ன்னா நம்மளுக்குள்ள ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தணும் இல்லை உணர்ச்சிப்பெருக்கை ஏற்படுத்தணும் அட்லீஸ்ட் காதலை சின்ன சின்ன விஷயங்கள்ல அழகுபடுத்தி காட்டியிருக்கலாம் இதுல எதுவுமே இந்தப்படம் கொடுக்கலை...

ஜீவா சமந்தா எப்படி?

தன்னோட அதீத காதலை வெளிப்படுத்தும் பெண்ணாக சமந்தா கிரேட்டா பண்ணியிருக்காங்க..ஜீவாவும் சமந்தாவுக்கு ஈக்வலா பண்ணியிருக்கார்.
டைரக்டர் சொல்றமாதிரி ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க சமந்தா ரொம்ப அழகா இருக்காங்க இவங்க ரெண்டுபேர் நடிப்பையுமே டைரக்டரு வீணடிச்சுருக்கார் தன்னோட சொதப்பலான திரைக்கதையால..



சந்தானம்?

இரண்டு மூணு சீன்ல சிரிப்பை வரவழைக்கிறார் என்பதை தவிர சந்தானம் வேற எதையும் செய்யவில்லை...

இளையராஜா..

பின்னணி இசை கார்த்திக்ராஜா பண்ணியிருப்பார்ன்னு நினைக்கிறேன் ஏமாத்திட்டாங்க..பாடல்களில் என்னோடு வாவா மட்டுமே இன்னும் ரிப்பீட் ஆகிட்டே இருக்கு மனசுக்குள்...

படத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயங்களே இல்லியா?

இருக்கு சமந்தா, சமந்தாவோட கஸ்ட்யூம்ஸ் , ஜீவா,அந்த குண்டு பொண்ணு, சமந்தா வைத்திருக்கும் செல்போன் மாடலை வைத்து காலகட்டங்களை வேறுபடுத்தியிருக்கும் விதம்  இதை தவிர்த்து படத்தோட ஒளிப்பதிவு எடிட்டிங் எல்லாம் நல்லா பண்ணியிருக்காங்க




பிடிக்காத விஷயம்?

ஜீவாவோட காஸ்ட்யூம்ஸ், ஸ்க்ரீன்ப்ளே, கேஸ்டிங் செலக்சன், க்ளைமாக்ஸ்,   இன்னும் நிறைய இருக்கு...

படத்துக்கு போகலாமா வேண்டாமா?

ஃபீல் குட் மூவின்னு சொல்ல முடியாது விண்ணைத்தாண்டி வருவாயாவில் பத்து பர்சண்ட் கூட கிடையாது..அதுக்கப்பறம் உங்க இஷ்டம்..

இந்த படத்துக்கு என்னோட ரேட்டிங் 1.5/5



November 23, 2012

துப்பாக்கி சர்ச்சை பற்றி...?



அனைவருக்கும் வணக்கம்.. சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தமாதிரி ஜோ என்கிட்ட பேட்டி எடுக்க நான் பேட்டி கொடுக்க நீங்க படிக்க படிச்சு முடிச்சதும் கல்லெடுக்கன்னு ஆயிப்போச்சு என் நெலம Lets Continue...






துப்பாக்கி,   சுந்தரபாண்டியன்  என இவ்விரு  திரைப்படங்களையும்  கைதட்டி ரசித்துப் பார்த்தேன்...





விகடனில் தொடராக வந்த , வாசிக்க தவறவிட்ட கவிப்பேரரசு வைரமுத்துவின்  மூன்றாம்  உலகப்போர் ஒரே தொகுப்பாக கிடைக்க வாசித்து முடித்துவிட்டேன்.. இன்னொன்று விகடன் தீபாவளிமலர் அதில் உலக சினிமாவோடு இந்திய சினிமாவை ஒப்பிட்டு வந்திருந்த கட்டுரையொன்று மிக அருமை...அத்தனை கட்டுரைகளும் மூளையை கிளர்ச்சியடைய வைக்கின்றன...அவ்வளவு பக்கங்கள் புத்தகத்தில் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரைகள் இரண்டே இரண்டுதான் மொத்தத்தில் கொடுத்த பணத்துக்கு வொர்த்..








அழகிகள் என்று வைத்துக்கொள்வோமே.. ராதிகா ஆப்தே வெற்றிசெல்வன் புகைப்படங்களிலும், சமந்தா நீதானே என் பொன் வசந்தம் புகைப்படங்களிலும் அசரடிக்கிறார்கள்...Waiting for those movies..







விகடனின் டைம்பாஸ்ஸில் தெரு ஓவியம் உதயமாகுது பகுதியில்வந்திருந்த ஓவியங்கள் அட போட  வைத்தன கூடவே போட்டோ  கமெண்ட்ஸ்ம்  கிச்சுகிச்சு மூட்டுகின்றன...








தற்பொழுது வாங்கியிருக்கும் ஹோண்டா  யுனிகார்ன் உடன்  தான் நிறைய நேரம் செலவழிக்கிறேன்...




அஜ்மல்  கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேறியது ...




பணிக்கு சேர்ந்த கடந்த ஏழுமாதங்களாக கேப் விடாமல் கெடா வெட்டினார்கள் கிடைக்கிற கேப்புல  எல்லாம் பின்னி பெடலடுத்துவிட்டனர்  இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் கடும்  மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பேன் விளைவு ரிசைனேஷன்.  வரப்போகிற புது உறவுக்காக  வெயிட்டிங் என நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்.





தொலைக்காட்சி சீரியல் டைரக்டர்களை [கில்லர்களை]




பேரரசு டைரக்ட் செய்து  எழுதியிருக்கும் திருத்தணி திரைப்படத்தில் வரும் யம்மா  யம்மா நீ ஒத்துகிறீயா என்ற பாடலில் வாழ்க்கை என்பது மேடு பள்ளம் நிறைஞ்சது என்றால் நீதானடி என் வாழ்க்கை என்ற வரிகள் 



பேருந்து நிலையங்களில் புறப்பட தயாராகும் பேருந்தின் ஜன்னல் ஓரத்திலிருந்து நடந்து செல்பவர்களின் மீது எச்சில் துப்புபவர்களை...


அகலமற்ற  சாலைகளின் ஓரங்களில் லாரி முதலான கனரக  வாகனங்களை நிறுத்திவிட்டு துங்கும் ஓட்டுனர்களை...

வண்டி நிறைய  மணல் ஏற்றிவிட்டு அதை மூடாமல் பல விபத்துகளுக்கு காரணமான ஓட்டுனர்களை

வயிறு முட்ட குடித்துவிட்டு சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் குடிமகன்களை... 

இன்னும் நிறையபேரை...



தேனி பைபாஸ் ரோட்டில் டூவீலரில் விர்ரென்று பறப்பது அலாதியான சுகம் ஆனால் அங்கு சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும் அதே வேகத்தில்  வந்து வண்டியில் மோதி விழுவது வருத்தத்தை தருகிறது...என்ன செய்வது ரூட்ட மாத்து....




கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்...





 விஜய் தொலைக்காட்சியில் வரும் கோலிவுட் கிங் திரைப்படங்கள் சம்மந்தப்பட்ட நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது தொகுத்து வழங்கும் வெங்கட் பிரபுவை மாற்றிவிட்டு பிஆர்ஓக்களாக பணிபுரிபவர்களை போட்டால் இன்னும் நிறைய சுவாரஸ்ய  விஷயங்களை  தெரிந்து கொள்ள முடியும் - வெங்கட் பிரபுவின் தொகுப்பு ஒரே சுய பரம்பரை  விளம்பரமாக இருக்கிறது...