December 30, 2009

பம்பரம்...!


கூட்டுவாழ்க்கையினின்று
கட்டவிழ்த்து விடப்பட்ட
அக்னிகுஞ்சொன்று தொய்ந்துபோன
தொவையலாய் தொட்டுச்செல்லும்
மேகமாய் உரச எத்தனிக்கையில்
அகப்படும் அந்தாதியாய்
வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்
ஆதர்ச வேளையிலிருந்து
ஆத்மா ஒன்று வெளிப்படுகிறது...

அணில்குட்டியிடம் அன்றில்போய்
ஆண்யானையின் வீராப்பு
அன்றே அகப்பையில்
அகப்பட்டு அட்டையாய்
ஒட்ட எத்தனிக்கையில் ஓடாது
குமிழ்ந்து குட்டுப்படுகையில்
குட்டையில் ஊற்றப்பட்ட
தண்ணீராய் ஓடுகிறது மனது...

சுற்றிவிடப்பட்ட பம்பரம்
சுதியேற்றிவிடப்பட்டு சுற்றி சுற்றி
போதையில்லாமலே
ஓட்டையொன்றுமிட்டு
ஓடிப்போக நினைக்கையில் பிடிபட
சாட்டையொன்று
சத்தமின்றி சத்துகுறைவாய்
விரலிடுக்கிலிருந்து கோணப்
புன்னகை சிந்துகிறது...

சூம்பிப்போன விரலாய் இன்னும்
என் மோதிரவிரல் காரணம்
கதவிடுக்கோ கத்தியோ அல்ல
காற்றாடிநூலும் அல்ல
நங்கூரப்புன்னகையும்
நாணல் வட்டமும்
அதுகொண்டு இசைக்கப்பட்ட
இசையும் அல்ல...
என்றோ கேட்கப்பட்ட கேள்வியும்
அதற்கான விடையற்ற பதிலும்...




December 24, 2009

பிள்ளையின் கனவு...!


(அம்மாக்கும் புள்ளைக்கும் நடக்குற உரையாடல் புள்ளைக்கு எத்தனை வயசு தெரியுமா ஒரு மணி நேரம் தான் பிறக்குற குழந்தை பிறக்கும் போதே பேசுற சக்தியோட பொறந்துருந்தா எப்படியிருக்கும்? )

மகன் : அம்மா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........ம்க்கும் ம்க்கும் ம்க்கும்......

அம்மா: ஏண்டா ராஸா வரும்போதே அழுதுட்டே வர்ற கண்ணை துடைச்சுக்க என் செல்லம்ல ..! வாடா ராஸா இவ்வளவு நாளா உன்னை பாக்காம சோறும் இறங்கலை தண்ணியும் இறங்கலை...! எப்பிடி ராஸா இருக்க நல்லாயிருக்கியா?

மகன் : ஏதோ உன் புண்ணியத்தில ரொம்ப நல்லாயிருந்தே(கே)ன்...!நீ எப்படிம்மா இருக்க? ஆமா இங்கன சுத்தி நிக்கிற பய புள்ளைகல்லாம் யாரும்மா?

அம்மா : அடப்பாவி ரொம்ப வாயாடியா இருக்க உங்கப்பா மாதிரியே அவங்களையெல்லாம் உனக்கு தெரியாது எல்லாம் நம்ம சொந்த பந்தம்தான் ரொம்ப நாள் கழிச்சு நீ வந்துருக்கியா அதான் உன்னைய பார்க்க வந்துருக்காங்க ராஸா...!

மகன் : ஓஹ் அப்படியா ஆமா அப்பா எங்கம்மா எங்க போயிருக்கார் எப்படியிருப்பார்?

அம்மா : நல்லா இருக்கார் ராஸா நீ இன்னிக்கு வந்துடுவேன்னு தெரிஞ்சதும் நல்ல கைகால் சுகத்தோட வரணும்ன்னு கோவிலுக்கு அர்ச்சனை பண்ண போயிருக்கார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்...!

மகன் : அம்மா வர்ற வழியில பயணம் ரொம்ப களைப்பா இருந்துச்சும்மா குளிப்பாட்டி விடுறியா?

அம்மா : அப்படியா ராஸா ரொம்ப கஷ்டமா? இரு ராஸா பாட்டி உனக்காக வெந்நீர் போடபோயிருக்கா வரட்டும் அவ கையாலே குளிப்பாட்டி விடச்சொல்றேன்...!

மகன் : ம்ம் ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருந்தியா உன்னைய இவ்வளவு நேரம் காக்க வச்சு கஷ்டப்படுத்திட்டேனாம்மா?

அம்மா : இது என்னப்பா கஷ்டம் எல்லா அம்மாக்களும் அனுபவிக்கிற பாசவலிதானே சுகமான சுகம் ராஸா அதெல்லாம் ஒண்ணும் கவலையில்லை நீ நல்ல கை கால் சுகத்தோட வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம் இதுக்காக உங்கப்பாவும் நானும் வேண்டாத சாமியே இல்லைப்பா...!

மகன் : சரிம்மா அதான் வந்துட்டேன்ல நான் எப்டிம்மா இருக்கேன் ?உனக்கெல்லாம் நீளமா முடியிருக்கு எனக்கு முடியவே காணோம்...!

அம்மா : ம்ம் உங்கப்பா மாதிரியே நல்ல கலராத்தான் வந்துருக்க ! முடியா அது இனிமேல்தாண்டா வரும் இப்போ உனக்கெதுக்கு அந்த ஆசையெல்லாம்..!

மகன் : கலர்ல அப்பா மாதிரியே இருந்தாலும் குணத்துல உன்னை மாதிரியேதாம்மா இருக்கணும்ன்னு ஆசை...!

அம்மா : சரி ராஸா இதுலயும் அப்படியே உங்கப்பா மாதிரியேதான், உங்கப்பாவும் அம்மா புள்ளையாக்கும் ....!

மகன் : சரிம்மா என்னைய இந்த அக்கா யாருன்னே தெரில என்னைய ரொம்ப நேரம் பின் தொடர்ந்து வர்றாங்க முறைச்சு முறைச்சு பாக்குறாங்க யாருன்னு நீதான் கேளும்மா...!

அம்மா : டேய் அவங்கள உன்னைய பத்திரமா கூட்டிட்டு வர்றதுக்கு நாங்கதாண்டா அனுப்புனோம் ...!

மகன் : ஓஹ் அப்டியா சரி என்னைய அப்பிடி முறைச்சு பாக்க வேணாம்ன்னு சொல்லும்மா எனக்கு அவங்கள பாக்க பிடிக்கலை அவங்களும் அவங்க ட்ரெஸ்ஸும் குண்டுக்கத்திரிக்காய் ம்க்கும்...!

அம்மா : ராஸ்கல் குட்டிக்கத்திரிக்காயாட்டம் இருந்துட்டு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பெரியவங்கள ...!

மகன் : அம்மா பசிக்குதும்மா...!

அம்மா : ராஸா இரு ராஸா முதன் முதல்ல வந்துருக்க மாமா கையால கொஞ்சம் சக்கரையள்ளி குடுப்பாரு வாயில போட்டுட்டு அப்பறமா சாப்பிடலாம் சரியா?

மகன் : யாரும்மா அது ?க்கும் ம்க்கும் ம்க்கும்..!

அம்மா :அடேய் ரொம்ப பேசுற நீ அவரு என்னோட அண்ணன் தெரியுமா? அழாதடா செல்லம் ...!

மகன் : சரிம்மா அம்மா என்னோட வயித்துல சின்னதா ஒண்ணு தொங்கிட்டே இருக்கேம்மா என்னாதிது உங்களுக்கு யாருக்குமே இல்லை எனக்கு மட்டுமிருக்கு ஏன்?

அம்மா : ஹ ஹ ஹா டேய் பொறுடா இன்னும் ரெண்டு நாள்ல அதை எடுத்துடலாம்...!

மகன் : ஓஹ் அப்டியா சரி இந்தக்கா அப்போல இருந்து முத்தம் வேற கொடுத்துட்டு இருக்கு எனக்கு பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லு அவங்க மட்டுமில்லை உன்னைய தவிர யார் தொட்டாலும் அழுகையா இருக்கு...

அம்மா : என்னடா நீ எல்லாம் உம்மேல இருக்குற பாசத்துலதான அழகா வேற இருக்க அதான் போல...!

மகன் : யம்மா என்னம்மா இடம் இது பினாயில் நாத்தம் ரொம்ப கப்பு அடிக்குது உவ்வே...!

அம்மா : உனக்கு ரொம்ப லொள்ளு ராஸா...!

மகன் : சரிம்மா ரொம்ப நேரமாச்சு அப்பா வந்ததும் சொல்லு நான் இப்போ தூங்கப்போறேன் சரியா...!

அம்மா : சரி ராஸா நல்லா தூங்கு அப்பா வந்ததும் உசுப்புறேன்...!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
எங்கண்ணுறங்கு...

மகன் : யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!

அம்மா : டேய் இப்போ நீ உதை வாங்காம துங்கப்போறியா இல்லியா ரொம்ப பேசுற நீ....!




December 22, 2009

இது ஒரு காதல் கதை...!

இது ஒரு காதல் கதை...!

டேய் மாப்ள "நேத்து ராமசாமி பண்ணையார் டேய் மாப்ள "நேத்து ராமசாமி பண்ணையார் கரும்பு தோட்டத்துல போய் உழுதுட்டு பொழுது சாய்ந்ததும் வீட்டுக்கு திரும்பிட்டு இருக்கும் போது அந்த மேற்க்கு தெரு சுந்தர் ராமன் வீட்டுப்பக்கமா வந்துட்டு இருந்தேண்டா அந்த வீட்ல அப்படியே சொக்கவைக்குற அழகுல ஒருத்திய பாத்தேண்டா மாப்ள அசந்து போய் அங்கயே நின்னுட்டு அவளையே வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தேன் ஒரு பத்து நிமிசம் நான் நானாவே இல்லைன்னு வச்சுக்கோயேன் அப்படி ஒரு அசத்துற அழகு

அப்போவே கல்யாணம் கட்டுனா அவளத்தான் கட்டணும்ன்னு முடிவு பண்ணிட்டேண்டா மாப்ள" நீ என்ன சொல்ற?

டேய் உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலை அவரு எம்மாம்பெரிய ஆளு அவரோட சொத்து என்ன வயலென்ன வரப்பென்ன அவருகிட்ட கூட நம்ம நிக்க முடியுமா? நீயே சொல்லு..

"இதுல என்னடா இருக்கு ஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பா?"

ஆசைப்பட்டவங்கள கட்டணும்ன்னு நினைக்குறது தப்பேயில்லை நம்ம தகுதிக்கு மீறிய வசதி இருக்குறவங்க மேல ஆசைப்படுறதுதான் தப்பு...அவருக்கு இருக்குற சொத்து பத்துக்கு சீமையில இருந்து பொண்ணு கேட்டு வருவாங்கடா நம்ம அடுத்தவேலை சோத்துக்கே திண்டாடுறோம்.இது ஆவாதுடா சொன்னா கேளு...

நீயென்னடா வியக்கியானம் பேசற நான் அவளப்பாத்துட்டு இருக்கும்போது என்னைப்பாத்து கண்ணடிச்சா தெரியுமா?அப்படியே ஓரக்கண்ணுல பாத்துட்டே இருந்தா அந்த சுந்தர்ராமனும் பக்கத்துல இருந்தான் இருந்தாலும் பயமே இல்லாம என்னையப்பாத்து சின்னதா சிரிச்சா பாரு யப்பா அசினென்ன சிரிக்கிறா அவ எல்லாம் இவகிட்ட பிச்சையெடுக்கணும்...

"அடப்பாவி இந்தக்கருமம் வேறயா?"

ம்ம் "அவளுக்கும் எம்மேல ஆசையிருக்கு எனக்கும் அவ மேல ஆசையிருக்கு இரண்டு பேருக்கு விருப்பம் இருக்கும்போது ரெண்டுபேரும் கண்ணாலம் கட்டிகிடுறதுல என்ன தப்பிருக்கு?"

"தப்பேயில்லை ராசா அப்போ நீ நான் சொல்றத கேக்கப்போறதில்லை சரி விடு அடுத்து ஆக வேண்டியதைப்பார்ப்போம் "

ம்ம் "சரி நாளைக்கு சுந்தர் ராமன் வீட்டுக்கு பொண்ணு கேட்டு போறோம் நீட்டா சுருக்கா குளிச்சு கிளிச்சி வா சரியா?"

"அடப்பாவி என்னையும் உன்னோட சேர்ந்து அடிவாங்கிவிடணும்ன்னு முடிவு பண்ணிட்டியா சரி விடு எவ்வளவோ பண்ணிட்டோம் இது பண்ணமாட்டோமா?
வர்றேன் நீயும் ரெடியா இரு"

"சரிடா சந்தோஷமா இருக்குடா"

"இருக்கும்டி இருக்கும் எதுக்கும் முதுகுல கொஞ்சம் வெண்ணெய தடவிட்டு வர்றேன் நீயும் தடவிக்கடி மாப்ள"

அடுத்த நாள் இருவரும் சுந்தர் ராமன் பண்ணையார் வீட்டுக்கு போறாங்க அங்க

சுந்தர் ராமனோட வேலையாள் ராமராசு இவங்க வர்றதப்பாத்துட்டு வாசல்லயே வழி மறிச்சுட்டு டேய் பொறம்போக்குகளா அவுத்துவிட்ட எதுவோ மாதிரி வீட்டுக்குள்ள நுழையுறீங்க"யார்டா நீங்க"

"நாங்க சுந்தர் ராமன் பண்ணையார பாக்கணும் அவருகிட்ட சில விஷயங்கள் பேசணும்"

"தோ இரு பண்ணையார கூப்புடுறேன் "

பண்ணையார் வந்து இவங்க கிட்ட வந்து "டேய் பொடிப்பசங்களா என்னடா விஷயம்ன்னு" கேட்க

நம்ம ஹீரோ பண்ணையார்கிட்ட "அவரு வீட்டு பொண்ணு மேல ஆசைப்படுறதையும் அவள கட்டிகிட ஆசைபடுறதையும்" சொல்றார்

இத கேட்ட பண்ணையார் ஹீரோவ ஒரு மாதிரி ஏற இறங்க பாத்துட்டு "என் வீட்டு பொண்ணு கேக்க எவ்வளவு தைரியம் உனக்கு"

இல்லைங்க எனக்கு அவள பிடிச்சுருக்கு அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் என்னோட உயிரக்கூட விடத்தயார்ன்னு சொல்றார் ஹீரோ..

இதக்கேட்டதும் ஆடிப்போன பண்ணையார் சரி "உன்னோட ஆசை புரியுது ஆனா ஒரு கண்டிசன் அவளக்கட்டணும்னா நீ என்னோட வீட்டோட மாப்பிள்ளையா ஆயிடணும் சரியான்னு "கேட்டார்

எஞ்சாமி நீங்க சம்மதம் சொன்னதே பெரிய விஷயம் பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஆறறிவு மனுசங்களே சம்மதிக்கும் போது நான் உங்க வீட்டு லட்சுமி மேல ஆசப்பட்ட நாலுகால் காளை தானேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டு அவங்க ஆள் இருக்குற மாட்டு தொழுவம்பக்கம் பாத்து போய் "செண்பகமே செண்பகமேன்னு "பாட்டு பாட சுபம்...

சிரிக்ககூடாது நக்கல் பண்ணக்கூடாது ஆமா எவ்வளவு நாளைக்குத்தான் அரச்ச மாவையே அரைக்குற மனுசங்க காதல் கதையே படிக்குறதுன்றதுக்காக ஒரு சேஞ்சுக்கு காளையின் காதல் பத்தி எழுதுனது...



நமக்கெல்லாம் ஆறாவது அறிவு இருந்து என்ன செஞ்சுக்கிட்டு இருக்கோம்ன்றது ஊரறிஞ்ச விஷயம்......

வாயில்லா பிராணிகளான சில விலங்குகளுக்கு நம்மமாதிரியே ஆறாவது அறிவு ?இருந்தா என்ன பண்ணும்ன்னு கொஞ்சம் கற்பனைய சிதற விடுவோமா?

மாட்டுக்கு ஆறாவது அறிவும் பேசும் திறமையும் இருந்திருந்தா...

1.பெண்களுக்கு மட்டுமே பால் கறக்கும் அனுமதியளித்திருக்கும்...

2.பாலுக்கு விலை மாடுதான் நிர்ணயிச்சிருக்கும்...

3.வைக்கோலுக்கும்,புண்ணாக்குக்கும் உப்பு போட்டு சாப்பிட்டுருக்கும்.

4.கன்றுக்குட்டி அம்மான்னு வந்தா தாய்பசு மகளேன்னு சொல்லி ஆரத்தழுவியிருக்கும்.

5.மாட்டுக்கொட்டகையில் டாய்லெட் கட்டியிருக்கும்

6.வெளியூருக்கு அடிமாடா ஏற்றிச்செல்லும் மாடுகளின் வண்டிய மறிச்சு சக மாடு நண்பர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியிருக்கும்,

7.மனுஷன் சாப்பிடுவதற்க்காக மாட்டை வெட்டும்போது `அய்யோ கொலை பண்றாங்க`ன்னு கத்தியிருக்கும்

8.மாட்டுப்பொங்கல் நாமக்கொண்டடுற மாதிரி அது மனுஷ பொங்கல் கொண்டாடியிருக்கும்.



நாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா

1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,

2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம

3.ஒருத்தரையும் கடிக்காது..

4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்

5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்

6.உச்சா மட்டும் போஸ்ட்லதான் அடிக்கும்(ஏன்னா நம்மளும் அது மாதிரிதான் பண்றோம்)

7.தங்களுக்குன்னு தனியா வீடுகட்டி அங்கதான் செக்ஸ் வச்சுட்டு இருக்கும் ஏன்னா புண்ணிய பூமியில நிறைய பேர் கேமராவோட அலையுறானுகளாம்.

8.நம்ம வீட்டுல சமைச்சுட்டு இருக்கும் போது என்னம்மா கறிச்சோறான்னு கேக்கும்?(மோப்பசக்தியிருக்கே அதான்)

அடுத்து எந்த விலங்கு....? இல்ல மனுஷனுக்கு அஞ்சறிவு இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பான்னு போடலாமோ?(அதான இப்போ பண்ணிட்டு இருக்கோம்ன்னு நீங்க சொல்றது கேக்குது)







December 18, 2009

பதினெட்டு வயது...!

தேவாசார் மியூசிக் போட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான சூரியன் படத்துல வர்ற இந்த பாட்டை கேட்டதும் நம்ம முருகன் கோச்சுகிட்டதும் அதுக்கப்புறமான சுவாரஸ்யங்கள் எல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே....!

பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட

இதுக்கப்புறம் நடந்த பின்னூட்ட் சுவாரஸ்யங்கள்...


















December 17, 2009

சின்ன சின்னதாய் சில...! பார்ட் 2



நானும் என்னோட மனசாட்சியும் பேசுகிட்டே இருக்கும்போது மனசாட்சி சொல்லுது நான் சொல்லுற ஒவ்வொரு பொருளுக்கும் உன்னோட கவிதை சொல்லுன்னுச்சு அதைப்பற்றி பார்ப்போமா?

**************************************************************************************

மனசாட்சி : உன்னோட கண்ணைப்பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான்:

உலகத்தை காட்டி என்னை
காட்ட மறந்தவன்...!


**************************************************************************************
மனசாட்சி: சரி நட்சத்திரம் பத்தி சொல்லேன்...

நான் :

நடை பழகும் நிலாவின்
காவல்காரன்...!


***************************************************************************************

மனசாட்சி : ஓஹ்...சரி சரி அந்த மேகம் பத்தி சொல்லேன்

நான் :

நகராத வானத்தின்
நகரும் ஆடை...!

**************************************************************************************

மனசாட்சி : ஆகா இப்டி ஒண்ணு இருக்கோ அப்போ மழைக்கு என்ன சொல்லுவ?

நான் :

மண்ணுக்கு வானம்
தந்த கொடை...!


****************************************************************************************

மனசாட்சி : அருமைப்பா சரி இந்த எறும்பு பத்தி கொஞ்சம் சொல்லேன்..

நான் :

சிக்னலில்லா
ட்ராஃபிக் ரூல்ஸின்
முன்னோடி...!

***************************************************************************************

மனசாட்சி : ஓஹ் சரி இந்த சேவல் பத்தி கொஞ்சம் சொல்லேன்

நான் :

பேட்டரியில்லா
அலாரம்...!

**************************************************************************************

மனசாட்சி : ஆமாவா? அப்போ இந்த கொலுசு பத்தி கொஞ்சம் சொல்லு

நான் :

அபாயம்,அழகு
இரண்டுக்குமான முன்னெச்சரிக்கை...!

*************************************************************************************

மனசாட்சி: ஏம்பா சரி விடு கோலம் பத்தி ரெண்டு வரி சொல்லு

நான்:

சிக்கிய
சிக்கல்...!

**************************************************************************************
மனசாட்சி : நெற்றியிலிடும் குங்குமம் பத்தி கொஞ்சம் சொல்லு...

நான் :

விதவையின்
ஏக்கம்...!


*************************************************************************************
மனசாட்சி : எல்லாத்துக்கும் விடை வச்சுருக்க காக்கா பத்தி சொல்லேன்

நான் :

சனீஸ்வர
பகவானின் ஸ்கூட்டர்...!

(சிரிக்ககூடாது ஆமா)


***************************************************************************************

மனசாட்சி : ஹ ஹ ஹா சரி சரி ஓட்டு பத்தி சொல்லேன்

நான் :

நோட்டுக்கு
மட்டும்...!

**************************************************************************************

மனசாட்சி : சரி கடைசியா காதலர்கள் பத்தி சொல்லு

நான் :

அழுகிய பழத்தில்
இருக்கும் வண்டுகள்...!


**************************************************************************************

December 15, 2009

வரன் கடை...!

நித்யா 24 வயது திருமண வயதை அடைந்த பெண் இப்போ நடக்குற வரன் தேடல் அவளுக்கு சுத்தமா பிடிக்கலை போட்டோ பாத்து செலக்ட் பண்றதை விட சேலைக்கடைக்கு போய் பிடிச்ச சேலை எடுத்துகிடுற மாதிரி தனக்கு வரப்போற வரனையும் செலக்ட் பண்ணுற மாதிரி வரன் கடைன்னு ஒண்ணு இருந்தா எப்பிடியிருக்கும்?! என்ன எல்லாம் ஒண்ணுதானே காசு போட்டு வாங்குறோம் சரியான ஆளை தேர்ந்தெடுக்க வேணும்தானே அப்படியே அவள் நினைத்தது மாதிரியே வரன் கடை இருந்திருந்தால்..!!!

இனி வரன் கடைக்கு நித்யா போனதுபற்றிய கற்பனை சுவாரஸ்யங்கள்.....

அங்காடி உள்ளே நுழைந்ததும் அங்காடி உரிமையாளர் நித்யாவை வரவேற்று வாங்க மேடம் வாங்கன்னு சொல்லிட்டு கடைப்பையனிடம் அம்மாவை அந்த மணமகன் பிரிவுக்கு கூட்டிட்டு போயி என்னமாதிரி வேணும் எந்த விலையில் வேணும்ன்னு கேட்டு நல்லவரா பாத்து எடுத்துப்போடுடான்னு சொல்லி அடுத்துவந்த வாடிக்கையாளரை கவனிக்க போய்விட்டார்....

கடைப்பையன் நித்யாவை முதலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த எஞிசினியரு வரிசைக்கு கூடிட்டு போய் முதல்ல இருந்த ஒருத்தரை காட்டி மேடம் இவரு பெங்களூர்ல கம்ப்யூட்டர் எஞ்சினியரா இருக்காரு ரொம்ப சம்பளம் வாங்குறாரு இவரை வாங்குனா உங்களுக்கு ஒரு லேப்டாப்பும் இலவசமா தர்றோம்..மேட்சிங் சரியான்னு கூட நீங்க அந்த மேட்சிங் கண்ணாடில போய் பாத்துட்டு சொல்ல எங்க கடையில வசதியிருக்கு. இவரோட விலை 50 சவரன் நகை மட்டும்தான் தள்ளுபடி காலம்ன்றதுனால திருமண செலவை இவரே செய்துடுவார்...மெயிண்டெனன்ஸ் செலவு ஜாஸ்தி போக வர காரு,பைக்,இதெல்லாம் கொடுத்தாதான் ரொம்ப நாளைக்கு கூடவே வருவார்ன்னு கடைப்பையன் சொல்லவும் நித்யா அவரை மேட்சிங் பாத்துட்டு..மேட்சிங் சரியில்லப்பா அடுத்த ஆளக்காட்டு பாக்கலாம்ன்னு அடுத்த ஆளை நோக்கி போனாள்...

அடுத்து இருந்த எஞ்சினியரு வரிசையில யாரும் பிடிக்காமல் போகவே அதற்க்கு அடுத்து இருந்த டாக்டரு வரிசைக்கு கடைப்பையன் கூட்டிட்டு போயி முதல்ல இருந்த சிவப்பான கலர் டாக்டர காட்டிட்டு மேடம் இவரு டாக்டருக்கு படிச்சவரு அரசாங்க மருத்துவ மனையில இருக்காரு தனியாவும் ஆஸ்பத்திரி வச்சுருக்காரு உங்க கலருக்கு இவரு கொஞ்சம் மேட்ட்சிங் ஆவாரு பாருங்க இவரை வாங்கினா ஆயுள்முழுதும் இலவச மருத்துவத்துக்கான கூப்பன் கொடுக்குறோம்..இவரோட விலை 75 சவரன் நகை..ரொம்ப நாளைக்கு கூடவே வருவாரு ஏன்னா எந்த கெட்ட பழக்கமும் இல்லை..என்ன இவருக்கு மெயிண்டனன்ஸ் செலவுன்னு பார்த்தா ஒரே ஒரு 4 அடுக்கு நர்சிங் ஹோம் போதும்..அப்புறம் நீங்க கவலைப்பட வேண்டியதே இல்லை உங்களுக்கு தொல்லையே கொடுக்கமாட்டார்.

நித்யா ம்ஹ்ஹும்ன்னு உதடு பிதுக்கி வேண்டாம்பா விலை ஜாஸ்தியா இருக்கு அடுத்த ஆளக்காட்டுன்னு சொல்லவும்.கடைப்பையன் அடுத்து இருக்குற பிஸ்னெஸ்மேன் வரிசைக்கு கூட்டிட்டு போய் அதில இருந்த ஒருத்தரை காட்டி மேடம் இவரு ஊர்ல ரெண்டு பெரிய டிவி ஷோரூம் வச்சுருக்காரு நல்ல வசதி கை நிறைய சம்பாதிக்கிறாரு ஆள் கொஞ்சம் கலர்தான்னாலும் நீட்டானவரு குனிஞ்ச தலை நிமிராம இருப்பாரு என்ன கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி கொஞ்சம் நிறைய தண்ணியடிப்பார். இவரை நாங்க ஆடித்தள்ளுபடி விலையிலே கொடுக்கிறோம் இவரோட விலை 40 சவரன் நகை மட்டுமே...

யப்பா ஆளவிடுங்க சாமி அடுத்த ஆளை காட்டுங்கன்னு நித்யா தெரிச்சு ஓடிபோய் அடுத்த ஆளைப்பாக்க போக மேடம் இவருதான் எங்க கடையிலே ரொம்ப சீப்பா கிடைக்கிறவரு சொந்தமா லேத் மெசின் வச்சுருக்காரு தினம் 300 400 வருமானம் கருப்பானவரு உங்களுக்கு மேட்ச் ஆக மாட்டாரு அதிக நாளைக்கு கூடவே வருவாரு வீடு கூட சின்னதுதான் விலையும் ரொம்ப கம்மி இவரு வேணாம் மேடம்ன்னு சொல்ல விலைய சொல்லுப்பான்னு நித்யா கேக்க இவருக்கு விலைன்னு பாத்தா நீங்க என்ன கொடுக்குறீங்களோ அதையே வாங்கிகிடுவோம் ஒழிஞ்சது சனியன் ரொம்ப நாளா கடையில் இருக்கு போய் தொலைய மாட்டேன்னுதுன்னு வித்துடுறோம்...

நித்யா யோசனையில்....மூழ்கி அவரும் வேணாம்ன்னு போயிட்டாள்..
அவளும் இந்த காலத்து பெண் தானே...அவ மட்டும் விதி விலக்கா ஆணுக்கு நிகர் பெண் சரிசமம் வரதட்சிணைன்னு ஆண்கள் பேசறாங்க அழகுன்னு பெண்கள் பேசுறாங்க இருவரும் தராசுதட்டாய்...மனசு பாத்து யாரும் மணம் புரிவதில்லை ஏன்? திருமணம் எல்லாம் வியாபார சந்தையா மாறிட்டு இருக்கு ...(நோ சீரியஸ்)

December 13, 2009

ராமு ராணி

"டேய் ராமு ராமு ஒன்னோட பென்சில் கொஞ்சம் கொடுடா எதிட்டு கொடுக்குறேன் என்னோடது ஒடஞ்சுபோச்சுடா ப்ளீஸ்டா"

"நா உங்கிட்ட அழ்ரப்பர் கேக்கும்போது நீ கொடுக்கமாட்டேன்னுட்டேல"
போ நான் உனக்கு தரமாட்டேன் போடி...

"டேய் ராமு கொடுடா உங்கிட்ட ரெண்டு இருக்குன்னுதான கேட்டேன் "டீச்சர் வரதுக்குள்ள கொடுடா ப்ளீஸ்டா வீட்டுப்பாடம் எழுதணும்டா " வீட்டுக்கு போனதும் எங்கம்மாகிட்ட சொல்லி உனக்கு புது பென்சில் வாங்கிக்கொடுக்குறேண்டா" ப்ளீஸ்டா ப்ளீஸ் ப்ளீஸ்...

"போடி தரமாட்டேன் போ "

ஏண்டா கோச்சுக்கிற சரி "இனி நீ கேக்கும்போது அழ்ரப்பர் கொடுக்குறேண்டா" இப்போ பென்சில் கொடுடா "நீ என் ஃப்ரண்ட்தான ஹெல்ப் பண்ண மாட்டியா?"

"வீட்டுக்கு போனதும் வாங்கிகொடுக்கணும் சரியா?" இந்தா வச்சுக்க...

"ஹைய்யா என் ராமுன்னா ராமுதான் இந்தா ஆரஞ்ச்மிட்டாய் எங்கண்ணே ரெண்டு கொடுத்தான் ஆளுக்கொண்ணு வச்சுக்கிடலாம்!"

ம்ம்.."ஏய் ராணி மிட்டாய் நல்லாருக்குடி நாளைக்கு வரும்போதும் இதே மாதிரி ஒண்ணு உங்கண்ணன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வாடி"

முடியாதுடா "எங்கண்ணன் எங்கப்பாட்ட சொல்லிக்குடுத்துடுவான் அப்புறமா எங்கப்பா என்ன அடிப்பார் தெரியுமா?" மிட்டாய் மட்டுமில்ல நான் எது கேட்டாலும் வாங்கித்தர மாட்டாரு எங்கண்ணன் இருக்கானே அவன் எது கேட்டாலும் வாங்கித்தருவார் எனக்கு அழுவையா வரும் தெரியுமா?

சீ உங்கப்பா ரொம்ப மோசம் ராணி "எங்கப்பா எவ்வளவு நல்லவரு தெரியுமா?"என்னைய அடிக்கவே மாட்டாரு நான் என்ன கேட்டாலும் வாங்கி கொடுப்பாரு எங்கக்கா சரண்யாக்கும் எல்லாம் வாங்கி கொடுப்பார் தெரியுமா ? நேத்து கூட ரிமோட் கார் நான் கேட்டதும் கடைக்கு கூடிட்டு போய் வாங்கி குடுத்தார் நாளைக்கு அத உனக்கு எடுத்துட்டு வந்து காட்டுறேன் சரியா ஏன் ராணி உங்கப்பா அப்பிடியிருக்காரு?

ஆமாடா உங்கப்பாதான் பெஸ்ட்" எனக்கென்னடா தெரியும் நான்சின்னப்புள்ளையா இருக்கும்போதிருந்தே அப்பிடித்தான் எங்கப்பா என்னைய அடிச்சுட்டே இருப்பாரு" ம்க்கும்..ம்க்கும்..ம்க்கும்..

சரி ராணி அழுவாதடி கண்ண தொடச்சுக்க "இந்தா சட்ட"
ஏன் ராணி உங்கப்பா அடிக்கும்போது உங்கம்மா தடுக்கமாட்டங்களா?


"எங்கம்மா தடுக்க வந்தாலும் எங்கம்மாவையும் அடிப்பார்டா" பாவம் அவங்க எனக்காக அடி வாங்கிட்டு அவங்களும் அழுவாங்க எனக்கு பாவமா இருக்கும் என்னமோ ரெண்டு பேரும் பேசிக்குவாங்க "நான் பிறக்கமுன்னாடியிருந்தே எங்கப்பா ஆம்பிளப்பிள்ளை வேணும்னு சொன்னாராம் எங்கம்மா பொம்பளைப்புள்ள வேணும்ன்னு சொன்னாங்களாம்" அதே மாதிரி நானும் பொறந்துட்டேனா அது எங்கப்பாக்கு பிடிக்கலியா அதான் என்மேல அவருக்கு கோபம்.அவருக்கு "பொம்பளைப்புள்ளையே புடிக்காதாம்"

"ஆமாவா ராணி" ஆமா ஆம்புள்ளப்புள்ளைக்கும் பொம்பளைப்புள்ளைக்கும் என்ன வித்யாசம்டி? "ரெண்டுபேருமே ஒரேமாதிரிதான் சாப்டுறோம் ரெண்டுபேரும் ஒரே மாதிரிதான அழுவுறோம்,சிரிக்கிறோம்,படிக்கிறோம்" பின்ன ஏன் இதுமாதி நினைக்கிறார் உங்கப்பா?

நீயும் நானும் சின்னப்பசங்களா இருக்குறதுனால எதுவும் தெரில எனக்கும் ஆனா "இது தப்புன்னு மட்டும் தெரியுதுடா எனக்கு"..

ம்ம் சரி விடு ராணி" நானிருக்கேன் உனக்கு எதெல்லாம் வேணும்ன்னு சொல்லு எங்கப்பாட்ட சொல்லி நான் வாங்கிகொடுக்கிறேன் சரியா?"

இப்போ இப்பிடிதான் சொல்லுவ "நீயும் பெரியவனாயிட்டா இப்பிடித்தான் மாறிடுவ!"


மாட்டேன்பா ப்ராமிஸா" நான் பெரியவனானாலும் உன்னையும் சரி உன் மாதிரி பொண்ணுங்களையும் கஷ்டப்படுத்த மாட்டேன்பா" நானும் எங்கப்பா மாரியே தான் !

எவ்வளவு நல்லவன்டா நீ சரி நான் உன்ன நம்புறேன் இப்போ வா ரெண்டுபேரும் பாட்டுப்பாடிட்டே விளையாடலாம்

ம் சரிடி
நான் ரெடி




"ராணி ராணி வாடி
ராமு சொல்றான் வாடி
ராங்கு பண்ணாம வாடி
ராஜா ராணி ஆட்டம் ஆட வாடி
போங்காட்டமாடாத வாடி
போட்டிக்கு போட்டி வாடி
சேர்ந்து ஆடலாம் வாடி
வானம் தொடலாம் வாடி"

December 12, 2009

தொலைந்தது வேண்டும்..!



யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில் வந்தது பார்க்க இங்கு கிளிக்பண்ணுங்க



தண்ணீரில்லாமல் முளைவிடும்




விதை வேண்டும்

கண்ணீரும் லிட்டர் கணக்கில்
கடைகளில் கிடைக்க வேண்டும்

பஞ்சு மிட்டாய் என்றால் என்னவென்று
தேட அகராதி வேண்டும்

கோவணம் அருங்காட்சியகத்திலாவது
இடம் பெற வேண்டும்

உட்கார்ந்து சாப்பிடவாவது
ஒரு அடி இடம் வேண்டும்...

ழ ல ள இருக்கும் தமிழ்
பாடல் கேட்க வேண்டும்..

சி ஓ2 இல்லாத காற்று
சுவாசிக்க வேண்டும்..

தாய்ப்பால் டப்பாவிலாவது
கிடைக்க வேண்டும்...

பருத்தி நூலில் செய்த
சட்டை வேண்டும்...

இவற்றையெல்லாம் பற்றி
நினைக்கநேரமும் வேண்டும்

இவண்
முருக்ஸ் (முருகன்)
எழுதியது 1-2-2050














December 11, 2009

அர்த்தமற்றேற்று...



ஐந்து முனையாய்
ஒற்றை கண் ஆயிரம் காவல்
பல்லக்கில்லா ஊர்வலம்
ஆழிநிற நேரற்ற வீதியில்
ஓட நடக்க நிற்க...

தினம் ஒரு முகமூடி
முகமற்று மூன்று
நாலாறும் ஆராரோ
யார் யாருக்கோ...

நகராத வீட்டின்
நகரும் ஆடையில் நாணம்
தென்றல் வீசும் பொழுது
தென்றல் வீசாத தென்றல்...

களவிப்படுக்கை
காரணி,அத்தாட்சி
தினம் ஒரு ஜனனம்
தினம் ஒரு மரணம்

வளர்ச்சியில்
மன சேர்க்கை
யாரோ ஒருவனின்
உணவாய் ஒரு நாள்

இரவாறில் ஜோடி முத்தம்
யாருங்காணா ஓரிடத்தில்
சந்திப்பு பகலாறும்
பெண் ஒப்புமை
பெண் ஆசை யை
அர்த்தமற்றேற்று
ஆண் வீரம் வீரமற்று...

December 5, 2009

வசந்த் B.Ed (Blogger)



A for ANONY

B for BLOGGER

C for COMMENTS

D for DASHBOARD

E for EDIT

F for FOLLOWERS

G for GMAIL

H for HELP

I for IMAGE

J for JOKES

K for KAVITHAI

L for LABEL

M for ME THE FIRST

N for NEW POST

O for OPEN ID

P for POSTING

Q for "QUTATION"


R for REPEET

S for SETTINGS

T for TEMPLATE

U for USER

V for VOTE

W for WIDGET

X for XML code

Y for ?

Z for ?

இது இரண்டுக்கும் முட்டி மோதி உருண்டு பிரண்டு பாத்திட்டேன் ஒண்ணும் தெரில இருந்தாலும் நம்ம சீனா ஐயா என்னைய போனா போகுது பொழைச்சுப்போன்னு ஜஸ்ட் பாஸ் போட்டு வாத்தியாராக்கிட்டாருல்ல...ஹ ஹ ஹா...

ஆம் திரு சீனா ஐயா அவர்களின் ஆசியால் இன்றுமுதல் டிசம்பர் 7 முதல் டிசம்பர் 14 வரைக்கும் வலைச்சர ஆசிரியரா பொறுப்பேத்துக்கப்போறேன் ஜஸ்ட் 7 நாள்தான் கொஞ்சம் என்னோட அறுவைய பொறுத்துட்டு அங்கு வந்து உங்களோட பொன்னான ஆதரவை தரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி நட்பூக்களே... இங்கே அழுத்தி வலைச்சரத்திற்க்கு வரவும்


December 3, 2009

கிளிப்பேச்சைக்கேட்க வா

நான் ஒரு ஜோடிக்கிளி கண்டேன்..

கீச் கீச்சென்று அவைகள் பேசுவதை கேட்ட எனக்கோ அதை மொழி பெயர்க்க ஆசை

இதோ

கூண்டுக்குள்ளவே வாழ்க்கைன்னு இருக்குற ஒரு கிளி பொழுதொன்று சாயும் வேளையில் தன் கீச்சு குரலால் பாட ஆரம்பிச்சுச்சு இதை அந்த வழியா புதுசா போயிட்டு இருந்த ஒரு ஆங்கிளி கேட்டு அந்த குரல் மேல் ஒரு வித ஈர்ப்பு கொண்டு அந்த குரல் வந்த திசை நோக்கி தன் இறகையும் வாழ்க்கையையும் திருப்பியது..

அங்க போயி அந்த ஆங்கிளி அந்த பெங்கிளி ஒரு கூண்டுக்குள்ளாற அதோட முகமும் உடலும் தெரியாத மாதிரி அதன் கண்கள் மட்டும் தெரியுற மாதிரி அடஞ்சு போய் கிடக்குறத பார்த்து ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டு பெங்கிளிட்ட கேக்குது ஏன் இப்படி கூண்டுக்குள்ளவே வாழ்றீங்கன்னுச்சா அதுக்கு அந்த பெங்கிளி நான் இப்படி வாழ்றதுக்குன்னே படைக்கப்படலை ஒரு சில பாவிகளால் இப்படி என் வாழ்க்கை ஆகிவிட்டது..நானும் உங்களைப்போலவே என் ஆசையும் கனவும் தீர இறக்ககட்டி பறந்தவள்தான் பக்குவ வயது வந்ததும் என்னை மாதிரியே இருக்குற கூண்டுக்கிளியின் நிலை என் இனம் இப்படி கூண்டுக்குள்ளயே இருக்குன்னு நெஞ்சு கொதித்து அதற்க்காக வீறு கொண்டு எழுந்த போது பாவிகளின் பார்வை என் மீதும் விழுந்தது நானும் பெண் தானே முடியவில்லை அவர்களின் நயவஞ்சகத்தந்திரத்தில் விழ்ந்து சில காயமும் பட்டு இப்படி அடஞ்சு கிடக்கேன்னுச்சு

இதக்கேட்டதும் ஆங்கிளி வருத்தபட்டு ஏய் பெண்ணே நான் உன்னோடு சிறகு விரித்து இந்த உலகம் பூரா சிறகடித்து பறக்க ஆசைப்படுறேன் உன் அழகான குரல் கேட்டு வந்தேன் உன் அழகு முகம் காட்டமாட்டாயா என்னிடம்ன்னு கேட்டுச்சா அதக்கேட்டதும் பெங்கிளி சீய்ய்ய்ய்ன்னு வெட்க்கப்பட்டுட்டே நான் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் இல்லை நான் ஒரு கூண்டுக்கிளி இப்படியே இருந்து வாழப்பழகிக்கிறேன்னுச்சா அதுக்கு அந்த ஆங்கிளி சொல்லுது நீ வரலைன்னா நான் இந்த இடம் விட்டு நகராமல் உன் ஆசை குரல் கேட்டுட்டே கடைசி வரைக்கும் இருந்துடுவேன்னுச்சு..

இதக்கேட்ட பெங்கிளி இவ்வளவு அன்பு இருக்கும் உங்களை அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள் என்னைவிட அழகாய் ஒருத்தி இருப்பாள் உங்களுக்குன்னே நான் இப்படியே வாழணும்ன்னு ஆசைப்படுறேன்னுச்சு...

ஆங்கிளி பெங்கிளியிடம் கேக்குது பெண்ணே நீ இப்படி கூண்டுக்குள்ளே இருக்கோமே உனக்கு இந்த உலகத்தை உன் இறகை புதிய இளந்தளிர் போல் விரித்து சிறகடித்து
பறக்க ஆசையில்லையான்னு கேட்டுச்சா அதுக்கு அந்த பெங்கிளி சொல்லுச்சு எனக்கும் உங்களைப்போல் சிறகடித்து பறக்க ஆசைதான் ஆனால் என் இனம் பூரா இப்படி கூண்டுக்குள்ளே அடஞ்சு போய் கிடக்குறதுக்குன்னே படைக்கப்பட்டிருக்கிறோமேன்னுச்சு..


அதக்கேட்டதும் அந்த ஆங்கிளி சொல்லுச்சு நான் வேண்டுமென்றால் உன் சிறைக்கதவை திறந்து விடுகிறேன்னுச்சு..அதுக்கு அந்த பெங்கிளி சொல்லுது நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன் நான் இப்படியே இருந்துடுறதுதான் எனக்கும் உங்களுக்கும் நல்லதுன்னுச்சு..

இதுக்கேட்ட ஆங்கிளி கோபமா என்னை பிடிக்கலியா நான் அழகில்லையா என் கூட வர ஆசையில்லையான்னு கேட்டுச்சா அதுக்கு அந்த பெங்கிளி இவ்வளவு பாசம் அன்பா இருக்குற உங்களோட வர வாழ எனக்கு மட்டும் ஆசையில்லையா? அதை விட அன்பு நிறைய இருக்கு உங்கள் மேல ஆனால் கூண்டுக்கிளியாவே வாழ்ந்து பழகிட்ட எனக்கு என்னை சிறகடித்து பறந்து திரியும் உங்கள் இனம் ஏற்றுக்கொள்ளாது,இந்த உலகமும் அதை ஒற்றுக்கொள்ளாதுன்னுச்சு..

மிக கடுமையான கோபம் ஆங்கிளிக்கு ஏற்கனவே சிகப்பா இருக்கும் அதோட மூக்கு இன்னும் கொஞ்சம் சிவந்துடுச்சு நான் உலகத்துக்காக வாழ்றவனில்லைன்னும் எனக்காக எனக்கு பிடிச்ச மாதிரி வாழணும்ன்னு நினைக்கிறேன் எனக்கு மற்றவர்களின் விருப்பு வெறுப்பு அவசியமில்லை உனக்கு என் மேல் விருப்பம் இருந்தால் என்னுடன் வான்னுச்சா

அதுக்கு பெங்கிளி சொல்லுது ஒருதடவை சொன்னால் புரியாதா உங்களுக்கு நான் இப்படியே வாழ்ந்து பழகிட்டேன் இப்படியே இருந்துக்கிறேன் எப்பவும் என் மேல் இருக்கும் உங்க அன்பு போதும்ன்னுச்சு அதுக்கு ஆங்கிளி சொல்லுது சரி உனக்கு எப்ப விருப்பமிருக்கோ அப்போ ஒரு குரல் கொடு எப்போவும் உனக்காகாவே காத்திட்டு இருப்பேன்னுச்சு

பொறவு அந்த ஆங்கிளி தனக்கு கையில்லாம பிறந்தது வருத்தமா இருக்குன்னு சொல்லுச்சு ஏன்னு கேட்ட பெங்கிளிட்ட ஆங்கிளி சொல்லுது இவ்வளவு அன்பா இருக்குற உன் கை பிடித்து பால் போல் வெளித்த வான வீதியில் இருவரும் உலவர ஆசையா இருக்குன்னுச்சா அதுக்கு அந்த பெங்கிளி என்னைத்தான் அடச்சு வச்சுருக்காங்களேன்னுச்சு..

இல்லை நீயாத்தான் அடஞ்சுபோயிருக்க இப்போ நீ வருவியா வரமாட்டியான்னு ஆங்கிளி கேட்க முடியாதுன்னும் என்னைவிட்டு போய்டுங்கன்னும் பெங்கிளி அழுதுட்டே சொல்லுச்சு ஏன் அழுகிறாய்ன்னு பெங்கிளிட்ட ஆங்கிளி கேட்க ப்ச் உங்களால்தான்னு இவ்வளவு அன்பு இருக்கும் உங்களை பிரியனும்ன்னு நினைக்கும் போது அழமட்டும்தான் முடிகிறதுன்னுச்சு..

சரின்னு சொன்ன ஆங்கிளி அந்த பெங்கிளிட்ட பிரியா விடைபெற்று அந்த கூண்டுகிட்டயே திரும்புற வழியில அந்தப்பக்கமா வந்த ஒரு பெரிய லாரியில அடிபட்டு செத்துபோச்சு இதப்பார்த்துட்டு இருந்த பெங்கிளி இப்போவும் குரல் மட்டுமே கொடுத்துட்டு இருந்துச்சு கடைசீ வரைக்கும் அது வெளிய வரவேயில்லை அதன் கொள்கையையும்,கூண்டையும் விட்டு அப்போதான் எனக்கு , பெண்கள் கொள்கை பிடிமானம் மிக்கவர்கள் என்றும் எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்ன்னும் புரிஞ்சது...

December 2, 2009

கூட்ட, கூட்டவும்...


கூட்ட,
கூட்டவும்...

வெட்ட,
வெட்டவும்...

பறக்க,
பறக்கவும்...

கழிக்க,
கழிக்கவும்...

சுண்டலுக்கு,
சுண்டலுக்கும்...

பிணைக்கு,
பிணைதலுக்கும்,

வீட்டுக்கு,
வீட்டுக்கும்...

கண்டதுக்கு,
கண்டதுக்கும்...

வேசத்துக்கு,
வேசத்துக்கும்...

படிக்க,
படிக்கவும்...

இரத்தத்துக்கு,
இரத்தத்துக்கும்...

கும்பிட,
கும்பிடவும்...

சுகத்துக்கு,
சுகத்துக்கும்...

மணத்துக்கு,
மணத்துக்கும்,

கட்டுக்கு,
கட்டுவதற்க்கும்...

தண்ணீருக்கு,
தன் நீருக்கும்...

எல்லாமும்
எல்லாவற்றுக்கும் துட்டு...

இது 'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

November 30, 2009

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!



இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...

கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...


- கவிஞர் வசந்த் ( ஹ ஹ ஹா)

(யூத்ஃபுல் விகடனில்)

November 28, 2009

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்...


உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
 கால்கடுக்க கன்னியுன் 
 கால்தடமறிய ஏங்கி
 உன் பார்வை வழியினூடான
 கோடான கோடி அணுக்களினூடே
 தேவியாய் தரிசனம் கண்டேனுனை...
 பூவையரின் பூமனங்கண்டேன்
 பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேனதை
 உன்னிடமிருந்து உன்னையறியாமல்
 பெற்றேனதை பேணித்திரிவதென்
 பொறுப்பன்றோ...
 விழைகிறாய் ஏனெதுக்கென்று
 மறுப்பேதும் சொல்லாமல்
 பெண்ணொருத்தியின் வரவறியா
 திரும்பிசெல்ல வழியற்ற 
 மனக்கூட்டின் ஒற்றை 
 விடிவிளக்காய் வருகிறாய்... 
 
 நிமிடங்கூட வீணாகாமல்
 ஊடலும் கூடலும் புரிந்தெனை
 மெய்மறக்கச்செய்து 
 இப்பூவுலக படைப்பின்
 மெய்யறிய செய்தாய்...
 புசிக்காத படையல்கள்
 காவலிருக்க நம்
 காதலிதினிதாய் நம்இல்லமே
 வெட்கப்புன்னகை சிந்துகிறது
 நாமதை சிதறாமல்  பிடித்து
 சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம்
 வெட்கமற்று...
 சிணுங்கலிசை மீட்டெடுத்துனை
 நான் இசைபிரம்மாவாக
 நீ ஒலிபெருக்காத பெருக்கியாய்
 ஒலிக்கச்செய்ததையென் செவி
 மட்டும் கேட்க செய்கிறாயதனூடே
 சுவற்றின் பொறாமைக் குரலும்
 கேட்கிறதென் காதினில்...
 நான் உன் வாசம் நுகர்ந்து
 துயிலடைய செல்லும் வேளையில்
 மீண்டும் வாவென்று நீயழைக்க
 மறுக்க வழியற்றவனாய்
 நானுனை மீண்டும் மீட்டெடுத்தந்த
 ராகதாலாட்டிலே ஆழ்துயிலடைந்தேன்
 துகிலற்றே...
 கதிரவனுக்கு முன்நீ விழித்தெழுந்து
 மென்முத்தமதனை என்னும் உன்னும் 
 கன்னம் சிவக்க கொடுத்ததை
 திரும்ப வாங்கி கொள்ளும் 
 வேளையில் கைபிடித்திழுத்து
 என் மார்போடு உன்னும்சேர
 உனை நானணைத்துகொள்கிறேன்
 உறக்கம் கெடுத்த ஊடலுக்காய்..
 
டிஸ்கி:இதுவரையிலும் நானொரு கவிதையெழுதுபவன் என்றெனை வெளிகாட்டி உங்களை அறுக்க விரும்பியதில்லை ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாகிவிட்டேன்.இனி நான் மட்டும் அறிந்த என் சுயரூபம் உங்களனைவருக்கும் தெரியவரும் இதுபோல் தொடர்ந்து..

November 27, 2009

நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...

முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது..

ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் இந்த ஒன்று போல் எத்தனை நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருக்கும்...

-------------------------------------------------------------------------------------------------

போலீஸ் சீருடையில் மாற்றம் செய்ய முடிவு-செய்தி

இன்னும் நாலஞ்சு பாக்கெட் சேர்த்து வச்சுருப்பாங்க போல...
-------------------------------------------------------------------------------------------------

பிரபாகரனை வாழ்த்தி நோட்டீசு-2பேர் கைது

இதே கலைஞர் கருணாநிதியவோ, அழகிரியவோ, செல்வி.ஜெயலலிதாவையோ வாழ்த்தியிருந்தா 2 ஃப்லாட் வீடு கொடுத்துருப்பாய்ங்களோ....பன்னாடைங்க...ஒரு தமிழினத் தலைவனை வாழ்த்துனதுக்கு கைது ...

-------------------------------------------------------------------------------------------------

வாஷிங்டன்: இது நாள் வரை நாம் இந்தியாவில் படித்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றோம். இனி, இந்தியாவுக்குத் திரும்புங்கள் என்று நான் உங்களை அழைக்கிறேன் என பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தியா திரும்ப வாங்கன்னு சொன்னீங்க சரி அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் இங்க வந்துடுங்கள் நாங்கள் அங்கு வந்துடுறோம்... -அமெரிக்க வாழ் இந்தியர்கள்...

-------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்..

ம்க்கும் இங்க இருக்குற ஆறெல்லாம் சாக்கடையா போயிட்டு இருக்கு இத கவனிக்கவே ஆளில்லை இதுல சிங்கப்பூர் போறாராம்..... சுத்திப்பாக்க போனோம்னு சொன்னா நாங்க என்ன கத்தியா வைக்கப்போறோம் கேட்டா அதுமாதிரியே இங்கயும் பண்ணப்போறோம்ன்னு சொல்லுவீங்க...இப்பிடி எத்தனைவாட்டி சொல்லிட்டீங்க இன்னும் கூவம் அப்டியேதான் இருக்கு அதே நறுமணத்தோட......எங்க இப்படி ஸ்டைலா நம்ம ஊரு கூவத்துல படகுல போய் பாக்குறது...

-------------------------------------------------------------------------------------------------

விலைவாசியை குறைக்க பதுக்கல் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கையெடுங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு...

அப்போ மத்திய அரசுக்கு யார் உத்தரவு போடுவாங்க?

ம் கடும் நடவடிக்கைன்னா எப்படி? ஏ ஸி அறையோட எல்லா வசதியும் இருக்குற சிறையில வச்சு கவனிங்கன்னு சொல்ல வர்றீங்க அதானே...சூப்பரு...

--------------------------------------------------------------------------------------------

நயன்தாரவை பார்த்து டூ பீஸ் உடையணிந்தேன் -ப்ரியாமணி .

காப்பியடிக்கிறத உடையோட நிப்பாட்டிடாதீங்க அம்மிணி இன்னும் பல(ஆ)ன எதிர்பார்க்கிறோம்...அவ்வ்வ்வ்வ்...

-------------------------------------------------------------------------------------------------

எதற்காக புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை?' என்றால், எனக்கு புடவைன்னா ரொம்ப இஷ்டம்; ஆனால், நான் புடவை கட்டினால், ரொம்ப கவர்ச்சியாக தெரிவேன். அதைப் பார்த்து, நம்ம தமிழ்நாட்டு மச்சான்ஸ் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப் போகாமல் தடுக்கத்தான் நான் புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதேஇல்லை - நமீதா

எவ்ளோ "பெரிய" தங்கமனசு உங்களுக்கு ....



-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி :என்னோட நைனா கேட்டுக்கிட்டதுக்காக இந்த தொடர் பதிவு நான் அவர் மாதிரியே எழுதி அவர டரியலாக்குனாலும் அவர் கோச்சுக்கிடமாட்டாரு ஏதோ கொஞ்சமாச்சும் அவர மாதிரி எழுதியிருக்கேனான்னு பாத்து சொல்லுங்க..சாமியோவ் ...இதே போல் பதிவுலகசூப்பர்ஸ்டார் கதிரும் ,லேடி சூப்பர் ஸ்டார் கலகலப்ரியாவும்அவங்களுக்கு பிடிச்சவங்க மாதிரி எழுதணும்ன்னு பணிவோட கேடுக்கிறேன் ஏற்கனவே என்னோட தொடர் பதிவ ரெண்டுபேரும் தவிர்த்துட்டீங்க இதையாச்சும் எழுதுங்க இது என்னோட ஆசையில்ல என் நைனாவோட ஆசை..