Showing posts with label 100வது நாள் ஹிட். Show all posts
Showing posts with label 100வது நாள் ஹிட். Show all posts

June 16, 2010

செவ்வாய் & வாரத்தின் எட்டாவது நாள்





அடுத்த வருடத்திலிருந்து, ஒரு வாரத்திற்கு எட்டு நாட்கள்.

வாரத்தில் சேர்க்கப்படும் எட்டாவது கிழமைக்கு என்ன பெயர் வைக்கலாம்?







யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))
(யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)

அந்தக் கிழமை எந்த இரண்டு கிழமைகளுக்கு நடுவே வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன்?

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில்..

வாரம் எட்டு நாள் என்று செய்வதாலும், புதிய கிழமை ஒன்று அதிகமாகச் சேர்வதாலும், என்னென்ன மாற்றங்கள் உலகில் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

Nothing use, காலண்டர்களில் இதுவரை அச்சிட்டுவந்த முறையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் நிறைய பணம் விரயம் ,ஆதலால் காலண்டர் டயரிகளின் விலை கூடும், அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலக கணக்கு வழக்கு மாற்றத்தினால் ஆண்டு இறுதி கணக்குவழக்கில் பயங்கர இடி விழலாம், வாரத்திற்க்கு எட்டுநாட்களாக இருப்பினும் விடுமுறை ஒரு நாள் என்பதால் சந்தோசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை, அந்த நாளுக்கு ஆங்கிலத்தில் விரைவில் ஏதோ ஒரு பெயரை வைத்துவிடுவார்கள் ஆனால் தமிழில் அதற்க்கு பெயர்வைப்பதற்க்கு நிறைய போராட்டங்கள் கண்டனங்கள் சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பும் நிகழ வாய்ப்பிருக்கிறது, வாரத்தில் ஒரு நாள் அதிகமாவதால் தொலைக்காட்சிகள் அந்த நாளுக்கு புரோகிராம்களை எப்பவும் போல் அரைப்பார்கள் இனி ஐந்து நாள் சீரியல் ஆறாக கூட உயரும், டேட் வாட்ச் கட்டியிருக்குறவன் எல்லாம் அதை தூக்கி குப்பையில் போட வேண்டி வரும், உலகத்தில் இருக்கும் அனைத்து மொபைல்,கம்ப்யூட்டர்ஸ் எல்லாத்திலும் டேட் அண்ட் டைமிங்ஸ் மாற்றியே ஆக வேண்டும் தேவையில்லாத வெட்டிச்செலவு,இன்னும் இன்னும் பல லாம்....

****************************************************************************************************************


இப்படி எங்கள் பிளாக்கில் கேள்வி கேட்டு நம் அறிவுப்பசியை தூண்டிவிட்டுவிட்டனர் அவர்களுக்கான எனது பதில் தேடப்போய் கிடைத்த யோசனைகள் சில தகவல்களும் சேர்த்து....

முதலில் ஏழு நாட்கள் பற்றி ..

SUNDAY - ஞாயிறு - சூரியன் - (கோள்கள் அனைத்தும் இதை சுற்றியே வருகிறது)

MONDAY(MoonsDay) - திங்கள் - (சந்திரன் இரண்டு நிலவுடைய கோள்)

TUESDAY ( Mars- The Red Planet) - செவ்வாய் - ( பெரும்பாலும் கார்பன் - டை - ஆக்ஸைடு நிரம்பிய கோள்)

WEDNESDAY (Mercury) - புதன் - (பூமியின் மிகச்சிறிய கோள் ) வாரத்தின் மத்திய நாள்

THURSDAY (Jupiter) - வியாழன் - 63 நிலவுகளுடைய கோள்

FRIDAY (Venus - The God of Love & Sex ) - வெள்ளி - காலையில் தெரியும் நட்சத்திரம்

SATURDAY (Saturn) - சனி - வளையங்கள் நிரம்பிய கோள்

இதெல்லாம் எங்களுக்கும் தெரியும் இப்போ எதுக்கு சொல்லிகிட்டு இருக்கன்னு கேட்க்க வர்றீங்க சரி வாங்க ..

மொத்தம் 9+1 கோள்களில் சூரியனுக்கு ஒரு நாளும் மீதி 6கோள்களுக்கும் ஓவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு நாள் என மொத்தம் 7 நாட்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது

இந்த ஒரு துணைக்கோள் நிலா மற்ற ஐந்து கோள்கள் போக மீதம் எஞ்சியிருப்பது 4 கோள்கள்

அவையாவன பூமி,யூரேனஸ்,நெப்டியூன்,புளூட்டோ

வார நாட்களுக்கு பெயர் வைக்கும் பொழுது ஏன் பூமியை மறந்துவிட்டனர் என்று தெரியவில்லை.. இப்போ வார நாட்களை ஆய்ந்ததில் இந்த மர மண்டையில் உதித்தவை...

நம் வார நாட்கள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்




1.ஞாயிறு (
SUNDAY)


2.புதன் (WEDNESDAY)
3.வெள்ளி (FRIDAY)
4.செவ்வாய் (TUESDAY)
5.வியாழன்(THURSDAY)
6.சனி (SATURDAY)
7.யுரேனஸ் (OURSDAY) நம்மநாள் - எப்பிடி நம்ம தமிழ்பெயர்? :))))))
(அல்லது செவ்வாயின் இரு நிலவுகளின் பெயர்களான போபாஸ்,டைமாஸ் என்ற பெயர்களின் முதல் எழுத்து எடுத்து போடை என்றும் நாளாடைவில் அதுவும் மருவி போர்டே ஆகவும் வாய்ப்பிருக்கிறது..)

(யுரேனஸ் என்பது ஒளராஸ் என்ற கிரெக்க கடவுளின் பெயரிலிருந்து உருவானது பெரும்பாலான கோள் களின் பெயர்கள் இப்படி மருவியே வந்திருக்கிறது எப்டி நம்ம பேரு?)

இப்போ என்னோட கேள்வி பூமியில் இருப்பதால் பூமியின் பெயரை தவிர்த்திருக்கலாம் அப்புறம் ஏன் பூமியின் துணைக்கோளான சந்திரன் அதாங்க Moons Day அப்படின்ற MONDAY வை இதில் சேர்த்தார்கள்?

பார்க்க படம்



சூரியனை சுற்றிவரும் கோள்கள் சூரியனிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அதன் வரிசையிலே வைத்திருக்கலாமே பின் ஏன் SUNDAY, MONDAY, TUESDAY, WEDNESDAY, THURSDAY, FRIDAY , SATURDAY என்று வரிசை மாறியிருக்கிறது? ஏன் பூமியின் துணைக்கோள் சந்திரன் இந்த வார நாட்களில் சேர்த்திருக்கிறார்கள்?

இல்லை இவைகள் யாவும் நிலம் காற்று நெருப்பு இவற்றைவைத்து வரிசைபடுத்தப்பட்டதா?

விடை தெரிந்த நண்பர்கள் இதற்க்கான ரகசியங்கள் தெரிவிக்கவும்...

இப்போ நாம் செவ்வாய் கிரகத்தில் பிறந்திருந்தால் அதாவது பூமியில் இருக்கும் சீதோஷன நிலை அங்கு இருக்கும் பட்சத்தில் கால நிலை, வார நாட்கள் இப்படி அமைந்திருக்க கூடுமோ?
செவ்வாயில் மனித உருவில் இருக்கும் சிலை போன்ற படிமங்கள் காட்டும் நாசாவின் புகைப்படம்


1.ஞாயிறு (
SUNDAY)


2.புதன் (WEDNESDAY)
3.வெள்ளி (FRIDAY)
4.பூமி (EARTHDAY)
5.வியாழன்(THURSDAY)
6.சனி (SATURDAY)
7.யுரேனஸ் (OURSDAY)

கால நேரங்கள்

செவ்வாய் சூரியனை சுற்றிவர 686.98 நாட்கள் எடுத்துக்கொள்வதால் இங்கு கால நிலை பூமியைவிட தோராயமாக இரண்டுமடங்கு அதிகமாகிறது அதனடிப்படையில் செவ்வாயும் தன்னைத்தானே சுற்றிவர ஏறக்குறைய பூமியை ஒட்டியே காணப்படுகிறது , செவ்வாய் கிரகம் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 24மணி நேரம் 38 நிமிடங்கள் இதனால் ஒரு நாளுக்கு 24மணி நேரம் 38 நிமிடங்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு நாளுக்கு 40 நிமிடங்கள் பூமியை விட அதிகம் அதுதவிர்த்து இங்கு ஒரு வருடத்திற்க்கு 686 நாட்கள் ,321 நாட்கள் பூமியைவிட அதிகம் ஆகையால் அங்கு,
ஒரு வருடத்திற்க்கு 98 வாரங்கள் வரும்

ஒரு வருடம் முடிவதற்க்குள் போதும் போதென்றாகிவிடும்...

ஒரு வருடம் 23 மாதம் கொண்டதாய் இருக்கும் ஆகையால் இன்னும்
பதினொன்று மாதங்களுக்கு புதிதாக பெயர் வைக்க வேண்டியிருக்கும்...

ஆங்கிலம் மட்டுமின்றி தமிழுக்கும் புதிதாக 11 மாதங்களுக்கு பெயர்கள் வைத்திருக்க வேண்டியிருக்கும்..

ராசிகளும் 23 ஆக உயர்ந்திருக்கலாம்

அப்படியன்றி மாதங்கள் 12 ஆக வைத்துகொள்வேமேயானால் மாதத்திற்க்கு 57 நாட்களாக மாறியிருக்கும்...

மாத சம்பளம் இரண்டாக பிரித்து கொடுக்கப்படலாம்...

அப்போ நம்ம ஆயுள்காலம் பூமியைவிட செவ்வாயில் குறைவு கால விபரப்படி மற்றபடி வாழ்நாள் ஒரே அளவாய்த்தான் இருக்கும்

ஓட்டுப்போடும் வயது 9 ஆகவும்,

திருமண வயது 10 ஆகவும் மாறியிருக்கும்

இப்படி ஒவ்வொரு கோளுக்கும் விரிவாக எழுதப்போனா உங்களிடமிருந்து அடியோ உதையோ விழுகலாம் என்பதால் இது பற்றி இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்... தேவைப்படும்பொழுது மீண்டும் கண்டிப்பாக தூசு தட்டுவோம்...

இந்த இடுகையில் தவறான விபரங்கள் இருப்பின் மன்னித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இந்த இடுகை எழுத காரணமான எங்கள் பிளாக் உரிமையாளர்கள் அனைவருக்கும் , மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள உதவிய கூகுள், தமிழ் , ஆங்கில விக்கிபீடியா ,http://iau-comm4.jpl.nasa.gov/XSChap8.pdf என்ற பிடிஎஃப் தளம் உருவாக்கியவர்களுக்கும் மற்றும் இந்த இடுகை வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்....

June 13, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து ... ஒரு பார்வை....

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு








அழகு மிளிரும்சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்





தென்னாடும்,

அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்


பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.

அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...




அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்


எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற




பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து


எங்கள் செயல்களை மறந்து உன்னை



வணங்குவோமே!




வணங்குவோமே!


வணங்குவோமே!
தமிழ்த்தாய் வாழ்த்து



நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

June 4, 2010

சென்னையில் ஓர் நட்புக்காலம்...

நண்பர்கள் - சந்திப்பு

என்னதான் வலையில் பின்னூட்டங்கள் சாட்டில் பேசிக்கொண்டாலும் இணைய நண்பர்களை நேரில் சந்திக்கும் பொழுது ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது...
இந்த நட்பெல்லாம் கண்டிப்பாக வலையுலகம் எனக்குத்தந்த புதையலே இதற்காகவேனும் வலையுலகை மறக்க மாட்டேன்...

சென்னையில் நண்பர்கள் சிலரை சந்தித்தது பற்றிய ஒரு இடுகை


சென்னை சென்றதும் சிங்கையில் இருந்து வந்திருந்த சகோதரர் ஜமால் அண்ணாவை சந்திக்க சென்றேன் அங்கே ஜமால் அண்ணாவுக்கு முன்பே நண்பர் பலாபட்டறை ஷங்கர் என்னை தொடர்பு கொண்டு முன்பே வந்தார் வந்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்லை ஏதோ படத்தோட ஹீரோதான் வந்துவிட்டார் போல என்று நினைத்தேன் பின்புதாந்தான் ஷங்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்... பின்னே வந்த ஜமால் அண்ணாவிடம் ஏன் தாமதம் என்று வினவியதற்க்கு கார் பார்க்கிங் செய்ய இடமின்றி ஒரு மணி நேரம் அலைந்ததால் சரியான நேரத்தில் வர இயலவில்லை என்றார் ( இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மனிதனை பார்க் செய்றதுக்கும் இடமிருக்காது போல)

நட்புடன் ஜமால்.



நண்பர் ஷங்கர் அண்ணாவிடம் சென்னை பதிவர் சங்கம் பற்றியும் அவரின் பலா பட்டறை பெயர் விளக்கமும் கேட்டறிந்தேன் எவ்வளவோ அவர் விளக்கியும் எனக்கு இன்னும் புரிபடவே இல்லை... பட்டறை என்றால் ஏதாவது ஒரு பொருளை பட்டை தீட்டி உருவாக்கும் இடம் உதாரணத்திற்க்கு இரும்பு பட்டறை என்றால் அங்கு கத்தி, கடப்பாரை, அருவாள் போன்ற இரும்பிலான ஆயுதங்கள் பட்டை தீட்டப்படுகிறது அதுபோல் பலா பட்டறை என்றால் பலாப்பழத்தில் ஆன பொருட்கள் பட்டை தீட்டப்படுகிறதா? ப்லா பட்டறைக்கு சரியான விளக்கம் தர ஷங்கர் அண்ணா திரும்பவும் அழைக்கப்படுகிறார்...

பலா பட்டறை ஷங்கர்




ஜமால் அண்ணா பழக உண்மையிலே மிகவும் நட்புடனும் சகோதர பாசத்துடனும் தம்பின்னு சொல்லும்போது நிறையவே உணர்ச்சிவசப்பட்டுட்டேனுங்ண்ணா... அவர் நிறைய பதிவுலகம் பற்றிய நிறைய தகவல்களையும் பின்னூட்டம் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...

சில உங்களின் பார்வைக்கு...

1.ஜமால் அண்ணா ஒரு பெண் புனைப் பெயரிலும் எழுதுகிறார் . இது எப்டியிருக்கு?
ஜமால் அண்ணாவின் அந்த புனைப்பெயரில் இருக்கும் வலைப்பூவை கண்டு பிடிப்போர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனக்கும் அந்த புனை பெயர் தெரியவில்லை... அண்ணா எந்த வலைப்பூங்ண்ணா? மண்டை காய விட்டுட்டீங்களேண்ணா நான் மட்டும் மண்டை காய்ஞ்சா எப்படி எல்லாரையும் கொஞ்சம் காய விடுவோம்ன்னுதான் போட்டு உடைச்சுட்டேன் சாரிங்ண்ணா... (சத்ரியன் அண்ணா உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே) அண்ணாவுக்கு சின்ன அட்வைஸ் இப்படி எழுதுறது தப்புங்ண்ணா...

2.பதிவு எப்படியும் எழுதி விடலாம் பின்னூட்டம் போடுவது மிகவும் கஷ்டம் என்று கூறினார் ஏன் என்று வினவியதற்க்கு...அவர் அளித்த பதில் சுவாரஸ்யம்... ஒருவர் பிறந்த நாள் போஸ்ட்டு போட்ருப்பார் அவருக்கு வாழ்த்து சொல்லணும், ஒருத்தர் சமையல் குறிப்பு எழுதியிருப்பார் அதையும் படித்துவிட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு, ஒருத்தர் காதல் கவிதை எழுதியிருப்பாங்க அதையும் படிச்சு கொஞ்சம் காதல் செய்துட்டு ஒருத்தர் சோகமான கவிதை எழுதியிருப்பார் அதையும் வாசித்து கொஞ்சம் அழுதுட்டுன்னு இப்பிடி ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் வித வித உணர்வுகளோடு பின்னூட்டம் அளிப்பது சுவாரஸ்யமே தான் இனி நானும் அந்த வழியை பின்பற்றலாம் என்றிருக்கிறேன்...


சில அறிவுரைகளும் வழங்கினார்...

1. மற்ற பதிவர்களுடன் எவ்ளோ க்ளோஸ் ரிலேஷன்ஷிப் இருந்தால் அவங்களோட பதிவுக்கு போய் அதை காட்டிக்கொள்ளாதே உதாரணத்திற்க்கு போடா போடி என்று அழைப்பதை தவிர்க்க சொன்னார்...

2.பெண் பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் இடும் பொழுது மிகவும் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்றார்...

3.கோபப்படுவதை உடனே பதிவில் ஏற்றாதே அது உன்னை பாதிக்கும்...

4.வலைப்பூ நமக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான் அதுவே வாழ்க்கையல்ல...

5. சில டெக்னிகல் அட்வைஸ்களும் அறியத்தந்தார்....


நன்றிங்ண்ணா....


அடுத்ததாக வலையில் கிடைத்த தந்தை வானம்பாடிகள் பாலாசாரை சந்தித்தேன்..மிகவும் அன்பான தந்தை , அம்மாகிட்டேயும் தங்கைகிட்டேயும் அறிமுகப்படுத்தி வைத்தார்... அம்மா அன்பாக அடை செய்து பரிமாறினார் அவர் அடை செய்ய போகும் பொழுதே நைனா அம்மாகிட்ட சொல்றார் எண்ணை குறைவாக விட்டு சுடச்சொல்லி ஏன் என்று கேட்டதற்க்கு இவனுக்கு கொஞ்சம் இல்ல நிறையவே கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு அதான் என்று சொன்னார்... ஆமாவா நைனா? வரும் பொழுது கி.ரா. வின் கரிசல் காட்டு கடுதாசி புத்தகத்தை பரிசாக அளித்தார்... இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை நைனா இனிதான் படிக்கணும்...இன்னும் எழுத்துக்கள் பற்றி நிறைய அறிவுரைகள் அளித்தார் என்னதான் என்னுடைய ஃபாலோவர் லிஸ்ட்ல இருந்து விலகினாலும் இன்னும் என் எழுத்துகளை படிக்கிறார் என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது... அன்புடன் அம்மாவும்,தங்கையும் நைனாவும் வீடு வாசல் வரை வரை வந்து விடையளித்தனர்...

வானம்பாடிகள் பாலாசாரும் நானும்



அடுத்ததாக...சகோதரர் ஜீவன் என்ற தமிழ் அமுதன் அண்ணா அவர்களை அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன்...அங்கு நம் ஜமால் அண்ணாவை மீண்டும் சந்திதேன்...
ஜீவன் அவர்களின் அலுவலகத்தில் தங்க நகைகள் டிசைன் கட்டிங் செய்வதைப்பற்றி பகிர்ந்து கொண்டார்... பழக மிகவும் அன்பாகவும் அமைதியானவரும் கூட.. பின் நான் ஜமால் அண்ணா ஜீவன் மூவரும் தமிழ் அமுதன் அவர்களின் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டோம்.. அங்கே காடை மீன் இன்னும் நிறைய கடல் உணவுகளை ஜமால் அண்ணா உள்ளே தள்ளினார்... பின் தமிழ் அமுதன் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு எனும் புத்தகம் சிறப்பாக விறுவிறுப்பாக எழுதியிருப்பதைப்பற்றி பகிர்ந்து கொண்டார் நானும் அந்த புத்தகத்தை வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் படிக்கத்தான் ஆரம்பிக்கவில்லை... சிறப்பான சந்திப்பாக நிறைவு பெற்றது...

தமிழ் அமுதன் அலுவலகத்தில் ஜீவன், நான், ஜமால் அண்ணா



தமிழ் அமுதன் என்ற ஜீவன்


தொப்பையை மறைக்கும் ஜமால் அண்ணா





ஜீவனும் நானும் ஜமால் அண்ணா எடுத்த போட்டோ




அடுத்ததாக விசா பக்கங்களில் எழுதி வரும் ரைட்டர் விசா என அழக்கப்படும் நண்பர் ஃப்ராங்ளின் அலெக்சாண்டர் அவர்கள் மைலாப்பூரில் டாங்க் அருகே இருக்கும் சரவணா பவனில் காலைச்சிற்றுண்டி அருந்தி கொண்டு நிறைய விஷயங்கள் பேசினோம். சிரிக்க சிரிக்க கன்னங்களில் குழிவிழுகிறது .. அவர் எப்படி கதைகள் எழுதுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டேன் அவரின் சைக்கோ கதை தொடர முடியாமல் போனதற்க்கான காரணாத்தையும் பகிர்ந்து கொண்டார் பின்பு என்னை அடையார் போலீஸ் ஸ்டேசனில் விட்டு சென்றுவிட்டார் கேமரா ஆஃப்லைனில் இருந்த்தால் இவருடன் மட்டும் புகைப்படம் எடுக்க இயலாமல் போனது இன்னமும் வருத்தமாயிருக்கிறது..

பிறகு அடையார் பஸ் டிப்போவில் இருந்து நண்பர் கார்க்கி தன்னுடைய காரில் என்னை பிக்கப் பண்ணி கொண்டு ஒரு பழரச அங்காடி இட்டு சென்றார் அங்கு அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசினோம். மனிதர் மிகவும் கல கலப்பானவர் ,முக்கியமாக இருவருக்கும் பொதுவான தலைவர் இளைய தளபதி பற்றியும் , கார்க்கி எப்படி பதிவுலகிற்க்கு வந்தார் ஏழு கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றி பகிர்ந்து கொண்டார். அத்தனை விஷயங்களும் கேட்க கேட்க சுவாரஸ்யமாயிருந்தது எப்பொழுது திருமணம் என்றேன் மிக விரைவில் அறிவிப்பு வெளி வரும் என்றார்.நகைச்சுவையாகவே எழுதுறீங்களே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் எழுத மாட்டீங்களா என்றேன் அதற்க்கு அவர் கூறினார் நகைச்சுவையா எழுதுவதையே அனைவரும் விரும்புகின்றனர் சீரியஸ் விசயங்கள் எழுதினால் இப்படி எழுதாதீங்க கார்க்கின்னு நிறைய மெயில் வருகிறதாம் நிஜமாகவே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் உங்களுக்கு சீரியசாக வரவில்லை நகைச்சுவையே நன்றாக எழுதுகிறீர்கள் பின்பு அங்கிருந்து அவரிடமிருந்து விடைபெற்றேன்....

கார்க்கியும் நானும்...



கார்.....க்கீ








March 30, 2010

About Me...

மனித வலைப்பதிவர்களின் அபவுட்மீ நீங்க பாத்ததுதான் கொஞ்சம் சேஞ்சுக்கு நம்ம சே என்னுடைய சொந்தபந்தங்களின் அபவுட் மீ விளக்கங்கள் இதோ உங்களுக்காக...

1.முதலாவதாக www.adalarasi.com என்ற வலைத்தள சொந்தக்காரி செல்வி.ஆடலரசியின் அபவுட் மீ விளக்கம்....




2.அடுத்து வருபவர் www.chicken65.com என்ற வலைத்தள சொந்தக்காரி குருவம்மாவின் அபவுட் மீ விளக்கம்...



3.அடுத்ததாக வருபவர் www.lollol.com தளத்தின் சொந்தக்காரர் திரு.பல்லுக்காரன்...



4.அடுத்தவர் www.deer.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு குணா அவர்களின் அபவுட் மீ விளக்கம்....





5.அடுத்தவர் நமக்கு மிகவும் பரிட்சையமானவர் www.kakka.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திருமதி.கருப்பாயி அவர்கலின் அபவுட் மீ விளக்கம்...



6.அடுத்தவர் www.chainchellaayi.com என்ற தளத்தின் உரிமையாளரும் பிரபல ரவுடியுமான திருமதி chain செல்லாயியின் அபவுட் மீ விளக்கம்...




7.அடுத்து வருபவர் www.vettaikkaaran.com என்ற தளத்தின் உரிமையாளர் திரு . ஆதவன் ஆப்ரிக்கா பற்றிய அபவுட் மீ விளக்கம்...




8.அடுத்து வருபவர் www.kaathupaiyan.com என்ற தள உரிமையாளர் திரு,காதுப்பையனி அபவுட் மீ விளக்கம்...




9.அடுத்தவர் குற்றால நாயகன் www.sirangkudansinrasu.com தள உரிமையாளர் திரு. சின்ராசுவின் அபவுட் மீ விளக்கம்...





March 20, 2010

பரிசல்காரனுடன் ஒரு நேர்காணல்

பதிவுலக பிரபல பதிவரும் எழுத்தாளருமான பரிசல்காரன் என்ற கே.பி.கிருஷ்ணகுமாரிடம் ப்ரியமுடன் தொலைக்காட்சிக்காக ஒரு ஈ மெயில் நேர் காணல்













1.பதிவுலகத்திற்க்கு வராமல் இருந்திருந்தால் ஓய்வு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?

பரிசல் :ஃபோட்டோகிராஃபியில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்திருப்பேன். எழுத்து என்பதை இணையத்தில் இல்லாமல் வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பியிருக்க மாட்டேன்.

2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

பரிசல் :இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு தற்போதைய வலையுலகை கூர்ந்து கவனிக்க வில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

3.தங்களின் பதிவுக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?

பரிசல் :நிச்சயமாக இல்லை. தொடர்ந்து பின்னூட்டம் போடும் சில நண்பர்கள் பின்னூட்டங்கள் சடாரென நிற்கும் போது அப்படி நினைப்பதுண்டு. அதுவும் கடந்து போகும்.


4.ஒவ்வொரு பதிவுக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?

பரிசல் :அதிகாலை நான்கிலிருந்து நாலேமுக்காலுக்குள் என்று சொல்ல ஆசைதான்! ஆனால் அப்படியெந்த நேரமுமே இல்லை. பிராயணங்களின் போதும், மனதுக்கொத்த நண்பர்களுடன் இருக்கும்போதும் சற்று அதிகமான உற்சாகமாய் எழுத்து மனதிற்குள் ஓடும். ஸ்ரீரங்கம் பற்றிய கட்டுரையை திருச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு, கேரளா செல்லும்போது இரயிலில் அப்பர்பெர்த்தில் அமர்ந்தபடியே எழுதினேன்.

5.ஒரு சென்சிட்டிவான பதிவெழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
பரிசல் :மூன்றுமே நிகழ்ந்திருக்கிறது வசந்த். அதிகப்படியாய் காம்ப்ரமைஸ் செய்து கொள்வேன். அதற்கடுத்ததாய் கண்டு கொள்ளாத தருணங்கள். கோவம் வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டேன். ஒரு சில நண்பர்களின் அழைப்பில் அது அழிந்துவிடும்.

6.பதிவெழுத பிடிக்குமா? பதிவுகளை வாசிக்க பிடிக்குமா?

பரிசல் :நேர்மையாகச் சொல்வதானால் எழுதத்தான் பிடிக்கும். படிப்பதென்றால் புத்தக வடிவில்தான். பெங்களூரில் ஆடிட்டராகப் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது ‘எல்லாரும் சிஸ்டத்துலயே டிக் அடிச்சு அக்கவுண்ட்ஸ் சரி பார்க்கறாங்க. எனக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்து டேபிள்ல வெச்சு பேனால டிக் அடிச்சுப் பார்க்கறதுதான் பிடிக்குது’ என்றார். நான் அவர் ஜாதி. யாராவது இணையத்தில் வந்த ஒரு குறிப்பிட்ட பதிவை/படைப்பைச் சுட்டி கொடுத்துப் படிக்கச் சொன்னால் மேக்ஸிமம் ப்ரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் அமைதியாகப் படித்து ரசிப்பேன். யாராவது அவர்கள் படைப்பைப் படித்துக் கருத்துக் கேட்டாலும் அதே.

7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?

பரிசல் :நானே அடிக்கடி காணாமல் போய்விடுகிறேனே... என்னைக் கேட்டால்? பதிவுலகின் ஆரம்ப போதை கடந்து, தொடர்ந்து நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுத தீராத வெறி இருக்க வேண்டும். இல்லாமல் போவதே காரணம் என்று நினைக்கிறேன்.

8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த பதிவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?

பரிசல் :முந்தைய பதில்கல்ளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். அநியாயத்திற்கு தலைக்கனத்தின் உச்சியில் இருப்பவன் சொல்லும் பதில்களாகவே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இந்தக் கேள்விக்கு அப்படி யாரையும் சட்டெனச் சொல்ல முடியாத என்னை எதால் அடிக்கலாம்? பதிவுலகம் என்று வரும்போது புதியவர்கள் என்று யாருடைய பதிவையும் ரெகுலராக நான் படிக்காததே இதற்குக் காரணம். எப்போதாவது வலை மேயும் போது சிலவற்றைப் படிப்பதும், நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் சிலவற்றைப் படிப்பதுமாகவே கழிகிறது.

9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?

பரிசல் :உண்டு. வீண் சர்ர்சைகளில் வேண்டுமென்றே தாக்குறும்போது. ஆனால் அந்த நினைப்பின் ஆயுள் மிகக் மிகக் கம்மி.

10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
பரிசல் :ஆரம்பத்தில். போகப் போக சரியாக விடும். தவிரவும் போதை என்பது தவறு என்ற பொதுப்புத்தியை நான் மறுக்கிறேன்.

11.கவிதை,நகைச்சுவை,கதை,சமூகம்,விளையாட்டு என்று சுவாரஸ்யமாக பதிவெழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்
பரிசல் :இதுவரை எழுதாத புது விஷயம் என்ற ஒன்று இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. எழுதப் படாத கோணம் என்று வேண்டுமானால் இருக்கலாம். அப்படிச் சொல்வதானால் கனவில் வரும் ஒரு ’எனக்கும்’, எனக்குமான உரையாடல் ஒன்று நெடு நாட்களாக நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாலை நேரத்தில் அது நிகழ்கிறது. குறிப்பெடுக்க முடியாமல் தவிக்கிறேன். விடிந்ததும் கலைந்து விடுகிறது.

12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?
பரிசல் :நேர்மையாக நான் சொல்ல விரும்பும் ஒரு பதிலை சொல்லாதே என்று தடுப்பது வன்முறையல்லவா வசந்த்?

13.தாங்கள் எழுதிய பதிவு போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற பதிவு எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த பதிவு பற்றி கூறவும்...

பரிசல் :எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருப்பதாக நம்பும் உங்கள் வெகுளித் தனத்துக்கு என் புன்னகையைப் பரிசாக அளிக்கிறேன்.

14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...

பரிசல் :தீமைகள் ஒன்றும் பெரிய அளவில் இல்லை. நன்மைகளைச் சொன்னால் நேரமும் இடமும் போதாது என்ற க்ளிஷே பதில்தான்.

15.ஃபாலோவர் விட்ஜெட்டும் ஹிட் கவுண்டரும் இல்லாமல் உங்களால் தொடர்ந்து பதிவெழுத முடியுமா? முடியாதென்றால் ஏன் என்று விளக்கவும்...

பரிசல் :முடியும். ஒரு கட்டத்துக்கு மேல் அவை தேவையிருப்பதில்லை.

16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

பரிசல் :ஆம். தவிரவும் இது மாதிரியான ஒப்புமைகள் தேவையற்றது என்றே நினைக்கிறேன். நான் எழுத வந்த காலகட்டத்தில் (நானெல்லாம் இப்படிப் பேசற அளவுக்கு ஆய்டுச்சு! ஹூம்!) என்னையும், என்னுடம் எழுதும் சில நண்பர்களையும் குறிப்பிட்டு ‘நீங்க வந்தப்பறம்தான் ப்ளாக் சண்டை சச்சரவெல்லாம் இல்லாம செமயா போய்ட்டிருக்கு’ என்று சிலர் குறிப்பிட்டதுண்டு.

17.தாங்கள் எழுதிய முதல் புத்தகத்தின் அச்சில் தங்கள் பெயரை முதல் முதல் பார்த்த பொழுது தங்கள் மனநிலை எப்படியிருந்தது?

பரிசல் :பெரிதாக எந்த உணர்ச்சியும் இருக்க வில்லை. எனது முதல் சிறுகதை ஒரு மாத நாவலில் வெளியான போது பேருந்து நிலையத்தின் நடுவில் ஒரு கடையில் அதைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சி இன்று வரை திரும்பக் கிடைக்கவில்லை. அதற்காக இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று எண்ண வேண்டாம். என்னவோ... அது அப்படித்தான்.

18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...

பரிசல் :நல்ல விஷயம். செய்யலாம். தமிழ்மணம் என்ற திரட்டி இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் எல்லாரிடமும் சென்று சேர்வது வெகு நாட்களெடுக்கும் என்பதை மறுக்கவியலாது.


19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?

பரிசல் :நுழைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. எழுத்தில் அவர்களுக்காக ஆர்வமிருந்தால் வர உதவுவேன். மற்றபடி விளம்பரத் துறையில் என் வாரிசுகள் ஜொலிக்க வேண்டும் என்பது என் உள்மன அவா. அதையும் திணிக்கும் எண்ணமில்லை.

20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் பதிவு என்று ஒன்று இருக்கிறதா?

பரிசல் :ம்ம்ம்ம்.. அப்படி ஏதும் இல்லை.

21.தங்களுக்கு போட்டி பதிவர் யாரென்று காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் பதிலளிக்கவும்

பரிசல் :சாரு நிவேதிதா.


22.பரிசல்காரன் என்ற பெயர் பதிவுலகில் மட்டுமா இல்லை நடைமுறையிலும் அந்த பெயரே நீடிக்கிறதா?

பரிசல் :பதிவுலக நண்பர்கள் அழைக்கும்போது பரிசல் என்றே அழைக்கின்றனர்.

இவரோட பெயர் காரணம் இதுதான் இவருடைய திருமண நாளுக்கு நான் கிரியேட் செய்தது பெயர் காரணம் சரியா? மேகா ,மீரா என்ற குழந்தைகள் உமா என்ற மனைவியுடன் எவ்வளவுஅழகாக வாழ்க்கையை நடத்தி செல்கிறார்...



23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?

பரிசல் :ஆம். அதுமட்டுமில்லாமல் காகிதத்தில் எழுதும்போது என்னாலேயே படிக்க முடியாத அளவு எழுத்து மோசமானதாக மாறிவிட்டிருக்கிறது..


24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?

பரிசல் :‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..எல்லாவற்றையும் ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.இதே போல்தான் பதிவுலகமும் மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாம் மாறும்....

25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

பரிசல் :புதியவர்கள் என்னுடைய இந்த பதிவை படிக்கவும்


இதுவரையிலும் நெருக்கடியான நேரமின்மையிலும் பொறுமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில்கள் அளித்த பரிசல்காரன் அவர்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொண்டு அடுத்ததாக அய்யனார் கம்மா ஹீரோவிடம் பேட்டி எடுக்க பிரியமுடன் குழுவினர் செல்ல இருப்பதால் பொறுமையாக பேட்டியினை ரசித்த அனைவருக்கும் நன்றியினை கூறி விடை பெற்று கொள்வது உங்கள் வசந்த்