Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

June 6, 2011

ப்ரிய நண்பன்...!

அவ்வப்பொழுது ஆத்ம திருப்திக்காக எழுதும் பதிவுகளில் இதுவும் ...

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இப்படி யாராவது என்னிடம் வந்து கேட்டால் சட்டென்று இவன்தான் என் நண்பன் என்று சொல்வதிற்கு தகுதியானவன் இவன்.



சேட்டைக்காரனா இருக்கான்ல ம்ம் என் ஃப்ரண்ட்ல அப்டித்தான் இருப்பான் , நவநீதகிருஷ்ணன் எனக்கும் இவனுக்கும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்பொழுது சக அறைவாசியாகத்தான் அறிமுகம். நான் அந்த நிறுவனத்தில் சேர்வதற்கு  இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அந்த நிறுவனத்தில் இவன் பணிபுரிந்தான். வேலையிடத்தில் இவன் இருக்குமிடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. எனக்கும்கூட இவனிடமிருந்துதான் இந்த நக்கல் நையாண்டி வந்திருக்கவேண்டும் அவ்வளவு நக்கல்பிடித்தவன் எதிரே பேசுபவர்களை தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலேயே கவர்வான், என்னையும் அப்படியே. வெளியே இவ்வளவு கலகலப்பாக பேசித்திரிபவனின் சொந்த வாழ்க்கையில் இருக்கும் சில மறக்க முடியாத வருத்தமான நிகழ்வுகள் என் போன்ற சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

ஆரம்பத்தில் சக தொழிலாளியாக இருந்த நாங்கள் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் எங்களுக்கிடையேயான , புத்தக வாசிப்பு , ரசனைகள் , பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து இணைபிரியாத நண்பர்களானோம். சில நேரங்களில் ஏதாவது அவசரகதியான பணிகளை முடிக்க கடினமான பணிகளை முடிக்க அரிசிமூட்டை (மேலாளருக்கு அரிசிமூட்டையென்ற பட்டப்பெயரும் வைத்தது இவன்தான்) தேடுவது எங்கள் இருவரையாகத்தான் இருக்கும் இருவருக்குமே தொழிலில் அதிகப்படியான ஆர்வம் ஆதலால் இருவருமே மிக விரைவாகவே பணி கற்றுக்கொண்டோம். இருவரும் தனித்தனியாக பணிபுரியும் பொழுது போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வோம். பின்பு வார இறுதிகளில் நான் தேனியிலிருக்கும் என்வீட்டிற்கு சென்றுவிடுவேன். அவன் அருப்புக்கோட்டையிலிருக்கும் அவனுடைய வீட்டிற்கு சென்றுவிடுவான். ஆரம்பத்தில்தான் இப்படியிருந்தது நாட்கள் ஆக ஆக வீட்டிற்கு மாதமொருமுறை மட்டுமே சென்று வந்தோம் விடுமுறை நாட்களில் மதுரையிலிருக்கும் ஒவ்வொரு ஏரியாவையும் சுற்றுவது, சினிமாவுக்கு செல்வது , அரட்டையடிப்பது இப்படி மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அப்பொழுது திருப்பரங்குன்றம் தியாகராசர்கல்லூரி காம்பஸில் இருக்கும் தேன்கிணறில் பணிபுரிந்த சமயம் அருகிலிருந்த தியாகராசர்கல்லூரி பேருந்துநிலையத்தில் அமர்ந்து சைட் அடித்துக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது என்னுடைய டீயில் ஈ விழுந்துவிட்டது வேற டீ சொல்லவாடான்னு கேட்டான் மண்ணுல இருந்து வர்ற தண்ணியில ஏதேதோ விழுந்து கிடக்குது அதையே குடிக்கிறோம் ஆஃப்ட்ரால் ஈதானடான்னு ஈயத்தூக்கிப்போட்டு டீயகுடிக்கறதுல தப்பேயில்லையென்று லாஜிக் இல்லாமல் எதையோ சொல்லப்போக இன்றுவரைக்கும் என்னை கும்முவதற்கு அதை பயன்படுத்துகிறான். 

ஒரு நாள் மொபைலில் யாரையோ சத்தமாக திட்டிக்கொண்டிருந்தான் யார்டா அது ஏன் திட்டறன்னு கேட்டால் அது தன்னுடைய மாமன் மகளென்றும் அவள் தன்னை காதலிப்பதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லையெனவும் அதனால்தான் திட்டினேன் என்றான். சின்னக்குழந்தையில நான் தூக்கி வைத்து விளையாடிய பொண்ணுடா காதலியா பார்க்க மனசு வரலை அதான் நல்லா திட்டிவிட்டுட்டேன்னு சொன்னான். நாளாக நாளாக அந்தப்பெண் இவனுக்கு தரும் அன்புத்தொல்லைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றதே தவிர குறையவேயில்லை இவனும் மசியவில்லை.அந்தப்பெண்ணிடம் என்னைப்பற்றி கூறியிருப்பான் போலும் ஒரு நாள் இந்தாடா உன்கிட்ட பேசணுமாம் பேசு என்று மொபைலை என்கையில் கொடுத்துவிட்டான் பேசிய அந்தப்பெண் அண்ணா நான் தான் சரண்யா பேசறேண்ணா அவருக்கு நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா நான் அவங்கள விரும்புறேன் அண்ணா அவங்களை எப்படியாவது சம்மதிக்க வைங்களேன் என்று கூறினாள்.

இதுவரையிலும் அவனை எங்குமே நவநீ நவநீ என்று அழைத்துவந்த நான் அந்தப்பெண் என்னை அண்ணாவென்று கூறியதிலிருந்து அவனை மாப்ள என்று அழைக்கலானேன். மாப்ள ஏண்டா ஒரு பொண்ணு இம்புட்டு தூரம் உன்மேல ப்ரியம் வச்சிருக்கா நீ என்னடான்னா அதை உதாசீனம் பண்ற ஆனாலும் உனக்கு இம்புட்டு வீம்பு ஆகாதுடான்னு மட்டுமே சொல்ல முடிந்தது, அவனுடைய மனசை மாற்றமுடியவில்லை. ஒருநாள் பழங்காநத்தத்திலிருக்கும் ஜெயம் தியேட்டரில் நான் இவன் இன்னொரு நண்பன் மூவரும் சேர்ந்து பருத்திவீரன் படத்திற்கு சென்றிருந்தோம். படம் முடிந்து வந்ததிலிருந்து இவனுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தது. மாப்ள ஒகே சொல்லிட்டேண்டா என்று சில நாட்கள் கழித்து அவன் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . எப்படிடா மாப்ள என்றதும் பருத்திவீரன் படம் பார்த்ததிலிருந்து ஒரு மாதிரியாகிடுச்சுடா மாப்ள அதான்ன்னு வழிஞ்சான். இப்பவும் பருத்திவீரன் படமோ பாடல்களோ பார்க்கும்பொழுது இவனுடைய அந்த வழியல் ஞாபகம் வந்து எனக்குள்ளே நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வேன். திரைப்படங்கள் மனித மனங்கள் வரை ஊடுருவிச்செல்லும் என்பது அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது. அதற்கு பிறகு மாப்ளையின் மொபைல் பில்லோடு சேர்ந்து காதலும் செழித்து வளர்ந்தது.

காதல்னா எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும் இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு இருந்தது, இவன் வீட்டில் எந்தபிரச்சினையும் இல்லை அந்தப்பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு . இவனும் அவர்கள் வீட்டில் சொன்ன அந்தஸ்து பிரச்சினைக்காகவே வெளிநாடு சென்று நல்ல ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தான். அதற்குபிறகும் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு சொல்லியே வந்தனர். அவர்களிடம் நேரில் சென்று பேசிப்பார்த்துவிடுவது அதாவது இரண்டில் ஒரு முடிவு தெரிந்து கொள்வதற்கு ஊருக்கு சென்று எப்படியோ அவர்கள் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டான். இதோ இன்று அவனுக்கு திருமணம் என்னால் மாப்பிள்ளை தோழனாக கூட இருக்கமுடியவில்லை. என் வாழ்க்கையில் நான் இழந்த மிக முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று.கண்ணீர் வரத்தான் செய்கிறது அது இயலாமையால் வந்தது அல்ல நாம பார்த்து வளர்ந்த காதல் வெற்றிபெற்று கல்யாணத்தில் முடியுறப்போ கூடவே இல்லாமல் போய்விட்டோமே என்ற ஆதங்கம் கேவல் அவ்வளவே மற்றபடி இந்த திருமணத்தால் அளவுகடந்த  ஆனந்தமடைந்தவன் என்ற முறையில் பெருமையெனக்கு. என் வாழ்த்துகளை என் அம்மா அப்பா உன்னிடம் சேர்த்துவிடுவார்கள் ஏற்றுக்கொள்டா மாப்ள..!

சரண்யா நீ நினைச்சத சாதிச்சிட்ட பார்த்தியா இதேமாதிரியே எல்லா விஷயத்திலும் மன உறுதியோடு இருந்தா கண்டிப்பா வெற்றி நிச்சயம். மாப்ளைய கண்கலங்காம பார்த்துக்கம்மா ...!

சரண்யாநவநீதகிருஷ்ணன் இருவருக்கும் இல்லறம் சிறக்க , இன்பங்கள் வந்திட துன்பங்கள் பறந்திட மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் இன்று போலவே என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். GOD BLESS YOU..!


December 7, 2010

குண்டக்க மண்டக்க கேள்விகள்

கேள்வி கேட்பது சின்ன வயசுல இருந்தே அனைவருக்கும் பழக்கமான ஒன்று சில கேள்விகள் சிரிப்பை வரவழைக்கும் சில கேள்விகள் அறிவை வரவழைக்கும்

சின்ன குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கமுடியாது உதாரணத்திற்க்கு டிவியில் வரும் ஹீரோவைப்பார்த்து அம்மா அவர் எப்படிம்மா சின்ன டிவிக்குள்ள போனாரு என்பது மாதிரியான கேள்விக்கு அந்தகுழந்தை புரிந்துகொள்ளும் வகையில் நம்மால் பதில் சொல்ல முடியாது நாம் என்ன சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவர்கள் இருப்பதில்லை முடிவில் நானும் அந்த டிவிக்குள்ளாற போகணும் என்று அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர் இன்னும் சூரியன் கிழக்கே உதிக்குது மேற்கே உதிக்க கூடாதா என்று கேள்வி கேட்கும் குழந்தைகள்! மழை எப்படி வருது என்று சக்திக்கு மீறிய கேள்வி கேட்கும் குழந்தைகள் இருக்கின்றனர் (இந்த இடத்தில் நீதான அந்தக்குழந்தை என்று குறுக்கு கேள்வி கேட்பவர்களை பிலாக்கானந்தா மன்னிப்பாராக)

இன்னொரு தரப்பு வாத்தியாரிடம் டவுட் கேட்கும் மாணவர்கள் உதாரணத்திற்க்கு கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்கும் கல்லூரி ஆசிரியரிடம் சார் ஒரு டவுட் நீங்க எவ்வளவோ கணக்கை கூட்டியும் பெருக்கியும் விடை வர வச்சுடறீங்க ஆனா நம்ம காலேஜ் கிளீன் பண்ற செல்லம்மா எவ்வளவு கூட்டிப்பெருக்கினாலும் குப்பைமட்டும்தான் வருது ஏன் சார்ன்னு டக்கால்டி கேள்வி கேட்குற பயலுக...

இங்லீஷை தமிழ்ல ஆங்கிலம்ன்னு சொல்றோம் அப்போ தமிழை ஏன் ஆங்கிலத்துலயும் தமிழ்ன்னு சொல்றோம் சார்? என்று குண்டக்கமண்டக்க கேள்விகளை கேட்கும் பார்த்திப டைப் ஆட்களும் இருக்கின்றனர்.

நம்ம பிறப்பை இறந்தகாலம் என்றும் இறப்பை எதிர்காலம் என்றும் சொல்வது ஏன் ? என்று கேள்வி கேட்கும் என்னை மாதிரி புத்திசாலியான? ஆட்களும் இருக்காங்க..

இப்படி கேள்வி கேட்பதென்பது என்னைப்பொறுத்தமட்டிலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

நிப்பாட்டு நிப்பாட்டு ஏன் இவ்ளோ பில்டப்பு கொடுக்கிறன்னுதானே கேட்குறீங்க நானே சொல்றேன் அடுத்து வரப்போற ஸ்பெசல் வாரத்திற்க்காக இதுவரைக்கும் என்னை தொடர்ந்து படிக்கும் நண்பர்களான உங்களிடமிருந்து என்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப்போறேன்...என்ன ஸ்பெசல் பதிவுலக வந்து ரெண்டுவருசம் முடியப்போகுது அதையொட்டி வரப்போற ஸ்பெசல் பதிவுக்குத்தான் இத்தனை பில்டப்பு

கேள்விகள் வலைப்பதிவைப்பற்றியும், வலையுலகைப்பற்றியும், என்னைப்பற்றியும் மட்டுமே இருக்கவேண்டும்

தயவு செய்து பதில் சொல்லறமாதிரியான கேள்வி கேளுங்க நட்புகளே!

நீங்க எப்ப கடைய மூடுவீங்க? நீங்க லூஸா ? போன்ற கேள்விகளுக்கு தக்க சன்மானம் உண்டு..

முடிவில் குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்டு என்னை மடக்குவோருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது...

பதில் சொல்ல நான் ரெடி கேள்வி கேட்க நீங்க ரெடியா?

ஆமா இவருபெரிய ஒபாமா இவர்கிட்ட நாம கேள்வி கேட்கணுமாக்கும் என்று சிலுப்பிக்கொள்பவர்களுக்கு கழுத்து சுளுக்க கடவதாக....

.

June 4, 2010

சென்னையில் ஓர் நட்புக்காலம்...

நண்பர்கள் - சந்திப்பு

என்னதான் வலையில் பின்னூட்டங்கள் சாட்டில் பேசிக்கொண்டாலும் இணைய நண்பர்களை நேரில் சந்திக்கும் பொழுது ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதது...
இந்த நட்பெல்லாம் கண்டிப்பாக வலையுலகம் எனக்குத்தந்த புதையலே இதற்காகவேனும் வலையுலகை மறக்க மாட்டேன்...

சென்னையில் நண்பர்கள் சிலரை சந்தித்தது பற்றிய ஒரு இடுகை


சென்னை சென்றதும் சிங்கையில் இருந்து வந்திருந்த சகோதரர் ஜமால் அண்ணாவை சந்திக்க சென்றேன் அங்கே ஜமால் அண்ணாவுக்கு முன்பே நண்பர் பலாபட்டறை ஷங்கர் என்னை தொடர்பு கொண்டு முன்பே வந்தார் வந்ததும் எனக்கு அடையாளம் தெரியவில்லை ஏதோ படத்தோட ஹீரோதான் வந்துவிட்டார் போல என்று நினைத்தேன் பின்புதாந்தான் ஷங்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்... பின்னே வந்த ஜமால் அண்ணாவிடம் ஏன் தாமதம் என்று வினவியதற்க்கு கார் பார்க்கிங் செய்ய இடமின்றி ஒரு மணி நேரம் அலைந்ததால் சரியான நேரத்தில் வர இயலவில்லை என்றார் ( இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மனிதனை பார்க் செய்றதுக்கும் இடமிருக்காது போல)

நட்புடன் ஜமால்.



நண்பர் ஷங்கர் அண்ணாவிடம் சென்னை பதிவர் சங்கம் பற்றியும் அவரின் பலா பட்டறை பெயர் விளக்கமும் கேட்டறிந்தேன் எவ்வளவோ அவர் விளக்கியும் எனக்கு இன்னும் புரிபடவே இல்லை... பட்டறை என்றால் ஏதாவது ஒரு பொருளை பட்டை தீட்டி உருவாக்கும் இடம் உதாரணத்திற்க்கு இரும்பு பட்டறை என்றால் அங்கு கத்தி, கடப்பாரை, அருவாள் போன்ற இரும்பிலான ஆயுதங்கள் பட்டை தீட்டப்படுகிறது அதுபோல் பலா பட்டறை என்றால் பலாப்பழத்தில் ஆன பொருட்கள் பட்டை தீட்டப்படுகிறதா? ப்லா பட்டறைக்கு சரியான விளக்கம் தர ஷங்கர் அண்ணா திரும்பவும் அழைக்கப்படுகிறார்...

பலா பட்டறை ஷங்கர்




ஜமால் அண்ணா பழக உண்மையிலே மிகவும் நட்புடனும் சகோதர பாசத்துடனும் தம்பின்னு சொல்லும்போது நிறையவே உணர்ச்சிவசப்பட்டுட்டேனுங்ண்ணா... அவர் நிறைய பதிவுலகம் பற்றிய நிறைய தகவல்களையும் பின்னூட்டம் பற்றியும் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...

சில உங்களின் பார்வைக்கு...

1.ஜமால் அண்ணா ஒரு பெண் புனைப் பெயரிலும் எழுதுகிறார் . இது எப்டியிருக்கு?
ஜமால் அண்ணாவின் அந்த புனைப்பெயரில் இருக்கும் வலைப்பூவை கண்டு பிடிப்போர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனக்கும் அந்த புனை பெயர் தெரியவில்லை... அண்ணா எந்த வலைப்பூங்ண்ணா? மண்டை காய விட்டுட்டீங்களேண்ணா நான் மட்டும் மண்டை காய்ஞ்சா எப்படி எல்லாரையும் கொஞ்சம் காய விடுவோம்ன்னுதான் போட்டு உடைச்சுட்டேன் சாரிங்ண்ணா... (சத்ரியன் அண்ணா உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே) அண்ணாவுக்கு சின்ன அட்வைஸ் இப்படி எழுதுறது தப்புங்ண்ணா...

2.பதிவு எப்படியும் எழுதி விடலாம் பின்னூட்டம் போடுவது மிகவும் கஷ்டம் என்று கூறினார் ஏன் என்று வினவியதற்க்கு...அவர் அளித்த பதில் சுவாரஸ்யம்... ஒருவர் பிறந்த நாள் போஸ்ட்டு போட்ருப்பார் அவருக்கு வாழ்த்து சொல்லணும், ஒருத்தர் சமையல் குறிப்பு எழுதியிருப்பார் அதையும் படித்துவிட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு, ஒருத்தர் காதல் கவிதை எழுதியிருப்பாங்க அதையும் படிச்சு கொஞ்சம் காதல் செய்துட்டு ஒருத்தர் சோகமான கவிதை எழுதியிருப்பார் அதையும் வாசித்து கொஞ்சம் அழுதுட்டுன்னு இப்பிடி ஒரே நேரத்தில் அத்தனை பேருக்கும் வித வித உணர்வுகளோடு பின்னூட்டம் அளிப்பது சுவாரஸ்யமே தான் இனி நானும் அந்த வழியை பின்பற்றலாம் என்றிருக்கிறேன்...


சில அறிவுரைகளும் வழங்கினார்...

1. மற்ற பதிவர்களுடன் எவ்ளோ க்ளோஸ் ரிலேஷன்ஷிப் இருந்தால் அவங்களோட பதிவுக்கு போய் அதை காட்டிக்கொள்ளாதே உதாரணத்திற்க்கு போடா போடி என்று அழைப்பதை தவிர்க்க சொன்னார்...

2.பெண் பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டம் இடும் பொழுது மிகவும் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்றார்...

3.கோபப்படுவதை உடனே பதிவில் ஏற்றாதே அது உன்னை பாதிக்கும்...

4.வலைப்பூ நமக்கு ஒரு வடிகால் அவ்வளவுதான் அதுவே வாழ்க்கையல்ல...

5. சில டெக்னிகல் அட்வைஸ்களும் அறியத்தந்தார்....


நன்றிங்ண்ணா....


அடுத்ததாக வலையில் கிடைத்த தந்தை வானம்பாடிகள் பாலாசாரை சந்தித்தேன்..மிகவும் அன்பான தந்தை , அம்மாகிட்டேயும் தங்கைகிட்டேயும் அறிமுகப்படுத்தி வைத்தார்... அம்மா அன்பாக அடை செய்து பரிமாறினார் அவர் அடை செய்ய போகும் பொழுதே நைனா அம்மாகிட்ட சொல்றார் எண்ணை குறைவாக விட்டு சுடச்சொல்லி ஏன் என்று கேட்டதற்க்கு இவனுக்கு கொஞ்சம் இல்ல நிறையவே கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு அதான் என்று சொன்னார்... ஆமாவா நைனா? வரும் பொழுது கி.ரா. வின் கரிசல் காட்டு கடுதாசி புத்தகத்தை பரிசாக அளித்தார்... இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை நைனா இனிதான் படிக்கணும்...இன்னும் எழுத்துக்கள் பற்றி நிறைய அறிவுரைகள் அளித்தார் என்னதான் என்னுடைய ஃபாலோவர் லிஸ்ட்ல இருந்து விலகினாலும் இன்னும் என் எழுத்துகளை படிக்கிறார் என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது... அன்புடன் அம்மாவும்,தங்கையும் நைனாவும் வீடு வாசல் வரை வரை வந்து விடையளித்தனர்...

வானம்பாடிகள் பாலாசாரும் நானும்



அடுத்ததாக...சகோதரர் ஜீவன் என்ற தமிழ் அமுதன் அண்ணா அவர்களை அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன்...அங்கு நம் ஜமால் அண்ணாவை மீண்டும் சந்திதேன்...
ஜீவன் அவர்களின் அலுவலகத்தில் தங்க நகைகள் டிசைன் கட்டிங் செய்வதைப்பற்றி பகிர்ந்து கொண்டார்... பழக மிகவும் அன்பாகவும் அமைதியானவரும் கூட.. பின் நான் ஜமால் அண்ணா ஜீவன் மூவரும் தமிழ் அமுதன் அவர்களின் மதிய உணவு விருந்தில் கலந்து கொண்டோம்.. அங்கே காடை மீன் இன்னும் நிறைய கடல் உணவுகளை ஜமால் அண்ணா உள்ளே தள்ளினார்... பின் தமிழ் அமுதன் அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு எனும் புத்தகம் சிறப்பாக விறுவிறுப்பாக எழுதியிருப்பதைப்பற்றி பகிர்ந்து கொண்டார் நானும் அந்த புத்தகத்தை வாங்கி விட்டேன் ஆனால் இன்னும் படிக்கத்தான் ஆரம்பிக்கவில்லை... சிறப்பான சந்திப்பாக நிறைவு பெற்றது...

தமிழ் அமுதன் அலுவலகத்தில் ஜீவன், நான், ஜமால் அண்ணா



தமிழ் அமுதன் என்ற ஜீவன்


தொப்பையை மறைக்கும் ஜமால் அண்ணா





ஜீவனும் நானும் ஜமால் அண்ணா எடுத்த போட்டோ




அடுத்ததாக விசா பக்கங்களில் எழுதி வரும் ரைட்டர் விசா என அழக்கப்படும் நண்பர் ஃப்ராங்ளின் அலெக்சாண்டர் அவர்கள் மைலாப்பூரில் டாங்க் அருகே இருக்கும் சரவணா பவனில் காலைச்சிற்றுண்டி அருந்தி கொண்டு நிறைய விஷயங்கள் பேசினோம். சிரிக்க சிரிக்க கன்னங்களில் குழிவிழுகிறது .. அவர் எப்படி கதைகள் எழுதுகிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டேன் அவரின் சைக்கோ கதை தொடர முடியாமல் போனதற்க்கான காரணாத்தையும் பகிர்ந்து கொண்டார் பின்பு என்னை அடையார் போலீஸ் ஸ்டேசனில் விட்டு சென்றுவிட்டார் கேமரா ஆஃப்லைனில் இருந்த்தால் இவருடன் மட்டும் புகைப்படம் எடுக்க இயலாமல் போனது இன்னமும் வருத்தமாயிருக்கிறது..

பிறகு அடையார் பஸ் டிப்போவில் இருந்து நண்பர் கார்க்கி தன்னுடைய காரில் என்னை பிக்கப் பண்ணி கொண்டு ஒரு பழரச அங்காடி இட்டு சென்றார் அங்கு அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசினோம். மனிதர் மிகவும் கல கலப்பானவர் ,முக்கியமாக இருவருக்கும் பொதுவான தலைவர் இளைய தளபதி பற்றியும் , கார்க்கி எப்படி பதிவுலகிற்க்கு வந்தார் ஏழு கேரக்டர் எப்படி உருவானது என்பது பற்றி பகிர்ந்து கொண்டார். அத்தனை விஷயங்களும் கேட்க கேட்க சுவாரஸ்யமாயிருந்தது எப்பொழுது திருமணம் என்றேன் மிக விரைவில் அறிவிப்பு வெளி வரும் என்றார்.நகைச்சுவையாகவே எழுதுறீங்களே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் எழுத மாட்டீங்களா என்றேன் அதற்க்கு அவர் கூறினார் நகைச்சுவையா எழுதுவதையே அனைவரும் விரும்புகின்றனர் சீரியஸ் விசயங்கள் எழுதினால் இப்படி எழுதாதீங்க கார்க்கின்னு நிறைய மெயில் வருகிறதாம் நிஜமாகவே கார்க்கி சீரியஸ் விஷயங்கள் உங்களுக்கு சீரியசாக வரவில்லை நகைச்சுவையே நன்றாக எழுதுகிறீர்கள் பின்பு அங்கிருந்து அவரிடமிருந்து விடைபெற்றேன்....

கார்க்கியும் நானும்...



கார்.....க்கீ