December 7, 2010

குண்டக்க மண்டக்க கேள்விகள்

கேள்வி கேட்பது சின்ன வயசுல இருந்தே அனைவருக்கும் பழக்கமான ஒன்று சில கேள்விகள் சிரிப்பை வரவழைக்கும் சில கேள்விகள் அறிவை வரவழைக்கும்

சின்ன குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்லி அவர்களுக்கு புரிய வைக்கமுடியாது உதாரணத்திற்க்கு டிவியில் வரும் ஹீரோவைப்பார்த்து அம்மா அவர் எப்படிம்மா சின்ன டிவிக்குள்ள போனாரு என்பது மாதிரியான கேள்விக்கு அந்தகுழந்தை புரிந்துகொள்ளும் வகையில் நம்மால் பதில் சொல்ல முடியாது நாம் என்ன சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவர்கள் இருப்பதில்லை முடிவில் நானும் அந்த டிவிக்குள்ளாற போகணும் என்று அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளும் இருக்கின்றனர் இன்னும் சூரியன் கிழக்கே உதிக்குது மேற்கே உதிக்க கூடாதா என்று கேள்வி கேட்கும் குழந்தைகள்! மழை எப்படி வருது என்று சக்திக்கு மீறிய கேள்வி கேட்கும் குழந்தைகள் இருக்கின்றனர் (இந்த இடத்தில் நீதான அந்தக்குழந்தை என்று குறுக்கு கேள்வி கேட்பவர்களை பிலாக்கானந்தா மன்னிப்பாராக)

இன்னொரு தரப்பு வாத்தியாரிடம் டவுட் கேட்கும் மாணவர்கள் உதாரணத்திற்க்கு கணக்குப்பாடம் நடத்திக்கொண்டிருக்கும் கல்லூரி ஆசிரியரிடம் சார் ஒரு டவுட் நீங்க எவ்வளவோ கணக்கை கூட்டியும் பெருக்கியும் விடை வர வச்சுடறீங்க ஆனா நம்ம காலேஜ் கிளீன் பண்ற செல்லம்மா எவ்வளவு கூட்டிப்பெருக்கினாலும் குப்பைமட்டும்தான் வருது ஏன் சார்ன்னு டக்கால்டி கேள்வி கேட்குற பயலுக...

இங்லீஷை தமிழ்ல ஆங்கிலம்ன்னு சொல்றோம் அப்போ தமிழை ஏன் ஆங்கிலத்துலயும் தமிழ்ன்னு சொல்றோம் சார்? என்று குண்டக்கமண்டக்க கேள்விகளை கேட்கும் பார்த்திப டைப் ஆட்களும் இருக்கின்றனர்.

நம்ம பிறப்பை இறந்தகாலம் என்றும் இறப்பை எதிர்காலம் என்றும் சொல்வது ஏன் ? என்று கேள்வி கேட்கும் என்னை மாதிரி புத்திசாலியான? ஆட்களும் இருக்காங்க..

இப்படி கேள்வி கேட்பதென்பது என்னைப்பொறுத்தமட்டிலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

நிப்பாட்டு நிப்பாட்டு ஏன் இவ்ளோ பில்டப்பு கொடுக்கிறன்னுதானே கேட்குறீங்க நானே சொல்றேன் அடுத்து வரப்போற ஸ்பெசல் வாரத்திற்க்காக இதுவரைக்கும் என்னை தொடர்ந்து படிக்கும் நண்பர்களான உங்களிடமிருந்து என்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப்போறேன்...என்ன ஸ்பெசல் பதிவுலக வந்து ரெண்டுவருசம் முடியப்போகுது அதையொட்டி வரப்போற ஸ்பெசல் பதிவுக்குத்தான் இத்தனை பில்டப்பு

கேள்விகள் வலைப்பதிவைப்பற்றியும், வலையுலகைப்பற்றியும், என்னைப்பற்றியும் மட்டுமே இருக்கவேண்டும்

தயவு செய்து பதில் சொல்லறமாதிரியான கேள்வி கேளுங்க நட்புகளே!

நீங்க எப்ப கடைய மூடுவீங்க? நீங்க லூஸா ? போன்ற கேள்விகளுக்கு தக்க சன்மானம் உண்டு..

முடிவில் குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்டு என்னை மடக்குவோருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது...

பதில் சொல்ல நான் ரெடி கேள்வி கேட்க நீங்க ரெடியா?

ஆமா இவருபெரிய ஒபாமா இவர்கிட்ட நாம கேள்வி கேட்கணுமாக்கும் என்று சிலுப்பிக்கொள்பவர்களுக்கு கழுத்து சுளுக்க கடவதாக....

.

52 comments:

Philosophy Prabhakaran said...

வடை...

Chitra said...

இங்லீஷை தமிழ்ல ஆங்கிலம்ன்னு சொல்றோம் அப்போ தமிழை ஏன் ஆங்கிலத்துலயும் தமிழ்ன்னு சொல்றோம் சார்? என்று குண்டக்கமண்டக்க கேள்விகளை கேட்கும் பார்த்திப டைப் ஆட்களும் இருக்கின்றனர்.

.....ஆங்கிலத்தில் - டமில் .....:-))

Philosophy Prabhakaran said...

உங்க ஊர்ல இப்போ மணி நள்ளிரவு தாண்டி இருக்கும்னு நினைக்கிறேன்... இங்கே பின்னிரவு 3.30... இந்த நேரத்தில் எழுப்பி கேள்வி கேக்க சொன்னா நான் எங்கே போவேன்... எனக்கு யாரைத்தெரியும்...

Unknown said...

இந்த வருடத்தில் நீங்க எழுதுனதுலையே மிகப் பிடித்த பதிவு எது?

Unknown said...

இந்த வருடத்தில் நீங்க படிததுலையே மிகப் பிடித்த பதிவு எது?

மாணவன் said...

செம கலக்கல் அண்ணே,
//நம்ம பிறப்பை இறந்தகாலம் என்றும் இறப்பை எதிர்காலம் என்றும் சொல்வது ஏன் ? என்று கேள்வி கேட்கும் என்னை மாதிரி புத்திசாலியான? ஆட்களும் இருக்காங்க..//

சூப்பர்...

தொடரட்டும் உங்கள் பணி

மாணவன் said...

//
தயவு செய்து பதில் சொல்லறமாதிரியான கேள்வி கேளுங்க நட்புகளே!//
//பதில் சொல்ல நான் ரெடி கேள்வி கேட்க நீங்க ரெடியா?//

பதிவுலகம் உங்கள் பார்வையில்?

பதிவுலக நண்பர்கள் பற்றி உங்கள் கருத்து?

உங்களிடம் உங்களுக்கு பிடித்தது?

எதிர்கால லட்சியம்?

உங்களைப் பற்றி ஒரே வரியில்?

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

ஹேமா said...

ஈழம் பற்றிய உங்கள் மனக் கருத்து ?

ஆ.ஞானசேகரன் said...

நல்லயிருக்கே

a said...

//
அவர் எப்படிம்மா சின்ன டிவிக்குள்ள போனாரு என்பது மாதிரியான கேள்விக்கு அந்தகுழந்தை புரிந்துகொள்ளும் வகையில் நம்மால் பதில் சொல்ல முடியாது நாம் என்ன சொன்னாலும் அதை புரிந்துகொள்ளும் மனநிலையிலும் அவர்கள் இருப்பதில்லை
//
ஹா ஹா........ நானும் சின்ன வயசுல ர் ரேடியோல பாட்டு வரும்போது யாரோ எப்படி இந்த சின்ன பொட்டிக்குள்ள வந்து உக்காந்து பாடுராங்கன்ணு ஆச்சரியப்பட்டுருக்கிறேன்........

சி.பி.செந்தில்குமார் said...

padhivu suuppar.பதிவு சூப்பர்.இன்னும் ஒரு படம் சேர்த்து இருக்கலம்

Madhavan Srinivasagopalan said...

ஏலே மாடசாமி.. வக்கீலுக்கு போன் போடு.. அவர் வந்து நல்ல கேள்வி மேல கேள்வியா கேப்பாரு.. வசந்த மாட்ட வச்சிடலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு உனக்கு எப்போ கல்யாணம்? (மாட்டுனியா மாட்டுனிய)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க ஊர்ல இருந்து வாங்கிட்டு வந்த சரக்கை எல்லாம் காலி பண்ணிடீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி படத்துக்கு முதல்ல விமர்சனம் எழுதின பதிவர் யாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்க பங்காளி JEY என்ன ஆனாரு?

வைகை said...

நல்லா கேப்பமே?!! காசா பணமா?!! ஷகீலாவோட மொத படம் என்ன?!! ஐயோ! இப்பவே கேட்டு ஒரு கேள்விய வேஸ்ட் பண்ணிட்டனே!!!

Anonymous said...

ப்ரியமுடன் வசந்த் னு சொல்றாங்களே அது யாரு? ( இரண்டரை மதிப்பெண் )

அவரு நாட்டுக்கு என்ன பண்ணிருக்கார்? விவரி. ( பதினேழு மதிப்பெண் )

"கற்பனை காதலன்" விளக்கம் தருக. ( மூன்று மதிப்பெண் )

அவரின் பதிவுகள் படிப்பதால் உண்டாகும் "பின்" விளைவுகள் பற்றி விளக்கமாக படங்களுடன் விடையளிக்கவும். ( முப்பத்தி ஏழரை மதிப்பெண் )

மேலேயுள்ள வினாக்களுக்கு விடையளித்தால் நாற்பது மதிப்பெண்கள் இலவசம்! :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் முதல்ல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

நல்லா கேப்பமே?!! காசா பணமா?!! ஷகீலாவோட மொத படம் என்ன?!!

//

எலேய் மக்கா அந்த படம் பேரு "கிண்ணார தும்பிகள்"

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப்ரியமுடன் வசந்த்" ன்னு சொல்றீங்களே அது யாருக்கு ப்ரியமுடன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

விஜய் நடிச்ச ப்ரியமுடன் படத்தில வந்த வசந்துக்கும் இந்த ப்ரியமுடன் வசந்துக்கும் ஏதாவது சமந்தம் இருக்கா..

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

நல்லா கேப்பமே?!! காசா பணமா?!! ஷகீலாவோட மொத படம் என்ன?!!

//

எலேய் மக்கா அந்த படம் பேரு "கிண்ணார தும்பிகள்"//////////


சிங்கபூர் வர்றதுக்கு முன்னாடி பரங்கிமல ஜோதிய குத்தகைக்கு எடுத்துரிந்திகளோ?!! இம்ப்பூட்டு கரக்கேட்டா சொல்றீக!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

2008 டிசம்பர் 18 ம் தேதி முதல் பதிவெழுத ஆரம்பித்து இரண்டாவது பதிவெழுத நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதர்க்கான காரணம்.??????

Anonymous said...

கற்பனை காதலன்
மொத்தத்தில் 100 mark

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்க ஆணீயே புடுங்க வேண்டாம் ....மொதல்ல எடத்த காலி பண்ணுங்க

ஹரிஸ் Harish said...

குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்டு என்னை மடக்குவோருக்கு சிறப்பு பரிசு காத்திருக்கிறது...//

குண்டக்கனா என்ன?மண்டக்கனா என்ன?

Vishnu said...

என்னதான் முன்னாடி வந்து வடை கிடைச்சாலும் அது முன்னூட்டம் ஆகுங்களா?

sakthi said...

குண்டக்கனா என்ன?மண்டக்கனா என்ன?

அதானே முதல்ல இதுக்கு பதில் சொல்லப்பா????

sathishsangkavi.blogspot.com said...

நல்லாயிருக்குங்க உங்க குண்டக்க மண்டக்க...

Ramesh said...

என்னங்க இப்படி திடீர்னு கோர்ட் போடாம ஸ்டேண்டப் காமெடில இறங்கிட்டீங்க...

அருமை..

நான் சின்ன பையனா இருந்த போது அப்ப எங்க வீட்ல சாலிடர் டிவி இருந்தது.. ஆனா அதுல மத்த டிவி விளம்பரமும் வரும் (ஹி ஹி அப்பவே எப்படி யோசிச்சிருக்கேன் பாருங்க)... உடனே

சாலிடர் டிவில எப்படி மத்த டிவி விளம்பரம்லாம் போடறாங்கன்னு கேட்டேன்...

வீட்ல எல்லாரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு முழிச்சாங்க.. அப்புறம் என்ன முறைச்சாங்க..

(என்ன எல்லாரும் சின்ன வயச நியாபகப் படுத்தர மாதிரி பதிவாவே போடறீங்க இந்த வாரம்?)

ஓ நீங்க பதிவுலகத்த பத்தி கேள்வி கேக்க சொன்னீங்கள்ல.. நான் பதிவுலகத்துக்கிட்டயே கேள்வி கேட்டுட்டேன்.. சரி.. உங்களுக்கான கேள்வி...

இந்த ரெண்டு வருசத்துல வலையுலகத்துல நீங்க சந்திச்ச நெகிழ்ச்சியான அனுபவங்கள் என்னென்ன? மோசமான அனுபவங்க என்னென்ன?

ஐயையோ நான் தமிழன் said...

சூப்பர்.........

நான் பதிவுலகத்துக்கு புதிது ஆக நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கொடுங்கள்.

பதிவுலகத்துக்கு வந்து 2 வருடம் ஆகின்றது என்கிறீர்கள்.
அப்படியெனில் நீங்கள் இது வரை பதிவுலகத்தில் யாரிடமாவது கோபப்பட்டதுண்டா?..........
அதன் காரணம் என்ன?.....

Venkat Saran. said...

பதிவுலகில் என்னோட இந்த அபார வளர்ச்சிக்கு (?) காரனம் யாரு ?

கருடன் said...

மச்சி... உனக்கு பதில் தெரியாத கேள்வி எது?

எல் கே said...

உனக்கு கல்யாணம் எப்ப ??

மயாதி said...

நீ இதுவரைக்கும் காதலித்த பெண்களின் எண்ணிக்கை ?

இவ்வளவு காலமா பியமுடன் வசந்த் என்று பீலா விடுகிறாயே.யாரோட பிரியம் என்று எப்போது சொல்லப் போகிறாய்?

பெண்களுக்கு உன்னிடம் அதிகமாகப் பிடித்தது? (உடம்பில்)

நீ நேசிக்கும் பெண் திருமணம் முடிக்காமல் லிவ்விங் டுகதராத்தான் வாழப் போகிறேன் என்றால்
அவளோடு அப்படி வாழ்வாயா? அல்லது விட்டு விடுவாயா?

நாம் என்னத்தத்தான் விதம் விதமாக சாப்பிட்டாலும் போகிற மலம் ஒரே நிரமாகத்தானே போகுது ஏன்?

முட்டையில் இருந்து சேவல் வரலாம் சேவலில் இருந்து முட்டை வருமா?

நீ மப்புல வீட்டிற்குப் போகும்போது உன்னைக் காட்டிக் கொடுப்பது?சாராய வாடை ,உன் நடை ,வாந்தி ,உன் நடவடிக்கைகள்
(நான் தண்ணியே அடிக்கிறதில்லை என்று பொய் சொல்லக் கூடாது)

ஒரே நேரத்தில் வேறு வேறு திசைகளில் இருந்து மூன்று அழகான பெண்கள் வரும் போது ஐயோ மூவரையும்
ஒரே நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று கவலைப் படுவாயா?அல்லது ஒருத்தியின் அழகையாவது ரசிப்போம் என்று
நினைப்பாயா?

'பரிவை' சே.குமார் said...

செம... செம... செம கலக்கல்.

Unknown said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரல ...

Unknown said...

ungaluku ponnu pathutangala sir

ADMIN said...

அவ்ளோதானா..?

இன்னும் இருக்கா..?

யோ வொய்ஸ் (யோகா) said...

மாப்பு நான் கேக்குற கேள்விக்கு தெரியாது என பதில் சொல்ல கூடாது.

கேள்வி:தெரியும் என்னும் வார்த்தைக்கு எதிர்கருத்துச் சொல் என்ன?

மயாதி said...

யோ வொய்ஸ் (யோகா) said...
மாப்பு நான் கேக்குற கேள்விக்கு தெரியாது என பதில் சொல்ல கூடாது.

கேள்வி:தெரியும் என்னும் வார்த்தைக்கு எதிர்கருத்துச் சொல் என்ன?//

ம்யுரிதெ ok thaane?

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் கேள்விகளைக்கேட்டு அசரடித்த நண்பர்களுக்கும் இனியும் கேள்விகேட்டு அசத்தப்போகிற நண்பர்களுக்கும் மிக்க நன்றி

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை அடுத்து வரப்போகும் தமிழ்மணநட்சத்திர வாரத்தில் காணுங்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தமிழில் உங்களுக்கு பிடித்த பிடிக்காத வார்த்தை எது???

சாந்தி மாரியப்பன் said...

நீங்க எழுதுனதுலயே, அடடா!! இதை இன்னும் கொஞ்சம் வித்தியாசமா எழுதியிருக்கலாமேன்னு யோசிக்க வெச்ச பதிவு எது???

நிலாமகள் said...

தம்பி நல்லாயிருக்கியா? சந்தோஷமா இருக்கியா? இந்த ரெண்டு கேள்விக்கும் எப்பவும் ஆமான்னு சொல்ற கொடுப்பனை நிலைக்கட்டும்!!

Mahi_Granny said...

''நம்ம பிறப்பை இறந்தகாலம் என்றும் இறப்பை எதிர்காலம் என்றும் சொல்வது ஏன் ? என்று கேள்வி கேட்கும் என்னை மாதிரி புத்திசாலியான? ஆட்களும் இருக்காங்க..'' நிஜமாவே வசந்த் புத்திசாலி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்பா

ஹுஸைனம்மா said...

//நம்ம பிறப்பை இறந்தகாலம் என்றும் இறப்பை எதிர்காலம் என்றும் சொல்வது ஏன் ? என்று கேள்வி கேட்கும் என்னை மாதிரி புத்திசாலியான//

இவ்ளோ புத்திசாலியான உங்ககிட்ட அதைவிட புத்திசாலித்தனமா கேள்வி கேக்குற அளவுக்கு என் புத்திய வளக்கணும். அதுக்கு என்ன உரம் போடலாம்?

சிநேகிதன் அக்பர் said...

கேள்வியை எப்படி கேக்கணும்

Ramesh said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த். இந்தப் பதிவு உங்களுக்குத்தான் போய்ப் பாருங்க...

http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_11.html

Thanglish Payan said...

tamil la english letters type panna pyiriyuthu eppadi?