July 31, 2009

பப்புவின் கேள்விகள்

பப்பு கேட்ட கேள்விகள்


நேற்று என்னோட குட்டி ஃப்ரண்ட் பப்புவ கூட்டிட்டு டவுனுக்கு போனப்ப அவன் கேட்ட கேள்விகள்...

1.ரோட்டுஓரமா வச்சுருந்த மிகப்பெரிய கல்யாண பேனர்கள பாத்துட்டு ஏன் மாம்ஸ் நம்ம சொந்த காரவங்க எல்லாம் சின்னதா பத்திரிக்கை அடிச்சு வீட்ல கொண்டுவந்து குடுக்குறாங்க இவங்க ஏன் மாம்ஸ் இவ்ளோ பெரிய பத்திரிக்கை அடிச்சு ஊர் பூரா குடுக்காம ஒட்டி வச்சுருக்காங்க? வாங்க ஆளில்லையா? சொந்தபந்தம் யாரும் இல்லியா இவங்களுக்கு?

2. எ பட போஸ்டர பாத்துட்டு ஏன் மாம்ஸ் பக்கத்துல இருக்குற அந்த பட ஹீரோயின் கலர் கலரா ட்ரஸ் போட்ருக்காங்க இந்த படத்துல இருக்குற ஹீரோயின் மட்டும் கறுப்புகலரா அதுவும் இத்துனூண்டு ட்ரெஸ் போட்ருக்கு?படம் லோ பட்ஜெட்டா?

3.தியேட்டர்ல எச்சில் துப்பாதீர்ன்னு எழுதிருக்குற வாசகம் பாத்துட்டு
ஏன் மாம்ஸ் எச்சில் துப்பாதீர்ன்னு எழுதுனதுக்கு பக்கத்துல துப்பி வச்சிருக்காங்க அப்போ இனிமேல் எச்சில் துப்புங்கன்னு எழுதுனாத்தான் துப்ப் மாட்டாங்களோ?

4.பஸ்ல படியில்நிற்காதீர்ன்னு எழுதிருக்கே அப்போ படியில உக்காரலாமா மாம்ஸ்?

5.பத்திரிக்கைகளின் அறிவுத்திறன் போட்டி க்கு விடையனுப்புச்சாத்தான் நாமளுக்கு அறிவு இருக்குன்னு அர்த்தமா மாம்ஸ்?

6.பாயிண்ட் டூ பாயிண்ட் எக்ஸ்பிரஸ்ன்னு நம்ம அரசாங்க பஸ்ல வெளிப்பக்கம் எழுதிருக்கு உள்ள ட்ரைவர் சீட்டுக்கு முன்னாடி மித வேகம் மிக நன்றுன்னு எழுதிருக்கே ஏன் மாம்ஸ்?

7.ஜன்னலுக்கு வெளிய பிச்சக்காரன் காசு கேட்டு வாங்குறான் ஜன்னலுக்கு உள்ள இந்த கண்டக்டர் கேக்காம மிச்ச காச வச்சுக்கிறான் அப்போஅந்த பிச்சக்காரனும் கண்டக்டரும் ஒண்ணா மாம்ஸ்?

8.வீட்டுக்கு ஒன்று நாட்டுக்கு நன்றுன்னு குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் வருதே அந்த ஒரு குழந்தை திடீர்ன்னு உடல் நலம் இல்லாம போயிட்டு இறந்துருச்சுன்னா அந்த குடும்பத்த கவர்ன்மெண்ட் கவனிச்சுகிடுமா மாம்ஸ்?

9. வான் வழியா ஒலி அலைவரிசயா வர்றதால வானொலின்னு சொல்றீங்க அப்போ டீ.வி.க்கும் ஒளி வானத்துவழியாத்தான வருது அப்போ அதை வானொளின்னு தான சொல்லணும் அப்பறம் ஏன் தொலைக்காட்சின்னு சொல்றீங்க இல்லாட்டி வானொலிய தொலையொலின்னு சொல்லலாம்ல?

இந்தமாதிரியே நீ கொஸ்டின் கேட்டுட்டே இருந்தேன்னு வை நான் உன் கூட ஃப்ரண்ட்ஸிப் கட் பண்ணிடுவேன்னு சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்....



July 29, 2009

கதாபாத்திரம்....

கதாபாத்திரம்

பிச்சைகாரனானேன்...
உனக்கான தொலைபேசி
அழைப்புகளுக்கு
ஒற்றை ரூபாய் நாணயங்களை தேடும்பொழுது...

வாட்ச்மேன் ஆனேன்...
உன் கம்பெனிவாசலில்
உனக்காக
காத்திருக்கும்பொழுது...

நடிகனானேன்
உன்னுடன் பேசுவதற்க்காக
கண்ணாடியின் முன்
ஒத்திகை பார்க்கும்பொழுது...

பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...


போட்டோ கமெண்ட்ஸ்....1









July 27, 2009

பிரியமுடன்.....ஃப்ரண்ட்ஸ்

தமிழ்துளி தேவா சார் என்னை நட்பாக ஏற்றுக்கொண்டு இந்த விருதை எனக்கு அளித்தார்.நானும் என்னுடய ப்லாக் ஃப்ரண்ட்ஸ் ஐ தங்களுக்கு தெரிவிக்கிறேன்
பத்து பேருக்கு மட்டும் என்பதால் மிக கஷ்டமாயிட்டு,இருந்தாலும் இந்த பத்து பேர் மீதமுள்ளவங்களுக்கும் கொடுத்து எல்லாரும் ஃப்ரண்டாகிடலாம் நோ ப்ராப்லம்....இங்க இருக்குற ஃப்ரண்ட்ஸ் நீங்களும் உங்களுக்கு பிடித்த ஃப்ரண்ட்ஸ் பத்து பேர அறிமுகப்படுத்திடுங்க.....
1.இராகவன் நைஜீரியா பதிவுலகில் என் முதல் நட்பு இவரிடம் தான்.பின்னூட்ட சூறாவளி இப்போ விடுமுறையில் இருக்கிறார். 2.பாசக்கரம் நீட்டும் அண்ணன் நட்புடன் ஜமால் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் ஒரு நட்பு முத்து.அனைவரும் அறிந்தவர்.
3.தமிழரசி கவிதைகளின் மெஷின். இவங்களுக்கு இந்த விருது நாலாவது வாட்டி இன்னும் எத்தனைன்னு தெரியல இதுல இருந்து தெரிஞ்சுக்கோங்க இவங்க நட்பு பாராட்டுதலை. 4.மச்சான் சக்கர சுரேஷ்.கொஞ்சம் மன உளைச்சலில் ஓய்வுக்கு சென்றிருக்கிறார்.எங்கப்பா போயிருக்க சீக்கிரம் வாப்பா நீ வந்தாதான் பதிவுலகம் களைகட்டும். 5.பொன்னியின் செல்வன் கார்த்திகை பாண்டியன் எங்க மதுரைக்கார நண்பர்.திருப்பூர்ல கல்லூரி பேராசிரியரா இருக்கார்.
6.மச்சான் கலையரசன் வடலூர் காரர் நல்லா கலக்கல் பதிவுகள் ,பின்னூட்டம் போடுவார்.
7.வலைமனை சுகுமார் போட்டொ கமெண்ட்ஸ் பண்ணுறதுல்ல இவர அடிச்சுக்க ஆள் இல்ல.எனக்காக பிரியமுடன் வசந்த்ன்னு சில பேனர்ஸ் அழகா பண்ணி குடுத்துருக்கார்.
8.அன்புமதி சிவகாசி ஊசி வெடி தம்பிக்கு சின்ன வயசுன்னாலும் சூப்பரா எழுதுறான். 9.திருமதி . மேனகா சத்யா சூப்பரா சமையல் குறிப்புகள் குடுத்து அசத்துறாங்க.நானும் அந்த குறிப்புகள் வச்சுத்தான் வாழ்க்கை ஓட்டிட்டு இருக்கேன்.
10.யாவரும் நலம் சுசி இவங்க பண்ற காமெடி தாங்க முடியலைங்க நார்வேல இருந்து எழுதுறாங்க மொத்தத்துல இவங்க ஒரு காமெடி டாக்டர்
தமிழரசி அவர்கள் எனக்கு இந்த பட்டாம்பூச்சி விருது குடுத்து ரொம்ப நாள் ஆச்சு நானும் யாருக்கும் குடுக்காமலே வச்சுருந்தேன் இப்போ கொடுத்துட்டேன்...நீங்களும் ஒரு மூணு பேருக்கு கொடுத்துடுங்க.....
எல்லாரும் எடுத்துக்கோங்க.......

July 26, 2009

வாழ்த்தலாம் வாருங்கள்


யார் நீ?

புதியவர்களின் புத்துணர்வா?

பதிவுகளின் காதலனா?

யார் நீ?

ஊக்கப்படுத்தலின் உயிரா?

உற்ச்சாகப்படுத்தலின் விதையா?

யார் நீ?

தேடலின் விடையா?

தேடி தேடி தொலைபவனா?

யார் நீ?


நட்பின் நகலா?

பண்பின் பகலவனா?

யார் நீ?

அன்புக்கு அடிமையா?

இல்லை அன்பு உன் அடிமையா?

யார் நீ?

கவிதையின் காதலனா?

கற்பித்தல் உன் கனவா?

யார் நீ?

யாராயினும்

நீ என்றும் எங்கள் வழிகாட்டியே!

தொடரட்டும் உன் வாழ்க்கைப்பயணம்......

தொட்டுவிடட்டும் உன் கனவுகளை......

எங்களை விட்டு விலகாமலும்......

என்றும் இனிய புன்னகையுடனும்......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா.......




வாழ்த்துக்கள் இதழிலிருந்து அல்ல இதயத்திலிருந்து....



July 24, 2009

விலங்கு கூடம்

நாம எல்லாரும் பள்ளிக்கு போயி படிச்ச பாடங்கள்

1.தமிழ்

2.ஆங்கிலம்

3.கணக்கு

4.அறிவியல்

5.சமூகவியல்

6.வேதியல்

7.இயற்பியல்

9.விலங்கியல்

10.தாவிரவியல்

11.சமூக அறிவியல்

12.வரலாறு

இப்பிடி நிறைய படிச்சுருக்கோம்

இதே இந்த விலங்குகளும் ஸ்கூலுக்கு

போயிருந்தா அந்த ஸ்கூல் பேர் இப்படித்தான் இருக்குமோ?

அரசினர் பல்லிகூடம்

அரசினர் எறும்புகூடம்

அரசினர் சிங்ககூடம்

அரசினர் புலிக்கூடம்

அரசினர் கலப்பின கூடம்

அரசினர் யானைகூடம்

அரசினர் குதிரைகூடம்

அரசினர் நாய்க்கூடம்

அரசினர் பன்றிக்கூடம்

அரசினர் மாட்டுக்கூடம்

அரசினர் ஆட்டுக்கூடம்

அரசினர் குரங்குகூடம் (ஸ்கூல் தேவையில்ல மரம் போதும் நம்ம மரத்தடியில படிச்ச மாதிரி)

அரசினர் கோழிக்குடம்

அரசினர் புறாக்கூடம்

அரசினர் குருவிக்கூடம்

இப்படி நிறைய கூடங்கள் இருந்திருக்கலாம்



அங்க அவங்க படிச்ச பாடங்கள்

1.மனிதவியல்(நம்ம தவளைய வெட்டுன மாதிரி இவங்க நம்மல வெட்டிருப்பாங்க)

2.தாவிரவியல்(இது மட்டும் இவங்களும் நாமலும் சேர்ந்து படிக்கிறோம்)

3.இரையியல்

4.தாவியல்

5.ஓடுவியல்

6.வேட்டையியல்

7.திண்ணியல்

8.பிடியியல்

9.பாய்தல்

11.தப்பித்தல்

12.அடையியல்

13.பொறியியல்(எஞ்சினியரிங் இல்ல இது எலிக்கு மட்டும்)

14.நன்றியியல் (நாய்க்கு மட்டும்)

15.பிடுங்கியல் (குரங்குக்கு மட்டும்)

இது மாதிரி பாடம் படிச்சுருப்பாங்களோ?

ஆனா இவங்களும் இவங்க அப்பா அம்மாவும் கொடுத்துவச்சவங்கங்க

யூனிஃபார்ம் செலவே கிடையாது......

இவர்தான் ஓவிய ஆசிரியர்





வாத்தியார் இவங்கள அடிக்க முடியாது ஏன்ன நாமலாவது பேசித்தான்

கடிப்போம் இவங்க நிஜமாவே கடிச்சுருவாங்களே.....

இவங்க டூர் போறாங்க



அப்போ அப்போ நம்மல ஸ்கூல்ல ஜூக்கு கூட்டிட்டு போறமாதிரி இவங்கள

ஹுயூமன்க்கு கூட்டிட்டு போவாங்க...

ஸ்கூல் சினிமாக்கு டி ஆர் படத்துக்கு கூட்டிட்டு போவாங்களோ.....

July 23, 2009

எதிர் பிரபலங்கள் ( original & duplicate )

எல்லாரும் எதிர்கவிதைதான் போட்டாங்க நான் எதிர் பிரபலமே போட்டுட்டேன்

ஒரிஜினல்

தமிழ் மணம் பரப்பும் அண்ணன் சக்திவேல்



டூப்ளிக்கேட்

அண்ணன் புத்திவேல்

http://www.puthipages.com/



ஒரிஜினல்

சகா கார்க்கி



டூப்ளிக்கேட்

பஸ்க்கி



ஒரிஜினல்

நேசக்கரம் நீட்டும் அண்ணன் ஜமால்



டூப்ளிக்கேட்

பிட்டுக்கரம் நீட்டும் குணால்




ஒரிஜினல்

சைபர் க்ரைம் புகழ் அண்ணன் லக்கி





டூப்ளிக்கேட்

கிரைம் கிரிமினல் அன்லக்கி




ஒரிஜினல்

விருது புகழ் அண்ணன் செந்தழல் ரவி


டூப்ளிக்கேட்

வெந்தழல் ரபி



ஒரிஜினல்

கோவை சிங்கம் வடகரை வேலன்

டூப்ளிக்கேட்

பெரியகுளம் தென்கரை சூலன்



ஒரிஜினல்

மச்சான் சக்கர சுரேஷ்



டூப்ளிக்கேட்

வெல்லம் ரமேஷ்




ஒரிஜினல்

பின்னூட்ட தளபதி வால்பையன் அருண்




டூப்ளிக்கேட்

தலைபையன் தருண்



ஒரிஜினல்

அரபு நாட்டு சிங்கம் அபி அப்பா



டூப்ளிக்கேட்

பொடி டப்பா (thank you ravi)


ஒரிஜினல்

கவிப்பேரரசி தமிழரசி



டூப்ளிக்கேட்

கழுத்து கறுப்பரசி



விஸ்கி: இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.......


அடுத்த வாரம் வரும் பிரபலங்கள்

மனவிலாசம் நவாஸூதீன்

தமிழ்த்துளி தேவா

பொன்னியின் செல்வன் மதுரை சிங்கம் கார்த்திகை பாண்டியன்

மாப்ள டக்ளஸ்

நையாண்டி நைனா

கனவுகளே தல சுரேஷ்

அபு அப்ஸர்

குசும்பன்

சென்ஷி

இன்னும் நிறைய பேர் எல்லாரயும் கலாய்க்காம விடுறதில்லை......

முடுஞ்சா பிடிச்சுருந்தா இந்ததடவையாச்சும் தமிழ்மணத்துல வாக்களிகும்படி கேட்டுக்கொள்கிறேன்............தமிழிஷ்ல வொர்க் ஆவல என்னாச்சுன்னு தெரியல......

July 22, 2009

சின்ன சின்னதாய் சில....




சின்ன சின்னதாய் சில....






மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...


வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு


பெண்

சூடும்போது கிரீடமாய்
சுடும்போது தீயாய்


தாலி

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்


குழந்தை

இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....





ஸ்டிக்கர் பொட்டு

யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்...



அதிகாலை

அனைவருக்கும் உதயமாய்
இரவு ஷிஃப்ட் காரனுக்கு அஸ்தமன மாய்....