Showing posts with label நட்புடன் ஜமால். Show all posts
Showing posts with label நட்புடன் ஜமால். Show all posts

July 26, 2009

வாழ்த்தலாம் வாருங்கள்


யார் நீ?

புதியவர்களின் புத்துணர்வா?

பதிவுகளின் காதலனா?

யார் நீ?

ஊக்கப்படுத்தலின் உயிரா?

உற்ச்சாகப்படுத்தலின் விதையா?

யார் நீ?

தேடலின் விடையா?

தேடி தேடி தொலைபவனா?

யார் நீ?


நட்பின் நகலா?

பண்பின் பகலவனா?

யார் நீ?

அன்புக்கு அடிமையா?

இல்லை அன்பு உன் அடிமையா?

யார் நீ?

கவிதையின் காதலனா?

கற்பித்தல் உன் கனவா?

யார் நீ?

யாராயினும்

நீ என்றும் எங்கள் வழிகாட்டியே!

தொடரட்டும் உன் வாழ்க்கைப்பயணம்......

தொட்டுவிடட்டும் உன் கனவுகளை......

எங்களை விட்டு விலகாமலும்......

என்றும் இனிய புன்னகையுடனும்......

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா.......




வாழ்த்துக்கள் இதழிலிருந்து அல்ல இதயத்திலிருந்து....