Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

October 20, 2010

ஹச் அம்மா! ஹச் அய்யா!




 மழை நாளில்
தோன்றும் வானவில்
போலவே அழகான
காதல் நாட்களில் தோன்றும்
வானவில்லாய் நீ வருவதற்க்கு..
 சூரியனாய் எதிர் திசையில் நான்
வானமாய் நம் வீட்டு வாசல்
மழையாய் நம் காதல் !






வானம் சொய்யென்று
பெய்விக்கும் பெரு மழையில்
நனைவதை விட
 நீ பெய்விக்கும் ஜில்லென்ற
மர மழையில்
நனைவதே 
எனக்கு பிடிக்கிறது!








உன்னிடம்  
கெஞ்சி கூத்தாடி 
காதல் தவமிருந்து 
நான் பெற்ற 
வரங்களையெல்லாம்
 உன்னிடம் 
கேட்காமலே 
பெற்றுக்கொள்ளும் 
வரம் வாங்கி 
வந்திருக்கிறது மழை!






நேற்றைய மழைக்கு பின் 
முளைக்கும் இன்றைய
குப்பை காளான்கள்
மத்தியில் 
இன்று பெய்யும் மழையில் 
இன்றே ஆடும் 
நடன காளான் நீ!







நம்மை 
சேர்த்து வைக்கும்
வேலையை 
மழை பார்த்து கொள்ள
சேர்ந்திருக்கும் 
வேளையை
குடை பார்த்து கொள்கிறது..!




January 29, 2010

இக் லீப திக் கவிதைகள்





தொட்டதும்
எரிந்து
அணையும்
குண்டுபல்பை
போலவே
என் இளமையும்

************************************************************************************



நேர் நேர் தேமா
நேருக்கு நேர் பார்த்தும்
தேறவில்லை ஆமா...

************************************************************************************




இரு வாய்
நிறைய
குடித்தும்
அடங்கவில்லை
தாகம்
மாறாக அடங்கியது
சத்தம்

*************************************************************************************

பூக்காரி தலையில்
வெறும் கொண்டை
பூத்த பூவுக்காக
தினம் சண்டை

***********************************************************************************




புளித்த ஏப்பம்
புசித்தது தப்பானது
புளித்த வாந்தி
தப்பானது புசிக்காமலே...

**************************************************************************************

சட்டென்று
நொடியில் தோன்றி
பூமியில் புதையும்
மின்னலைப்போலவே
காதலும் பல நேரம்...

***********************************************************************************


கண்ணாடி காதலி
கண்ணடிச்சாளாம்
பிம்பத்தோடு
சேர்த்து
மனசும்
உடைஞ்சுபோச்சாம்...

**************************************************************************************



சட்டைப்பை
புகைப்படம்
சத்தமில்லாமல்
சிரிக்கிறது
சத்தம்போடும்
இதயத்தோடு...


January 23, 2010

அன்புள்ள கிறுக்கன்!!!


நான் கலந்த வண்ணம்
அவள் அழகென்றாள்
வாசமாய் என் பெயர்
தினம் தினம் தன் வாசல்
வருதென்கிறாள்..!

காதலாய் காற்றாய்
நிலவாய் வானமாய்
பூவாய் புற்களாய்
சந்தோசத்தின்
அத்தனை இயல்பிலும்
என்பெயராம்...
அங்கெல்லாம்
என்னை கண்டு
களவெடுத்தேன் என்கிறாள்...!

குனிந்து கொள்
குட்டவேண்டுமென்கிறாள்
சரி என்றேன்...!

கன்னம் காட்டு
முத்தமிட என்றாள்
மெய்யணைத்து
மெல்ல கன்னம் சரித்து
கிட்ட சென்று
கட்டிக்கொண்டேன்...!

எப்படித்தான்
திட்டினாலும்
என்னடா ?
என்பதோடு சரி..!

ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!


December 11, 2009

அர்த்தமற்றேற்று...



ஐந்து முனையாய்
ஒற்றை கண் ஆயிரம் காவல்
பல்லக்கில்லா ஊர்வலம்
ஆழிநிற நேரற்ற வீதியில்
ஓட நடக்க நிற்க...

தினம் ஒரு முகமூடி
முகமற்று மூன்று
நாலாறும் ஆராரோ
யார் யாருக்கோ...

நகராத வீட்டின்
நகரும் ஆடையில் நாணம்
தென்றல் வீசும் பொழுது
தென்றல் வீசாத தென்றல்...

களவிப்படுக்கை
காரணி,அத்தாட்சி
தினம் ஒரு ஜனனம்
தினம் ஒரு மரணம்

வளர்ச்சியில்
மன சேர்க்கை
யாரோ ஒருவனின்
உணவாய் ஒரு நாள்

இரவாறில் ஜோடி முத்தம்
யாருங்காணா ஓரிடத்தில்
சந்திப்பு பகலாறும்
பெண் ஒப்புமை
பெண் ஆசை யை
அர்த்தமற்றேற்று
ஆண் வீரம் வீரமற்று...

November 30, 2009

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!



இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...

கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...


- கவிஞர் வசந்த் ( ஹ ஹ ஹா)

(யூத்ஃபுல் விகடனில்)

November 28, 2009

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்...


உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
 கால்கடுக்க கன்னியுன் 
 கால்தடமறிய ஏங்கி
 உன் பார்வை வழியினூடான
 கோடான கோடி அணுக்களினூடே
 தேவியாய் தரிசனம் கண்டேனுனை...
 பூவையரின் பூமனங்கண்டேன்
 பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேனதை
 உன்னிடமிருந்து உன்னையறியாமல்
 பெற்றேனதை பேணித்திரிவதென்
 பொறுப்பன்றோ...
 விழைகிறாய் ஏனெதுக்கென்று
 மறுப்பேதும் சொல்லாமல்
 பெண்ணொருத்தியின் வரவறியா
 திரும்பிசெல்ல வழியற்ற 
 மனக்கூட்டின் ஒற்றை 
 விடிவிளக்காய் வருகிறாய்... 
 
 நிமிடங்கூட வீணாகாமல்
 ஊடலும் கூடலும் புரிந்தெனை
 மெய்மறக்கச்செய்து 
 இப்பூவுலக படைப்பின்
 மெய்யறிய செய்தாய்...
 புசிக்காத படையல்கள்
 காவலிருக்க நம்
 காதலிதினிதாய் நம்இல்லமே
 வெட்கப்புன்னகை சிந்துகிறது
 நாமதை சிதறாமல்  பிடித்து
 சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம்
 வெட்கமற்று...
 சிணுங்கலிசை மீட்டெடுத்துனை
 நான் இசைபிரம்மாவாக
 நீ ஒலிபெருக்காத பெருக்கியாய்
 ஒலிக்கச்செய்ததையென் செவி
 மட்டும் கேட்க செய்கிறாயதனூடே
 சுவற்றின் பொறாமைக் குரலும்
 கேட்கிறதென் காதினில்...
 நான் உன் வாசம் நுகர்ந்து
 துயிலடைய செல்லும் வேளையில்
 மீண்டும் வாவென்று நீயழைக்க
 மறுக்க வழியற்றவனாய்
 நானுனை மீண்டும் மீட்டெடுத்தந்த
 ராகதாலாட்டிலே ஆழ்துயிலடைந்தேன்
 துகிலற்றே...
 கதிரவனுக்கு முன்நீ விழித்தெழுந்து
 மென்முத்தமதனை என்னும் உன்னும் 
 கன்னம் சிவக்க கொடுத்ததை
 திரும்ப வாங்கி கொள்ளும் 
 வேளையில் கைபிடித்திழுத்து
 என் மார்போடு உன்னும்சேர
 உனை நானணைத்துகொள்கிறேன்
 உறக்கம் கெடுத்த ஊடலுக்காய்..
 
டிஸ்கி:இதுவரையிலும் நானொரு கவிதையெழுதுபவன் என்றெனை வெளிகாட்டி உங்களை அறுக்க விரும்பியதில்லை ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாகிவிட்டேன்.இனி நான் மட்டும் அறிந்த என் சுயரூபம் உங்களனைவருக்கும் தெரியவரும் இதுபோல் தொடர்ந்து..

November 25, 2009

வழித்தடம்....


ஹலோவ்... ரமாவா? நான் குமார்...

உன்னைப்பார்க்கணும்போல இருக்கு..


எங்கடி உன் வீடு கொஞ்சம் அட்ரஸ் சொல்லு ?

நான் வர்றேன்...


வாங்க.. வாங்க...


நீங்க உங்க வீட்டை ஒட்டி இருக்குற

புளிய மரத்தை ஒரு வட்டமடிச்சு...

அப்படியே கிழக்கால

ஒரு நாலெட்டு போனா...

ஒரு ஆழமரம் வரும்

இப்ப அப்படியே அதை

ஒரு வட்டம் போட்டுட்டு

தெற்க்குப்பக்கம்

ஒரு நாலெட்டு போனா

ஒரு அரசமரம் வரும்

அதையும் ஒரு சுத்து சுத்தி

அங்கேருந்து

நிறுத்துடி நிறுத்து..

ஆனாலும் நீ என்னை ரொம்ப

சுத்தவைக்கிறடி...

சும்மா தொண தொணக்காம

நான் சொல்றத கேளுங்க...

அப்படியே

கிழக்கால நாலெட்டு போனா

ஒரு பட்ட மரம் வரும் அதையும்

ஒரு வட்டமடிச்சு

வடக்குப்பக்கம்

நாலெட்டு வந்தா

அதான் என் வீடு..

என்னடி சொல்ற?

நான் திரும்ப என் வீட்டுக்கே

வந்து நிற்கிறேன் எங்க உன் வீடு?

உங்க வீடுதான் என் வீடு

ஹேய்....எப்பூடி...

ஐ லவ் யூ டா...

அடிக்கள்ளி

மீ டூ டி...

November 9, 2009

கால் கிலோ காதல் என்ன விலை?


கால் கிலோ காதல்

என்ன விலை என்று

கடைகளில் கேட்டேன்

கிடைக்கவில்லை காதல்...


கால் வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்றும்

கிடைக்கவில்லை காதல்..

பெட்ரோல் தீர மெட்ரோ பூரா சுத்தியும்

கிடைக்கவில்லை காதல்...


காற்றிடம் தெரியுமா என்று கேட்க

சுற்றிப்பார் என்று கூறி சுற்றலில் விட்டு

சுற்றி சென்றது..


சுற்றி சுற்றி கிறு கிறுத்து..

கிறுக்கனிடமும் கேட்க..

கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..

கிறுக்கி கிறுக்கி பார்த்தும்

சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...

கிடைக்கவில்லை காதல்...


விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க

ஒட்டவில்லை மண்..

மண் ஒட்டாத மீசையையும் எடுத்து பார்த்தேன்..

ஒட்டவில்லை காதல்..


ஒட்டாத வாழ்த்து அட்டை ஒன்று அனுப்பினேன்

ஒட்டாததால் திரும்பியது..

திரும்பியதை திருப்பி அனுப்பினேன் ஒட்டாமலே

பதிவு தபாலில்...காதலுடன்..

அட்ரஸ் மாறி அண்டை தேசம்

சென்றுவிட்டது தவறுதலாய்...


அண்டை தேசத்துக்காரியா

அன்பாயிருக்கப்போகிறாள்?

அதுவும் திரும்பியது என்னிடம்

அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...