இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவான்னு ஈஸியா அஞ்சு வார்த்தையில சொல்லிட்டு பத்தோட பதினொன்னா நானும் உன்னோட ரசிகன்னு சொல்லிட்டு போக மனசு வரலை அதான் ஒரு சில வார்த்தைகள் இதோ....
உன்னுடைய தோட்டத்தில் வேண்டுமானால் ஐம்பது வித செடியில் ஐம்பது மலர்கள் பூத்திருக்கலாம் ஆனால் என் வீட்டு தோட்டத்தில் விஜய் என்னும் ஒரே செடியில் ஐம்பது மலர்கள் பூத்து குலுங்குகிறது...
ஒவ்வொரு தடவையும் நீ ஒவ்வொரு விதமாக பூக்கும்பொழுதும் என் ஒருவனை மட்டுமல்ல என் வீட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷப்புன்னகை வரவழைத்துவிடுகிறாய்...
உன் செடியில் பூத்த அத்தனை மலர்களின் வாசத்தையும் நுகர்ந்தவன் என்கிற முறையில் சில மலர்களின் வாசனை அறவே பிடிக்காது போனாலும் அதையெடுத்து நுகர்ந்து பார்க்கமறுப்பதில்லை...உன் சில மலர்கள் நறுமணம் தரவில்லை என்பதற்க்காக என்றாவது ஒரு நாள் அனைவரும் வியக்கும் வாசனை தரப்போகும் மலரை தரப்போகும் செடியை அவ்வளவு சீக்கிரத்தில் பிடுங்கி எறிய மனமில்லை...
உன் ஒவ்வொரு மலர்வைப்பற்றிய அவதூறுகள் காற்றைவிட வேகமாக பரவியபொழுதும் அந்த அவதூறுகள் அதே வேகத்தில் காணாமலும் போகின்றன...நானும் அதை நீ பூத்திருக்கும் வனத்தின் வழியில் நடந்துபோகும்பொழுது இருக்கும் சிறு முட்களாக நினைத்து தூறப்போட்டுவிட்டு உன் அருகில் எப்பொழுதும்போல் வந்து செல்கிறேன்...
என் அம்மாவையும் சேர்த்து மொத்தம் என் தெருவிலிருக்கும் ஆறு அம்மாக்களுக்கும் நீ தான் மூத்தமகனாம் அவ்வளவு பிடிக்கிறது உன்னை அவர்களுக்கு தினமும் எப்படியும் என் வீட்டு வரவேற்பறை வரை ஐந்து முறையாவது வந்து செல்லும் உன்னை புறந்தள்ளி செல்ல மனசு வரலை...
உன்னால் மலர்ந்த மலர்களால் எந்த வித பயனில்லாத பொழுதும் மலரும் தருணத்தில் ஓராயிரம் கண்களை சந்தோஷமாய் காக்கவைத்து பூக்கின்ற அதிசிய செடியாகவே தெரிகிறாய்...முதல் பூ தந்த சந்தோஷம் வந்து போன சில நாட்களிலே உன்னில் மலரப்போகும் அடுத்த மலரைப்பற்றிய எதிர்ப்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் வந்து நிற்கிறது..போன ஐம்பதாவது மலர் வெகு மோசமான நறுமணத்தை தந்த பொழுது இனி உன் பக்கமே வரக்கூடாது என்ற என் முடிவு உன் அடுத்த மலரின் எதிர்பார்ப்பில் மாயமாகிறது எப்பொழுதும் போல...
உன் காதல் புன்னகை ஆண்களையே கவிழ்க்கும்பொழுது பெண்கள் சும்மாயிருப்பார்களா என்ன? மதுரையில் மதுரை மாவட்ட தலைவி உற்சாகமாய் கட் அவுட் வரை வந்து உன் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் இதுவும் கடந்து இன்னும் நிறைய கட் அவுட்களில் பெண்களை மலரச்செய்வாய் என்ற நம்பிக்கையிருக்கிறது...
இவ்வளவு சந்தோஷம் தரும் உனக்கு இன்று பிறந்தநாள் எப்பவும் போல் இதே மாதிரியே சந்தோஷமாய் என் வீட்டில் இருக்கும் செடி போன்ற லட்சக்கணக்கான வீடுகளிலும் இருக்கும் செடிகளிலும் இவ்வாண்டும் அதி நறுமணம் தரும் மலர்கள் பூக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..





































