Showing posts with label யூத்ஃபுல்விகடனில். Show all posts
Showing posts with label யூத்ஃபுல்விகடனில். Show all posts

November 30, 2009

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!



இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...

கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...


- கவிஞர் வசந்த் ( ஹ ஹ ஹா)

(யூத்ஃபுல் விகடனில்)

October 21, 2009

அவமானம்


தங்க கோபுரவாசலில்
வலுவாய் இருந்தும்...
திண்டாய் கல்லில் கிடைத்தவனின்
ஆளுமைக்குட்ப்பட்டு வாசலில் அநாதையாய்...

சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...

கயமைக்கு பல முறை அடிபணிந்து
சல சல வென்று சில பல முறை மணியடித்து
விழுந்து கிடக்க வாயிலிருக்க

திங்களொருமுறை கூட்டியும் பெருக்கியும்
படைத்தழித்து காத்து
தூணில் துரும்பில் திரிந்தாலும்
சொந்தமாய் நான் மட்டும் யாசிக்க புசிக்க

கறுப்பு வெளுக்க
உ லோகமால்
ஈகைக்காய் சிறைவைத்த
ஈயென்று சிரித்தவனுக்கு
அடிமையாய் நான்


August 14, 2009

யாருக்கு சுதந்திரம்?






யாருக்கு சுதந்திரம்?

நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்

ஆனா

உண்மையான சுதந்திரம் யாருக்கு கிடைத்தது?


வட்டிக்கு பணம் கொடுக்கும்

பண முதலைகளுக்கு......


அசையா சொத்துக்கள் சேர்க்கும்

அரசியல்வாதிகளுக்கு....


லஞ்சம் வாங்குற அரசு,

காவல்துறை அதிகாரிகளுக்கு....


பெண்களை திருட்டுத்தனமாக

ஆபாச படம் எடுப்பவர்களுக்கு....


விவாகரத்து பண்ணாமல்

மறுமணம் புரிபவர்களுக்கு.....


வரிகட்டாமல்

நாட்டை ஏமாற்றுபவர்களுக்கு.....


கல்விக்கு அளவுக்கு மீறி

கட்டணம் வசூலிப்பவர்களுக்கு....


கட்டணமில்லாமல் அரசு

வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு....


வாய்தா வாங்கி

ஏ சி சிறையில் தூங்கும் `நல்லவர்`களுக்கு.....


கலப்படத்தில்

கல்லாவை நிரப்பும் கயவர்களுக்கு....


தேர்தலில் கள்ள ஓட்டு ப்போடும்

விசுவாசிகளுக்கு...


சாதிகளில்லையடி பாப்பான்னு படிச்சு டாக்டராகி

சாதிக்கட்சி நடத்துபவர்களுக்கு.....


காவல் துறையின் காவலோடு?

ரேஷன் அரிசி கடத்துபவர்களுக்கு....


ஆபாசத்தை தூண்டும் எழுத்துக்களை

வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு....


சிறார்களை பணியிலமர்த்தும்

நிறுவனங்களுக்கு....


மதவெறியில் ரயில்,பேருந்துகளை

எரிப்பவர்களுக்கு....


சாமியின் பேரில் உலாவரும்

போலிச்சாமியார்களுக்கு....


இவர்கள் மட்டுமே இச்சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள்

தேவையா இந்த சுதந்திரம்?

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்





தமிழ் மணம், தமிழிஷ்ல் வாக்களிக்க மறவாதீர்



July 29, 2009

கதாபாத்திரம்....

கதாபாத்திரம்

பிச்சைகாரனானேன்...
உனக்கான தொலைபேசி
அழைப்புகளுக்கு
ஒற்றை ரூபாய் நாணயங்களை தேடும்பொழுது...

வாட்ச்மேன் ஆனேன்...
உன் கம்பெனிவாசலில்
உனக்காக
காத்திருக்கும்பொழுது...

நடிகனானேன்
உன்னுடன் பேசுவதற்க்காக
கண்ணாடியின் முன்
ஒத்திகை பார்க்கும்பொழுது...

பைத்தியமானேன்
உன் நினைவுகளால்
நானே தானாக
சிரிக்கும்பொழுது...


போட்டோ கமெண்ட்ஸ்....1









July 22, 2009

சின்ன சின்னதாய் சில....




சின்ன சின்னதாய் சில....






மண்

விதைக்கு நீ கருவறை...
மனிதனுக்கு நீ கல்லறை...


வெளிநாடு

போனவனுக்கு வருவதில்லை கனவு
போக நினைப்பவனுக்கு வருவதெல்லாம் கனவு


பெண்

சூடும்போது கிரீடமாய்
சுடும்போது தீயாய்


தாலி

போட்டது கழுத்துக்கு மட்டும்
பாதுகாப்பது உடல் முழுதையும்


குழந்தை

இருப்பவர்களுக்கு சுகமாய்...
இல்லாதவர்களுக்கு சோகமாய்....





ஸ்டிக்கர் பொட்டு

யுவதிகளுக்கு முகத்தில் அழகாய்.....
முகம்பார்க்கும் கண்ணாடிக்கு அசிங்கமாய்...



அதிகாலை

அனைவருக்கும் உதயமாய்
இரவு ஷிஃப்ட் காரனுக்கு அஸ்தமன மாய்....










July 3, 2009

மனசு.....


மனசு.....





அடிக்காமலே
வலிக்கிறது

சிறகில்லாமல்
பறக்கிறது

காலில்லாமல்
குதிக்கிறது

மின்சாரமில்லாமல்
சுற்றுகிறது

மருந்தில்லாமல்
மயங்குகிறது

ஆனால்....

நீயில்லாமல்
வாழ மறுக்கிறது....


மனசு.......







June 28, 2009

(அசையும் சொத்து) வியர்வை

வியர்வை




விழித்தது முதல்
விழிதூங்கும் வரை
ஒரு முறையேனும்
வந்துவிடுகிறாய் நீ

உழைப்பவனுக்கு நீ
விருதாகவும்
சுவையாகவும்

உறக்கத்தில் வாழ்பவனுக்கு நீ
கானல் நீராகவும்
உவர்ப்பாகவும்

கண்முழி பிதுங்கும் கூட்டத்திலும்
வருகிறாய்
கனவில் கண்ட பயத்தினாலும்
வருகிறாய்

உன்னை விரும்புவனுக்கு
இயற்கை காற்று பரிசாய்
வருகிறது

உன்னை விரும்பாதவனுக்கு
செயற்கை காற்று காசை
கரைக்கிறது


ஆசையாய் சேர்க்கும்
அசையா சொத்துக்கள்
மத்தியில்
ஆசையாய் சேரும்
அசையும் சொத்து நீ

உன்னை மறைக்க உண்டு
பல வாசனை திரவியங்கள்
ஆனால் அவற்றுக்கு இல்லை
உன் போல் வாசனைகள்

தண்ணீருக்கும் உண்டு
கண்ணீருக்கும் உண்டு வறட்சி
திரட்சியாய் வரும்

உனக்கில்லை வறட்சி...

ச்சீசீ....
என்று சொல்பவனுக்கும்
வருவாய் சீதனமாய்....

துளித்துளியாய் வருகிறாய்...
துடைக்க துடைக்க வருகிறாய்...





விட்டமின்கள்






தாயின் பாசம்
அன்பு எனும் A விட்டமின்...

தந்தையின் நேசம்
பாசம் எனும் B விட்டமின்...

நண்பனின் நட்பு
சிந்தனை எனும் C விட்டமின்...

ஆசிரியரின் ஆக்கம்
எண்ணம் எனும் E விட்டமின்...

கட்டியவளின் கரிசணை
காதல் எனும் K விட்டமின்...

மகனின் பரிவு B1 ஆக ...
மகளின் கனிவு B6 ஆக...
சமூகத்தின் மதிப்பு b12 ஆக...
காதலி கால்சியமாய்...

ஆக மொத்தம் வாழ்க்கையே

சத்துள்ள உறவுகளினால்

பெற்ற ஆரோக்கிய வாழ்க்கை....



தமிழை தக தக வெனும் மின்ன செய்யும்


கவிதை ஊற்றும்,

என்னை எழுத தூண்டியவருமான

கவியுலக அரசி தமிழரசிக்கு இப்படைப்புகள்

சமர்ப்பணம்

இவண்
பிரியமுடன் வசந்த்