October 30, 2009

A,B,C

A :இன்னைக்கு குமார் வீட்டுக்கு போகணும்

B :பாத்துப்போ அங்க குழியிருக்கு

C :அந்த நாலாவது வீடுதான் குமார் வீடு



B : இதுதான் குமார்

C : குமார் நல்லாயிருக்கியா?

A : எங்கடா குமார் உன்னோட குழந்தைகள்?


(குமார் காபி வேணுமான்னு கேட்க்க)

A : காபி குடிச்சா நல்லாயிருக்கும்

B :?

C : சரிடா..



(தொலைக்காட்சி ஓடிட்டு இருக்கு)

A : செய்திகள் வைடா

C : சன் செய்திகள் தானே !

B : ஆங்..அதுதான்


(குமாரின் வீட்டை விட்டு வெளியே கிளம்பி நடக்கையில் ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் பொழுது)

B : பிச்சைக்காரன் வர்றான்

C : சீ

A : காசு போடுடா

டிஸ்கி:

இங்கே ABC மூணுமே சேர்ந்து நான் தான் ,A - மனசு, B-கண், C-மூளை, நினைத்து மீண்டும் படிங்க இப்போ சொல்லுங்க ஒரு செயல் நடவடிக்கை நடக்கும் பொழுது இம்மூன்றில் எதைப்பொருத்து இயங்குகிறது நம் உடல்?...உதாரணத்துக்கு சாலையில் இருசக்கர வாகனத்தில் நீங்கள் செல்லும் போது ரெட் சிக்னல் விழுகிறது இப்போ எதன் கட்டளை மிக முக்கியம் எது முதலில் வேலை செய்கிறது? சிக்னலை பார்த்ததும் அது சினல்தான்னு சொல்வது மூளை நிற்கணும்ன்னு நினைக்கிறது மனசு,கண் இது ரெட் சிக்னல்ன்னு புரிய் வைக்குது..இப்போ சொல்லுங்க எதன் கட்டளை முக்கியம்? மூணும் முக்கியம்ன்னு சொல்லக்கூடாது..

October 28, 2009

வாழ்க மருத்துவர் ராமதாசு

காலையில் எனக்கு பிடித்த கொசுவுசட்டை போட்டுக்கொண்டு குசினிக்கு போய் போறாணையின் மூலம் அடுக்கு ரொட்டி இரண்டு சாப்பிட்டேன்

அப்புறமாக கேட்பொலியில் வட்டு இட்டு பார்த்தால் பாடல் ஒலிக்கவில்லை என்னவென்று சோதனைசெய்ய பிடிப்பானை பார்க்க அதுவும் சரியாகத்தான் இருந்தது பின், சுற்று முறிப்பான் இருக்குமிடம் போய் பார்த்த பொழுது சரியாக காபந்து செய்து இருக்கிறது நல்ல வேலை என் கேட்பொலி தப்பியது..

தனியாக அறையில் இருந்தால் பொழுது போகவில்லையென்று வெளியே அங்காடி வீதிக்கு போய்விட்டு சில பொருள்கள் வாங்கலாமென்று வீதிப்பக்கம் மழைச்சாரல் சரியென்று குடை தேடினேன் கிடைக்கவில்லை உள் அறையில் இருந்த மழைப்பாகை எடுத்துப்போட்டுக்கொண்டு நடந்தேன்..

வானத்தைப்பார்த்தேன்,ஒரு பறனை சென்று கொண்டிருந்தது மழைத்துளிகளின் நடுவிலும் தெளிவாக தெரிந்தது,சாரலியம் பழுதடைந்தாலும் அவ்வப்பொழுது இது மாதிரியான மழை பொழிவது மனதுக்கு இதமாய் இருந்தது..இந்த மழைக்கு தோப்பி குடித்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தவாறே நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்காடி வந்துவிட்டது..

பல் பொருள் அங்காடிக்கு சென்று அதன் உரிமையாளரிடம் எனக்கு தேவையான பொருள்களை ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தேன் உரிமையாளர் அவையனைத்தையும் வாசித்துவிட்டு என்னை முறைத்து பார்த்து அந்த காகிதத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிட்டு இதிலிருக்கும் பொருள்கள் எதுவும் எங்கள் அங்காடியில் விற்பதில்லை என்று கூறி விட்டார்..

ஏன் அப்படி கூறினார் என்று நான் எழுதிய பட்டியலை நான் திரும்ப வாசித்தேன்

1.தூம்பு

2.குமளிப்பழம்

3.பழப்பாகு

4.திடக்கூழ்

5.பசலிப்பழம்

6.கழுவுநீர்

7.பாற்சாறு

8.கொப்பி

9.நொசிவிழைகயிறு

10.சைத்தான் எண்ணெய்

11.தூவல்

12.காலகம்

ஏன் எல்லாமே சரியாகத்தானே எழுதியிருக்கிறேன் பிறகேன் உரிமையாளர் என்னை திட்டினார்?

சரி அடுத்த அங்காடிக்கு போவோம் என்று நடையை தொடர்ந்த பொழுது ஒரு தானி என்னை கடந்தது ...

பயன்படுத்தபட்டிருக்கும் தூய தமிழ் வார்த்தைகள்



கொசுவு சட்டை- டி சர்ட்

குசினி-சமையலறை

போறாணை-ஓவன்

அடுக்கு ரொட்டி-சாண்ட்விட்ச்

கேட்பொலி-ஆடியோ பிளேயர்

வட்டு- சிடி

பிடிப்பான் - சாக்கெட்

சுற்று முறிப்பான் - சர்க்யூட் பிரேக்கர்

காபந்து - பாதுகாப்பு

மழைப்பாகை - ரெயின் கோட்

பறனை - விமானம்

சாரலியம் - ஓசோன்

தோப்பி - பீர்

தூம்பு - ட்ரைன் பைப்

குமளிப்பழம் - ஆப்பிள்பழம்

பழப்பாகு - ஜாம்

திடக்கூழ் - ஜெல்லி

பசலிப்பழம் - கிவி ஃப்ரூட்

கழுவு நீர் - லோசன்

கொப்பி - நோட்புக்

நொசிவிழை கயிறு - நைலான் கயிறு

சைத்தூன் எண்ணெய் - ஆலிவ் ஆயில்

தூவல்-பேனா

காலகம்-சோடா


தொடர்வேன்...

October 27, 2009

ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா

ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா

ஒஹோ ஹோ ஆஹா தாலே லா தலல்லே லா

மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா

மிகாய் ஜகய்யா ஜோன்னாரே வா

(பாட்டுக்கு முன்னாடி எதுனாலும் வரி போட்டா அதையும் சேர்த்துதானே படிக்கிறீங்க அது மாதிரிதான் இதுவும்)

இனி கவிதைக்கு போகலாம் ஜூட்....


நீ சிணுங்க நான் அணைக்க

நான் அணைக்க நீ சிணுங்க


உன் சிணுங்கல்

சில நேரம் சங்கீதமாய்

சில நேரம் பாடலாய்

எந்நேரமும் ரீங்காராமாய் காதோரம்..


சத்தமில்லாமல்

என் காதோடு பேசிப்போகிறாய்

உன் பேச்சு கேட்க ஆளிருந்தும்

என் பேச்சை கேட்க நீ மட்டும்


கோபுரத்தில் வாழும் நீ

தெருவில் இருக்கும் என்னோடும்

சேர்ந்து உலாவுவதில்

கர்வமெனக்கு


பின் இருக்காதா ஒரு

சுயம்வரம் நடத்தியன்றோ

உன்னை கைப்பிடித்தேன்..


என் கையசைவிற்க்கு காத்திருக்கும்

உன் மௌனம்...


காற்றுக்கும் அடங்காத நீ

என் சிறு கட்டளைக்கு அடங்கிவிடுகிறாய்


தபால் காரனும் முகவரியற்றுப்போனான்

உன் வரவால்...


உள்பெட்டி நிரம்பி வழிவது

தெரியாமல் வெளிப்பெட்டியில் நான்


உனக்கென்றொரு

திசையில்லாமல்

என்னோடு என் திசையில்

பயணிக்கிறாய்..


என்

கையையும் பேச வைத்து

கை பேசியானாய்(லொள்)


October 26, 2009

காட்ஃபாதர்...

நீயா நானா இரண்டு பேரும் விவாதம் வைத்துக்கொள்ளலாமா?

ம்..ஒரு கை பார்த்திடலாம்

நீயும் நானும் பிறப்பில் ஒன்றுதான்..

ம்..அதிலென்ன சந்தேகம்?

இருந்தாலும் உனக்கும் எனக்கும் பல வித்யாசங்கள் உண்டு சில ஒற்றுமைகள் உண்டு இருந்தாலும் நானே உன்னை விட சிறந்தவன்..

நான் இதை ஒற்றுக்கொள்ள மாட்டேன்

ஏன்? நீ என்ன சொல்வது இதை படிக்கும் நண்பர்கள் கூறுவார்கள் இறுதியில் நீயா நானாவென்று...

அதையும் பார்க்கலாம் நான் யார் தெரியுமா? உனக்கும் உன் பாட்டனுக்கும் பாட்டன்..

ஹ ஹ ஹா

என்ன சிரிக்கின்றாய் ?

சிரிக்காமல் அழுக சொல்கிறாயா?

சொல்வதை முழுதும் கேட்டுவிட்டு அப்புறமாக சிரி,

ம்ம் சரி சொல்

நானும் நீயும் ஒன்றுதான் ஒற்றுக்கொள்கிறேன் ஆனால் உன்னைவிட என்மேலே அனைவருக்கும் விருப்பம்..

அதுசரி நான் தோற்றத்தில் ஒரே மாதிரியானவன் நீயோ பலவித தோற்றமுடையவன்.அதனால் என்ன உபயோகம் நீயே சொல்

ஙே!!!!எனக்கு சேதம் என்றால் சண்டையிட்டு கொள்ளுமளவிறக்கு நான் அவசியம்

ம்க்கும்..அது அநாவசியம்என க்கு சேதமென்றால் மனு கொடுக்குமளவிற்க்கு நான் அத்யாவசியம்..இப்போசொல் நீ பெரியவனா நான் பெரியவனா?

ம்ஹூம்..அதனாலென்ன என்னால் மக்கள் பயனடையவில்லையா?

ம்க்கும்..அது ஒரு மன தைரியமா கூட வைத்துக்கொள்ளலாம்..கண்ணில்லாதவனுக்கு உன்னால் உதவ முடியுமா?

இல்லை..

இப்படி சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை? என்னால கண்ணிருப்பவர்களுக்கு கூட உதவ முடியும்..இதுக்கென்ன சொல்கிறாய்?

வாஸ்தவம் தான் ஆனாலும் எனக்குன்னு வீடு கூட இருக்கு உனக்கிருக்கா?

அந்த வீடு நீயே கட்டியிருந்தால் உனக்கு கும்பிடு போடுவதில் நியாயமிருக்கு இப்ப சொல் அந்த வீடு நீயா கட்டினாயா?

இல்லதான் அதுக்கென்ன எனக்குன்னு வீடு இருக்கு உனக்குன்னு ஒதுங்க வீடு இருக்கா?

வீடு இருக்கா இல்லையான்றது முக்கியமில்லை வீடு கட்டி வாழ்றவங்களுக்கு நம்மால எதுனாலும் பயனிருக்கான்றதுதான் முக்கியம் இப்ப சொல் வீடுகட்டி இருக்கும் இருக்கும் உன்னால் வீடில்லாதவங்களுக்கு உதவ முடியுமா?

ம்ஹூம் அதுக்கு நான் என்ன செய்வது எனக்கு வீடு இருக்கு அது போதும்

இதுதான் சுயநலம் அந்த வீடில்லாதவங்களுக்கும் நான் தான் உதவி செய்றேன் இப்போ சொல் நீ பெரியவனா நான் பெரியவனா?

நானும் பலருக்கு உதவி செய்றேன்

அதெல்லாம் மறைமுகமா சோம்பேறிகளுக்கு உதவுகிறாய் நான் நேரிடையாவே பலருக்கு வழிகாட்டு கிறேன் இப்போ சொல்லு நீ பெரியவனா நான் பெரியவனா?

ஙே!!!

உனக்கே என்னோட உதவியில்லாமல் இருக்க முடியாது நீயென்ன சொல்றது இப்போ இவங்க சொல்வாங்க நீ பெரியவனா நான் பெரியவனான்னு இல்லையா நண்பர்களே

இவன் இறைவன்

இவன் தெருவிளக்கு

இப்போ சொல்லுங்க யாரு பெரியவன்?

October 23, 2009

ழ,ல

தொண்டர் :அண்ணே எங்க கிளம்பிட்டீங்க?

விஜயகாந்த் :நிலாவுக்கு போறேன் நான்

தொண்டர் :என்னண்ணே திடீர்ன்னு?

விஜயகாந்த் :ஆமா இங்க இருந்தா 2010லயோ இல்லை 2016லயோ கூட ஆட்சிய பிடிக்க முடியாது அதான் மனுசனுங்க நிலாவுல இடமெல்லாம் வாங்கிட்டானுங்க அவங்க அங்க குடி போறதுக்கு முன்னாடியே நான் அங்க போயிட்டேன்ன்னா பின்னாடி அங்கயும் கட்சி தேர்தல்ன்னு வரும் பொலுது நான் தான் இங்க ஆதியில இருந்து வால்ற திராவிடன்னு சொல்லிக்கிடலாம்ல அதான் இப்போவே துண்டு போடப்போறேன்..

தொண்டர் :என்னாது துண்டு போடப்போறீங்களா?

விஜயகாந்த் :இல்லப்பா இடம் வாங்கபோறேன்னு சொல்லவந்தேன்

தொண்டர் :இன்னும் யாருமே வீடு கட்டலியே நீங்க அங்க போயி என்ன பண்ணபோறீங்க?

விஜயகாந்த் :அட நீயென்னப்பா புரிஞ்சுகிட மாட்ற!எனக்கு என்ன ரெண்டு புள்ளைங்க பிறந்துருச்சு இனிமேல் அவங்க வால்க்கைய அவங்க பாத்துகிடுவாங்க நான் நிலாவுக்கு போயி அங்க முதல்ல ஒரு வீடு கட்டப்போறேன்

தொண்டர் :அப்பறம்?

விஜயகாந்த் :அப்பறம் அங்க இடம் வாங்குன மக்கள் சும்மாவா இருப்பாங்க வீடு கட்டி குடி வருவாங்க அப்பறம் அவங்க புள்ளைகள படிக்க வைக்க ஸ்கூல் காலேஜ் இதெல்லாம் வேணும்ல அது நான் கட்டப்போறேன்..

தொண்டர் :ஏண்ணே அங்க போயும் காலேஜு ஸ்கூலுன்னு கட்டிக்கிட்டு வேற எதுனாலும் பிஸினஸ் பண்ணாலாம்ல...

விஜயகாந்த் :என்னடா என்னைய லூசுன்னு நினைச்சயா அங்க போனதுக்கப்பறம் டிபார்மெண்ட் ஸ்டோர், அப்பறம் என்ன என்ன பிஸினெஸ் எல்லாம் பண்ணமுடியுமோ அதெல்லாம் பண்ணப்போறேன்....

தொண்டர் :சரி நீங்க மட்டும்தான் போறீங்க அங்க போயி வேலைக்கு ஆள், வாத்தியார்க்கு, என்ன பண்ணுவீங்க?

விஜயகாந்த் :அதுதான் ஒரே குழப்பமா இருக்கு மற்றமொழிக்கெல்லாம் எப்பிடியும் ஒருத்தன் கிடைச்சுடுவான் தமிலன் நான் மட்டும்தான் போறேன் அங்க உள்ளவங்க தமில் சொல்லிக்குடுங்கன்னு கேக்க மாட்டாங்க இருந்தாலும் தமிலில்லன்ன நம்ம எப்படி பொலைப்ப ஓட்டமுடியும்? அதனால நானே கொஞ்ச நாளைக்கு தமில் வாத்தியாரா இருக்கலாமுன்னு பாக்குறேன்...

தொண்டர் :நீங்களா தமிழ்வாத்தியாராவா? யாராவது நீங்க தெலுங்கு எப்படி தமிழ் சொல்லிக்குடுக்கலாமுன்னு கேட்டா என்ன பண்ணுவீங்க?

விஜயகாந்த் :பிறப்பால தெலுங்கா இருக்கலாம் ஆனா வளர்ந்தது தமில் நாட்டுல தெரியுமுல்ல..தமில்ல எத்தனை உயிர் எலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? இல்லை எத்தனை உயிர்மெய்யெலுத்து இருக்குன்னு சொல்லவா? தமில் என்னோட தாய் மொலியில்லாட்டினாலும் என்னை வலர்த்த மொலின்னு சொல்லுவேன்...என்ன தமில்ல எனக்கு பிடிக்காத ஒருவார்த்தை எல்லாருக்கும் தெரியும் ஆனா என் வாயிலயே வராத எலுத்து இந்த ல மட்டும்தாங்க..

தொண்டர் :அதான் உங்க வாய்ல வருதே அப்பறமென்ன?

விஜயகாந்த் :டேய் அது ல டா நான் சொல்றது ல

தொண்டர் :ரெண்டும் ஒண்ணுதாண்ணே..

விஜயகாந்த் :என்னைய கொலைகாரனாக்காத வேணாம் நான் அவங்க கிட்ட எலுதிக்காட்டிக்கிறேன்..

தொண்டர் :எப்பிடிண்ணே சரி அத விடுங்க அப்போ நீங்க ல சொல்லும்போதெல்லாம் அவங்க ழ ந்னு புரிஞ்சுப்பாங்களா?

விஜயகாந்த் :அறிவு ஆமாடா இவ்ளோ நாளா என்னைய தமில் மக்களும் தமிலகமும் புரிஞ்சுக்கிடலியா அதுமாதிர்தான் அவங்களும் புரிஞ்சுப்பாங்க நீ கூட சீக்கிரம் என்னையப்பத்தி புரிஞ்சுகிட்ட

தொண்டர் :நானும் அந்த தமிழன் தானே அப்போ வர்ற பொருளையெல்லாம் ன்னு உச்சரிக்கணும்ன்னு சொல்லுவீங்க இல்ல

விஜயகாந்த் :ஆமா

தொண்டர் :நீங்க தமில்,தமிலன்னு சொன்னா அவங்க தமிழ் தமிழன்னு சரியாப்புரிஞ்சுப்பாங்கல்ல,,

விஜயகாந்த் :ஆமா ஆமா

தொண்டர் :அப்போ நீங்க

பால்ன்னு சொன்னா

வால்ன்னு சொன்னா

அலகுன்னு சொன்னா

வலின்னு சொன்னா

தாலின்னு சொன்னா

கலகம்ன்னு சொன்னா

என்ன புரிஞ்சுப்பாங்கன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்..

விஜயகாந்த் :போடா நான் நிலாவுக்கும் போகலை வானத்துக்கும் போகலை...நான் தேசிய முற்போக்கு திராவிட கலகத்தை பாத்துட்டு இங்கயே இருந்துக்கிறேன்..

தொண்டர் : என்னாது கலகமா?

விஜயகாந்த் : டேய் உண்மையிலே இங்க கலகம் நடக்கப்போகுது ஓடிப்போயிடு...

தொண்டர் : !!!!!!

October 21, 2009

அவமானம்


தங்க கோபுரவாசலில்
வலுவாய் இருந்தும்...
திண்டாய் கல்லில் கிடைத்தவனின்
ஆளுமைக்குட்ப்பட்டு வாசலில் அநாதையாய்...

சிக்கியும் சிக்காமல் போகிறவனும்
ஊருக்கு ஒரு வேடமிட்டவனும்
ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் அடங்கியவனுக்கு
சிறைச்சாலையாய்...

கயமைக்கு பல முறை அடிபணிந்து
சல சல வென்று சில பல முறை மணியடித்து
விழுந்து கிடக்க வாயிலிருக்க

திங்களொருமுறை கூட்டியும் பெருக்கியும்
படைத்தழித்து காத்து
தூணில் துரும்பில் திரிந்தாலும்
சொந்தமாய் நான் மட்டும் யாசிக்க புசிக்க

கறுப்பு வெளுக்க
உ லோகமால்
ஈகைக்காய் சிறைவைத்த
ஈயென்று சிரித்தவனுக்கு
அடிமையாய் நான்


October 19, 2009

பிரதர்ஸ்

அண்ணா வணக்கம்ங்ணா

என்னையபத்தி சுயவிளம்பரம் செய்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..
முதல்ல நான் யாருன்னு நீங்க நல்லா தெரிஞ்சுக்கிடணும்ன்னுதான் இத சொல்லவர்றேன்,நாங்க சகோதரர்கள் அஞ்சுபேருங்க இதேமாதிரியே எங்க சித்தப்பன் குடும்பத்துலயும் அஞ்சு பேர் இருக்காய்ங்க , நாங்க அஞ்சுபேரும் ஒரேமாதிரியில்லீங்க ஒவ்வொருத்தனும் ஒருதினுசா திரியிறனுங்க பெரியாளு இருக்கானே போலீஸ்டேசனே கதின்னு கிடக்கறவன் எப்பபாரு இதுல ஒரு கேசு அதுல ஒரு கேசுன்னு மைய தடவிட்டே திரியுறவன் ஆமாங்க தெனாவட்டு ஜாஸ்திங்க அவனுக்கு எதுலனாலும் ஜெயிச்சுட்டா போதும்ங்க இவன் பண்ணுற அழும்பு தாங்காதுங்க ஆட்டிட்டே திரிவானுங்க..

அடுத்தவன் நாந்தானுங்க எனக்கு இருக்குற ஒரேகெட்ட பழக்கம் பல பேர காட்டிக்குடுக்குறது,,சில பேரோட வாழ்க்கைக்கு திசைகாட்டியாவும் இருந்துருக்கேனுங்க...பல முட்டாள்களை படிக்காதவனுங்கள பாவமா நினைச்சு டெல்லிக்கு அனுப்பிவச்சுருக்கேன் ஆனா அவிங்க என்னைய மதிக்குறதேயில்லீங்க சுகவாசியா ஏரோபிளேன்ல போறாய்ங்க வாரானுங்க ரொம்ப அழும்பு பண்றாய்ங்க..என்னோட கெட்ட நேரம் இப்போ எங்க ஜாதிதலைவருதான் அங்க ஆட்சி பண்றதுக்கு உதவிருக்காரு அதனால போனா போகட்டும் அப்பிடின்னு விட்டுட்டேன்...இப்போ கூட இதை முழுசும் படிச்சபின்னாடி எனக்கு நன்றி சொல்வீங்க பாருங்க..அதுதான் என்னோட ஸ்டைல்...வக்கனையாவும் பேசுவேனுங்க ...ரஜினிசாருக்கு கூட உதவியிருக்கேன்னா பாத்துக்கங்க என்னோட புகழை...

அடுத்தது இவரு எல்லாருக்கும் மத்தியஸ்தம் பண்றவருங்க எங்க அஞ்சுபேர்லயே ரொம்ப வளர்ந்தவரு இவருதான் இவரோட உயரத்துக்கு பயந்தே பலரு ஓடிப்போயிடுவாங்க நையாண்டிக்கு பேர் போனவருங்க நாந்தான்ற அகம்பாவம் இவருக்கு ரொம்ப ஜாஸ்தி..அதுவும் உண்மைதாங்க இவரு இல்லாட்டி நாங்க யாருமே எழுதபடிச்சுருக்க முடியாதுங்க..அதுமட்டுமில்லாம இவரு இல்லாட்டி ஒரு துரும்பகூட எங்களால அசைக்கமுடியாதுங்க அவ்வளவு வலிமை படைச்சவரு...

அடுத்தது எங்க அஞ்சுபேர்லயேவும் ரொம்ப வசதியானவரு இவருங்க அதனாலவோ என்னவோ எப்பவும் மிடுக்காவே திரிவாரு..நாங்க அஞ்சு பேர் எங்கயாவது சேர்ந்து போனா இவரு மட்டும் தனிச்சுதெரிவாரு அவ்வளவு சுயதம்பட்டம் பிடிச்சவரு இவரால யாருக்கும் புரயோசனமில்லீங்க வெத்துவேட்டு சரி கூடப்பொறந்தவனாச்சேன்னு விட்டுவச்சுருக்கோம் ..

அடுத்து கடைக்குட்டி இவரு எங்க வீட்ல செல்லம்ன்றதுனால இவரை எந்த வேலையும் செய்ய விடுறதில்லை,சில நேரம் எங்களுக்கெல்லாம் தெரியாம குகைக்கெல்லாம் போயிட்டு வருவாரு அவ்ளோ தைரியமானவரு , அதுமட்டுமில்லாம எங்க ஊர்ல ஒவ்வொரு ஜோடியையும் கல்யாணத்துல சேர்த்துவைக்கிற பெருமை இவரையே சாரும் ,இவரு இல்லாம எங்களால சோத்தை கூட பிசையமுடியாது ரொம்ப செல்லம்....


இவ்ளோ நேரம் எங்களைப்பத்தி பெருமையா சொன்ன வசந்துக்கு என்னைய வச்சே பின்னூட்டம் போடுங்க பார்ப்போம்...அப்பிடியே மூத்தவரையும் கொஞ்சம் கவனிச்சுட்டு போனீங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும்....

October 17, 2009

நண்பன்

"என்ன மச்சான் எப்பிடியிருக்க நீ திருந்தவே மாட்டியாடா ?"என்று சிதம்பரத்திடம் தர்மா கேட்டவாறே சிதம்பரத்தின் வாயிலிருக்கும் சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டான்.

"என்னடா பண்றது ஆசையா டிகிரி முடிச்சு 7 மாசமாச்சு இன்னும் வேலை கிடைச்சமாதிரியில்லை,உனக்கென்ன அப்பா சம்பாதிச்ச சொத்து வச்சு சொந்தமா தொழில் நடத்துற எனக்கு எங்கப்பாரு எனக்கு மூத்த அக்காமார்களை கட்டிக்குடுத்து கரை சேர்க்கவே ரொம்ப கஷ்டப்பட்டாரு இப்போவும் கஷ்டப்படுறாரு இதோட நானும் சம்பாதிச்ச பாடில்லை தெண்டச்சோறு தின்னுட்டுஊரைச்சுத்திட்டுஇருக்கேன்,கோயம்புத்தூரு,மதுரை,திருப்பூரு,மெட்ராஸ்ன்னு எல்லா ஊர்ல இருக்குற கம்பெனிகளுக்கும் அப்ளிக்கேசன் போட்டேன் ஒண்ணுக்கு கூட பதிலில்ல நான் என்னடா பண்றது" என்றவாறு விரக்தியாக தர்மாவிடம் ஏதாவது "உனக்கு தெரிஞ்ச கம்பெனி அட்ரெஸ் இருந்தா குடுடா தர்மா!"ன்னு சிதம்பரம் கேட்க்க..

அதற்க்கு "கொடுக்கிறேன்" என்றவாறே தர்மா தன் பாக்கெட் டயரியை எடுத்தவாறே " திருப்பூர்ல இருக்குற ஒரு பனியன் கம்பெனியில அக்கவுண்டண்ட் வேலை காலியா இருக்குன்னு என்னோட ஃப்ரண்ட் சொன்னான் நீ வேணும்னா ட்ரைப் பண்ணுடா நான் அவன்கிட்ட சொல்லிடுறேன் அவனும் அங்க சீனியர் அக்கவுண்டண்டாதான் இருக்கான்னு" சொல்லிகொண்டே தன் நண்பன் கணேஷின் செல்போன் நம்பர் கொடுத்து "அந்த நம்பருக்கு போன் பண்ணுடான்னு சொல்லிட்டு வாடா டீக்கடைக்கு போயி டீ சாப்ட்டுகிட்டே பேசலாம்ன்னு" டீக்கடைக்கு இருவரும் சென்றனர்.

பஸ்டாண்டு பின்னாடியிருக்குற நண்பர்கள் டீக்கடையில "அண்ணே ரெண்டு டீ என்று தர்மா டீக்கடைக்காரர்கிட்ட சொல்லிட்டு சிதம்பரத்திடம் அவன் அம்மா" அப்பா சின்ன தம்பியின் நலம் விசாரித்தான்.

"எல்லாம் நல்லாயிருக்காங்கடா அப்பறம் உன்வீட்டுல எல்லாரும் நலமா? உனக்கு எப்போடா திருமணம்"ன்னு சிதம்பரம், தர்மாகிட்ட கேட்க்க

"வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்கடா தெக்குத்தெரு கணேசன் புரோக்கர் போனவாரம் கூட ஒரு வரன் இருக்கு ஆனா அவங்க வீட்ல ரெண்டு பொண்ணுகளாம் ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில கல்யாணம் கட்டி வைக்கணும்ன்னு ஆசைப்படுறாங்களாம் நான் கூட முந்தாநாள் அந்த பொண்ணு நம்ம செட்டியார்கடைக்கு வரும்போது பார்த்தேன் நல்லா அழகாயிருக்காடா நானும் சரி அடுத்த பொண்ணுக்கு வரன் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்லியிருக்கேன்,அவரும் உனக்குதெரிஞ்ச பையன் இருந்தா சொல்லுன்னு சொல்லியிருக்கார் ,அதான் நம்ம கூட பத்தாப்பு வரைக்கும் படிச்சுட்டு மிலிட்டிரிக்கு போயிருக்கான்ல நம்ம அழகேசன் அவனப்பத்தி புரோக்கர்கிட்ட சொல்லியிருக்கேன் அவன்கிட்டயும் சொல்லியிருக்கேன் நீ என்னடா சொல்ற?"

"ம்ம் சரியான ஆளைத்தான் சொல்லியிருக்க அவனும் நல்ல வேலையிலத்தான் இருக்கான் நல்ல வசதியான குடும்பம் அப்பறமென்ன பேசி முடிச்சுட வேண்டியத்துதான"..ன்னு சிதம்பரம் தர்மாகிட்ட சொல்லிட்டு டீ குடித்த டம்ளரை டீக்கடை மேஜையில வ்ச்சுட்டு பணமெடுக்க பைய துலாவும்போதே தர்மா டீக்கு காசு கொடுத்துவிட்டுஇருந்தான்.

"சரிடா சிதம்பரம் எனக்கு பெரியகுளம் தென்கரையில இருக்குற கோனார்கடையில கொஞ்சம் சாமாஞ்செட்டு வாங்க வேண்டியிருக்கு போயிட்டு வர்றேன் சாயங்காலம் பாக்கலாம்டா நீ மறக்காம அந்த நம்பருக்கு போன் பண்ணி பேசுடா நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்"..என்றவாறே தர்மா பஜாஜ் எமெயிட்டியை உதைத்து கிளம்பினான்.

நண்பன் கொடுத்த போன்நம்பரையும் பெயரையும் குறித்து வைத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றான் சிதம்பரம்

அப்பாகிட்ட போன்பேச காசு வாங்கிட்டு பக்கத்துல இருக்குற எஸ்டிடீ பூத்துக்கு போயி நண்பன் குடுத்த நம்பரை டயல் செய்தான்..

"ட்ரிங் ட்ரிங்"..

"ஹலோ யாரு" (எதிர்முனையில்)

"ஹலோ நான் தர்மா ஃப்ரண்டுங்க அதாங்க புதுப்பட்டியில பலசரக்கு கடை வச்சுருக்காரே அவரோட ஃப்ரண்டுங்க.."

"ஓ நீங்கதானா அது?"

"ஆமாங்க.."

"தர்மா உங்களைப்பத்தி சொன்னார்"

"எங்கிட்டயும் உங்களைப்பத்தி சொன்னான் அதான் நான் உங்ககிட்ட விசாரிக்கலாமுன்னு போன் பண்ணேங்க.."

"கேளுங்க.."

"இடமெல்லாம் எப்பிடிங்க?"

"நல்ல இடம் தான் உங்களுக்கேத்த மாதிரியான இடம்தான்"

"எவ்ளோ தருவாங்க?"

"ஒரு பத்து தருவாங்க"

"போகப்போக.."

"போகப்போக நல்லா செய்வாங்க அதுக்கு நான் கியாரண்டி"

"எத்தனை பேரு இருப்பாங்க?"

"மொத்தமா ஒரு பத்து பதினைஞ்சு பேருதான்"

(சின்னக்கம்பெனியா இருக்குமோன்னு மனசுல நினைச்சுக்கிட்டே) "இவ்ளோதானா ?"

"ஆமா கிளை நிறைய இருக்கு எல்லாம் சேர்த்து ஒரு 80, 90 பேர் எப்போவாது ஃபங்சன்னா சந்திப்பாங்க.."

"சரி,தங்குற வசதியெல்லாம் எப்படி?"

"அதுவா அதுக்கென்னங்க நல்லா ஏஸி போட்ட ரூம் இருக்கு , நல்ல லெட்ரின் பாத்ரூம் வசதியெல்லாம் இருக்கு.."

"ம் சாப்பாடு வசதியெல்லாம்?"

"அட நீங்க என்னங்க வாட்ச்மேனுக்கே மூணுவேளை சாப்பாடு குடுக்குறாங்க உங்களுக்கு இல்லாமலா?"

"சரி அப்ப எப்போ வரணும்ன்னு சொல்லுங்க ?"

"வர்ற வெள்ளிக்கிழமை நாள் நல்லாயிருக்கு அன்னிக்கு வர்றீங்களா?"

"ம்ம் கொஞ்சம் அட்ரஸ் குடுக்க முடியுமா?"

"ம்ம் சொல்றேனே நம்பர் 367, "

"ம்"

"நேதாஜி தெரு"

"ம்"

"புதுப்பட்டி,பெரியகுளம்,தேனி மாவட்டம்."

"என்னது புதுப்பட்டியா,தேனி மாவட்டமா?"

"ஆமாங்க"

"திருப்பூர்லல வேலைன்னு சிதம்பரம் சொன்னான்"

"என்னது வேலையா?"

"ஆமாங்க நான் பிகாம் முடிச்சுருக்கேன் அதுக்கு திருப்பூர்ல என் ஃப்ரண்ட் கணேசன் இருக்கான் அவன் கிட்ட சொல்லி உனக்கு வேலை வாங்கித்தர்றேன்னு சொன்னான் நீங்க என்னடான்னா?"

"அட நான் புரோக்கர் கணேசன்பா தர்மா ஃப்ரண்டு ஒருத்தர் இருக்கார் அவர அவருக்கு பாத்துவச்சுருக்கிற பொண்ணோட தங்கைக்கு பேசி முடிக்கலாம் அவன் கிட்ட உங்க போன் நம்பர் குடுத்து பேச சொல்றேன்ல சொன்னார் நானும் சரி நீங்கதான் மாப்பிள்ளையா இருக்கும்ன்னு பொண்ணு வீட்டப்பத்தித்தான் கேக்குறீங்களோன்னு நினைச்சு பதில் சொல்லிட்டு இருந்தேன்.."

"அடப்பாவிகளா? வேலையே இல்லியாமா இதுல பொண்ணு ஒரு கேடா? சாரிங்க அவன் நம்பர் மாத்திக்குடுத்துட்டான் போல .."

"அய்யோ பாவம்.." எதிர் முனையில் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது

திருப்பூர் ஃப்ரண்ட் கணேசன் நம்பர் குடுப்பதற்க்கு பதிலாக புரோக்கர் கணேசனின் நம்பரை சிதம்பரத்திடம் கொடுத்துவிட்டிருந்தான் தர்மா...

வரட்டும் மவனே இன்னிக்கு வச்சுக்கிறேன்ன்னு தர்மாவோட வருகையை எதிர்பார்த்தவாறே குளத்தங்கரை மரத்தடி திண்ணையில் சிகரெட்டை ஊதியபடியே சிதம்பரம் வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான்...

டிஸ்கி:என்னோட சிறுகதை எழுதுவதற்க்கான பிராக்டிக்கல் எப்பிடியிருக்குன்னு நீங்கதான் சொல்லணும்,இந்த இடுகையை என்னுடைய 150 ஃபாலோவருக்கு சமர்ப்பிக்கிறேன் நன்றி....

October 14, 2009

நேற்றைக்கான இன்றைய விளக்கம்

நேற்றைய ஐலசாவின் விளக்கங்கள் தேவையில்லாதது என்றாலும் விளக்கமளிக்க வேண்டியது என் கடமை...இது என் பார்வையில் மட்டுமே அவரவர் பார்வைக்கு வேறாக தோன்றலாம் என விளக்கம் கூறிய கடல் புறா பாலா அவர்களுக்கு நன்றி....(என்னைக்கோ ஒரு நாளைக்குத்தான் நானே கவிதை மாதிரி ஒண்ணு எழுதுறேன் அதுவும் புரியாம போயிடக்கூடாதேன்ற ஆதங்கத்தில் எழுதிய இடுகை)


பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...

சாவியில்லை ஏலேலோ ஐலசா...






காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...




சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...




கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...




ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...




அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...




பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...




மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...

உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...

(மேல் உள்ள வரிகளுக்கு படங்கள் கிடைக்க வில்லை விளக்கம் இப்போ தேவையில்லைன்னு நினைக்கிறேன்)

உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...




கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...




மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...





பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...


இதுக்கப்புறமும் விடை சட்டைன்னு சொல்லித்தான் தெரியணுமா என்ன...நன்றி ...

October 13, 2009

ஏலேலோ ஐலசா...

ஏலேலோ ஐலசா ...ஏலேலோ ஐலசா...


பூட்டிருக்கு ஏலேலோ ஐலசா...
சாவியில்லை ஏலேலோ ஐலசா...

காலில்லை ஏலேலோ ஐலசா...
காலால வந்தது ஏலேலோ ஐலசா...

சில வானமாய் ஏலேலோ ஐலசா...
சில இரத்தமாய் ஏலேலோ ஐலசா...

கல்யாணமாகலை ஏலேலோ ஐலசா...
தோதான ஆளிருக்கு ஏலேலோ ஐலசா...

ஒரு பிறவிதான் ஏலேலோ ஐலசா...
அதிலே பல மறுபிறவியுண்டு ஏலேலோ ஐலசா...

அடிக்கு அடி வாங்குறதுண்டு ஏலேலோ ஐலசா...
அடித்தால் அழுவதில்லை ஏலேலோ ஐலசா...

பொத்தாம்பொதுவாய் ஆறு உண்டு ஏலேலோ ஐலசா...
உள்ளாற ஒண்ணுமில்லை ஏலேலோ ஐலசா...

மானமிருக்கு ஏலேலோ ஐலசா...
மனமில்லை ஏலேலோ ஐலசா...

உப்பிலனா நார்நாராய் ஏலேலோ ஐலசா...
உப்புறதில்லை ஏலேலோ ஐலசா...

உதவாத கையிருக்கு ஏலேலோ ஐலசா...
உதவுறதுக்கு வழியில்லை ஏலேலோ ஐலசா...

கர்வமிருக்கு ஏலேலோ ஐலசா...
ஆனா அது தலையிலில்லை ஏலேலோ ஐலசா...

மருத்துவம் பார்க்க ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...
மருந்துக்கும் ஜாதியிருக்கு ஏலேலோ ஐலசா...

பின் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...
முன் நவீனமிருக்கு ஏலேலோ ஐலசா...


விளக்கம் தர யார் வேண்டுமானாலும் அழைக்கப்படுகிறார்கள்

October 11, 2009

ம்ம்...ம்ஹூம்...

BLOGGER Proudly presents


பிளாக்கர் பெருமையுடன் வழங்கும்..



SRI TAMIL FILMS



திரு தமிழ் பிலிம்ஸ்



"ILAYA GHILLI" VASANTH in



"இளைய கில்லி" வசந்தின்...


ம்ம்....ம்ஹூம்...

திரைப்படத்தை காணவந்த கலைக்கண்களுக்கு நன்றி

"என்னங்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!"

"ம்ம்.."

"உங்க சொந்த ஊர் தேனியா?"

"ம்ஹூம்"

"அப்போ மதுரையா?"

"ம்ஹூம்"

"அடச்சே..பின்ன என்ன சொந்த ஊரே இல்லியா?"

"ம்ம்.."

"சாப்பிட்டீங்களா?"

"ம்ஹூம்..."

"அப்போ காபி ஷாப் போயி காபி சாப்பிட்டே பேசலாமா?"

"ம்ம்..."

"உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா?"

"ம்ஹூம்..."

"அப்பா..! நிம்மதி...!"

"ஹ..ஹ...ஹா..."

"சரி இந்த நட்ட நடு ஜாமத்தில யாருமில்லாத இடத்தில் யாருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? பஸ்க்காகவா?"

"ம்ஹூம்..."

"அப்போ காதலருக்காகவா?"

"ம்ஹூம்..."

"ஹைய்யா..."

"ஹ..ஹ..ஹா..."

"பின்னே யாருக்குத்தான் வெயிட் பண்றீங்க?"

"ங்ஙே..."

"ப்ளீஸ் சொல்லுங்க.."

"வவ்வவ்வவ்வே...!"

"ஏன் வாய் திறந்து பேச மாட்டேன்றீங்க ப்ளீஸ் சொல்லிடுங்க...."

"என் நண்பர்கள் இடும் பின்னூட்டத்துக்குக்காகத்தான் ஹ ஹ ஹா...."

பேசுனது யாருமில்லீங்க நானும் என் மனசும்தான் வவ்வவ்வவ்வே....!!!!

நன்றிகள் வாசித்த கலைக்கண்களுக்கு...



October 7, 2009

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ்...



சைக்கிள் , மோட்டார் சைக்கிள் , கார் இன்னும் நிறைய பொருள்கள் வாங்கும்போது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் வாங்கி அந்த பொருளெல்லாம் அழகுபடுத்துறோம் அது பலவிதத்துல யூஸ்ஃபுல்லா இருக்கு...

அதுமாதிரி மனிதனுக்கும் சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் தேவைப்படுது..

என்ன என்னன்னு பார்ப்போமா?

பொதுவா சிலர் அதிகமான ஒலியோட பேசுவாங்க சிலர் குறைவான ஒலியோட பேசுவாங்க அப்படி சிலர் அதிகமான சவுண்டோட பேசும்போது என்னடா இவன் ஜாஸ்தி சவுண்டா பேசுறானேன்னு சிலர் நினைப்பாங்க, அப்பறம் சிலர் ரொம்ப சவுண்ட் கம்மியா என்னை மாதிரி பேசுவாய்ங்க அது அவன் காதுக்கு கூட காக்காத அளவுக்கு அது மாதிரி பேசுறதால சரியான நேரத்துல நாம பேசுறது அடுத்தவங்களை ரீச் ஆகாது, அதனால என்ன சொல்ல வர்றேன்னா நம்ம குரல் வளைக்கிட்ட ஸ்பீக்கர் சவுண்ட் கண்ட்ரோல் பண்ற வால்யூம் கண்ட்ரொல்லர் மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கிடைச்சா எவ்ளோ நல்லாயிருக்கும். சிரிக்காதீங்கப்பா சீரியசாத்தான் சொல்றேன்..




அப்பறம் தூரப்பார்வை , கிட்டப்பார்வை உடையவங்களுக்கு சரியான அளவு மூக்குகண்ணாடி கிடைக்காம அவஸ்தைப்படுறத பாத்துருப்பீங்க அவங்களுக்கு எல்லாம் நம்ம கேமராவுல ஜூம் வியூ டியூனர் மாதிரி ஒரு டியூனர் இருந்தா தேவையான போது சின்ன எழுத்துக்களை பெரிசாக்கி படிச்சுக்கிடலாம் பெரிய எழுத்த சின்னதாக்கி படிச்சுக்கிடலாம், நல்லாருக்கும்ல...



அப்பறமா தலைக்கு குளிச்சுட்டு இல்லைனா குளிச்சுட்டு நம்ம உடம்புல இருக்குற தண்ணிய வெளியேத்துறதுக்கு துணியெல்லாம் கொடியில போட்டு வெயில்ல காய வைக்கிற மாதிரி நம்மளையும் கொடியில காய வைக்கிறதுக்கு ஒரு ஹூக் வேணும் அதாங்க ஹேங்கர் மாதிரி ஒரு ஹூக் நம்ம தலையோட இருக்கணும்......(அவ்வ்வ்வ்வ்...)




அப்பறம் எதுனா தேடும் போது நம்ம கை சில நேரம் எட்டுறது இல்லை உதாரணத்துக்கு பரண் மேல இருக்கும் பொருளை எடுக்கணும்னா ஸ்டூல் போட்டு ஏறி எடுக்க வேண்டியிருக்கு அதை தவிர்க்க ஒரு ஸ்பிரிங் நம்ம முழங்கையில பொருத்துனா எவ்ளோ நல்லாயிருக்கும்..வேற தப்பானதுக்கு பயன் படுத்தணும்னு நினைக்கப்படாது...முதுகு வளையாதவங்களுக்கு மிகவும் வசதியா இருக்கும்....



இன்னும் நிறைய தேவைப்படுது மக்கள் இப்போவே அடிக்க வர்றாய்ங்களே நான் எஸ்கேப்பு.... முதல்ல இதெல்லாம் சாத்யமான்னு மருத்துவத்துறைய சேர்ந்தவங்க சொல்லுங்கப்பா... நன்றிகள் வாசித்த அனைவருக்கும்.....

October 5, 2009

ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...



ஒரு பொண்ணு ஒண்ணு நான் பார்த்தேன்...அவளிடம் என் காதல் விண்ணப்பம் கொடுத்தேன்....(எனக்கு காதல் கடிதம் எழுத வருதான்னு பிராக்டிஸ் பண்ணினேன் இப்போ இல்லாட்டினாலும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமாவது பயன் படுமே) காதல் கவிதைதான் எழுத வரமாட்டேன்னுது கடிதமாவது எழுதலாமுன்னுதான்...




பெயர்

பிரியமானவன் (அப்போ நான் பிரியமில்லாதவளான்னு கேக்காதீங்க...)

வயது

உங்கள விட ரெண்டுவயசு எச்சா இருக்கலாம்...

உயரம்

நம்ம சத்யராஜ விட ரெண்டு இஞ்ச்தான் குறைவுன்றதுல சின்ன வருத்தம்...

நிறம்

காக்காவ விட கொஞ்சம் கலர் கம்மிதான்...

வசதி

உக்காரவச்சு சோறு போடுற அளவு இல்லாட்டினாலும் நிக்கவச்சு சோறு போடுவேன் (அதாங்க இன்ஸ்டண்ட் ஃபுட் வாங்கித்தருவேன்னு சொல்லவந்தேன்) உங்களுக்கு மொபைலும் சிம் கார்டும் வாங்கி கொடுக்கும் வசதியும், வாரம் ஒரு சினிமாவுக்கு கூட்டிட்டு போற வசதியும் ,தினமும் ஒரு சுடிதார் வாங்கித்தர வசதியும், இந்த லெட்டர் குடுத்தபின் நீங்க போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணி ஈவ் டீசிங்ல ஜெயில்ல போட்டா ஜாமீன்ல வர்ற வசதியும் இருக்கு.எப்படி வசதி?

பொழுது போக்கு

சைட்டே விதின்னு கிடக்குறது,(சைட்டுனா அந்த சைட்டு இல்லப்பா வேலை செய்ற இடம்),ரூமுக்கு வந்தா இது மாதிரி வித்யாசமா லெட்டரும், வெட்டியா ப்ளாக் எழுதுறதும்..என்னைக்கோ அசின் எனக்கு எழுதுன காதல் கடிதத்தை படிக்குறதும்....

வேலை

தொட்டா ஷாக் அடிக்குற உறவோடு உறவாடல் ,இப்போ கொஞ்ச நாளா உங்க வீட்டுல இருக்கும் செடிகளோடும் உறவாடல்...

படிப்பு

பட்டம் விட்டும் பழக்கமில்லை, வாங்கியும் பழக்கமில்லை....இந்த கடுதாசி எழுதுற அளவுக்காவது படிச்சுருக்கேன்னு சந்தோசப்படுங்க...

வீடு

தாயுண்டு தந்தையுண்டு மற்றோர் இல்லை.நீ வந்தால் உனக்கொரு இடமும் உண்டு இல்லத்தில் இல்லை இவர்களின் இதயத்தில்....

காதல் அனுபவம்

உண்டு ஒரு 17 வருஷத்துக்கு முன்னாடி கைகோர்த்து வீதியுலா போனதுண்டு அவளோடு....

கவிதை

சுட்டாலும் எழுத வராது(அப்போ சுடாம எழுத தெரியுமான்னு கேக்கக்கூடாது)
வாசிக்கப்பிடிக்கும்,சிலரோட கவிதைகளும் புரியாது சிலரோட வார்த்தைகளும் புரியாது(கிறுக்கனுக்கு எப்படி புரியும்?)

நீங்க என்னை ரிஜெக்ட் பண்ணிட்டா?

சிரிப்பேன்...வானமே இடிஞ்சு விழுகுற அளவுக்கு...அப்பறமென்ன மழை தான்....

எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்

ஹ ஹ ஹா...... இதோடு , கண்ணடிக்கும் வித்தையும் தெரியும்.சத்தமில்லாம திருக்குறள் வரிகளை படிப்பேன் :))))))

October 3, 2009

பாடி சாஸ்திரம்

தங்கள் உடம்பு பாகங்களை அதன் பலனுக்கு ஏற்றவாறு மாற்றி வைக்க அணுகவும் பாடி சாஸ்திர நிபுணர் கிகிகிகி கிறுக்கானந்தர்

அப்படின்ற போர்ட பாத்துட்டு என்னடா இது வித்யாசமா இருக்கு வீட்டுக்குத்தான் சாஸ்திரம் சொல்வாங்கன்னு கேள்விப்பட்டுருக்கோம் இதென்னடா புதுசா உடம்புக்கு சாஸ்திரம் சொல்றோம்ன்னு போட்ருக்கே உள்ள என்ன நடக்குதுன்னு பார்ப்போமுன்னு போயி பாத்தா..

ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ? (அதான் ராகுல் சொல்லிட்டாருல்ல) கிறுக்கானந்தாகிட்ட “சாமீ வர வர மண்டைவலி அதிகமாயிட்டே இருக்குன்னு இதை வரவிடாம பண்ண என்ன வழின்னு கேட்டார்” அதுக்கு கிறுக்கானந்தா சொல்றார் “உங்க தலை சரியான அளவுல இல்ல அதனால வீட்டு சாஸ்திரத்துல பெங்சுயி விநாயகர் படம் வைக்கிற மாதிரி தலையில எப்பவும் ஒற்றை பூசணி பூவச்சுருந்தா எல்லாம் சரியாப்போயிடும்” அப்பிடின்னு சொன்னதும் என்னால சிரிப்ப அடக்க முடியலை .(உண்மையிலே இந்த ரெண்டு நாளா ஒரு புண்ணியவதியால ஒரு நிமிஷம் கூட விடாம சிரிச்சுட்டே இருக்கேனுங்க எங்கிருந்தாலும் வாழ்க அந்த தேவதை)

அதுக்கப்பறமா ஒரு 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கிறுக்கானந்தாகிட்ட வந்து “என்னோட மண்டையில நிறைய பேன் தொல்லையிருக்கு எத்தனையோ சாம்பூ போட்டுட்டேன் பேன் தொல்லை குறைஞ்ச பாடில்லை இந்த பேன் தொல்லை குறைய ஒரு வழி சொல்லுங்கன்னார்” கவனமா கேட்டுட்டு இருந்த கிறுக்கானந்தா சொல்றார் “ உங்க தலை முடி பாடி சாஸ்திர விதிப்படி சரியான நீளத்துல இல்லை அதனால அதை ஒரு 5 இஞ்ச் வெட்டி பாருங்க எல்லாம் சரியாப்போயிடும்னாரு”பாருங்க நான் இதுவரைக்கும் அது மாதிரி சிரிச்சதேயில்லை...

அப்பறம் வந்த 45 வயது மதிக்க தகுந்த ஒரு மனிதர் கிறுக்கானந்தாகிட்ட கேக்குறார் “சாமி எவ்ளோதான் சம்பளம் வாங்குனாலும் கையில காசு தங்க மாட்டேன்னுது ரொம்ப கஷ்டமா இருக்கு அதை மாத்துறதுக்கு வழியிருக்கான்னு?” கேட்டார்,அதுக்கு பதில் சொன்ன கிறுக்கானந்தா “ உங்க கை இப்போ இருக்குற இடம் உங்க ராசிப்படி சரியான இடத்துல இல்லை அதனால் அந்த கைய ஒரு ஒரு அடி கீழ இறக்கி ஆப்ரேசன் பண்ணுனீங்கன்னா எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்” குபுக்குன்னு சிரிச்சுட்டேன்...

நான் சுவாரஸ்யமா அடுத்து வர்றவர் யாருன்னு பாத்துட்டு இருக்கும் போது ஒரு மூதாட்டி “வர வர காது சரியாவே கேக்க மாட்டேன்னுது இதுக்கு உங்க பாடி சாஸ்திர விதிப்படி எதுனா பலனிருந்தா சொல்லுங்க சாமீன்னு சொல்லிச்சு” இதை கேட்டதும் கிறுக்கானந்தா சொல்றார் “உங்க காதுல போட்ருக்க தண்டட்டியோட எடைய சரியா 250 கிராமுக்க்கு போடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்” :) இதையெல்லாம் எங்க போயி சொல்ல..?

அடுத்து வந்தவரு ஒரு ஒல்லிப்பிச்சான் இவரு “சாமீ எவ்ளோ சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகவே மாட்டேன்னுது இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கான்னார்” கிறுக்கானந்தா சிரிச்சுட்டே “நீங்க உங்க வயித்துல இருக்குற குடல் பாடி சாஸ்திர விதிப்படி சரியான மூலையில இல்லை அதனால அந்த குடலை அக்னி மூலைன்னு வீட்டு சாஸ்திரத்துல சொல்ற மாதிரி பசி மூலைன்னு இங்க சொல்வோம் அங்க ஆபரேசன் பண்ணி மாத்தி வச்சுடுங்க எல்லாம் சரியாப்போயிடும்ன்னார்”

எனக்கு கிறுக்கு பிடிச்சுடும் போல இருந்துச்சு (இனிமேல்தான் கிறுக்கு பிடிக்கணுமா அதான் ஏற்கனவே பிடிச்சாச்சேன்னு யாரோ ஒருத்தர் என்னைய கேக்குற மாதிரி இருக்கு) நான் அந்த இடத்த விட்டு ஓடி வந்துட்டேன்...