டேய் ரமேஷ் இதுமாதிரி தனித்தனியா ரைடு போறது எவ்வளவு சுகமாயிருக்கு?
ஆமாடா சுரேஷ் இரண்டு புறமும் மரங்கள் நம்ம கூடவே வருவதுமாதிரியிருக்கு..
நம்ம ரெண்டுபேரும் அச்சு பிசகாம ஒரேமாதிரி ஆளுக்கொரு நேர்கோட்டுல நிம்மதியா போயிட்டு இருக்கோம்..நமக்கு பின்னாடி வர்ற நம்ம ஃப்ரண்ட்ஸ் விஜயும் ராஜாவும் பார்த்தியா ஆளுக்கொரு ஜோடியா எவ்வளவு சந்தோசமா வர்றாங்கன்னு ...
ம் கொடுத்துவச்சவங்கடா...டேய் முன்னாடி பார்த்துப்போ பள்ளமும் மேடுமா இருக்கு..
இருக்கட்டுமேடா எல்லாம் நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துப்பான் யாரு யாருக்கு எப்ப எப்ப எது எதுக்குன்னு அவனுக்குத்தான் வெளிச்சம்
அதெப்பிடி இப்படி தத்துவமெல்லாம் பொழியுற?
அதுவா வருது மச்சி..
பின்னாடி வர்ற ஜோடி சந்தோசமா வந்தாலும் அவங்களுக்கும் நாமதானே வழிகாட்டியா கூட்டிட்டு போறோம் நாமதான் ஜாக்கிரதையா அவங்களை கூட்டிட்டு போகணும்..
ஆமா ஆமா கிரீச்ச்ச்ச்.......
டேய் நான் அப்பவே சொன்னேன் பாத்துப்போடான்னு சரியான நேரத்துல நின்னுட்ட பரவாயில்லை
எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா நீ வா நம்ம எப்பயும் போல போயிட்டே இருப்போம்...
டேய் சுரேஷ் ரமேஷ், இருந்தாலும் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கடா நாங்க ரெண்டு பேரும் ஜோடியா வர்றோம்ன்னு கூட தெரியாம எங்களையும் கவுக்க பாத்தீங்களேடா
டேய் அடங்குங்கடி மாப்ளைகளா எங்களுக்கு தெரியும் உங்களை பத்திரமா எப்படி கூட்டிட்டு போறதுன்னு..அதான் போற வழியில எல்லா இடத்திலயும் நமக்கு சிகிச்சை பண்ண ஆஸ்பிட்டல் இருக்குள்ள அப்புறமென்ன?
இருக்கும்டி இருக்கும்..ஏன் பேசமாட்ட நாங்க ஜோடியா வர்றோம்ன்னு உங்களுக்கு பொறாமைடா அதான் இப்படி பேசுறீங்க..
பின்ன இருக்காதா எல்லாரும் ஒரே இடத்துக்குத்தான் போறோம் நாங்க தனியா வர்றோம் நீங்க மட்டும் சோடியா வர்றீங்க...
அடேய் அடேய் கொஞ்சம் நினைச்சுப்பாருங்கடா நம்மளை நம்பி எத்தனை பேர் இருக்காங்க நம்மளை நம்பித்தானே அவங்களும் இருக்காங்க..
அதெல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா ஒழுக்கமா நாங்க போற வழியிலே வாங்க இல்லைன்னா நீங்க சோடி போட்டு வர்றீங்களே அப்புறம் ஆளுக்கொருபக்கம் திக்கு தெரியாம போய்டுவீங்க ஜாக்கிரதை..
ம்ம் அதான் நீங்க பண்ற சேட்டையெல்லாம் பொறுத்துகிட்டு வர்றோம்..
டேய் சுரேஷ் ஒரு நாய் வருதுடா நிப்பாட்டுடா நிப்பாட்டு...
வவ்வ் அவ் அவ் அவ்வ்.....
ஒரு உசிரை அநியாயமா கொன்னுட்டியேடா எவ்வளவோ சொல்லியும் கேக்கலியேடா நீ?..
நான் என்னடா பண்றது நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் அந்த நாய்க்கு நாள் குறிச்சுட்டான் அதான் போய் சேர்ந்துடுச்சு...
நீங்க இரண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களாடா?
மேல ஒருத்தன் விட்ட வழி நம்ம எல்லாரும் போயிட்டு இருக்கோம்..நம்மளை மாதிரியே நிறைய பேர் அவன் மேல பாரத்தை போட்டுட்டுத்தான் போயிட்டு இருக்காங்க..
அவனே போதை மயக்கத்தில இருக்கான் அவனப்பத்திப்பேசாத என்று விஜயும் ராஜாவும் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே சென்னை டூ மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர் கீழே இறங்கி வந்து 2நானும் அப்போல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்னடா மேல ஒருத்தன் பாத்துப்பான் மேல ஒருத்தன் பாத்துப்பான்னுட்டு ஒழுக்கமா பேசாம வாங்கடா இல்லைன்னா ஏதாவது ஒரு ஏரியிலயோ குளத்துலயோ உங்களையும் வண்டியையும் தள்ளி விட்டுடுவேன் ஜாக்கிரதை...அப்பிடின்னு ஓட்டுனர் சொல்ல முன் டயர்கள், ரமேஷ் சுரேஷ் பின் டயர்கள் விஜய்+1 ராஜா+1 ரைடர்ஸ் கப் சிப்...
(இது பத்தி எழுத நான் ஒண்ணும் ஓட்டுநர்,டயர் பத்தி எல்லாம் படிக்கலைங்க எல்லாமே கற்பனைதான் என்னடா இவன் தினமும் ஒண்ணுன்னு இடுகை போடுறானேன்னு எரிச்சலா இருக்கா கவலைப்படாதீங்க..எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்,எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்,இதுவரைக்கும் பெரிசா யாரையும் இம்ப்ரெஸ் பண்ணாததால இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..அதுக்கப்புறம் சந்தோசமா இருங்க அதுவரைக்கும் இதுமாதிரி அரைவேக்காட்டுத்தனமா எழுதுறதை பொறுத்துக்கங்க நண்பர்களே)