Showing posts with label யூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில். Show all posts
Showing posts with label யூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில். Show all posts

December 12, 2009

தொலைந்தது வேண்டும்..!



யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில் வந்தது பார்க்க இங்கு கிளிக்பண்ணுங்க



தண்ணீரில்லாமல் முளைவிடும்




விதை வேண்டும்

கண்ணீரும் லிட்டர் கணக்கில்
கடைகளில் கிடைக்க வேண்டும்

பஞ்சு மிட்டாய் என்றால் என்னவென்று
தேட அகராதி வேண்டும்

கோவணம் அருங்காட்சியகத்திலாவது
இடம் பெற வேண்டும்

உட்கார்ந்து சாப்பிடவாவது
ஒரு அடி இடம் வேண்டும்...

ழ ல ள இருக்கும் தமிழ்
பாடல் கேட்க வேண்டும்..

சி ஓ2 இல்லாத காற்று
சுவாசிக்க வேண்டும்..

தாய்ப்பால் டப்பாவிலாவது
கிடைக்க வேண்டும்...

பருத்தி நூலில் செய்த
சட்டை வேண்டும்...

இவற்றையெல்லாம் பற்றி
நினைக்கநேரமும் வேண்டும்

இவண்
முருக்ஸ் (முருகன்)
எழுதியது 1-2-2050