December 12, 2009

தொலைந்தது வேண்டும்..!



யூத்ஃபுல் விகடனின் டிசம்பர் மின்னிதழில் வந்தது பார்க்க இங்கு கிளிக்பண்ணுங்க



தண்ணீரில்லாமல் முளைவிடும்




விதை வேண்டும்

கண்ணீரும் லிட்டர் கணக்கில்
கடைகளில் கிடைக்க வேண்டும்

பஞ்சு மிட்டாய் என்றால் என்னவென்று
தேட அகராதி வேண்டும்

கோவணம் அருங்காட்சியகத்திலாவது
இடம் பெற வேண்டும்

உட்கார்ந்து சாப்பிடவாவது
ஒரு அடி இடம் வேண்டும்...

ழ ல ள இருக்கும் தமிழ்
பாடல் கேட்க வேண்டும்..

சி ஓ2 இல்லாத காற்று
சுவாசிக்க வேண்டும்..

தாய்ப்பால் டப்பாவிலாவது
கிடைக்க வேண்டும்...

பருத்தி நூலில் செய்த
சட்டை வேண்டும்...

இவற்றையெல்லாம் பற்றி
நினைக்கநேரமும் வேண்டும்

இவண்
முருக்ஸ் (முருகன்)
எழுதியது 1-2-2050














29 comments:

கலகலப்ரியா said...

மின்னிதழுக்கு வாழ்த்துகள்... ரொம்ப நல்லா வந்திருக்கு கவிதை..!

சீமான்கனி said...

முருக்ஸ்ச கொஞ்சம் ஓவராத்தான் முறுக்கி விட்ருகிங்க போல... எல்லாமே...ஹ..ஹ...ஹ...தான்..
பாவம்..முருக்ஸ்
வாழ்த்துகள்...வசந்த்..

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்கு வசந்த்.

ஈ ரா said...

--)

ஹேமா said...

இதுதான் சிந்தனை விரிசலோ !வாழ்த்துக்கள் வசந்து...!

ஆ.ஞானசேகரன் said...

மின்னிதழுக்கு வாழ்த்துகள்... நண்பா,.. கவிதை அருமையாக இருக்கு

Sakthi said...

சமூக நடைமுறையினை விளக்கும் அருமையான கவிதை...! எங்கள் பார்வைக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...!

balavasakan said...

ழ ல ள இருக்கும் தமிழ்
பாடல் கேட்க வேண்டும்..

பிடித்த வரிகள்..........

நட்புடன் ஜமால் said...

எதையும் வித்தியாசமாக செய்வதில் வசந்துக்கு ...


வாழ்த்துகள் தம்பி.

அன்புடன் மலிக்கா said...

சகோ. வித்தியாசமான சிந்தனை..

கலையரசன் said...

அந்த முறுக்கே நீதானடா செல்லம்....

ஜெட்லி... said...

//அந்த முறுக்கே நீதானடா செல்லம்....

//

repeatae

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் வசந்த் மின்னிதழில் வெளியானதற்கு.

வச்ந்த்னா வித்தியாசம்னு ஆனதுக்கப்புறம் வித்தியாசமா இல்லேன்னாதான் ஆச்சரியப்படனும்.

Chitra said...

ழ ல ள இருக்கும் தமிழ்
பாடல் கேட்க வேண்டும்..
.......அதுவும் விஜயகாந்த் பாடி...........
கலக்கல் கவிதை.

சிநேகிதன் அக்பர் said...

கவிதை நல்ல இருக்கு

வாழ்த்துக்கள் வ்சந்த்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருக்கு வசந்த்.

தமிழ் உதயம் said...

இது கவிதையல்ல... நிஜம்

சிங்கக்குட்டி said...

யூத்ஃபுல் விகடனில் மின்னியதற்கு வாழ்த்துகள்.

கவிதை நல்லா இருக்கு வசந்த்.

vasu balaji said...

கவிதை நல்லாருக்கு முருக்ஸ். மேலும் பல வர வாழ்த்துகள். :))

ராமலக்ஷ்மி said...

மின்னிதழுக்கு வாழ்த்துக்கள்.

முருக்ஸின் கவிதையும் அதற்கு வசந்தின் கமெண்டுஸும் அருமை:)!

அத்திரி said...

கவிதை நல்லாருக்கு

Prasanna said...

தல கவிதை சூப்பர்.. அதுக்கு உங்க கம்மேன்ட்ஸ் இன்னும் சூப்பர்..
உங்கள் கவிதைக்கு முந்தின பக்கத்துல என் கதை வந்துருக்கு.. டையம் கெடைக்கும்போது படிச்சு பாருங்க..

ஸ்ரீராம். said...

வித்யாசமா யோசிக்கறீங்க..

சுசி said...

அசத்தல் கமண்ட்ஸ் உ.பி

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதையும் சூப்பர். அதற்கு முறுக்கிக் கொடுத்த கருத்தும் சூப்பர்.
தாய்ப் பால் கடையில் வாங்கினாலும் வாங்கலாம். வசந்த் மூளை மாதிரி மூளை கடையில் வாங்கும் காலம் வருமா என்ன?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

கவிதையும் சூப்பர். அதற்கு முறுக்கிக் கொடுத்த கருத்தும் சூப்பர்.
தாய்ப் பால் கடையில் வாங்கினாலும் வாங்கலாம். வசந்த் மூளை மாதிரி மூளை கடையில் வாங்கும் காலம் வருமா என்ன?

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி கலகலபிரியா

நன்றி சீமான்கனி

நன்றி பூங்குன்றன்

நன்றி ஈ ரா

நன்றி ஹேம்ஸ்

நன்றி சேகர்

நன்றி சக்திவேல

நன்றி வாசு

நன்றி ஜமாலண்ணா

நன்றி மலிக்கா

நன்றி கலையரசன் :)))))

நன்றி ஜெட்லி

நன்றி நவாஸ்

நன்றி சித்ரா

நன்றி அக்பர்

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி தமிழுதயம்

நன்றி சிங்ககுட்டி

நன்றி பாலா சார்

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி அத்திரி

நன்றி பிரசன்னா

நன்றி ஸ்ரீராம்

நன்றி சுசிக்கா

நன்றி ஜெஸ்ஸம்மா :)))))

Anonymous said...

வாழ்த்துக்கள் வசந்த்...மீண்டும் ஒரு புதிய பரிமானம்

அன்புடன் அருணா said...

மின்னிதழுக்கு வாழ்த்துக்கள்+பூங்கொத்து!.