April 28, 2009

ஆத்தா நான் பாசாயிட்டேன்......

இது என்னோட ஐம்பதாவது பதிவு,,,,,,,
ஆனாலும் ஒரு நாலு அஞ்சு பதிவ தவிர மத்தது எல்லாம் சொதப்பல்....

பரவாயில்ல இதுல நான் தெரிஞ்சுக்கிட்டது என்னான்னா எத்தன பதிவு போடுறோம்ன்றது முக்கியமில்ல அதுல எத்தன நல்ல பதிவுன்றதுன்றது தான் முக்கியம்......

வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்கு உருப்படியா நம்ம முரு என்ன

http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_4483.html

வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்

இங்க எனக்கு நிறைய வழிகாட்டிகள் கிடைத்துள்ளனர்
ராகவன்.....கார்த்திகை பாண்டியன் போன்றோர்......

இனிமேல் உருப்படியா ஏதுனாலும் பதிவு போடுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இதுவரையிலும் ஆதரவளித்த நண்பர்களுக்கும் ஆதரவளிக்க போகும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.....

சர வெடியான பதிவுகள் இன்றுமுதல்......

ப்ரியமுடன் வசந்த்

அப்பிடியே யாராவது தமிழ்மணத்துல என்னோட பதிவு வருவதற்க்கு உதவவும்........

April 27, 2009

24 காரட் தங்கம் எது?







இது 24 காரட்



இது தங்கம்

சில கார்க்கித்தனமான சிந்தனை
அண்ணன் கார்க்கி வாழ்க.......



மீண்டும் கடி ஜோக்ஸ் இந்தவாட்டி ஏழு கடிகள்

அது என்ன கோல்ட் சாம்பார்
இந்த சாம்பார்ல 24 காரட் போட்டுருக்கு அதான்

ஒரு பையன் கையிலே ஸ்கேலோட சாப்புடுறான் ஏன்?
ஏன்னா அவன் அளவோட சாப்புடுறானாம்.....

உட்க்கார முடியாத தரை எது?
புளியோ`தரை`

உங்களுக்கு சொந்த ஊர் எது?
அந்த அளவுக்கு எனக்கு வசதியில்லீங்க சொந்த வீடு தான் இருக்கு..

திரும்ப திரும்ப என் வீட்டுல திருட்டு போகுது சார்
அப்போ திரும்பாதீங்க....

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?
டிராபிக் ஜாம் ஆயிடும்

மாப்பிள்ளை நல்ல பசையுள்ள கை
ஏன் என்ன பண்ணுறார்
போஸ்டர் ஒட்டுறார்


சில மறக்க முடியாத மீசைகள்










April 24, 2009

பேருந்தின் புலம்பல்கள்

பேருந்து எனும் நான் எழுதும் எனது வாழ்க்கை

பொதுவாக நான் உந்துவண்டிகளின் பெரியவன் என்பதால் பேருந்து என அனைவராலும் அழைக்கப்படுகிறேன்.

என்னில் மனித வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பென்சன் வாங்கும் பெரியோர் வரை என்னால் பயனடைகின்றனர்

என்னை வைத்து பெரிய பணக்காரர்கள் ஆன் முதலாளிகள் பலர்

என்னால் பயன் பெறும் முதல் தர பயனாளர்கள்...

என்னுடைய முதலாளி,ஓட்டுனர், நடத்துனர் , கிளீனர் , மெக்கானிக் , போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், பேருந்து நிறுத்தங்களில் உள்ள சிறு வியாபாரிகள் ,பேருந்து பயண சீட்டு தயாரிப்போர் , பேருந்து சுமை ஏற்றுவோர் இறக்குவோர்கள் ,பேருந்து நிறுத்த மூன்று சக்கர வாகன ஓட்டுனர்கள் , பேருந்து ஓட்டுனர் பயிற்ச்சியாளர்கள், பேருந்து தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் , பேருந்து அடையாள எண் தயாரிப்போர் , பேருந்து நிறுத்தங்கள் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் ,டீசல் பல்க் உரிமையாளர்கள் மேலும் பலர்.....
என்னால் பயன் பெறும் இரண்டாம் தர பயனாளர்கள்...

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,அலுவகம் செல்வோர் , வியாபாரிகள் , பயணிகள், தபால் நிலையங்கள். மற்றும் பலர்.....

மனித வாழ்க்கையின் பிறப்புகள் , இறப்புகள் சில என்னுள் நடப்பதுண்டு..பருவ வாழ்க்கையின் முதல் படியாக கருதப்படும் காதல் சிலருக்கு என்று சொல்லுவதை விட பலருக்கு ஏற்படுவது என்னுள் தான் .... இதை நான் கவுரவமாக கருதுவதுண்டு,என்னுள் அவ்வப்போது சில நல்ல மனிதாபிமான நிகழ்வுகள் ஏற்படுவதை காணலாம் நின்று கொண்டுவரும் முதியோருக்கு , கர்ப்பிணிகளுக்கு அமருவதுக்கு சில இளைய பயணிகள் இடம் தருவதை, நின்று கொண்டிருக்கும் பெண்ணின் கையில் இருக்கும் குழந்தைகளை வாங்கி தன் மடியில் வைத்து கொள்ளும் பயணிகள் , ஜன்னலோர சில இயலாதோர்க்கு உதவி புரியும் பயணிகள் ,ஊனமுற்ற பயணிகளை அழைத்து வந்து அமர வைக்கும் செயல்கள் இன்ன பிற நடப்பதுண்டு.தினமும் என்னில் பயணிக்கும் சிலர் அவர்களுக்குள் உறவாடி சொந்த பந்தங்கள் போல் பழகுவதும் உண்டு.சில கெட்ட நிகழ்வுகள் என்றால் மனிதர்களிலும் சில வக்கிரகாரர்கள்,திருடர்கள்...ஆகியோரால் என்னுள் பிரயாணிக்கும் பயணிகளுக்கு ஏற்படும் தீங்குகள் தான்..

அமைதியாக நான் சென்றுகொண்டிருக்கும் போது சில அபாயமான விபத்துகளும் நடப்பதுண்டு இதற்க்கு முக்கிய காரணமாக என்னை இயக்கும் ஓட்டுனர்களின் கவனக்குறைவு , சில இயற்க்கை சீற்றங்கள்,எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கவனக்குறைவுகள்,சரியான சாலை பராமரிப்பு இல்லாமையே...ஒரு சில சந்தர்ப்பங்களில் என்னுடய தாங்கும் சக்திக்கு மீறி என்னுள் பிரயாணிக்கும் பயணிகளாலும்.


அரசியல்வாதிகள் மட்டுமே திட்டம் தீட்டி என்னை தாக்குவது,எரிப்பதும் உண்டு. ஆனால் அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ஏனடா மனிதர்களுக்குள் இத்துனை தீய எண்ணங்கள்
உனக்கு நான் என்ன தீமை புரிந்தேன் உனக்கு சுற்றுலா,கல்யாண பயணம்,மற்றும் பல வகைகளில் உதவி புரிகிறேன் ஏன் என்னை பாடாய் படுத்துகிறாய்..

என்னுடய வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாததாக சில மாணவிகளை வைத்து என்னை எரித்ததும் சில பள்ளிக்குழந்தைகள் விபத்தினாலும் மரணமடைந்ததுதான்...

இறுதியாக நான் சொல்லுவது ஒன்றே ஒன்றுதான் உன்னால் பலருக்கு உபயோகமாக இல்லாவிடினும் உபயோகமாக இருப்பவர்களை உபத்திரம் செய்யாதே..

என்னை கண்டுபிடித்தவர்

சர் கோல்ட்வர்த்தி 1830

எனக்கு பிடித்த ஹைக்கூ கவிதை

தகர டப்பாவுக்குள் தங்க சிலைகள்
மகளிர் பேருந்து

எனக்கு பிடித்த நடிகர்

திரு.ரஜினிகாந்த் (என்னால் உயர முடியாவிட்டாலும் தனது நடிப்பு திறமையால் உயர்ந்து என்னை மறக்காதவர்)

எனக்கு பிடித்த படம்

பார்த்தேன் ரசித்தேன்(என்னால் உருவாகும் காதலை காட்டியதால்)

எனக்கு பிடித்த பாடல்

என் கண்மணி என் காதலி படம் சிட்டுக்குருவி (பாடல் முழுவதும் என்னை பயன்படுதியதால்)
( நன்றி மனு நீதி அவர்களே )
எனக்கு பிடித்த இடம்

பஸ் நிலையம் (என்னுடய சகாக்களை காண முடிவதால்)


எனக்கு பிடித்த இணைய தளம்


www.bus-history.org

பிடித்த பேருந்து வாசகம்

படியில் பயணம் நொடியில் மரணம்

பிடித்த கவிஞர்

திருவள்ளுவர்(எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்)

பிடித்த அரசியல்வாதி

திரு,கலைஞர்(எனக்கு வைத்திருந்த ஜாதி தலைவர்கள் பெயர் எல்லாம் எடுத்ததுக்காக)

பிடித்த உணவு

டீசல்

பிடிக்காதவர்கள்

மறியல் பண்ணுவோர்,என் மேல எச்சில் துப்புவோர் ,கண்ணாடியை உடைப்போர்....டிசல்ல மண்ணெண்ணெய் கலப்போர்......

April 22, 2009

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க....

ஆசை தோச அப்பள வடை



நல்லாயிருக்கில்ல....



புத்தக மனிதன்



பாவம்டா




ரொம்பத்தான் யோசிக்கிறாய்ங்க...







உங்களுக்கு பேனா சொருகுறதுக்கு வேற இடமே கிடைக்கலியா