April 25, 2011

காதல் கொஞ்சம்...காமம் கொஞ்சம்...!

அறையெங்கும் சந்தனமணத்தை பரப்பிக்கொண்டிருந்தது அந்த சாண்டல் அகர்பத்தி சந்தன வாசத்தை நுகர்ந்தவாறே மெத்தையில் உட்கார்ந்திருந்த என்னிடம் ''சுளுக்கெடுத்துவிடறேன் கொஞ்சம் காலை நீட்டுங்க'' என்று சொல்லியவாறு என்னுடைய காலை எடுத்து அவளின் மடியில் வைத்து ஒவ்வொரு விரலையும் முன்னும் பின்னும் இழுத்து இழுத்து பார்த்து சுளுக்கு எதுவும் இல்லையென்றதும் , ''என்னங்க சுளுக்கே விழ மாட்டேன்னுது'' என்றவளிடம் ''நீதான் நேற்றே சுளுக்கெடுத்துவிட்டாயே இன்றைக்கு எப்படி இருக்கும்'' என்றேன் நமுட்டு சிரிப்புடன் , அதற்கு அவள் களுக்கென்று சிரித்துக்கொண்டே தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள், வெட்கமாம்.

தலையணையில் முகம் புதைத்தவளிடம் அட ரொம்பத்தான் வெட்கப்படுகிறாய் நீ, சென்ற மாதம் நீ ஊருக்கு போயிருந்த நேரத்தில் உன் தலையணை என்னிடம் நிறைய முத்தங்களை வாங்கி வைத்திருக்கிறது இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அந்த முத்தத்தையெல்லாம் உனக்கு மாற்றிவிடும் பரவாயில்லையா என்றதும் ச்சீய் தலையணைக்கு போய் யாராவது முத்தம் கொடுப்பார்களா என்று கண்களை அகலவிரித்து தலையணையை நோக்கி உன்னை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என்கிற மாதிரி ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தவள் முத்தமழை பொழிந்துவிட்டாள், கேட்டால் கட்டணமில்லா முத்த ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டது தலையணை என்கிறாள். ஆஹா தலையணை மந்திரம் வேலை செய்கிறதே என்று நினைத்துக்கொண்டேன் மனதிற்குள். 

ஆமாங்க இந்த தலையணை மந்திரம் தலையணை மந்திரம் என்று சொல்கிறார்களே அது என்ன மந்திரம் என்று குப்புற படுத்திருந்த என் முதுகில் முட்டை முட்டையாக கை விரல்களால் கோலமிட்டுக் கொண்டே வினவியளை ஆச்சரியமுடன் பார்த்தேன் நாம் மனதிற்குள் நினைத்தது இவளுக்கு கேட்டுவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே அதுவா செல்லம் அதற்கு நீ என்னிடம் என்ன செய்கிறாயோ அதற்கு எதிர்பதமாக நான் உன்னிடம் செய்வேன் அதுதான் என்றதும் . என்னவோ புரிந்திருக்க வேண்டும் சட்டென்று விரல்களால் கோலமிடுவதை நிறுத்தி கோவத்துடன் என் இரண்டு கன்னங்களிலும் தன் ஐந்து கைவிரல்களும் பதியுமாறு ஓங்கி பளாரென்று அடித்துவிட்டு ஆளும் மூஞ்சியும் பாரு என்றவளின் கன்னங்களில் பதிலுக்கு முத்தமிட ஆரம்பித்தேன்.இப்பொழுது அவளுக்கு புரிந்துவிட்டிருந்தது முதலில் சொன்னது போலி தலையணை மந்திரமென்று.

அப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது காலையில் நான் படுத்திருந்த பொசிசனை பார்த்தவள் சிரித்துக்கொண்டே ''கால் நீட்டி தூங்கும் காண்டா மிருகம் அடடடே ஆச்சரியக்குறி'' என்று நக்கலடித்த படியே காபி சாப்பிடுங்க ஆறிடப்போவுது என்று காபியை கொண்டுவந்து டீஃபாய் மீது வைத்துச்சென்றாள். நான்தான் நக்கல் பிடித்தவன் என்றால் இவள் நக்கலை குத்தகைக்கே எடுத்திருப்பாள் போல இன்னைக்கு இரவு இருக்கிறதடி உனக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே  அவள் குடுத்த காபியை குடித்துவிட்டு வழக்கம்போலே அன்றைய இரவு டின்னருக்கான மெனுவை ஸ்டிக்லேபிளில் எழுதி டீ கப்பின் அடியில் ஒட்டிவிட்டேன்.

அன்றைக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலையால் சோர்ந்து போய் வீடு திரும்பினேன். வீடு திறந்துதான் இருந்தது கவி , கவி என்றழைத்தபடியே வீடு முழுவதும் தேடினேன் ஆளையே காணோம் என்னை வெறுப்பேற்றுவதற்காக எங்கேயாவது ஒளிந்திருந்து  விளையாட்டு காட்டுவாளாக்கும் என்று நினைத்தபடிஉடை மாற்றிவிட்டு பெட்ரூமிற்குள் நுழைந்ததும், நான் நினைத்தபடியே உள்ளே ஒளிந்திருந்த அவள் சட்டென்று கதவை சாத்திவிட்டு என்னை கட்டிப்பிடித்து முகம் நிறைய முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுக்க வெட்கப்படுபவள் இப்படி முத்தமழை பொழிவது  ஆச்சரியமாய் இருந்தது.   இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு என்றேன்? நீங்க இன்னிக்கு டின்னர்க்கு என்ன எழுதியிருந்தீங்க என்று கேட்டதும்தான் காலையில் அவளுக்கு விளையாட்டாய் மெனுவில் ''முத்த தோசை'' என்று  எழுதிக்கொடுத்தது ஞாபகத்தில் வந்தது , அலுவலகத்தில் நடந்த அதிகப்படியான வேலை அழுத்தத்தில்  காலையில் அவளுக்கு எழுதிக்கொடுத்திருந்த மெனுவையும் மறந்திருந்தேன் நான். அவள் கொடுத்த டின்னரான முத்த தோசை முகத்தையும் மனத்தையும் நிறைத்தது.பதிலுக்கு காம டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்திருந்தேன் நான்.



April 18, 2011

முத்தப்பால் - முத்தக்குறள்கள் (U/A)


முத்தப்பால் 




முத்தம் முதல இன்ப மெல்லாம் காதலி
பகவன் முதற்றே உலகு

முத்தமிட சத்தமின்றி முத்தமிட்ட பின்
பெறுக அதற்கு தக

முத்தப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
காமன் அடிசேரா தார்

காதலித்த பொழுதின் பெரிதுவக்கும் தன்முத்தத்தை
முதல்முத்தம் எனக்கேட்ட காதலி,

முத்தம் உயிருக்குள் உய்க்கும் முத்தமிடாமை
உயிரையும் எடுத்து விடும்

யாகாவா ராயினும் இதழ்காக்க காவாக்கல்
சோகப்பர் கற்பிழுக்குப் பட்டு

முத்ததோடு ஒத்த கூடல் பலகற்றும்
கல்லார் அதிர்ஷ்டமிலா தார்

முத்தம் எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
துன்பம் இலாத இன்பம்

எல்லா முத்தமும் முத்தமல்ல காதலர்க்கு
இதழ் முத்தமே முத்தம்

தொட்டணைத் தூறும் முத்தம் மாந்தர்க்கு
உணர்ச்சியை தூறும் காமம்

முத்தத்துள் முத்தம் இதழ்முத்தம் அம்முத்தம்
முத்ததிற்க் கெல்லாம் தலை

இதழுக்கு முத்தமில்லாத பொழுது சிறிது
கன்னத்திற்கும் ஈயப் படும்

எம்முத்தம் யார்யார்வாய் கொடுப்பினும் அம்முத்தம்
மெய்முத்தம் காண்ப தறிவு

உடலால் ஆகாதெனினும் முத்தம் தன்
மெய்வருத்த உணர்ச்சி தரும் 



- முத்தள்ளுவர்




,

April 16, 2011

ரொமான்டிக் ஆண் குரல்கள் !!!

ரொமாண்டிக் குரல்கள் பதிவில் பெண்களின் குரலில் வந்த பாடல்களை பார்த்தோம் இப்பொழுது ஆண்கள் குரலில் மனதை மயக்கும் குரல்கள் இதோ !!

பி பி ஸ்ரீநிவாஸ் அறிமுகமே தேவையில்லாத பிரம்மாண்டமான பாடகர் குரலில் மயக்கமருந்தை கலந்திருப்பார் போலும் முதன் முதலாக அப்பா ஒரு நாள் நான் கவலையா இருக்குறப்போ ஒரு பாட்டு பாடி காமித்தார் அப்பாவோட குரல்லயே அழகா இருந்துச்சு பிறகு ஆடியோ செண்டர் போய் பிபி ஸ்ரீநிவாஸ் ஹிட்ஸ் கேட்டு வாங்கி போட்டு கேட்டுப்பார்த்தேன் மயங்கிவிட்டேன் ஒவ்வொரு பாடலிலும் அசத்தியிருந்தார் ம்ம் சோலாவாக பாடியதில் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் மிகப்பிடிக்கும் !!

பாவமன்னிப்பு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில்

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை"

இறுதியில் அவள் கவிஞனாக்கினாள் என்னை என்று முடிக்கும்போது இன்னும் இந்தப்பாட்டு தொடராதா என்று ஏங்க வைக்கிறது..இங்கே சென்று கேட்டுப்பாருங்கள் .. திரும்பி வந்தால் மீதியிருக்கும் தொகுப்பையும் ரசியுங்கள் :)

டூயட்டிலும் மனிதர் அழகான பாடல்கள் பாடியிருக்கிறார் பி சுசிலா மேடமோட சேர்ந்து இவர் பாடிய டூயட் போகப்போகத்தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் மிகப்பிடிக்கும் முத்துராமன் சாரும் கேஆர் விஜயா மேடமும் ஸ்ரீனிவாஸ் பி சுசிலா அவர்களின் குரலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் Dangerous Pairs .

சர்வர் சுந்தரம் திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"போக போகத்தெரியும் 
இந்தப்பூவின் வாசம் புரியும்


கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன "

கேளுங்கள் இங்கே ...

அடுத்ததாக டி எம் சவுந்தர்ராஜன் அவர்கள்

இவர் இல்லையென்றால் எம்ஜிஆரும் சிவாஜியும் இல்லை என்று கூட ஒரு பேச்சிருக்கிறது அவ்வளவு தத்ரூபமாக இருவருக்கும் பொருந்திப்போன குரல் இவருடையது எம்ஜிஆருக்கு இவர் பாடிய சோலோ பாடலில் கண் போன போக்கிலே கால் போகலாமா? என்ற பாடல் பிடிக்கும்

பணம் படைத்தவன் திரைப்படத்தில்
கவிஞர் வாலியின் வரிகளில்’

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல் கேட்டுப்பாருங்கள் இங்கே ..

இவர் நடிகர் திலகத்துக்கு டூயட்டாக பாடியதில் பூ மாலையில் ஓர் மல்லிகை என்ற பாடல் ஆரம்பமே ஹ ஹ ஹ ஹ ஆ ன்னு ஆரம்பித்து இனிமையாக இருக்கும் கேட்பதற்கு

ஊட்டி வரை உறவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில்

"பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது"

கேட்டு நீங்களும் மயங்குங்கள் இங்கே  இருக்கிறது 

A M ராஜா அவர்களின் குரல் கேட்டிருக்கிறீர்களா காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் இவரின் குரலில் வந்த பாடல்கள். அதில் எனக்கு பிடித்த சோலோ பாடல் 

தேன் நிலவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்

"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா
பால் நிலாவை போலே வந்த பாவையல்லவா?"

கேளுங்க கேளுங்க இங்கே 

AM ராஜா அவர்கள் சுசிலாம்மாவுடன் பாடிய டூயட் சாங்கில் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் என்ற பாடல் என்னை ஏதோ ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சுகமான காற்று தீண்டிச்செல்லுவது போல் இருக்கும் அது எந்த மனநிலையாக இருந்தாலும் சரி ..

பெற்ற மகனை விற்ற அன்னை திரைப்படத்தில்
கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் வ்ஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில்

"தென்றல் உறங்கியபோதும் 
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?"

தழுவட்டும் தென்றல் உங்கள் காதுமடல்களை இங்கே

நடிகரும் பாடகருமான டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் கேட்டிருக்கிறீர்களா? கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போன்றிருக்கும் இவர் பாடிய சோலோ சாங்கில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை மிக மிகப்பிடிக்கும் கோவில்களில் இந்தப்பாடல் கேட்டால் அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வேன் ஒரு வித வாயில் வெற்றிலை போட்டபடியே பாடுவது போன்று இருந்தாலும் ரசிக்க முடிகிறது இவரது குரலை..

திருவிளையாடல் திரைப்படத்தில்
கே வி மகாதேவன் அவர்களின் இசையில்

"இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெருஞ்சோதனை"

மனம் பக்தி பரவச நிலையடையட்டும் இங்கே 

டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய இன்னொரு மனதை மயக்கும் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் கிளாசிக் ஹிட் ரொம்பவே விரும்பி கேட்பதுண்டு இசையோடு ஒன்றிப்போய்விடுவீர்கள் !!!

மாலையிட்ட மங்கை திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையில்

"செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதுசாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ ?" ( ப்ச் சான்சே இல்ல கண்ணதாசரே )

சோழவந்தான் காரரின் குரல் கேளுங்க இங்கே 

சி எஸ் ஜெயராமன் எங்கப்பாகிட்ட இருந்து அறிமுகமானவர் பராசக்தி திரைப்படத்தில் கா கா கா என்ற பாடலை பாடியவர்தான் அதே திரைப்படத்தில் தேசம் கல்வி ஞானம் என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்டுப்பார்துவிடுங்கள் சலனத்தை ஏற்படுத்தும் குரல் உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகள் உண்மைதான் சொல்கின்றன..

பராசக்தி திரைப்படத்தில்
ஆர் சுதர்சனம் அவர்கள் இசையில்
உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகளில்

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் 

காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி -குதம்பாய்
பை பையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும் 
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்"

கேட்டு உணர்ச்சி வசப்படுக இங்கே 

இவரின் இன்னொரு தெவிட்டாத பாடல் 

பாவை விளக்கு திரைப்படத்தில்
வரும் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்ற பாடல் இயல்பான நடிகர்திலகத்தின் நடிப்பில் சி எஸ் ஜெயராமன் அவர்கள் பாடிய எனக்கு மிகப்பிடித்த பாடல் 

"வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி 
என்னருகில் வந்தாள்
அழகை எல்லாம் அவள் முகத்தில் கண்டேன்"

கேட்டு ரசியுங்கள் இங்கே

இன்னும் ஒருவர் ஏ எல் ராகவன் அவர்கள் இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடலில் இருக்கும் சோகத்தையும் மீறி அனுபவிக்க முடிகிறது..

"வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க வாழ்க!!"

இங்கே சென்று கேட்டுப்பாருங்கள்

தற்கால மற்றும் இடைக்கால பாடகர்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி வணக்கம் :)


April 14, 2011

வர்ணங்கள் (சித்திரை - க)

வாழ்த்துகள்

என்னதான் தை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தாலும் நம் முன்னோர்கள் வழி வந்த மரபை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. உலகெங்கும் இருக்கும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சித்திரைத்திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



ஆலோசனை 

தமிழே எங்கள் மூச்சு என்று முழங்கிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் அவருக்கு அடியேனின் சிறு விண்ணப்பம் தமிழ்   மொழியில் உயிர் எழுத்துகள் , மெய்யெழுத்துகள் , உயிர்மெய்யெழுத்துகள் ஆயுத எழுத்து சேர்ந்து மொத்தம் 247 எழுத்துகள் இருக்கின்றன்.தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் 234 சட்டசபை தொகுதிகளையும் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப 247 சட்டசபை தொகுதிகளாக அதிகரிக்கும்படியும் அந்த ஒற்றை ஆயுத எழுத்திற்கான தொகுதியை திரு நங்கைகளுக்கான தொகுதியாக ஒதுக்கி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இது அடியேனின் சிறு விண்ணப்பம் சின்ன சின்ன ஆசை.ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்து மாற்று பெயராக இருந்தால்தான் என்ன?

தகவல்

மனித உறுப்புகளில் முதலில் உருவாவதும் இதயம்தான் இறுதியில் இயக்கத்தை நிறுத்துவதும் இதயம்தான்.!!!


தூய தமிழ்ச் சொற்கள் சில

Auto - தானி
Bakery - அடுமனை
Bulldozer - இடிவாரி
Token - கிள்ளாக்கு
Shampoo - சீயநெய்

வித்யாசங்களை கண்டுபிடியுங்கள்




குறும்படம்  

நண்பா :)))



ஒரு கவிதை

காதலியண்டர் மாதங்கள்

கண்வரி
ஹிப்வரி
மார்ச்
கூந்தல்
இமை
கை
கால்
மூக்கஸ்ட்
இதழம்பர்
நெக்டோபர்
புருவம்பர்

ஃபேஸம்பர்

சிரிக்கப்படாது சிரிச்சா இன்னும் இது மாதிரி கவிதை நிறைய வரும் ஜாக்ரத..! :)))

April 2, 2011

விஜயகாந்தின் POOR PERFORMANCE !!!

தொடர்ந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுபவமில்லா அரசியல் விளையாட்டு அவரை இந்த தேர்தலில் காணாமல் போய்விடச்செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.



விஜயகாந்த் மீது வடிவேல் தாக்குதல் :

முன் விரோதம் காரணமாக நடிகர் வடிவேலுவிடம் செய்த தகராறு தற்பொழுது அவரை விஜயகாந்துக்கு எதிராக தண்ணியில் மிதக்கும் கப்பல்ல இருப்பவர் பெயர்தான் கேப்டன் எப்பவும் தண்ணியில் மிதப்பவர் பெயர் கேப்டன் இல்லை என்பது மாதிரியான தரக்குறைவாக பேச வைத்திருக்கிறது. பொது இடத்தில் வடிவேலுவின் இந்த வார்த்தை தாக்குதல் தவறாக பட்டாலும் அவரது  இமேஜை சிறிது காலி செய்திருக்கிறது.பிரச்சார நேரத்தில் அவரது மனவலிமையை ஆரம்பத்திலேயே காலிசெய்வதற்கு தி.மு.க. தன் தந்திரத்தை சரியாக பயன் படுத்தியிருக்கிற பௌலர்தான் வடிவேலு.விக்கெட் விழுகவில்லை என்றாலும் பேட்ஸ்மேனின் உடல் மன வலிமையை காலி செய்திருக்கிறது.



கூட்டணிக்குள் ஒற்றுமையின்மை :

விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது அதிமுக தொண்டர்களுடன் கட்சிக்கொடி கட்டிய விவாகாரத்தில் எதிர்ப்புகாட்டியதில் இவரின் கூட்டணி ஓற்றுமை பல்லிளிக்கிறது. விக்கெட்டுகளுக்கிடையில் ஓடுவதில் விஜயகாந்தின் தவறான போக்கினால் அவரது விக்கெட்டை இழந்தார்.




வேட்பாளர் மீது தாக்குதல் :

தனது சொந்தக்கட்சியின் வேட்பாளரை பிரச்சாரத்தின்போது பொது இடத்தில் வைத்து தாக்கியிருப்பது விஜயகாந்த் மீது வடிவேலு சொன்ன கூற்று உண்மையென்பதுபோல் நிதானமிழந்து நடந்து கொண்டது அரசியலில் அவருக்கு ஒரு கட்சியின் தலைவராக இருக்க தகுதியில்லை என்பதை காட்டுகிறது. என் கட்சிகாரனை அப்படித்தான் அடிப்பேன் உதைப்பேன் என்று சவடால் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தன் தலை மீது தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்.



பிரச்சாரத்தின் போது உளறல் :

தேர்தல் பிரச்சாரத்தின் போது அண்ணாவின் ஆவி பேசியதாக உளறியிருப்பதும் , முன்னுக்குபின்னான தவறான தகவல்களை சொல்லுவது , கண்ணீர் விட்டு கதறுவது என இவரின் உளறலை மக்கள் நம்புவதாக தெரியவில்லை.இந்த தேர்தலில் விஜயகாந்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டி அவரை மூலையில் உட்கார வைப்பார்கள்.



விஜயகாந்த் அவர்களே உங்களைத்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் பொதுமக்களை தங்களின் தவறான நடத்தையினால் , செயல்களினால் அனுபவமற்ற அரசியல்தனத்தால் ஏமாற்றிவிட்டீர்கள். இனியாவாது திருந்துவீர்களா?