November 30, 2009

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம்...!



இரண்டடுக்கு கோப்பையாய்
கண்கள் பொங்கி வழிய
கனா காணும் இரவுகளில்.
மிதக்கும் பாய்மரக்கப்பலில்
துடிக்கும் மீனாய்
எண்ணங்கள் ஊசலாட
தொட்டுச்செல்லும் காற்றில்
மலரின் தேனுண்ட மயக்கத்தின்
வண்டாய் மனமது செல்ல...

வாசல் அற்ற வீட்டின்
கதவாய் நானும்
கூரையில்லா வீட்டின்
தரையாய் அவளும்
உருண்டோடும் பூமிப்பந்தில்
ஆளுக்கொரு திசையில்
சிதறி சிக்குண்டு அல்லல்பட்டு
ஆவியும் ஆசையுமற்ற
ஆடாமல் ஆடும் அலையாய்
ஆகிப்போனோம்...

கரை தொடாமல் பின்வாங்கி
பின் தொடராத பகலின் நிழலாய்
நிதர்சனம் பேசிய இரவுகள்
இறக்கையொடிந்த கிளியாய்
கூவிக்கொண்டிருக்கின்றன...
என்றும் எல்லையற்று
தாவல் கொண்ட மனம்
அன்றோ கூனிக்குறுகி
சுருங்கிப்போகிறது விரியத்
தெரிந்தும் விரியாமல்
வீசத்தெரிந்தும் வீசிச்செல்லாத
காற்றின் பிம்பமாய்...

கண்ணுக்கு புலப்படாத
அக்னியின் குளுமையின் பயனாய்
கானல் கொண்ட தரையின்
வெம்மை சுட்டுத்தெறிக்க
அச்சமில்லாமல் ஆசைதீர்த்து
அடங்கிப்போனது அடங்காத
மனப்பறவையின் காலடியில்
காதல் இரண்டுமாம்
ஒன்றுமாம் யாவுமாகி ...


- கவிஞர் வசந்த் ( ஹ ஹ ஹா)

(யூத்ஃபுல் விகடனில்)

November 28, 2009

உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்...


உடம்பெடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
 கால்கடுக்க கன்னியுன் 
 கால்தடமறிய ஏங்கி
 உன் பார்வை வழியினூடான
 கோடான கோடி அணுக்களினூடே
 தேவியாய் தரிசனம் கண்டேனுனை...
 பூவையரின் பூமனங்கண்டேன்
 பூத்ததை சூடாமல் ஏந்திகொள்கிறேனதை
 உன்னிடமிருந்து உன்னையறியாமல்
 பெற்றேனதை பேணித்திரிவதென்
 பொறுப்பன்றோ...
 விழைகிறாய் ஏனெதுக்கென்று
 மறுப்பேதும் சொல்லாமல்
 பெண்ணொருத்தியின் வரவறியா
 திரும்பிசெல்ல வழியற்ற 
 மனக்கூட்டின் ஒற்றை 
 விடிவிளக்காய் வருகிறாய்... 
 
 நிமிடங்கூட வீணாகாமல்
 ஊடலும் கூடலும் புரிந்தெனை
 மெய்மறக்கச்செய்து 
 இப்பூவுலக படைப்பின்
 மெய்யறிய செய்தாய்...
 புசிக்காத படையல்கள்
 காவலிருக்க நம்
 காதலிதினிதாய் நம்இல்லமே
 வெட்கப்புன்னகை சிந்துகிறது
 நாமதை சிதறாமல்  பிடித்து
 சேமிக்க அணிகலனற்று கிடக்கிறோம்
 வெட்கமற்று...
 சிணுங்கலிசை மீட்டெடுத்துனை
 நான் இசைபிரம்மாவாக
 நீ ஒலிபெருக்காத பெருக்கியாய்
 ஒலிக்கச்செய்ததையென் செவி
 மட்டும் கேட்க செய்கிறாயதனூடே
 சுவற்றின் பொறாமைக் குரலும்
 கேட்கிறதென் காதினில்...
 நான் உன் வாசம் நுகர்ந்து
 துயிலடைய செல்லும் வேளையில்
 மீண்டும் வாவென்று நீயழைக்க
 மறுக்க வழியற்றவனாய்
 நானுனை மீண்டும் மீட்டெடுத்தந்த
 ராகதாலாட்டிலே ஆழ்துயிலடைந்தேன்
 துகிலற்றே...
 கதிரவனுக்கு முன்நீ விழித்தெழுந்து
 மென்முத்தமதனை என்னும் உன்னும் 
 கன்னம் சிவக்க கொடுத்ததை
 திரும்ப வாங்கி கொள்ளும் 
 வேளையில் கைபிடித்திழுத்து
 என் மார்போடு உன்னும்சேர
 உனை நானணைத்துகொள்கிறேன்
 உறக்கம் கெடுத்த ஊடலுக்காய்..
 
டிஸ்கி:இதுவரையிலும் நானொரு கவிதையெழுதுபவன் என்றெனை வெளிகாட்டி உங்களை அறுக்க விரும்பியதில்லை ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்க்கு ஆளாகிவிட்டேன்.இனி நான் மட்டும் அறிந்த என் சுயரூபம் உங்களனைவருக்கும் தெரியவரும் இதுபோல் தொடர்ந்து..

November 27, 2009

நைனா...நறுக்குன்னு நாலு வார்த்த...

முடங்கி கிடந்த நிறுவனத்துக்கு மு.க.அழகிரி நிதி உதவியால் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது..

ம்க்கும்...நிதிக்குடும்பமாச்சே...அதான்...இவங்ககிட்ட இருக்குற நிதியெல்லாம் கொடுத்திருந்தால் இந்த ஒன்று போல் எத்தனை நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருக்கும்...

-------------------------------------------------------------------------------------------------

போலீஸ் சீருடையில் மாற்றம் செய்ய முடிவு-செய்தி

இன்னும் நாலஞ்சு பாக்கெட் சேர்த்து வச்சுருப்பாங்க போல...
-------------------------------------------------------------------------------------------------

பிரபாகரனை வாழ்த்தி நோட்டீசு-2பேர் கைது

இதே கலைஞர் கருணாநிதியவோ, அழகிரியவோ, செல்வி.ஜெயலலிதாவையோ வாழ்த்தியிருந்தா 2 ஃப்லாட் வீடு கொடுத்துருப்பாய்ங்களோ....பன்னாடைங்க...ஒரு தமிழினத் தலைவனை வாழ்த்துனதுக்கு கைது ...

-------------------------------------------------------------------------------------------------

வாஷிங்டன்: இது நாள் வரை நாம் இந்தியாவில் படித்து வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றோம். இனி, இந்தியாவுக்குத் திரும்புங்கள் என்று நான் உங்களை அழைக்கிறேன் என பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க வாழ் இந்தியர்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்தியா திரும்ப வாங்கன்னு சொன்னீங்க சரி அரசியல்வாதிகள் நீங்கள் எல்லோரும் இங்க வந்துடுங்கள் நாங்கள் அங்கு வந்துடுறோம்... -அமெரிக்க வாழ் இந்தியர்கள்...

-------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்..

ம்க்கும் இங்க இருக்குற ஆறெல்லாம் சாக்கடையா போயிட்டு இருக்கு இத கவனிக்கவே ஆளில்லை இதுல சிங்கப்பூர் போறாராம்..... சுத்திப்பாக்க போனோம்னு சொன்னா நாங்க என்ன கத்தியா வைக்கப்போறோம் கேட்டா அதுமாதிரியே இங்கயும் பண்ணப்போறோம்ன்னு சொல்லுவீங்க...இப்பிடி எத்தனைவாட்டி சொல்லிட்டீங்க இன்னும் கூவம் அப்டியேதான் இருக்கு அதே நறுமணத்தோட......எங்க இப்படி ஸ்டைலா நம்ம ஊரு கூவத்துல படகுல போய் பாக்குறது...

-------------------------------------------------------------------------------------------------

விலைவாசியை குறைக்க பதுக்கல் பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கையெடுங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு...

அப்போ மத்திய அரசுக்கு யார் உத்தரவு போடுவாங்க?

ம் கடும் நடவடிக்கைன்னா எப்படி? ஏ ஸி அறையோட எல்லா வசதியும் இருக்குற சிறையில வச்சு கவனிங்கன்னு சொல்ல வர்றீங்க அதானே...சூப்பரு...

--------------------------------------------------------------------------------------------

நயன்தாரவை பார்த்து டூ பீஸ் உடையணிந்தேன் -ப்ரியாமணி .

காப்பியடிக்கிறத உடையோட நிப்பாட்டிடாதீங்க அம்மிணி இன்னும் பல(ஆ)ன எதிர்பார்க்கிறோம்...அவ்வ்வ்வ்வ்...

-------------------------------------------------------------------------------------------------

எதற்காக புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை?' என்றால், எனக்கு புடவைன்னா ரொம்ப இஷ்டம்; ஆனால், நான் புடவை கட்டினால், ரொம்ப கவர்ச்சியாக தெரிவேன். அதைப் பார்த்து, நம்ம தமிழ்நாட்டு மச்சான்ஸ் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப் போகாமல் தடுக்கத்தான் நான் புடவை கட்டி நடிப்பதில் ஆர்வம் காட்டுவதேஇல்லை - நமீதா

எவ்ளோ "பெரிய" தங்கமனசு உங்களுக்கு ....



-------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி :என்னோட நைனா கேட்டுக்கிட்டதுக்காக இந்த தொடர் பதிவு நான் அவர் மாதிரியே எழுதி அவர டரியலாக்குனாலும் அவர் கோச்சுக்கிடமாட்டாரு ஏதோ கொஞ்சமாச்சும் அவர மாதிரி எழுதியிருக்கேனான்னு பாத்து சொல்லுங்க..சாமியோவ் ...இதே போல் பதிவுலகசூப்பர்ஸ்டார் கதிரும் ,லேடி சூப்பர் ஸ்டார் கலகலப்ரியாவும்அவங்களுக்கு பிடிச்சவங்க மாதிரி எழுதணும்ன்னு பணிவோட கேடுக்கிறேன் ஏற்கனவே என்னோட தொடர் பதிவ ரெண்டுபேரும் தவிர்த்துட்டீங்க இதையாச்சும் எழுதுங்க இது என்னோட ஆசையில்ல என் நைனாவோட ஆசை..

November 25, 2009

வழித்தடம்....


ஹலோவ்... ரமாவா? நான் குமார்...

உன்னைப்பார்க்கணும்போல இருக்கு..


எங்கடி உன் வீடு கொஞ்சம் அட்ரஸ் சொல்லு ?

நான் வர்றேன்...


வாங்க.. வாங்க...


நீங்க உங்க வீட்டை ஒட்டி இருக்குற

புளிய மரத்தை ஒரு வட்டமடிச்சு...

அப்படியே கிழக்கால

ஒரு நாலெட்டு போனா...

ஒரு ஆழமரம் வரும்

இப்ப அப்படியே அதை

ஒரு வட்டம் போட்டுட்டு

தெற்க்குப்பக்கம்

ஒரு நாலெட்டு போனா

ஒரு அரசமரம் வரும்

அதையும் ஒரு சுத்து சுத்தி

அங்கேருந்து

நிறுத்துடி நிறுத்து..

ஆனாலும் நீ என்னை ரொம்ப

சுத்தவைக்கிறடி...

சும்மா தொண தொணக்காம

நான் சொல்றத கேளுங்க...

அப்படியே

கிழக்கால நாலெட்டு போனா

ஒரு பட்ட மரம் வரும் அதையும்

ஒரு வட்டமடிச்சு

வடக்குப்பக்கம்

நாலெட்டு வந்தா

அதான் என் வீடு..

என்னடி சொல்ற?

நான் திரும்ப என் வீட்டுக்கே

வந்து நிற்கிறேன் எங்க உன் வீடு?

உங்க வீடுதான் என் வீடு

ஹேய்....எப்பூடி...

ஐ லவ் யூ டா...

அடிக்கள்ளி

மீ டூ டி...

November 24, 2009

வேஷம் போடாதே...



இண்டெர்வியூ போக ஒரு உடை,பள்ளிக்கு போக ஒரு உடை,கல்யாணத்திற்க்கு போக ஒரு உடை,விருந்து உபச்சாரத்துக்கு போக ஒரு உடை என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியா உடையணிந்து செல்வது போல ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு முகம் (உ.தா) சிரிப்பு,அழுகை,சந்தோசம்,வியப்பு,கோபம்,அதிர்ச்சி,என ஒவ்வொரு பிரதிபலிப்புக்கும் இயற்க்கையான முகபாவங்கள் வராதோருக்காக அந்தந்தமுகம் மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியாவது கொடுக்கவேண்டும் கடவுளே...

ஒரு சிலர் எவ்வளவு காமெடி பண்ணுனாலும் சிரிக்க மாட்டேன்றாங்க,ஒரு சிலருக்கு அவரவர் உற்றார் உறவினர் இறந்தாலும் அழுகை வருவதில்லை,ஒருசிலர் சோகமான நிகழ்ச்சிக்கும் சிரித்து தொலைகின்றனர்,கடவுளே அவர்களுக்காகவாவது இது மாதிரியான முகமாற்றி வசதி செய்து கொடு...அப்படியாச்சும் திருந்துவாய்ங்களா?

ஏன் இவ்வாறு நிகழ்கிறது அல்லது செயற்கையாக இருக்கவேண்டாமென்று எப்பொழுதும் இருந்துவிடுகிறார்களா? ஏனென்றால் நாம் ஒருவரை பார்த்து சிரித்தால் சும்மா சின்னதா பொய் புன்னகை உதிர்க்கும் பொழுது எனக்கென்னவோ பழிப்பு சொல்வதுபோல்தான் இருக்கிறது அதுக்கு பேசாம சிரிக்காமலே போயிருக்கலாம் என்றே தோணுகிறது..

ஏன் இப்படி இப்படித்தான் இருக்க வேண்டுமா இதுதான் நாகரிகமென்று சொன்னால் தேவையில்லையெனக்கு அந்த பாழாய்ப்போன நாகரீகம்....
இயற்கையா உள்மனத்திலிருந்து சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும்,அழுகையும்,பகிர்ந்து கொள்ளும் நபர்கள் நண்பர்களாகவோ உறவுகளாகவோ அமையவேண்டுமடா கடவுளே..

பொய் பாராட்டுகளும்,எதையோ எதிர்பார்த்து சொல்லும் பாராட்டி பேசும் மனிதர்களை காணும்போது வயிறு எரிகிறது...

உள்மனசில இருந்து வெளியில் வரும் பெரிய கோபமா வெளிப்படுத்தும் எவரும் எனக்கு ரொம்ப பிடித்து போகிறது மேலும் அவருடன் பிணைப்புத்தான் ஏற்படுகிறதே ஒழிய கோபம் வருவதில்லை...

இப்படி வெளிப்படையா பேசி சிரித்து செல்லும் எவரையும் மிகவும் பிடித்துப்போகிறது...

பொறாமை எனும் பேய் பிடித்து என்னுடைய செயல்கள் நன்றாக இருந்தாலும் அதை ,கிண்டல் பண்ணுபவர்களையும்,பத்து பேரிடம் குறை சொல்லிக்காட்டும் மனிதர்களை காணும் போது அப்படியே கடித்து குதற வேண்டும்போல்
இருக்கிறது....

நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியலைங்க...

இப்போ கூட இந்த இடுகை நல்லாருக்குன்னா நல்லாருக்குன்னு சொல்லுங்க நல்லாயில்லைன்னா நல்லாயில்லைன்னு சொல்லிடுங்க நான் அதத்தான் எதிர் பார்க்கிறேன்..நியாயமான விமர்சனங்கள் என்னை மேலும் செம்மை படுத்தும் சிற்பி உளியால செதுக்கும் போது சிலையானது அந்த வுளியால அடி வாங்கின பிறகுதானே அழகாய் கிடைக்குது கடைசியில...

November 22, 2009

ஸ்டார் ஆவேனா?

சும்மா ஒரு நாள் தினமலர் வாசித்துக்கொண்டிருக்கும்பொழுது கண்ணில் பட்ட விளம்பரம்தமிழிஷ் எனும் தளம் ,சரி என்னவென்று உள்ளே நுழைந்து பார்த்தால் எண்ணற்ற சுவாரஸ்யமான எழுத்துக்கள் அப்பொழுதெல்லாம் யார் எவர் பிரபலம் பிரபலமில்லை என்றெல்லாம் தெரியாது அனைவரையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

அந்த பதிவுகளில் இருந்த சுவாரஸ்யமான பின்னூட்டங்களையும் சேர்த்து படித்தேன்.நாமும் இதுபோல் பின்னூட்டமிடவேண்டும் என்று ஆரம்பித்ததுதான் இந்த வலைத்தளம்.ஆரம்பித்த அன்று அனைவருக்கும் வணக்கம் என்று இரட்டை வார்த்தைகளில் ஆரம்பித்தேன் இன்று இரட்டைசதம் அடிக்கும் வரை வருமென்று கனவிலும் நினைக்கவில்லை.

முதன்முதலில் வாசித்தது பரிசல்காரன் அவர்களின் இடுகைதான்.முதல் முதலாக ஃபாலோவர் ஆனதும் அவரது வலைத்தளத்துக்குத்தான்..பின் ஒரு நாள் அவரே மின்னஞ்சல் பண்ணிய பொழுது அடைந்த மகிழ்ச்சி அளவில்லாதது..

அப்படியே மூன்றுமாதம் கழிந்தது பல இடுகைகளை வாசித்து பின்னூட்டம் மட்டுமே இட்டுவந்து கொண்டிருந்த பொழுது சில கவிதைகள்,ஜோக்ஸ்,கடிகள் என்று நான் படித்தவைகளை இடுகைகளாக வெளியிட்டேன்.

பொதுவா நீங்க திரைப்படம் பார்க்கும் பொழுது ஒருத்தர் ஏதோ ஒரு கூட்டத்தில் துணை நடிகரா வலம் வரும் போது அதை அவர் திரையில் பார்க்கும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்குமோ அதேபோல் என் வலைப்பதிவு இணையத்தில் இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கும் சந்தோசம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் இராகவன் நைஜீரியா என் வலைத்தள முதல் ஃபாலோவர் ஆனார் அவர்தான் இந்த வேர்ட் வெரிஃபிகேசன் எடுப்பதை பற்றி மெயிலிட்டு அன்று முதல் இன்றுவரை என்னை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்....அதே பாசமுடன்....இந்த இடத்தில்அடுத்தடுத்து துண்டு துக்கடா வேடம் ஏற்க்கும் அண்ணன் ,தங்கை,கேரக்டர் போல என் சில பல இடுகைகள் வெளிவந்தது...

நான் ரசித்த படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் பொழுது அதனோடு சில கமெண்ட்ஸும் போட்டு எழுதினேன் கொஞ்சம் வரவேற்பு கிடைத்தது,பின் அதே மாதிரி பல படங்களை மட்டும் வெளியிட்டு வந்து கொண்டிருந்தேன்..இந்த இடத்தில் ஐந்து நிமிடம் வந்து போகும் சின்ன கேரக்டரா மாறியிருந்தேன்..

திடீரென்று ஒரு நாள் எழுத்தோசை தமிழரசி அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் இதே மாதிரி படமா போடாதீங்க எல்லாருக்கும் வெறுப்பாயிடும் எழுதுங்க என்று கூறியிருந்தார்..அப்போ நான் ஒரு பத்து நிமிடம் வந்து செல்லும் கேரக்டரா இருந்தேன்...

அவரோட அந்த ஊக்கத்தில் ஆரம்பித்தேன் சின்னதா எழுத ஆரம்பிச்சேன்...எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சின்ன காமெடி ரோலா மாற்றி எழுத ஆரம்பித்தேன்..

இதோ இந்த இரண்டாவது சதம் அடிக்கும் வரை எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரோலை சரியா செய்துட்டு வர்றேன்னு நினைக்கிறேன்....

என்றைக்கு நர்சிம்,கார்க்கி,ஆதி,பரிசல் ஆகியோர் போல் மெயின் ரோல் செய்யப்போறேன்னு தெரியலை எனக்கும் ஆசைதான் ஸ்டார் ஆகணும்ன்னு எதுக்கும் நேரம் காலம் வேண்டுமே...ஆனால் கண்டிப்பா ஒரு நாள் ஸ்டார் ஆவேன்...என்ற நம்பிக்கை உண்டு...

என் இப்பொழுதைய இந்த கேரக்டர் ரோல் வளர்ச்சி வரையிலும் வர மிகுந்த உற்சாகம் அளிக்கும் என் அண்ணன் ஜமால் மிகப்பெரும்பான்மையான பங்கு வகிக்கிறார்...நன்றி ஜமால் அண்ணா...

இந்த 200 வரையிலும் எழுதியதில் 26 இடுகைகளை யூத்ஃபுல் விகடன் வெளியிட்டு என்னை பெருமை படுத்தியது...யூத் ஃபுல்விகடனுக்கு என் மன மார்ந்த நன்றிகள்...

இதுவரையில் இந்த பதிவுலகத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.உறவுகள் கிடைத்திருக்கின்றனர்.என் எல்லா இடுகைக்கும் மறக்காமல் வாசித்து உற்சாகப்படுத்தும் நவாஷூதீன்,தமிழரசி,இராகவன் நைஜீரியா,நட்புடன் ஜமால்,ஹேமா,கலையரசன்,வானம்பாடிகள் பாலா சார்,சுசி,கதிர்,கலகலப்ரியா,மேனகாசத்யா,தேவன்மயம்சார்,ஜீவன், விசா,வினோத் கவுதம்,,சஃபி,யாழினி,கிஷோர்,ரம்யா,கார்த்திகை பாண்டியன்,பிரியங்கா,வலைமனை சுகுமார்,இன்னும் நிறைய நண்பர்கள் அனைவர் பெயர்களும் வெளியிட்டால் பதிவு பெரியதாகி விடும் என்பதால் அவர்களின் பெயர் வெளியிடாததற்க்காக மன்னிக்கவும்அனைவருக்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....

இந்த 200 இடுகைகளை வெளியிட்ட நேரத்தில் தமிழர்ஸ் தளத்தில் இவ்வாரதமிழர் விருதும் , வலைச்சரத்தில் அப்பாவி முரு, வீட்டுப்புறா சக்தி,தமிழரசி,அத்திரி,ஜீவன்,ஆகியோர் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

அவர்களோடு மட்டுமல்லாது இந்த 200 வரை என்னுடன் பயணிக்கும் 190 ஃபாலோவர்ஸ்க்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...

இந்த இடைப்பட்ட காலத்தில் நான் எழுதிய இடுகையோ அல்லது பின்னூட்டமோ யாரின் மனதையாவது புண் படுத்தியிருந்தால் தயவு கூர்ந்து மன்னிக்கவும்.மறப்போம் பழசை...

தொடர்ந்து இன்னும் நல்லா எழுது என்று தொடர் ஊக்கமளிக்கும் என் பதிவுலக
ஆசான் நர்சிம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

பதிவுலகம் சாராத தாமரைச்செல்வி,விஜய் ,கலாஆகியோருக்கும் என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்,

தமிழிஷ் ,தமிழ்மண திரட்டிகளுக்கும்,இவற்றில் தொடர்ச்சியா வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

இதுவரை கேரக்டர் ரோல் செய்துவரும் என்னையும் மதித்து தொடர்ந்து வருகைபுரிந்து உற்சாகமளிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் என்றைக்கு ஸ்டார் ஆவேனோ! தெரியாது வெயிட் பண்ணுங்கப்பா...

ஸ்டார் ஆகும் பொழுது உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன்...நன்றி நட்புகளே..

நன்றியுடன்...

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்

ப்ரியமுடன்...வசந்த்

நன்றி மீண்டும் வருக

November 20, 2009

ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள கண்மணியே...

நான் நலம் அதுபோல் உன் நலமறிய ஆவல்,மையினால் எழுதினால் உன் கண்ணீர் பட்டு அழிந்துவிடுமென்பதால் என் கண்ணீரால் எழுதுகிறேன் உன் விழியால் ப(பி)டித்து கொள்வாய் என்ற நம்பிக்கையில்..

பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ளும் காதல்களுக்கு மத்தியில் பார்க்காமலே உன் மேல் காதல் கொண்டேன்,அதை நீ அறிவாய் என் ரசனை நோக்கியே இருக்கிறது உன் பயணமும் ஆதாலால் வந்த காதலிதுவாய் இருக்கலாம்.

படபடவென்று பேசுகிறாய் தொலை பேசியில்,நீ பேசும்போது என் இமையும் பட படவென்று துடிக்கின்றது இவள் பெரிய வாயாடியென்று,நீயும் நானும் சுவாசத்தால் தூரத்தால் மட்டுமே பிரிவை அனுபவிக்கிறோம்...

மற்றபடி நீ எதைப்பற்றி இந்நேரம் சிந்தித்து கொண்டிருப்பாயோ அதே சிந்தனையுடன்தான் நானும் சிந்தித்து கொண்டிருக்கிறேன்,நீ எப்பொழுது தூங்குவாய் என்று கேட்டுவிட்டே நானும் தூங்குகிறேன்...

நான் உன்னை தேடும் பொழுது நீ கிடைக்கமாட்டேன் என்கிறாய் நான் என்ன செய்ய கண்ணாமூச்சி விளையாட்டாகவல்லவா இருக்கிறது உன்னுடன் தினமும்...

திடீரென்று ஒரு நாள் உன்னிடம் நீ எப்படியிருப்பாய் என்று நான் கேட்க்க உன் வீட்டு கண்ணாடியில் பார் நான் தெரிவேன் உன் முகமாய் நான் மாறி எவ்வளவு நாளாகிவிட்டது என்கிறாய்..

சரிதான் நீ சொன்னது பார்த்தேன் என்வீட்டு கண்ணாடியில் முழுதும் நீ நான் என்று மாறிக்கிடக்கிறேன் என்னை மாற்றி என் இருப்பையும் என் நினைவுகளையும் எடுத்தவளே என்று நான் உன்னைப்பார்ப்பது ? நிஜ வாழ்க்கையில் முடியுமா?

முடியாமல் போய்விட்டால் சொர்க்கத்திலயாவது நாம் சந்திக்கலாம் உனக்காக ஒரு சொட்டு கண்ணீர் மட்டுமே என்னிடம் இப்பொழுதைக்கு....

இதோ இதைப்படித்துக்கொண்டிருக்கும் பல காதலர்களும் நம் போலவே பார்க்காத காதல் தான் செய்து கொண்டிருக்கின்றார்களடி..அந்த நம்பிக்கையில்தான் நானும் இதை எழுதுகிறேன்...

விடை பெறுகிறேனடி கண்ணே...கண்ணீருடன்...

டிஸ்கி: பின்னூட்டமெல்லாம் தாறுமாறா போய்ட்டு இருக்குறதால ஒண்ணே ஒண்ணுமட்டும் சொல்லிக்கிறேன் இது ஒரு கண்ணு இன்னொரு கண்ணுக்கு எழுதுனதுப்பா கண்டிப்பா எனக்கு காதலிக்கிற தகுதியும் இல்ல நேரமும் இல்லை எல்லாம் கை மீறி போய்டுச்சே அவ்வ்வ்வ்...

November 18, 2009

கிட்னாப்...


நானும் என் லவ்வரும் மதுரக்காரய்ங்கங்க..ரெண்டுபேரும் ஒரு நாள் குளத்தங்கரையில் உக்காந்திருந்தோம்..என் ஆளு இருக்காளே தொட்டு பேசினா பிடிக்காதுங்க..தொட்டோம்ன்னு வச்சுக்கங்க அவ்ளோதான் நம்ம காணாம போய்டுவோம்..அப்டியே ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துட்டு ஒட்டி உரசி உக்கார்ந்துட்டு கனவு கண்டுட்டு இருந்தோம்ங்க சூடா இருந்த எனக்கு அவளோட குளுமை இதமாய் இருந்துச்சு...

எனக்கும் அவளுக்கும் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லீங்க..நான் குண்டா இருப்பேன்..அவ குண்டுமில்லாம ஒல்லியுமில்லாம இருப்பா..நான் பூ மாதிரி மனசு அவள் கொஞ்சம் கடு கடுன்னு இருப்பா..நான் கொஞ்சம் வெள்ளையா இருப்பேன் அவள் ரொம்ப கலரா இருப்பா..இருந்தாலும் எப்டியோ ரெண்டுபேருக்கும் ஒரு நாள் செட்டாயி அன்னிக்கிருந்து ஒரேலவ்வுதான் போங்க..உங்கவீட்டு லவ்வு எங்க வீட்டு லவ்வா ஊர் உலக லவ்வுன்னு வச்சுக்கங்களேன்..

எங்களையே மறந்து நாங்க இருக்கும்போது ஒரு அஞ்சுபேர் வந்தாய்ங்க எங்க இருந்து வந்தாய்ங்கன்னு தெரியலை எப்டி வந்தாய்ங்கன்னும் தெரியலை நாசமத்துபோனவனுங்க..அஞ்சுபேரும் ஒவ்வொரு தினுசா இருந்தாய்ங்க..கிட்ட நெருங்கி வந்துட்டாய்ங்க அவய்ங்க மூஞ்சியும் முகரகட்டைகளும் .டேய் ரெண்டு பேரு சேர்ந்து காதல் பண்றீகளோ? அப்டின்னு கேட்டுட்டு என் ஆள ஒரு மாதிரி பார்த்தாய்ங்க..

திடீர்ன்னு எங்கயோ தூக்கிட்டு போனாய்ங்க பெரிய வாசல்தான் இருந்துச்சு நல்லா ரெண்டு வரிவரியா கதவு போட்டு பிரமாதமா இருந்துச்சுங்க கதவு..கதவப்பார்த்தாலே ஆசைவருமுங்க...எங்கடா எங்களை துக்கிட்டு போறீங்கன்னு நான் அவய்ங்ககிட்ட கேட்டேன்..அதுக்கு ஒருத்தன் சொல்றான் எங்க எஜமானுக்கு ஒரு விதமான ஆச அதான் உன்னோட ஆள தூக்கிட்டு வரச்சொன்னார் நீயும் இருந்தியா சரி உன்னைய ஏன் விடுவானேன் நீ யார்கிட்ட்டயாச்சும் போட்டுகுடுத்திட்டனா அதான் உன்னையும் சேர்த்து தூக்கிட்டோம்ன்னான்..

வாசல்ல ஒரு முப்பதோ கூடயோ குறையோ தெரியல அவ்வளவு செக்யூரிட்டி இருந்தாய்ங்க என்னாங்கடா நாங்க என்ன தீவிரவாதியா இத்தினிபேர் இருக்காய்ங்க செக்கப்புக்குன்னு கேட்டா எங்க எஜமான் ரொம்ப பணக்காரர் அவருக்கு உங்களாலன்னு இல்ல யாராலயும் உயிருக்கு சேதம் வந்துடக்கூடாதுன்னுதான் இத்தனை செக்யூரிட்டி தெரியுமா?ன்னு கேட்டுட்டு செக்யூரிட்டிகிட்ட சொல்லி எங்களையும் செக்பண்ண சொல்லி உள்ளாற அனுப்பிட்டாய்ங்க உங்கவீட்டு செக்கப்பா எங்கவீட்டு செக்கப்பா யம்மாடி குதறியெடுத்துட்டாய்ங்க ....

நாந்தான் பாவம் அவ தப்பிச்சுட்டா பொண்ணுன்னா பேயே இறங்கும் இவய்ங்க மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன? அவளும் நானும் செக்யூரிட்டி முடிஞ்சு நிக்கும்போதே ஒருத்தன் தள்ளிவிட்டுட்டான் வீட்டுக்குள்ளாற யம்மான்னு ரெண்டு பேரும் போறோம் போறோம் போய்ட்டே இருக்கோம் எவ்வளவு நீளமுன்னே தெரியலை பின்னாடி ஒருத்தன் எங்களை தள்ளிட்டே வந்தான் வளைஞ்சு நெளிஞ்சு ம்மா யப்பான்னு மூச்சு திணறிருச்சுங்க..அவ்ளோ நீளமான வீடுங்க..

கடைசியில தொப்புன்னு ஒரு இடத்தில போய் விழுந்தோம்..அங்க இருந்தாருங்க எஜமான் என்னையும் என் ஆளையும் ஒருமாதிரி பாத்தாரு பின்ன ரெண்டுபேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வச்சாரு அவ என்னடான்னா புலம்புறா..நான் பொறுமையா இருன்னு சொல்லிட்டு இருக்கும்போதே எதோ ஒண்ணு ரெண்டு பேரையும் அப்புடியே கர கரன்னு அமுக்கி சுத்திகித்தி கூலாக்கிடுச்சு..ரெண்டுபேரோட உசிரும் ஒண்ணா போனதுலயும் ஒரு சந்தோசமுங்க...

விதி வழியது இட்லியா சட்னியா பொறந்தா இப்பிடித்தான் கூலாகி சாவணும்ன்னு..

November 17, 2009

வாழப்பிறந்தவள்...



தன்மானம் காக்க


அன்றொரு நாள்

முறத்தை தூக்கினாள்

மறத்தமிழச்சி

இன்றோ

தமிழ்மானம் காக்க

துப்பாக்கியை தூக்குகிறாள்

மறத்தமிழச்சி..



இளமை,

கனவு,

குடும்பம்,

நாடு,

பாசம்,

சிரிப்பு,

சந்தோசம்,

காதல்,

அழகு,

உறக்கம்,

நிம்மதி,

நாடு,

மக்கள்,

அனைத்தும்

இழந்திவள்..

பெற்ற விருது இந்த ஏகே 47...



பிறந்தோம்

வாழ்ந்தோம்

என்றில்லாமல்

வாழப்பிறந்தவள்...


November 15, 2009

கருவிலிருந்து கரியாகும் வரை...



கருவில் தொற்றிய பயம்

பிறப்போமா
பிறக்கமாட்டோமா என பயம்...

பிறந்து விட்டால்
நடப்போமா என பயம்...

நடக்க துவங்கினால்
கீழே விழுந்துவிடுமோ என பயம்...

நடந்ததும் ஸ்கூலுக்கு
அனுப்பிடுவாங்களோன்னு பயம்...

ஸ்கூலுக்கு போனால்
ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுப்பாரோ என பயம்...

வீட்டுப்பாடம் எழுதினாலும்
தேறுவோமா என பயம்...

தேறினாலும் கல்லூரியில்
இடம் கிடைக்குமா என பயம்...

கல்லூரியில் இடம் கிடைத்தாலும்
பிகர் இருக்குமா என பயம்...

பிகர் இருந்தாலும்
சைட் அடிக்க பயம்...

சைட் அடித்தாலும்
பிகர் திட்டிவிடுமோ என பயம்...

திட்டினதுக்கு அப்பறம்
அடி விழுமோ எனபயம்...

திட்டாமல் சிரித்துவிட்டால்
காதல் வந்துவிடுமோ என பயம்...

காதல் வந்துவிட்டால்
கல்யாணம் பண்ண பயம்...

கல்யாணம் பண்ணிவிட்டால்
குழந்தை பிறக்குமா என பயம்...

குழந்தை பிறந்தால்
ஆணா பெண்ணா என பயம்...

பெண்ணாக இருந்தால்
படிக்குமோ படிக்காதோ என பயம்...

படித்துவிட்டால்
மாப்பிள்ளை கிடைக்குமா என பயம்...

மாப்பிள்ளை கிடைத்தாலும்
வரதட்சிணை கேட்பாரோ என பயம்...

வரதட்சிணை கேட்டாலும்
கொடுக்கமுடியுமா என பயம்...

கொடுத்தாலும் வாங்குவாரோ என பயம்...

வாங்கினாலும் திரும்ப
கேட்பாரோ என பயம்...

கேட்டாலும் முடியாதுன்னு
சொல்ல பயம்...

சொன்னால் மகள் பிறந்தவீடு
திரும்பிடுவாளோன்னு பயம்...

திரும்பினாலும் என் உயிர்
இருக்குமான்னு பயம்...

உயிர் போனாலும்
புதைக்கப்படுமா எரிக்கப்படுமான்னு பயம்...

புதைச்சாலும் மண்புழு
திங்குமோ என பயம்...

எரிச்சாலும் சூடு தாங்க
முடியுமோ என பயம்...

எல்லாம் பயமெனக்கு கருவிலிருந்து
கரியாகும் வரை...

இப்படி பயந்து பயந்து சாவறதுக்கு பதில்
கருவிலே செத்து தொலைகிறேன்....

(நோ ஃபீலிங்ஸ் உண்மையத்தான் சொன்னேன்....)

November 13, 2009

உஷ்....சத்தம் போடாதே....



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....ன்னு சோம்பல் முறித்து...

ஸ்ஸ்..ஸ்ஸப்பான்னு உச்சா போயிட்டு...

கர்ச்ச்..கர்ச்ச்..க்ரிச்..கிரிச்ன்னு பல் விளக்கிட்டு...

கொப்..கொப்..கொப்ப்ப்..கொப்..கொப்..கொப்புன்னு...வாய் கொப்பளித்து...

ஃப்பூ..ஸ்ஸ்..ப்பூ...ஊதிட்டே காபி குடிச்சுட்டு...

மீண்டும் ம்ம்ம்ம்ன்னு முக்கி முனகி டாய்லெட் போயிட்டு...

ஃப்பு..ஃப்பு..ன்ன்னு தலைக்கு குளிக்கும்பொழுது வாய்ல விழும் தண்ணிய ஊதிட்டு...

ப்ச்தா...ப்ச்தா...ன்னு நீயூஸ் பேப்பர் எச்சில் தொட்டு புரட்டிட்டு...

ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்,,ஊதிட்டே சூடான இட்லி சாப்ட்டுட்டு...

க்டக்...க்டக்...க்டக்ன்னு தண்ணி குடிச்சுட்டு

ஏவ்வ்வ்..ஏவ்வ்வ்வ்ன்னு..ஏப்பம் விட்டுட்டு...

ப்ப்..ன்னு கண்ணாடி முன்னாடி வாய மூடி சீவிட்டு...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ன்னு சிகரெட் புகை உள்ளிழுத்து

ஃப்ப்ப்பூ...ன்னு புகைய வெளிய விட்டு

லொக்..லொக்..ன்னு இருமிட்டு...

ஹ..ஹ..ஹ..ன்னு மூச்சு விட்டு ஓடி பஸ் பிடிச்சு

அப்பாடான்னு...இடம் கிடைச்சு...

நற நற..நறன்னு சில்லரை கொடுக்காத கண்டக்டரை முறைச்சுட்டு...

ம்ஹும்..ம்ஹும்..சீன்னு...சாக்கடை நாத்தம் பார்த்து...

அச்..அச்..ன்னு தூசினால தும்மிட்டு...

ஹ ஹ ஹான்னு நண்பர் பார்த்து சிரிச்சுட்டு..

ப்ச்..ப்ச்ன்னு..பிச்சையெடுக்கும் சிறுமி பார்த்து...

லலலா லலலான்னு...ஹம்மிங்க் பாடிட்டு வீடு திரும்பி

ஸ்ஸ்ஸ் அம்மாடின்னு ஹாயா சோஃபால உக்கார்ந்துட்டு...

திரும்பவும்...சொட்டாய்ங்...போட்டு சாப்ட்டுட்டு...

ப்ச்ன்னு..தூங்கிட்டு இருக்கும் குழந்தைக்கு முத்தம் கொடுத்துட்டு...

ஆவ்வ்வ்ன்னு...கொட்டாவி விட்டுட்டு...

கொர்ர்..கொர்ர்...ன்னு குரட்டை விட்டு தூங்கிப்போனேன்..(இத்தோட நிப்பாட்டிக்கலாம்)

மீண்டும்..காலையில..ம்ம்ம்ம்ம்ன்னு ஆரம்பிக்கிறது இந்த மொழியில்லா சத்தங்களுடன் வாழ்க்கை......

(தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் வாசக நண்பர்களுக்கும் பின்னூட்டமிடாத வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்)

November 11, 2009

அடல்ட்ஸ் ஒன்லி...(18+)

ஹேய் கோவக்கார ரவுடி வாராண்டி எல்லாரும் அவங்க அவங்க வீட்ல போய் ஒளிஞ்சுக்கங்க

அய்யோ முதல்ல வந்ததும் பொண்ணுக மேலதான் கைவைக்கிறான் உருப்படுவானா இவன் தள தளன்னு இருந்தா போதும் இவனுக்கு ஆசை வந்துடும் போல..ம்ம் என்ன செய்ய பூஜாவையும் தூக்கி வண்டிக்குள்ள போட்டுட்டானே..

அடுத்து எங்கயோ போறான் அய்யய்யோ குடுமிக்காரி பேச்சி மாட்டிக்கிட்டாளே..நான் என்னா செய்வேன்..எங்க போயி சொல்லுவேன்..அவளையும் தூக்கி போட்டுக்கிட்டானே வண்டிக்குள்ள..

ரங்கு மாமி உள்ளார ஓடி போயிடுன்னு சொன்னேனே கேக்கலியே இவ்ளோ பெரிய உடம்ப பார்த்துமா ஆசை வந்துச்சு இவனுக்கு கஷ்டகாலம் குண்டு மாமியையும் வண்டிக்குள்ளாற தூக்கி போட்டுட்டான்..படுபாவி..கொழுப்பெல்லாம் எடுக்கப்போறான் இன்னிக்கு...

ஆஹா ரமா இவளையுமா நான் எத்தனையோதடவை சொன்னேன் கேக்கலையே இவ தலையவே மறைக்கிற அளவுக்கு பூவச்சுட்டு திரிஞ்சா அவளும்மா போ போ போடி..உன் பூவெல்லாம் இன்னிக்கு உதிர்த்து நாசமாக்கப்போறான்...

வளர்ந்தவனுமா? இவனையுமா இவன எதுக்கு துக்கிட்டு போறான்னு தெரியலியே ஏதோ இருக்கு இவனுக்கும் அவனுக்கும் அதான் அவனையும் தூக்கிட்டான்..

வசமா மாட்டுனா உடுப்புக்காரி உமா..எத்தனை ட்ரெஸ் போட்டுகிட்டு நம்மளையெல்லாம் அழ வச்சு பாடு படுத்துனா..இன்னிக்கு அம்புட்டயும் அவிழ்த்து அவளையும் அழவைக்கப்போறான்..

அய்யோ உருட்டிவிட்டா உருள்ற மாதிரி இருக்குற பத்மாவுமா தூக்கிட்டானே என்னசெய்ய பாவம்..கசக்கி பிழியப்போறான் இன்னிக்கு...

பச்சை புள்ளை சின்னதா கொண்ட போட்டுகிட்டு திரிஞ்சுச்சு அந்த புள்ளையையும் விட்டு வைக்கலையே இவன்..ஆனாலும் இவன நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேப்பா..

போற போக்குல சின்னக்குழந்தைகளையும் ஏண்டா தூக்கிட்டு போற விட்ருடா பாவம் அதுக்கு பதிலா என்னைய வேணும்னா கூட்டிட்டு போடான்னா காறித்துப்பி என்னைய உதை உதைச்சுட்டு கட்டு கட்டா தூக்கிட்டான் அவங்களை ராஸ்கல்..

இவங்களையெல்லாம் கூட்டிட்டு போயி என்னடா செய்யப்போறன்னு கேட்டா இன்னிக்கு நல்ல விருந்துன்றான்..காய்கறிகடைக்காரன் கிட்ட...(அத்தனை காய்கறி பெயர்களும் சொல்பவர்களுக்கு ஸ்பெசல் ப்ரைஸ்)

வாசித்த அனைத்து கலைக்கண்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

November 9, 2009

கால் கிலோ காதல் என்ன விலை?


கால் கிலோ காதல்

என்ன விலை என்று

கடைகளில் கேட்டேன்

கிடைக்கவில்லை காதல்...


கால் வலிக்க பஸ் ஸ்டாப்பில் நின்றும்

கிடைக்கவில்லை காதல்..

பெட்ரோல் தீர மெட்ரோ பூரா சுத்தியும்

கிடைக்கவில்லை காதல்...


காற்றிடம் தெரியுமா என்று கேட்க

சுற்றிப்பார் என்று கூறி சுற்றலில் விட்டு

சுற்றி சென்றது..


சுற்றி சுற்றி கிறு கிறுத்து..

கிறுக்கனிடமும் கேட்க..

கிறுக்கிப்பார் என்று கிறுக்கினான்..

கிறுக்கி கிறுக்கி பார்த்தும்

சறுக்கி விழுந்தது தான் மிச்சம்...

கிடைக்கவில்லை காதல்...


விழுந்து எழுந்த பின் மீசையை பார்க்க

ஒட்டவில்லை மண்..

மண் ஒட்டாத மீசையையும் எடுத்து பார்த்தேன்..

ஒட்டவில்லை காதல்..


ஒட்டாத வாழ்த்து அட்டை ஒன்று அனுப்பினேன்

ஒட்டாததால் திரும்பியது..

திரும்பியதை திருப்பி அனுப்பினேன் ஒட்டாமலே

பதிவு தபாலில்...காதலுடன்..

அட்ரஸ் மாறி அண்டை தேசம்

சென்றுவிட்டது தவறுதலாய்...


அண்டை தேசத்துக்காரியா

அன்பாயிருக்கப்போகிறாள்?

அதுவும் திரும்பியது என்னிடம்

அப்பொழுதுதான் புரிந்தது

காதல் கடிதத்தின் மூலமாக ...

November 7, 2009

ஹலோ..(சண்டே எண்டெர்டெயின்மெண்ட்)

குமரன்:ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

நாராயணன்:ஹலோ என்னா மாப்ள?எப்பிடியிருக்க?என்ன திடீர்ன்னு கால் எல்லாம் பண்ற அதிசியமா இருக்கு..

குமரன் : மாம்ஸ் எப்படியிருக்கீங்க நான் நல்லாயிருக்கேன்..திடீர்ன்னு உங்க ஞாபகம் வந்துச்சு அதான் கூப்ட்டேன்..

நாராயணன் : அப்பறம் வீட்ல மனைவிமார் குழந்தைகள் எல்லாம் எப்பிடியிருக்காங்க?

குமரன் : எல்லாம் நல்லாயிருக்காங்க மாம்ஸ் நாந்தான்..

நாராயணன் : என்னா மாப்பு நீதான்னு இழுக்குற..

குமரன் : இல்லை மாம்ஸ் அம்மா அப்பா நினைவாவே இருக்கு பாத்து ரொம்ப நாளாச்சு நாந்தான் சின்னவன் அவங்களைப்போயி பாக்கணும்ன்னு நினைக்கலை . அவங்க பெரியவங்கதானே என்னை வந்து பாக்கணும்ன்னு நினைக்கலை பாத்தீங்களா?

நாராயணன் : நீதான அவங்களோட சண்ட போட்டுட்டு போன நீதானே போய் பெரியவங்களை பார்க்கணும்..

குமரன் : அதுவுஞ்சரிதான்..இந்த கொஞ்ச நாள்ல என்னை பத்தி எதுவும் கேட்டாங்களா மாம்ஸ்..

நாராயணன் : ம்ம் கேப்பாங்க நீ என்ன பண்ற இப்போ எங்க இருக்கன்னும், உன்னோட குழந்தைகளைப்பத்தியும் விசாரிப்பாங்க..நீ பேசுறது சரியாவே கேக்கலை சிக்னல் நல்லா கிடைக்குதா?

குமரன் : என்ன மாம்ஸ் இப்பிடி சொல்லிட்டீங்க இந்த செல் போன் டவரே நான் இருக்குற இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு பின்ன எப்பிடி கேக்காம போகும்..

நாராயணன் : இப்ப சரியா கேக்குது மாப்ள..அது சரி இப்ப நான் என்ன பண்ணனும்?

குமரன் : எனக்கு அப்பாவையும் அம்மாவையும் பாக்கணும் போல இருக்கு இப்ப நான் அவங்கள பாக்க வரலாமான்னு போன் பண்ணி கேட்டு சொல்றீங்களா?

நாராயணன் : சரிடா மாப்ள..கேட்டுட்டு உனக்கு போன் பண்றேன்..வச்சுடுறேன்..

குமரன் : மாத்தி எதுவும் சொல்லி திரும்பவும் பிரச்சனைய கிளப்பிடாத மாம்ஸ் சரியா உன்னோட கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன்..

நாராயணன் : ஹ ஹ ஹா சரிடா..

நாரயணன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

பரமன் : ஹல்லோ..

நாராயணன் : ஹலோ மச்சான் நான் தான் நாராயணன் பேசுறேன்..

பரமன் : சொல்லு மச்சான் எப்படியிருக்க?

நாராயணன் : நான் நல்லாயிருக்கேன் மச்சான் அக்கா எப்படியிருக்கா?

பரமன் : அவளுக்கென்ன என் பாதி உசிரை எடுத்துட்டு நல்லாத்தான் கெளுத்தியாட்டமிருக்கா

நாராயணன் : மச்சான் இருந்தாலும் உன்னோட ஆட்டம் அடங்கமாட்டேன்னுது பாத்தியா?

பரமன் : உண்மையத்தன சொன்னேன்..அது சரி எதும் விஷயமில்லாம போன் பண்ண மாட்டியே இப்ப என்ன விஷயம் சொல்லு..

நாராயணன் : குமரன் போன் பண்ணுனான் மச்சான் அதான் உம்மவன்..உன்னையும் அக்காவையும் பாக்கணும் போல இருக்காம்..

பரமன் : அவந்தான் ரோஷக்காரனச்சே இப்ப என்னவாம் துரைக்கு பாசம்?

நாராயணன் : என்ன மச்சான் அவந்தான் சின்னப்பையன் நீங்களாவது விட்டுக்குடுத்து போகக்கூடாதா?

பரமன் : ம்ம் எதுக்கும் பெரியவன் கணேஷ கேட்டுட்டு சொல்றேன்...

நாராயணன் : இப்போ அவன் எங்க இருக்கான் ?

பரமன் : அவன் எங்கயாச்சும் எதுனாலும் மரத்தை ஆராய்ச்சி பண்றேன்னுட்டு ஊரெல்லாம் சுத்திட்டு இருப்பான்..

நாராயணன் : சரி மச்சான் கேட்டுட்டு எனக்கு போன் பண்ணு உம்மவன் வெயிட் பண்ணிட்டு இருக்கான்...

பரமன் : ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..

கணேஷ் : ஹலோ என்னப்பா இந்நேரத்துல கூப்டுற சாப்பாடுரெடியா?

பரமன் : தின்னிப்பயலே தின்றதுலயே இரு இப்பிடி தின்னு தின்னுதான் பானை மாதிரி வயித்த வச்சுட்டு திரியுற...

கணேஷ் : சீ போப்பா உனக்கு எப்பவுமே கிண்டல்தான்.. என்ன விஷயம்ன்னு சொல்லு?

பரமன் : எலேய் உன் தொம்பி நம்மளைப்பாக்கணுமாம் வரச்சொல்லவா?

கணேஷ் : என்னப்பா எங்கிட்ட போயி கேட்டுட்டு வரச்சொல்லுங்க..

பரமன் : என்னடா உனக்கு கோபமில்லியா?

கணேஷ் : ஏன் அவன் தான சண்டை போட்டுட்டு போனான் நானா சண்டை போட்டேன்..?

பரமன் : அதுசரி..சரிடா அப்ப அவன நாளைக்கு வரச்சொல்றேன் ஊர் ஊரா சுத்தாம நாளைக்காச்சும் வீட்ல இருடா..பின்ன திரும்பவும் சண்டை போட்டுட்டு போயிடப்போறான்..

கணேஷ் : சரி சரி..

பரமன் : ட்ரிங்...ட்ரிங்..

நாராயணன் : என்ன மச்சான் மூத்தவன்ட்ட பேசுனியா ?

பரமன் : பேசுனேன் நாளைக்கு வரச்சொல்லு மச்சான் அவன..வரும்போது பேரப்புள்ளைகளையும் கூட்டிட்டு வரச்சொல்லு..

நாராயணன் : சரி சரி தாத்தா பாசம் பொங்கி வழியுது போல வச்சுடுறேன்..

நாராயணன் : ட்ரிங் ட்ரிங்..

குமரன் : என்ன மாம்ஸ் என்ன சொன்னாரு அப்ஸ்?

நாராயணன் : ம்ம் எல்லாம் நல்ல விஷயம்தான் நாளைக்கு உன்னை வரச்சொன்னாரு க்குடவே புள்ளைகளையும் கூட்டிட்டு போ மாப்ள..

குமரன் : ரொம்ப சந்தோசம் மாம்ஸ் மாம்ஸ்னா அது நீதான் சண்டை போட்ட குடும்பத்தையும் ஒண்ணா சேத்து வச்சுட்டியே தாங்ஸ் மாம்ஸ்..நாளைக்கு அந்தப்பக்கம் நீ வந்துடாத..வந்தா கொன்ன்னே போடுவேன்...

நாராயணன் : ஹ ஹ ஹா....

(குமரன்=முருகன்,நாராயணன்=நாராயணன்,பரமன்=பரமசிவன்.கணேஷ்=விநாயகன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க)

November 6, 2009

நான் கேட்க...

இயற்கையுடன் சில நேரம் உரையாடலாம் என்று காலார நடந்து தோட்டத்தில் உலாவினேன்..

உலாவலின் முதல் சந்திப்பில்

கண்ணுக்கு அகப்படாமலே செல்லும் காற்று என் பேச்சுக்கு அகப்பட்டது

ஏய் காற்றே நில் எங்கு செல்கிறாய்?இப்படி நான் கேட்க..

நானென்ன மனிதனா எதையாவது அடைய ? இப்படி காற்று கேட்க..

உனக்கென்று தேடல் இல்லையா ? இப்படி நான் கேட்க..

தேடல் தேவை மனிதனுக்கு எனக்கில்லை! இப்படி காற்று கூற..

அடுத்த தேடலாய் மலரத்துடிக்கும் மொட்டிடம் சென்று

எப்பொழுது பூ பூப்பாய்? என்று நான் கேட்க..

சீ தூன்னு துப்பி மனுசபுத்திய காட்டிட்டியேன்னு...மொட்டு சொல்ல..

அவமானத்தோடு காற்றுக்கு இரு கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது போல் இருக்கும் இரட்டை தென்னைகளிடம் என்ன செய்கிறீர்கள்? என்று நான் கேட்க..

மானங்கெட்டவனே உள்ளே வரும்பொழுது சொல்லிட்டு வருவதில்லை அந்த சின்ன மொட்டு திட்டியுமா உனக்கு புத்தி வரலைன்னு? மரம் கேட்க..

ரோசம் வராமல் ரோஜாவிடம் சென்றேன் நான்..

முள் இருப்பது உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு? நான் கேட்க..

முடி இருக்குறது உங்களுக்கு பிடிச்சுருக்கான்னு நானும் கேட்கவா? இப்படி ரோஜா கேட்க..

முகத்தில் அறைவாங்கியவனாய் நான் மியாவ் மியாவிடம் குட் மார்னிங் சொல்ல..

பேட் மார்னிங் சொல்லியது பூனை..

ஏன்னு நான் கேட்க..

காலையில் நான் மனிதர்கள் முகத்தில் விழிப்பதில்லையென்ற பதில் பூனையிடம்..

விழி பிதுங்கி விடியலை தரும் சூரியனிடம் ஏன் இப்படி சுட்டெரிக்கிறாய்ன்னு? நான் கேட்க..

உங்களை மாதிரி எரித்து சுடவில்லையே என்ற பதில் சூரியனிடம்..

சூரியனிடம் கிடைத்த சூட்டை அணைக்க தண்ணீரிடம் சென்றேன்..

இப்படி உனக்கென்றோரு வழியில்லாமல் கிடைத்த வழியிலெல்லாம் செல்கிறாயே ஏன் என்று? நான் கேட்க...

எனக்கேதாவது வழிசொல்லுங்கன்னு குறி கேட்க சாமியார் கிடைக்கலைன்னு தண்ணீர் கூற..

தண்ணீரின் பதிலில் மூழ்கிப்போன என்னை மீட்டெடுத்த மீனிடம் எப்படியிருக்கிறாய்ன்னு?நான் கேட்க...

துள்ளி குதிச்சு சந்தோசமாயிருக்கேன்னு மீன் சொல்ல

காலில்லாமல் எப்படி குதிப்பாய்? என்று நான் குறும்பாய் கேட்க..

காலிருந்தாலும் உன்னால தண்ணீரில் குதிக்க முடியுமான்னு? மீன் கேட்க..

வாயடைத்து போனேன் நான்..

November 4, 2009

ரைடர்ஸ் கப் சிப்...

டேய் ரமேஷ் இதுமாதிரி தனித்தனியா ரைடு போறது எவ்வளவு சுகமாயிருக்கு?

ஆமாடா சுரேஷ் இரண்டு புறமும் மரங்கள் நம்ம கூடவே வருவதுமாதிரியிருக்கு..

நம்ம ரெண்டுபேரும் அச்சு பிசகாம ஒரேமாதிரி ஆளுக்கொரு நேர்கோட்டுல நிம்மதியா போயிட்டு இருக்கோம்..நமக்கு பின்னாடி வர்ற நம்ம ஃப்ரண்ட்ஸ் விஜயும் ராஜாவும் பார்த்தியா ஆளுக்கொரு ஜோடியா எவ்வளவு சந்தோசமா வர்றாங்கன்னு ...

ம் கொடுத்துவச்சவங்கடா...டேய் முன்னாடி பார்த்துப்போ பள்ளமும் மேடுமா இருக்கு..

இருக்கட்டுமேடா எல்லாம் நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துப்பான் யாரு யாருக்கு எப்ப எப்ப எது எதுக்குன்னு அவனுக்குத்தான் வெளிச்சம்

அதெப்பிடி இப்படி தத்துவமெல்லாம் பொழியுற?

அதுவா வருது மச்சி..

பின்னாடி வர்ற ஜோடி சந்தோசமா வந்தாலும் அவங்களுக்கும் நாமதானே வழிகாட்டியா கூட்டிட்டு போறோம் நாமதான் ஜாக்கிரதையா அவங்களை கூட்டிட்டு போகணும்..

ஆமா ஆமா கிரீச்ச்ச்ச்.......

டேய் நான் அப்பவே சொன்னேன் பாத்துப்போடான்னு சரியான நேரத்துல நின்னுட்ட பரவாயில்லை

எல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா நீ வா நம்ம எப்பயும் போல போயிட்டே இருப்போம்...

டேய் சுரேஷ் ரமேஷ், இருந்தாலும் நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்கடா நாங்க ரெண்டு பேரும் ஜோடியா வர்றோம்ன்னு கூட தெரியாம எங்களையும் கவுக்க பாத்தீங்களேடா

டேய் அடங்குங்கடி மாப்ளைகளா எங்களுக்கு தெரியும் உங்களை பத்திரமா எப்படி கூட்டிட்டு போறதுன்னு..அதான் போற வழியில எல்லா இடத்திலயும் நமக்கு சிகிச்சை பண்ண ஆஸ்பிட்டல் இருக்குள்ள அப்புறமென்ன?

இருக்கும்டி இருக்கும்..ஏன் பேசமாட்ட நாங்க ஜோடியா வர்றோம்ன்னு உங்களுக்கு பொறாமைடா அதான் இப்படி பேசுறீங்க..

பின்ன இருக்காதா எல்லாரும் ஒரே இடத்துக்குத்தான் போறோம் நாங்க தனியா வர்றோம் நீங்க மட்டும் சோடியா வர்றீங்க...

அடேய் அடேய் கொஞ்சம் நினைச்சுப்பாருங்கடா நம்மளை நம்பி எத்தனை பேர் இருக்காங்க நம்மளை நம்பித்தானே அவங்களும் இருக்காங்க..

அதெல்லாம் மேல ஒருத்தன் இருக்கான் அவன் பார்த்துப்பாண்டா ஒழுக்கமா நாங்க போற வழியிலே வாங்க இல்லைன்னா நீங்க சோடி போட்டு வர்றீங்களே அப்புறம் ஆளுக்கொருபக்கம் திக்கு தெரியாம போய்டுவீங்க ஜாக்கிரதை..

ம்ம் அதான் நீங்க பண்ற சேட்டையெல்லாம் பொறுத்துகிட்டு வர்றோம்..

டேய் சுரேஷ் ஒரு நாய் வருதுடா நிப்பாட்டுடா நிப்பாட்டு...

வவ்வ் அவ் அவ் அவ்வ்.....

ஒரு உசிரை அநியாயமா கொன்னுட்டியேடா எவ்வளவோ சொல்லியும் கேக்கலியேடா நீ?..

நான் என்னடா பண்றது நமக்கு மேல ஒருத்தன் இருக்கானே அவன் அந்த நாய்க்கு நாள் குறிச்சுட்டான் அதான் போய் சேர்ந்துடுச்சு...

நீங்க இரண்டு பேரும் திருந்தவே மாட்டீங்களாடா?

மேல ஒருத்தன் விட்ட வழி நம்ம எல்லாரும் போயிட்டு இருக்கோம்..நம்மளை மாதிரியே நிறைய பேர் அவன் மேல பாரத்தை போட்டுட்டுத்தான் போயிட்டு இருக்காங்க..

அவனே போதை மயக்கத்தில இருக்கான் அவனப்பத்திப்பேசாத என்று விஜயும் ராஜாவும் சொல்லிகொண்டு இருக்கும் பொழுதே சென்னை டூ மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர் கீழே இறங்கி வந்து 2நானும் அப்போல இருந்து பாத்துட்டு இருக்கேன் என்னடா மேல ஒருத்தன் பாத்துப்பான் மேல ஒருத்தன் பாத்துப்பான்னுட்டு ஒழுக்கமா பேசாம வாங்கடா இல்லைன்னா ஏதாவது ஒரு ஏரியிலயோ குளத்துலயோ உங்களையும் வண்டியையும் தள்ளி விட்டுடுவேன் ஜாக்கிரதை...அப்பிடின்னு ஓட்டுனர் சொல்ல முன் டயர்கள், ரமேஷ் சுரேஷ் பின் டயர்கள் விஜய்+1 ராஜா+1 ரைடர்ஸ் கப் சிப்...

(இது பத்தி எழுத நான் ஒண்ணும் ஓட்டுநர்,டயர் பத்தி எல்லாம் படிக்கலைங்க எல்லாமே கற்பனைதான் என்னடா இவன் தினமும் ஒண்ணுன்னு இடுகை போடுறானேன்னு எரிச்சலா இருக்கா கவலைப்படாதீங்க..எழுத தெரியலைன்றதா பலர் சொல்வதால்,எல்லார்கிட்டயும் சண்டை போடுவதால்,இதுவரைக்கும் பெரிசா யாரையும் இம்ப்ரெஸ் பண்ணாததால இடுகை இடுவதை நிப்பாட்ட நல்ல நாள் பார்க்கப்படுகிறது..அதுக்கப்புறம் சந்தோசமா இருங்க அதுவரைக்கும் இதுமாதிரி அரைவேக்காட்டுத்தனமா எழுதுறதை பொறுத்துக்கங்க நண்பர்களே)

பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து (தொடர் பதிவல்ல)


தொடர்ந்து படமா போடுறதால சரக்கில்லைன்னு நினைச்சுடாதீங்க..
வசந்தை காணோம் காணோம்ன்னு சொல்றவங்களுக்காக இது
மற்றவர்கள் கண்டுக்காதீங்க....

ஊரெல்லாம் பிடிச்ச பிடிக்காத பத்து போட்டுட்டு இருக்காங்க நீ நான் பிடிச்ச பிடிக்காத பத்து போட மாட்டியான்னு என்னோட கைகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க...
இதுவும் இலக்கிய ரசனைதாங்க...
எழுத்துமட்டுமில்ல சமயத்தில் படமும் பேசும்...இதுக்கு எல் கே ஜி போய் படிச்சுட்டு வந்தேனுங்கோ...

(பொறுமையா பார்ப்பவர்களுக்கு பத்து பின்னூட்டங்கள் இலவசம்)

பிடிச்ச பத்து

முதல்ல வந்தவங்க எல்லாம் பிடிங்க ரோஜாவ...



மழை வரும்பொழுது குடைபிடித்து நடந்து பாருங்கள் அந்த ரசனையே அழகு




எப்பவும் சிணுங்கி கிட்டே இருக்குற செல்போன்




சிந்தித்ததை எழுத வைக்கும் பேனா



வேர்வை மட்டுமல்ல சமயத்தில் விடும் ஜொள்ளையும் துடைக்க கைக்குட்டை


படிக்கிறேன் படிக்கிறேன் படிச்சுட்டே இருக்கிறேன்(Lkg)




கரண்டியும் பிடிக்கவைத்தது வளைகுடா



இவரு பொறியில்லாம பிடிச்ச மவுசு



நேரமில்லைன்னு சொல்றவங்களுக்கானது...




காலையில இருந்து இரவு வரை ஒரு பத்து முறையாவது பிடிப்பதுண்டு டீ கப்




இனி பிடிக்காத பத்து

கன்னை பிடிக்க சமயம் வரலை வரலாம்...

எனக்கும் மட்டும் இந்த சதைபிடிப்பு பிடிக்கலைன்னு வருத்தம்



கார் வாங்கறவரைக்கும்தான்...



ஆத்திரம் வார்த்தையளவில் இருப்பதால் இவருக்கும் வேலையில்லை




பாடறதுண்டு ஆனால் மைக்ல பாட சான்ஸ்கிடைக்கலை




சும்மா விளம்பரம்



இவருமா?


பிடிக்கும் ஆனா பிடிக்காது..


மட்டை விளையாட்டு பார்ப்பதோடு சரி


விரைவில் பிடிக்கப்படும்...

November 1, 2009

விசேஷம்....



அட போன வருஷம் நம்ம கூட நிலசொத்துக்காக சண்டை போட்ட சித்தப்பா மகன் செல்வம் வந்துருக்கான்..வாடா வாடா..

பார்டா நம்ம கிட்ட காசு வாங்கிகிட்டு டிமிக்கி குடுத்துட்டு இருந்த அய்யாசாமியும் வந்துருக்கார்..வாங்க வாங்க..

ஆகா..வரதட்சணையில் கொஞ்சம் குறை வச்சுட்டேன்னு ஒருவருசமா வீட்டுப்பக்கம் கூட வராம இருந்த சம்பந்தியும் வந்துருக்கார்..வாங்க சம்பந்தி...

சொத்து பிரிச்சு கொடுத்ததில் குறைச்சலா குடுத்துட்டேன்னு போடா வாடான்னு பேசிட்டு போன மூத்தவன் பாண்டியும் வந்துருக்கான்..வாடா செல்லம்...

மொய் ஒரு ஆயிரம் ரூவா குறைச்சலா செஞ்சுட்டேன்னு ஊர் முழுக்க பேசி மானத்தை வாங்கின தங்கச்சி சொர்ணமும் வந்துருக்கா.. வா சொர்ணம்...

மளிகை கடை பாக்கி காசு கொடுக்கலைன்னு அவமானப்படுத்துன கணேசன் செட்டியாரும் வந்துருக்கார்..வாங்கண்ணே...

சுவத்துல ஆணி அடிச்சதுக்காக வீட்டை காலி பண்ணிட்டு போன்னு சொல்லி விரட்டுன பழைய வாடகை வீட்டின் சொந்தக்காரர் சீனியும் வந்துருக்கார்.... வாங்க சீனி..

அவசர காலத்துக்கு ஒரு பத்தாயிரம் கொடுத்து உதவலைன்னு ஆறுமாசமா பேசாம இருந்த நண்பன் விஜயனும் வந்துருக்கான்..வாடா விஜயா...

தன்னோட மகனுக்கு எம்பொண்ணை கொடுக்கலைன்றதுக்காக வீடேறி சண்டை போட்டுட்டு இனிமேல் உன் வீட்டு வாசப்படி கூட மிதிக்க மாட்டேன்னு சொல்லிட்டு போன மச்சான் ஆறுமுகமும் வந்துருக்கார்..வாங்க மச்சான்...

தெருக்குழாயில ஒரு குடம் தண்ணீர் ஜாஸ்தியா பிடிச்சதுக்காக மூஞ்சி தூக்கிவச்சுட்டு திரிஞ்ச எதிர் வீட்டு மாமி கோகிலாவும் வந்துருக்கா..வாங்க மாமி..

முதலாளிகிட்ட சொல்லி தன்னோட மகனுக்கு வேலை வாங்கித்தரமாட்டேன்னுட்டியெ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனான்னு திட்டிட்டு போன குப்புசாமியும் வந்துருக்கான்... வாடா குப்பு சாமி...

இப்படி இருக்கும் போது சண்டைபோட்ட சொந்தபந்தமெல்லாம் என்னோட இறப்புக்கு வந்ததில எல்லாருக்கும் நன்றின்னு சொல்லி பறந்து சென்றது சொற்ப நேரத்துக்கு முன்னாடி மாரடைப்பில் காலமான மாணிக்கத்தின் ஆவி தன்னோட மனைவியின் குங்குமத்தையும் பூவையும் சந்தோசத்தையும் எடுத்துக்கொண்டு...