Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

February 20, 2012

திருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்

இதுவரையிலும் எனக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ப்ரியமுள்ள பதிவுலக நண்பர்கள் , உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம் . என்னுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் 4ம் தேதி [ 04-03-2012] நடைபெற இருக்கிறது. திருமணம் என்றால் நேரில்தான் அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் கம்பெனியின் மிகத்தாமத திருமண விடுப்பின் காரணமாகவும் , திருமண வேலைகள் வேறு ஆட்டிப்படைப்பதாலும் அனைவருக்கும் நேரில் அழைப்பு கொடுக்க’ இயலவில்லை ஒரு சிலருக்கே நேரில் அழைப்பு கொடுக்க வாய்த்தது ஆகவே அழைப்பு கிடைக்காதவர்கள் ப்ரிய மனது பண்ணி இதையே அழைப்பாக ஏற்றுக்கொண்டு என்னுடைய திருமண வைபவத்தில் கலந்துகொண்டு தங்கள் மேலான வாழ்த்துக்களால் எங்களை ஆசிர்வதிப்பீர்களாக..

ப்ரியமுடன்....
வசந்த் & ஜோ








December 31, 2011

தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..

இப்பொழுது எல்லாம் பணத்திற்க்கு பதில் நிறைய கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்துகிறோம் இல்லையா? கிரெடிட் கார்ட் இல்லாத காலத்திலும் அல்லது கிரெடிட் கார்ட் இல்லாத குடும்பத்திற்க்கும் இருந்த, இருக்கின்ற ஒரே கிரெடிட் அப்பாதான் . எனக்கு பணத்திற்க்கு மட்டுமல்ல புத்திமதிகளுக்கும் அறிவுரைகளுக்கும் கூட என் அப்பாதான் கிரெடிட் கார்ட்.என்னோட அப்பா பாக்கெட்ல எப்பவும் நிறைய பணம் வைத்திருப்பார். அவருடன் வெளியில் செல்லும் பொழுதுகளில் கடை வீதிகளில் இருக்கும் கடைகளில் முதல் கடையில் வாங்கிய பொருள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தாலும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டுவார் அவர்கள் கொடுக்கும் மீதி சில்லரையை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த கடைகளிலும் அதேபோல நூறு ரூபாய் தாளையோ ஐநூறு ரூபாய் தாளையோ கொடுத்து சில்லரை வாங்கிக்கொள்வார் , ஏம்ப்பா அதான் சில்லரை வைத்திருக்கிறீர்களே பின் ஏன் மீண்டும் மீண்டும் சில்லரையாக சேர்க்கிறீர்கள் என்றால் அவசர ஆத்திரத்திற்க்கு பயன்படுத்துவதற்க்கு சில சமயம் சில்லரை இல்லாமல் போய்விடும் அதற்க்காக நான்கைந்து கடைகள் ஏறி இறங்குவதைவிட நம்கையில் சில்லரையிருந்தால் அலைய வேண்டியிருக்காதென்பார். அப்பொழுதிருந்து அதேதான் நானும் பின்பற்றுகிறேன் என் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ நிறைய சில்லரைகள் இருக்கும். அதன் பயன்பாடு அவசர ஆத்திரத்திற்க்கு மட்டுமல்ல மாதக்கடைசியிலும் உதவியிருக்கிறது.

என்னுடைய அப்பா எல்லாவிதத்திலும் திறமையானவராயிருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முடிவெடுப்பதில் அவருக்கு சிறு மன உளைச்சல் உண்டு . என் கைபிடித்து சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது  அவர் படும் பாடு சொல்லி மாளாது அதுபோன்ற தருணங்களிலும் சில வேறு விஷயங்களிலும் அப்பாவிடம் எதிர்த்து அல்லது கடிந்து கொண்டிருக்கிறேன். சில சமயம் அமைதியாகிவிடுவார் சில சமயம் கோவித்துக்கொள்வார் கோவித்துக்கொண்டு சிலநாட்கள் அப்பாவும் நானும் பேசாமலும் இருப்போம் அச்சமயங்களில் நான் என்னுடைய அறையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன் வெளியிலிருந்து பாட்டுச்சத்தம் கேட்கும் அப்பாதான் பாடிக்கொண்டிருப்பார் ''ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாயோ'' வென்று அம்மாவும் அப்பாவும் சிரித்துக்கொண்டிருப்பார்கள் நான் உடனே வெளியில் சென்று ஏன் பெத்தீங்க என்பேன். இதற்காகத்தானடா என்று வாங்கிவந்த எனக்குபிடித்த பால்கோவாவை எடுத்து நீட்டி கன்னங்களில் தடவிக்கொடுப்பார் . பால்கோவாவிற்கு இல்லையானாலும் அப்பாவின் அந்த அன்பிற்க்கு சரண்டராகிவிடுவேன்.

அப்பா பாடல்கள் நன்றாக படிப்பார் பழைய பாடல்கள் விரும்பி கேட்பார் சந்தோஷமான நேரங்கள் துன்பமான நேரங்கள் அதனதன் நேரங்களுக்கேற்ப அப்பா படிக்கும் பாடல்கள் இருக்கும் சந்தோஷமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா சந்தோஷமாக இருக்கிறார் என்று கொள்ளலாம். வருத்தமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா கோபத்திலிருக்கிறாரென்றும் கொள்ளலாம். பெரும்பாலும் அப்பா சந்தோஷமான பாடல்கள் படிக்கும்பொழுதே எனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவின் உடன் பிறந்தோர் அப்பாவுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் . என்னுடைய பாட்டனார் என் அப்பாவின் தந்தை கடைசி வரையிலும் எங்களுடன்தான் இருந்தார். பாட்டையா தன்னுடைய பிற மகன்களைபற்றி வருத்தப்படும்பொழுது ''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை'' என்ற பாடலை அப்பா பாட்டையாவிடமும் பாடிக்காட்டுவார் கூடவே அம்மாவும் பாடுவதுண்டு, வாஸ்தவம்தான்ப்பா என்று பேச்சை முடித்துக்கொள்வார் பாட்டையா.இப்பவும் அந்த பாடல் பார்க்கும்பொழுதெல்லாம் அப்பா ஞாபகம் வந்து கண்கலங்கிவிடுகிறது இந்த பதிவு கூட அந்த பாடல் கேட்டுக்கொண்டேதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..



அப்பா திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் பல வருடங்கள் வேலை செய்திருக்கிறார். நடிகர் ராஜசேகர் எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் உறவினர் என்பதால் ராஜசேகரின் கெஸ்ட் ஹவுஸ் ரூமில் தங்கி வேலை செய்திருக்கிறார் ராஜ சேகர் தம்பி செல்வாவை சிறுவயதில் அப்பா தூக்கி விளையாடியிருப்பதாக கூறுவார். அப்படி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சமயம் அப்பாவுடன் அப்பாவின் நண்பர் ஒருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து பணிபுரிந்திருக்கின்றனர். அந்த நண்பர் ஒரு நாள் சமயம் பார்த்து அப்பாவிடமிருந்த நகைகள் உடைகள் பணம் அத்தனையையும் திருடிக்கொண்டு தலை மறைவாகிவிட்டாராம். அந்த படிப்பினையை என்னிடம் நண்பர்களிடம் பழகுவது தப்பல்ல ,நண்பர்களின் குணம் அறிந்து பழகு , நம்மிடம் நல்லவிதமாக பழகிவிட்டு நமக்கு பின்புறம் போய் நம்மை பற்றி குறை பேசுபவர்களும் உண்டு அதனால் ''ஊரெல்லாம் எனக்கு நண்பர்களிருக்கிறார்கள் என்ற பெருமையை விட நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நாலு நண்பர்கள் இருந்தால் போதும்'' என்பார் . அவர் சொன்னதன் படி இதுவரை என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை ஏழைத் தொட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணிக்கையிலும் ஒன்று கூடியிருக்கிறது.

அப்பா எனக்கு நிறைய பொருட்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ஆனால் எல்லாவற்றையும் கேட்டதும் வாங்கிக்கொடுத்ததுகிடையாது சில நாட்கள் கழித்தே வாங்கிக்கொடுத்திருக்கிறார். பணம் இருக்கே கேட்டதும் வாங்கிக்கொடுத்திருக்கலாம்தானே அப்பா என்றால் , கேட்டதும் வாங்கிக்கொடுத்தால் வாங்கிய பொருளின் மதிப்பறிந்திருக்க மாட்டாய். இப்பொழுது இத்தனை நாட்கள் கேட்டு கேட்டு வாங்கிய பொருளென்று அதை பத்திரமாக வைத்திருப்பாயல்லவா என்பார். கடந்த 1999 ம் வருடம் இதே டிசம்பர் மாதம் வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு நான் கேட்காமலேயே டைட்டன் ஸ்கொயர் டைப் வாட்ச் ஒன்று வாங்கிக்கொடுத்தார். வாட்ச் என்று அப்பா வாங்கிக்கொடுத்தது அதுதான் முதன் முறை அதுவரை நான் வாங்கிய உறவினர்கள் வாங்கிக்கொடுத்த நிறைய வாட்ச்கள் தொலைந்து போயிருக்கின்றன அல்லது உடைந்து போயிருக்கின்றன ஆனால் இந்த வாட்ச் கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாக என்னுடனே இருக்கிறது என்பதை விட அப்பாவின் சார்பில் என்னுடன் இருந்து அன்பையும் அறிவுரையையும் தேவைப்படும் சமயங்களில் தந்துகொண்டேயிருக்கிறது...நிறைய புதுரக வாட்ச்கள் பார்க்கும்பொழுது    வாங்க வேண்டுமென்று ஆசையும் வந்ததில்லை..வேறு ஏதாவது வாட்ச்கள் கட்டும் சூழ்நிலை வந்தாலோ இல்லை இந்த வாட்ச் கட்ட மறந்த நாட்களோ மகிழ்ச்சியுடன் நகர்ந்ததில்லை..



இதோ இன்றைக்கு அப்பாவுக்கு எழுதும் பிறந்த நாள் வாழ்த்தையும் நான் எழுத எழுத பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா..

சென்ற வருடம் அப்பாவுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து பதிவு அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்..


March 9, 2011

வார்த்தை விளையாட்டு - ரூ.1000 பரிசு

வழக்கமாக என்னுடைய பதிவில் இடம்பெறும் வார்த்தை விளையாட்டுப்போட்டிதான், ஆனால் இம்முறை வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டி

போட்டி மிகவும் எளிதானதுதான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரியைப்போன்றே கீழேயுள்ள 15 வினாக்களில் இருக்கும் படங்களை வைத்து பொருத்தமான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும்.விடை தமிழ் , ஆங்கிலம், தங்க்லீஷ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி -1



மாதிரி -2






மாதிரி -3






வினா-1



வினா-2




வினா-3





வினா-4




வினா-5





வினா-6





வினா-7





வினா-8





வினா-9





வினா-10





வினா-11





வினா-12




வினா-13





வினா-14





வினா-15




விதி முறைகள்

1.போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

2. விடைகளை வினாக்களுக்குரிய எண்களுடன் அளித்தால் போதுமானது. விடைகளை பின்னூட்டங்களில் மட்டுமே தெரிவிக்கவும். விடைகள் போட்டியின் இறுதியில் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

3. முதன் முறை தவறான விடைகள் அளிக்கப்பட்டிருப்பின், அவர் அளித்த விடைகளின் எண்களை குறிப்பிட்டு இது தவறு இது சரி என்று ஒரு முறை தெரிவிக்கப்படும். பிறகு ஒருமுறை விடையளிக்கலாம். மொத்தம் இரண்டு முறை விடையளிக்க வாய்ப்பு கொடுக்கப்படும்.போட்டி நடக்கும் நாட்கள் புதன், வியாழன், வெள்ளி.

4. அனைத்து விடைகளையும் கண்டுபிடிப்பவருக்கு புத்தக பரிசுத்தொகை முழுவதும் அளிக்கப்படும், இருவர் அனைத்து விடைகளையும் கண்டுபிடித்திருந்தால் புத்தக பரிசுத்தொகை 500, 500 ஆக பிரித்தளிக்கப்படும், இருவருக்கு மேல் சரியான விடைகள் கண்டுபிடித்திருந்தால் நாக் அவுட் முறையில் மேலும் சில புதிர்கள் கொடுக்கப்பட்டு இருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து விடைகளுக்கும் யாருமே பதிலளிக்கவில்லையெனில் பெரும்பான்மையான கேள்விகளுக்கு யார் விடையளித்திருக்கின்றாரோ அவருக்கு பரிசு கிடைக்கும்.

5.பரிசுத்தொகைக்கான புத்தகம் இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பிவைக்கப்படும். தபால் செலவும் என்னுடையதே.தங்களுக்கு புத்தக நிலையத்தில் இருக்கும் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். வெற்றி பெற்றபின் புத்தகநிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி தரப்படும்.

6.போட்டிக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மாதம் ஒரு முறை நடத்தப்படும்.

7.போட்டி நேர்மையான முறையில் நடக்க தங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது.மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு ஐடியிலிருந்து மட்டுமே விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.

8.கண்டிப்பாக நடுநிலைமையுடன் போட்டி நடத்தப்படும்.நான் எடுக்கும் முடிவே இறுதியானது.

9.போட்டி பற்றிய உங்கள் மேலான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

முந்தைய போட்டிகளை காண விரும்புபவர்கள் கீழேயுள்ள சுட்டியை சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.



                       வாங்க கண்டுபிடிக்கலாம் வார்த்தை விளையாட்டு - 6


வாழ்த்துகள்,
நன்றி ,
வணக்கம்,

ப்ரியமுடன்...வசந்த்.


February 25, 2011

ஒரு சினிமா விமர்சகரின் பரிதாப வாழ்க்கை...!


மனைவி : என்னங்க நீங்கதான் சினிமாவுக்கெல்லாம் விமர்சனம் எழுதுறீங்களே திருமணத்துக்கு முன்னாடி நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ என்னைப்பார்த்து விமர்சனம் எழுத சொல்லியிருந்தா எப்படி எழுதியிருப்பீங்க?

விமர்சக கணவன் : ஆவ்வ்வ்வ் சொந்த செலவுல சூனியம் வச்சிக்க சொல்றியா? 

மனைவி : இப்போ நீங்க எழுதலை இனிமேல் ஒரு வேளை சாப்பாடு கட் ஆகிடும் பரவாயில்லையா?

விமர்சக கணவன் : எழுதுனா மூணு வேளை சாப்பாடும் கட் ஆகிடுமேன்னு யோசிக்கிறேன்டி ஆவ்வ்!!!!

மனைவி :  அது உங்க விமர்சனத்தைப்பொருத்து இருக்கு இப்போ எழுதப்போறீங்களா இல்லையா?

விமர்சக கணவன் : எழுதுறேன் படி

திருமதி . சுப்புலட்சுமி ராமசாமி தயாரிப்பில் கொன்னவாய் திரு. ராமசாமி அவர்கள் இயக்கி வெளிவந்திருக்கும் மிஸ்.மோனலிசா மனிதப்படம் பற்றிய ஒரு பார்வை. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் கொன்னவாய் ராமசாமி அவர்கள் ஒரு ரசனையானவர் என்பதை இப்படம் விளக்குகிறது. கண்களுக்கு கூட உயிரிருக்கும் என்பதை அவளது துறு துறு கண்கள் விளக்குகிறது.பொதுவா ''எல்லா குழந்தையும் பிறக்கும்போது அழும் ஆனா இந்த குழந்தை பிறக்கும்போதே அழகாகியிருக்கிறது''.அவ்ளோ அழகு, மீதி அழகை நீங்களே பூமித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.பிறகு வளரும்பொழுது உடல்கதையோடு குணக்கதையும் அளவாக டைரக்டர் சேர்த்திருப்பதால் திமிர்,துடுக்குத்தனத்தை சில இடங்களில் அழகையும் மீறி ரசிக்க முடிகிறது. எனக்கே இவள் கிடத்திருப்பதால் முடிவு கொஞ்சம் சோகமானதுதான் எனக்குமட்டும் .

மனைவி : ஒகே ஒகே பரவாயில்லை மூணு வேளையும் சோறு கிடைக்கும் இந்த விமர்சனத்துக்காக தினமும் ஒரு வேளை சாப்பாட்டோட எக்ஸ்ட்ராவா ஃபில்டர் காபியும் போட்டுத்தர்றேன் . எங்கப்பாவ கொன்னவாய்ன்னு திட்டுனதுக்காக காலையில நீங்க குடிக்கிற டீய கட் பண்ணிட்டேன்.

விமர்சன கணவன் : ஹும் :(

மனைவி : சரி சரி அடுத்து இப்போ நீங்க சாப்பிட்டீங்களே தோசையும் தக்காளி சட்னியும் அதுபத்தி விமர்சனம் எழுதுங்க அந்த டீய கட் பண்றதா வேணாமான்னு யோசிக்கிறேன் .

விமர்சன கணவன் : உலக வரலாற்றிலேயே தோசைக்கு விமர்சனம் எழுதுன ஆள் நானாத்தான் இருப்பேன் போல சரி சரி எவ்ளவோ எழுதிட்டோம் இத எழுத மாட்டோமா?

தோசை & சட்னி விமர்சனம்

வழக்கமா எல்லாரும் சுடற மாதிரிதான் நீயும் சுட்டுருக்க. என்ன மத்தவங்க தோசைய வட்டமா சுடுவாங்க, நீ தட்டையா சுட்ருக்க இதுக்கு காரணம் யூஸ் பண்ண கரண்டியா? இல்லை உனக்கு வட்டம்னா என்னன்னு தெரியாதான்னு தெரியலை. ஆனாலும் தோசைக்கு வடிவமா முக்கியம் ருசிதான் முக்கியம்ன்ற மாதிரி தோசைக்கு ஆட்டுன மாவுல சேர்த்த உப்பு, தோசை சுடறப்போ சேர்த்த எண்ணெய் இதெல்லாம் கரெக்டா சேர்த்திருந்ததுனால தோசை ருசியா வந்திருக்கு. என்ன அதுக்கு மேட்சா வச்சிருந்த தக்காளி சட்னி தான் பொருந்தலை தோசைக்கு மட்டன்குழம்பு வச்சிருந்தா மேட் ஃபார் ஈச் அதர் அதாவது நம்மள மாதிரியே இருந்திருக்கும், ஜஸ்ட் மிஸ். ''வானத்துல இருக்குற நட்சத்திரத்தை எப்படி எண்ண முடியாதோ அது போலவே இந்த தோசையில இருக்குற ஓட்டைகளையும் எண்ண முடியாதுன்னு தத்துவமா சுட்ருக்கதுலதான்'' உன்னோட டைரக்சன் திறமைய காட்டியிருக்கடி.

மனைவி : இனி மேல் தோசைக்கு சட்னி மட்டும்தான் , மட்டன் குழம்பு வப்பேன்னு கனவுல கூட நினைச்சிடாதீங்க மட்டன் குழம்பு மட்டுமில்ல சட்னி கூட கிடையாது வெறும் தோசையதான் திங்கணும் ஆமா !!!

விமர்சன கணவன் : ஹும் இதுக்கெல்லாம் காரணம் அந்த கனவுதான் உன்னையெல்லாம் பார்க்குறதுக்கு முன்னாடியே கனவுல வந்த இலியானாவே எனக்கு மனைவியா வந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது எல்லாம் விதி வலியது.

மனைவி : ஆச தோச அப்பள  வடை இவரு பெரிய மன்மதரு இவருக்கு நான் கிடைச்சதே பெரிய விஷயம் இதுல இலியானா கேட்குதாம்ல இலியானா?. இலியானாவே கிடைச்சிருந்தாலும் உங்களுக்கு இந்நேரம் தோசை சாப்பிடவா நேரம் கிடைச்சிருக்கும் அவளுக்கு மேக் அப் போட்டு விடறதுக்கே உங்களுக்கு நேரம் சரியா போயிருந்திருக்கும்.இப்போதான தெரியுது டிவியில இலியானா பாட்டு போட்டா ஆன்னு வாய திறந்து பாக்குறது எதுக்குன்னு,''இனிமேல் மவனே டிவியில இலியானா பாட்டு ஓடுச்சு உங்களுக்கு தரிகினதரிகின நடக்கும்'' ஆமா சொல்லிட்டேன்.

விமர்சன கணவன் : இன்னிக்கு நான் முழிச்ச நேரமே சரியில்ல சினிமாக்கு போயிருந்தா இந்நேரம் ஒரு விமரசன் எழுதி என்னோட பிளாக்குக்கு பத்தாயிரம் ஹிட்ஸ் அம்பது ஓட்டு வாங்கி பொழுது நல்லா போயிருந்திருக்கும் தேவையில்லாம உனக்கும் உன் தோசைக்கும் விமர்சனம் எழுதி ''எனக்கு ஹிட்டு கிடைச்சதுதான் மிச்சம்'' . இனிமேல் சினிமாவத்தவிர எதுக்குமே விமர்சனம் எழுத மாட்டேண்டி ஆளவிடு.

மனைவி: அதெப்பிடி அவ்ளோ சீக்கிரம் விட்ருவேனா இன்னிக்கு நைட் வைக்கப்போற பிரியாணிக்கும் நீங்கதான் விமர்சனம் எழுதணும்.

விமர்சன கணவன்: என்னது பிரியாணியா ஆவ்வ்வ்வ்.எனக்கு பிரியாணி பிடிக்கும்ன்னு உன்னை அடிக்கடி பிரியாணி வைக்க சொல்றதுக்கு வைக்கப்போற ஆப்பாத்தான் தெரியுது எனக்கு ஆளா விடு தாயி நான் தியேட்டருக்கு போறேன். ஆமா நான் உன்னை விமர்சனம் பண்ணி எழுதுனேனே நீ என்னை பத்தி விமர்சனம் எழுதக்கூடாதா ?

மனைவி : எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாது !!

விமர்சன கணவன் : அட்லீஸ்ட் அழகான என் பேரைப்பத்தியாவது சொல்லுடி.

மனைவி : வசந்த்ன்ற பேரெல்லாம் அழகா ? கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!

விமர்சன கணவன் :ஙே...!!!!!!!!!!!!!

December 17, 2010

எனக்கு வந்த லவ் லெட்டர்!





இந்த கடிதம் வர்றதுக்கு முதல் நாள் தோழி ஒருவரிடம் ப்லாக் எழுதுறதை நிப்பாட்டிடலாம்ன்னு சொல்லிகிட்டு இருந்தேன் . ஆனா இது மாதிரி லெட்டர் எழுதி அந்த ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டான் இந்த படுபாவி பய...


(ரொம்பவே அழகான கையெழுத்துல்ல) இது மாதிரி ஹேண்ட் ரைட்டிங்லயே பதிவு போடணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன் முடிய மாட்டேன்னுது... சீக்கிரமா அதுக்கு அடுத்த மாசம் பென் மவுஸ்ன்ற சாஃப்ட்வேர் வாங்கிடுவேன் எதிர் பாருங்க என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கவிதைகளையும், ஓவியங்களையும்...


இந்த லெட்டருக்கு எதிர் லெட்டர் எழுத ரொம்பவே பிரியப்பட்டு ரமேஷ் ( ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களைவேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் ஏன்னா என்னைய யாராச்சும் கிண்டல் பண்ணா சிரிச்சு ரசிக்கிற சுய எள்ளல் மிகுந்தவன் நான். அதனால இவர் மட்டுமில்ல இன்னும் இதுக்கு பாட்டியோ பேரனோ லார்டோ லபக்கோ பேர் வச்சு பஸ்லயும் லாரியிலயும் கிண்டல் பண்றவங்களும் தயவு செய்து அந்த லிங்கை இங்கே தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நம்ம ஆட்கள்தான் யாரையாச்சும் கிண்டல் பண்ணா கூடி சேர்ந்து கும்மியடிக்கிறவங்களாச்சே அதான் அந்த சந்தோஷத்தை இங்கயும் பகிர்ந்துக்கங்க...

நன்றி இது வரைக்கும் நம்ம பேரை கும்மியடிச்சவங்களுக்கும் கும்மியடிக்கப்போற்வங்களுக்கும்.....