August 31, 2010

நானும் நித்யாவும் காதலும் ! 2


ஹேய் கீதா நேத்து வெள்ளிக்கிழமைதானே அதான் கொஞ்சம் கோவிலுக்கு போனா நிம்மதியா இருக்கும்ன்னு இவர்கிட்ட "கோவிலுக்கு போகலாம் வர்றீங்களா"ன்னு கேட்டேன் இவரும் "சரி நான் சரியா 6.30க்கு எல்லாம் வந்துடறேன்"னு சொன்னார் நானும் இவர் பேச்சை நம்பி 6 மணிக்கு எல்லாம் கோவிலுக்கு போய் காத்திட்டு இருந்தேன் மணி 7 ஆச்சு 8 ஆச்சு ஆள் வரவே இல்லை மொபைலுக்கு கூப்பிட்டாலும் ஸ்விட்ச்ட் ஆஃப்ன்னு சொல்லுது அதுக்கு மேலயும் அங்கயே உட்கார்ந்திருந்தா நல்லதில்லைன்னு நினைச்சு வீட்டுக்கு கிளம்பிட்டேன் பின்ன நேத்து ஏன் கோவிலுக்கு வரலைன்னு கேட்கறதுக்காக இவரோட மொபைலுக்கு திரும்பவும் கூப்பிட்டேன் ரிங் போகுது ஆன்சரே இல்லை சரின்னு ஆபிஸ்க்கு போன் பண்ணுனா இவரு "அங்க இருந்துகிட்டே நான் இல்லைன்னு சொல்ல சொல்றார்".


வர வர இவர் சரியில்லை என்கிட்ட சரியா பேசறதில்லை என்னை தவிர்த்துடறார் என்ன காரணம்ன்னே தெரியலை என்னை அவாய்ட் பண்ணுனார் கீதா உனக்குத்தான் தெரிஞ்சிருக்குமே நாம நல்லா பழகுற ஒருத்தர் காரணமில்லாம நம்மளவிட்டு விலகிப்போனா நம்மளால தாங்கிக்க முடியாதுதானே அதான் கோவம் வந்து அடிச்சுட்டேன் இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஏன் இவர் என்னை அவாய்ட் பண்ணனும்?


"ஏண்ணா நீ அப்டி பண்ணுன அட்லீஸ்ட் போன் பண்ணியாச்சும் சொல்லியிருக்கலாம்ல நீ அவளுக்கு?"


"இல்ல கீதா ஆபிஸ்ல அன்னிக்கு வேலை ஜாஸ்தி மொபைல் கூட சார்ஜ் சுத்தமா தீர்ந்துடுச்சு"


உச்சி மண்டையில சுர்ருன்னு கோபம் வந்து நித்யா "திரும்ப திரும்ப பொய் மேல பொய் சொல்லி என்ன பத்ரகாளியா மாத்தாதீங்க வசந்த் அப்பறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் ,இப்போ உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் என் கூட வர முடியுமா?முடியாதா?"


"எங்க?"


"எங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது வர முடியுமா முடியாதா?"


"போகலாம் வா!"


முன்னாடி வேகமா நடந்து போன நித்யா அவளோடா ஆக்டிவா ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணுனா பின்னாடி என்னை உட்கார சொன்னா நானும் பின்னாடி உட்கார்ந்து அவளோட போனேன்


வண்டி எடுத்த வேகத்துலயே பறக்க ஆரம்பிச்சுச்சு வண்டி போற ரூட்ட பார்த்தா எக்கோ பார்க்தான் போவான்னு நினைச்சேன் சரியா அங்கதான் போனா வண்டிய பார்க்கிங்க்ல போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ளாற போனோம் அன்னைக்கு ஆள் நடமாட்டம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துச்சு ரெண்டு பேரும் புல் தரையில உட்கார்ந்தோம் ஒரு பத்து நிமிசம் அவ என்கிட்ட எதுவுமே பேசலை 


என்ன நித்யா என்கிட்ட எதுவோ பேசணும்ன்னு கூட்டிட்டு வந்திட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்ன்னு கேட்டுட்டு அவ பக்கம் திரும்புனா முழங்காலை மடக்கி முகத்தை அதுல வச்சு குலுங்கி குலுங்கி அழுதிட்டு இருந்தா


என்னால அவ அழுவறதை தாங்க முடியலை "என்னாச்சு நித்யா ஏன் இப்போ அழுவுற"ன்னு கேட்டேன்


"போடா அழறதையும் அழ வச்சிட்டு இப்போ இப்போ ஏன் அழுவுறன்னு வேற கேட்குறியா?"


அவ கோபத்துல போடான்னு சொல்றது கூட அழகா இருந்துச்சு "சரி என்னாச்சு இப்போ?"


ஏண்டா இப்பிடி பண்ற? ஏன் இப்படி இம்சை பண்ற ? கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? இப்போ உயிரோட ஏன் என்னை கொல்லுற?


நீ முதல்ல கண்ணை தொடச்சிக்கோ ப்ளீஸ் அப்பறம் நான் சொல்றேன்


நான் சொன்னதும் கர்ச்சீப் எடுத்து கண்ணை தொடச்சிக்கிட்டா லேசா மூக்கை உறிஞ்சுகிட்டே "ம்ம் சொல்லு"ன்னாள்


"நீ என்னை லவ் பண்றேன்னு தெரியும் நித்யா" நான் கண்டு பிடிச்சுட்டேன்


ஆமா பெரிய உலக அதிசயம் இவரு கண்டு பிடிச்சுட்டாரு ஆமா நான் உன்னை லவ் பண்றேன் உன்கிட்ட சொன்னது இல்ல அதுக்கென்ன இப்போ?


"இந்த காதல் வேணாம் நித்யா!"


"ஏன்? என்னை பிடிக்கலியா ?என்னை விட பணக்காரியா அழகானவளா எதிர்பார்க்குறியோ?"


"இல்லை நித்யா உன்னைப்போய் யாராச்சும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா?"


"அப்புறம் என்ன?"


"இல்லை நித்யா நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை"


"ஏன் அப்பிடி சொல்ற?"


என்ன நித்யா நீ எவ்வளோ வசதியான வீட்டு பொண்ணு நீ உனக்கு நிறைய சொத்து இருக்கு கார் இருக்கு பங்களா இருக்கு நிறைய படிச்சுருக்க உனக்குப்போய் நான் சரிவராது நித்யா உனக்கேத்த மாதிரி வசதியான வீட்டை சேர்ந்த பையன் தான் உனக்கு சரி


உனக்கு என்னடா குறைச்சல் இந்த ஊர்லயே எனக்கு நீதான் அழகா தெரியுற நல்ல வேலையில இருக்க குடும்பத்தை நடத்தற அளவுக்கு வருமானம் இருக்கு இதை விட வேறென்ன எனக்கு வேணும்?


"அதெல்லாம் சரியா வராது நித்யா ப்ளீஸ் சொன்னா கேளு"


இப்போ உனக்கென்ன பிரச்சினை நான் உன்னைவிட வசதியா இருக்கேன்ன்னுதான சொல்லு இப்பவே என்னோட சொத்து சொந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடறேன் அப்போ சரின்னு சொல்லுவியா?


சே சே எனக்காக எதுக்கு உன்னோட சொந்தபந்தத்தையெல்லாம் விட்டுட்டு வரணும்


"பின்ன ? நான் என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவன்னு சொல்லு?"


அப்படியே சொல்லிவிட்டு திரும்பவும் முழங்காலுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் இந்த முறை அழுகை பலமானதாகவே இருந்தது என்னால அதுக்கு மேல என்னோட அழுகைய கட்டுப்படுத்த முடியாம சே எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றாளேன்னு நினைச்சு எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.


"வேணாம் நித்யா சொன்னா புரிஞ்சுக்கோ!"


அவ அவ்வளவு சொல்லியும் பலவந்தமா நான் அவளோட காதலை ஏற்க மறுத்தேன் இன்னும் அவளோட அழுகை அதிகமாகி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்


ஏண்டா என்னை புரிஞ்சுக்க மாட்டேன்ற நான் இவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சுகிடவே இல்லைல எப்போதாண்டா என்னை புரிஞ்சுக்குவ ஒரு வேளை நான் உயிரை விட்டுட்டா புரிஞ்சுகிடுவியா?


"அவ சொல்லி முடித்த மறு நிமிடம் நான் அவளோட கண்ணாத்தில் பளார் என்று அறைந்தேன்"


நீ போய்ட்டா நான் மட்டும் சந்தோஷமா இருப்பேனா நித்யா? நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நித்யா என்னை கட்டிகிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்றதுக்காகத்தான் இப்படில்லாம் நடந்துகிட்டேன்


உன்னை கட்டிகிட்டா கஷ்டப்படுவேனா "உன்னை கட்டிக்கிடலைன்னாத்தாண்டா உயிரே போனமாதிரி கஷ்டப்படுவேன்"




சொன்ன நித்யா பட்டென்று தன்னோட உதடுகளை என் உதட்டோடு பொருத்திக்கொண்டாள் நான் எதிர் பார்க்கவேயில்லை அவள் கூந்தல் நறுமணமும் பட்டு மாதிரியான உதடுகளும் உதடு ஓரம் வழிந்த தேன் போன்ற ஈரமும் என்னை மறக்க செய்தது அப்படியே என்னை இறுக கட்டிக்கொண்டாள் .


ரொம்பவே இருட்டிவிட்டிருந்தது நானும் நித்யாவும் எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்றே தெரியாமல் உலகை மறந்து இருந்தோம் .


"இங்க பார்டா சூப்பர் பிட்டு ஓடுது" என்ற சத்தம் கேட்டு சட்டென்று விலகி திரும்பினோம்


அங்கே நான்கு இளந்தாரிகள் நின்று எங்களை என்று சொல்வதை விட நித்யாவை ஒரு வித வெறியுடன் பார்த்தனர் அவர்களின் உடையையும் பாவனைகளையும் பார்க்கையில் யோக்கியமானவர்களாக தெரியவில்லை 


"நானும் நித்யாவும் கொஞ்சம் சுதாரித்து எழுந்து ஓட ஆரம்பிக்கலானோம்"


அவர்கள் எங்களை துரத்த ஆரம்பித்திருந்தனர்


தொடரும்






.

August 29, 2010

நானும் நித்யாவும் காதலும் !


நான் வசந்த் மதுரையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் அசிஸ்டெண்ட் என்ஜினியராக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.அன்றும் வழக்கம்போல் மதுரையின் பிரதான ஸ்பின்னிங் மில்லான தியாகராஜர் மில்லின் புதிய யூனிட்டுக்குரிய எலக்ட்ரிக்கல் வரைபடத்தின் ரிவிசன் ஒன்றை அலுவலகத்தில் வைத்து சரிபார்த்து கொண்டிருந்தேன்.மணி பத்து இருக்கும் அலுவலக தொலைபேசி ரிங்கியது.அலுவலகத்தில் ஸ்டெனோவாக இருக்கும் பாமா அக்காதான் போனை எடுத்தாங்க.


போனின் காதை அடைத்தவாறே பாமா அக்கா "உனக்குத்தான் போன்" னு சொன்னாங்க


"யாருக்கா?"


"நித்யா.."


எனக்கு அந்த பேரை கேட்டதும் பேச்சே வரலை "நான் இல்லைன்னு சொல்லிருக்கா"ன்னு சொன்னேன்..


பாமாக்கா என்னை முறைச்சு பார்த்துட்டு போனை காதுக்கு எடுத்துட்டு போனாங்க ஒரு நொடி காதுல வச்சுருந்தவங்க ரீசிவரை கீழே வச்சுட்டாங்க..


"என்னாச்சுக்கா...?"


"அவளே போனை கட் பண்ணிட்டா"


இங்க கொஞ்சம் நித்யா பற்றி சொல்லிவிடுகிறேன் என்னோட ஊர் தேனி அலுவலகம் இருப்பது மதுரையில் தினமும் அலுவலகத்திற்க்கு மூன்று மணி நேர பஸ் பிராயணத்தில் சென்று வருவது இயலாது என்பதால் நான் மதுரையில் இருக்கும் என் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்துதான் அலுவலகத்துக்கு சென்றுவந்தேன்.சித்தப்பா வீடு பழங்கா நத்தத்தில் இருக்கு.என் சித்தப்பாவுக்கு கீதா,ப்ரியான்னு ரெண்டு பொண்ணுங்க. அருண்,சந்தோஷ்ன்னு ரெண்டு பசங்க இருக்காங்க எல்லாருமே படிக்கிறாங்க மூத்தவள் கீதா மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் வருடம் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள் இந்த கீதாவோட க்ளாஸ் மேட் தான் நித்யா.


நித்யாவோட அப்பா மதுரையில் ஃபேமஸ் ஜவுளிக்கடையோட ஓனர் பழங்காநத்தத்துலயே பெரிய அரண்மனை மாதிரி பங்களா வீடு அவளோடது,ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரி , வீட்டுல அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வெளியூர் போய்டுவாங்க அப்படி அவங்க ஊர்க்கு போயிருந்த நேரங்களில் வீட்டில் இருந்தால் போரடிக்கிறதென்பதால் அவ்வப்போது சித்தப்பா வீட்டுக்கு வந்து கீதாவோட கொஞ்ச நேரம் பேசிகொண்டு இருப்பாள் நானும் சித்தப்பா பசங்களும் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடிட்டு இருந்தால் அவளும் எங்களுடன் சேர்ந்து விளையாடுவாள்.கேலி கிண்டல்கள் என்று எங்களுடன் நன்கு பழகினாள். 


நித்யா கலகலன்னு இருப்பாள் எப்பொழுதும் சிரித்தமுகம் , சந்தன கலர் , நிலாவுக்கு ரோஸ் பவுடர் அடிச்ச மாதிரி களையான முகம் அவளோட அந்த அழகான முகத்தின் பாதுகாப்புக்கு என்று வைக்கப்பட்ட மாதிரி வாள் மாதிரி ரெண்டு புருவம் அதுல வெள்ளைப்பளிங்குல செஞ்ச கோலிகுண்டு மாதிரி ரெண்டு கண்ணுன்னு மொத்தத்துல பேரழகி அவள் அவ்வளவு சொத்துக்காரி, பேரழகிக்கு கொஞ்சம் கூட அந்த திமிர் கிடையவே கிடையாது.இப்போ கொஞ்ச நாளாக என்னை காதலிக்கிறாள் அவ என்கிட்ட "ஐ லவ்யூ"ன்னு சொல்லாட்டி கூட என்னால ஓரளவு யூகிக்க முடிஞ்சது பின்ன ஏண்டா அவ்ளோட போனை அட்டெண்ட் செய்யலைன்னு கேட்காதீங்க சொல்றேன் சொல்றேன் ..


"இவ்ளோ அழகானவளை யாருக்குத்தான் பிடிக்காது?" நானும் அவளை விரும்பினேன் ஆனால் எனக்கு அவளப்போல சொத்துபத்து கிடையாது நிறமோ கறுப்புதான் அவளை அவாய்ட் பண்ணுறதுக்கு தாழ்வு மனப்பான்மைதான் ஒரே காரணம்..


அந்த போன் வந்ததுக்கப்புறம் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை நித்யாவோட நினைவு இம்சை செய்தது உடனே மேனேஜர் ரூமுக்கு போய் தலைவலிக்குதுசார் ஒரு அரை நாள் லீவ் வேணும்ன்னு  கேட்டு வாங்கி வீட்டுக்கு திரும்பினேன் அன்னிக்கு சனிக்கிழமை என்பதால் பசங்க எல்லாரும் வீட்ல இருந்தாங்க சித்தியும் சித்தப்பாவும் கூட வெளியூர் திருமணத்திற்க்கு சென்று இருந்ததால் பசங்க மட்டும் தான் வீட்ல இருந்தாங்க


ரிலாக்ஸா பசங்களோட கேரம் போர்ட் விளையாடலாம்ன்னு வீட்டுக்கு போன எனக்கு பெரிய அதிர்ச்சி ஹாலில் கீதா நித்யா ஒரு டீமாவும் அருண் சந்தோஷ் ஒரு டீமாவும் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடிட்டு இருந்தாங்க நித்யாவை பார்த்தும் பார்க்காத மாதிரியே நான் என்னோட லஞ்ச் பேக்கை சமையல் ரூம்ல போய் வைத்தேன் அறையில் நுழையும் போதே நித்யா என்னை ஓரக்கண்ணில் பார்ப்பது தெரிந்தது. பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு தலை வாரி கொஞ்சம் ஃப்ரெஷா ரெடியாகி வீட்டை விட்டு வெளியில் வந்து செருப்பை மாட்டிகிட்டே..


"ஹேய் கீதா நான் கொஞ்சம் வெளியில கிளம்பறேன்"னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே


"இப்போ ஒருத்தர் வாங்கி கட்டிகிட போறார்"ன்னு வீட்டுக்குள்ள இருந்து சத்தம் வந்தது 


சொன்னது நித்யா அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு தெரிந்தாலும் 


"யாருக்கு நித்யா அடி விழப்போவுது..?"ன்னு கேட்டேன்


"எதுவுமே தெரியாம நடிக்கறார் பாரு அவருக்கு"ன்னு சொன்னாள்


"எனக்கு ஒண்ணும் புரியலையே"ன்னு நான் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே உள்ளே இருந்து எழுந்து வந்த நித்யா என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் அவள் அடிப்பதை நான் தடுத்தாலும் அவள் என்னை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை பின்னாடியே பதறிப்போய் ஓடிவந்த கீதா தடுத்ததும்தான் நித்யா என்னை அடிக்கிறதை நிறுத்தினாள்..


"இப்போ எதுக்கு என்னை அடிக்கிற?"


செய்றதெல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க பத்திகிட்டு வருது


"அதான் கேட்குறேன் நான் என்ன செஞ்சேன்..?"


"பேசாதிங்க அப்படியே அறைஞ்சே கொன்னுருவேன்"


"ஹேய் நித்யா இங்க என்ன நடக்குது ஏன் எங்கண்ணாவை அடிக்கிறன்னு?" பொறுமையில்லாம கீதா கேட்கவும் நித்யாவோட முகம் அப்படியே மாறிவிட்டது கண் கலங்கியது மூக்கு விசும்பற சத்தம் கேட்டது உதட்டை கடித்துகொண்டு அழுகையை கட்டுப்படுத்தினாள்..!


"இவர் என்ன செய்தார்ன்னு தெரியுமா உனக்கு?"


தொடரும் ...




.

August 25, 2010

பிரபலங்களின் வலைத்தளங்கள்...




எமி ....


ராமராஜன்....






கவுண்டமணி





பசுபதி








வடிவேலு




சத்யராஜ்






செந்தில் 







பேரரசு






August 23, 2010

தேடித்தேடி..!



மீசையை அழகாக்க முன்னும் பின்னுமாய் வளர்ந்திருந்த முடிகளை வெட்டிக்கொண்டிருந்த பொழுது கத்தரிக்கோல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று தோன்றிய சிந்தனை அபத்தமாய் இருந்தாலும் அந்த நிமிடத்திலிருந்து மனம் கத்தரிக்கோலை சுற்றி சுற்றியே வந்து கொண்டிருந்தது.சரி இணையத்தில் தேடிப்பார்க்கலாமென்ற பொழுது கத்தரிக்கோல் என்று தட்டச்சு செய்யும் விரல்களை தற்செயலாக கவனித்தேன் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் சேர்ந்து முன்னொரு காலத்தில் எளிதில் வெட்டுப்படும் பொருள் எதையோ வெட்டிதீர்த்திருக்கின்றன போலும் அந்த நிமிடமே விடை கிடைத்தது.

அப்பாடா என்று தலையில் வைத்ததுதான் தாமதம் அடுத்த தேடலுக்கான பொறிதட்ட தினமும் வேலை நேரம் முழுவதும் அணிந்திருக்கும் தலைக்கவசத்தின் ரிஷி மூலம் மீது தேடல் திரும்பியது எளிதில் கண்டுபிடிக்க கூடிய விடைதானென்ற பொழுதும் மனம் அதன் ஆதியை கண்டறிய பாடாய் பட்டுகொண்டிருந்தது.போனால் போகட்டும் அதையும்தான் தேடிப்பார்ப்போமே என்று தேட தேட விடை கிடைத்த பாடில்லை . தேடலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆமை வேகத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணும் பொழுதுதான் அதற்கான விடையும் கிடைத்தது.

தேடலில் கிடைத்த வெற்றியை நினைத்து ஒரு சிகரெட்டை பற்றவைக்கும்பொழுது தீக்குச்சியின் ரிஷி மூலத்தை நோக்கி மனம் அடுத்த தேடலை தொடங்கியது . விடை கிடைப்பது எளிதாய் இருக்கும் என்று எண்ணியது தவறு போலும் தேடி தேடி களைத்து பொறுமையிழந்து காலருகினில் இருக்கும் கல்லை எட்டி உதைத்ததுதான் தாமதம் அந்தக்கல் சிறிது தூரம் தள்ளியிருக்கும் இன்னொரு கல்லின் மீது பட்டு நெருப்பாய் தெரித்து தேடலுக்கான விடையையும் தந்தது..

தேடல் மதியவேளையிலென்பதால் நா வறண்டு குளிர் பானம் ஒன்றை உறிஞ்சுகுழாயிலிருந்து உறிந்து கொண்டு இருக்கும் பொழுது உறிஞ்சுகுழாயின் ரிஷி மூலம் அறியவேண்டும் என்ற அவா ஏற்பட்டது நாவின் வறட்சியைவிட இந்த தேடலின் வறட்சி மிகவும் வாட்டியது , அடக்கமுடியாததொன்றுமல்ல இவ்வறட்சி கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும் என்று நினைத்து கொண்டே கடற்கரையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கடல் நீரில் மீன்களை துலாவியோ இல்லை நீரினை துலாவியோ நின்று கொண்டிருந்த கொக்கின் வறட்சியோடு என் தேடலின் வறட்சியும் சேர்ந்து ஒரே நேரத்தில் அடங்கிப்போனது.

அறைக்கு திரும்ப நேரமாகிவிட்டதா என்று கைக்கடிகாரத்தை பார்க்க அடுத்த தேடல் ஆரம்பித்து விட்டது வேலை நேரம் முடிந்தபடியால் அலுவலகத்த்ல் மேலாளர் அறை சென்று கையெழுத்திட்டு திரும்புகையில் எதேச்சையாக கைபட்டு உலக உருண்டை சுற்ற ஆரம்பித்திருந்த நிலையில் விடையும் கிடைத்துவிட்ட படியால் நிம்மதியோடு வீடு திரும்பினேன்...

இப்படி பல நேரங்களில் பல்லின் இடுக்கில் மாட்டி தவிக்கும் சிறு துகளை துலாவி துலாவிதேடும் நாவின் தேடலோடு என் தேடலும் ஒற்றுப்போகிறது துகள் கிடைத்ததும் துப்பியோ அல்லது விழுங்கியோ விட்டதும் அடங்கிப்போகும் அந்த கன நேர நிம்மதியை வார்த்தைகளால் எப்படி விவரிக்க இயலாதோ அப்படியே என் தேடலுக்கான விடைகள் கிடைத்ததும் மனம் அடையும் நிம்மதியையும் வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.இதை எழுதி முடித்திருந்த நேரம் மனம் அடுத்த தேடலுக்கான விடையை நோக்கி விரைகின்றது...

டிஸ்கி : ஏதேனும் ஒரு விஷயம் பற்றி இடுகை எழுத ஆரம்பிக்கும்பொழுது இடுகையில் இருக்கும் ஏதெனும் தெரியாத விஷயங்கள் பற்றி அறிய தேட ஆரம்பிக்கும் பொழுது இடுகையின் சாரம்சம் சுத்தமாக மறந்து தேடல் தொடங்கி கிடைத்த விடையின் தேடல் என்று சங்கிலி தொடராக நீண்டு தேடி தேடி கிடைக்கும் சொற்ப நேரமும் போய்விடுகிறது இதனால் இடுகை இடவும் நாட்கள் எடுத்துக்கொள்கிறது இன்னும் சில நாட்கள் இப்படியே போனால் சுத்தமாக இடுகையே எழுத முடியாத அளவிற்க்கு சென்றுவிடுமோ என்ற பயம் வாட்டுகிறது.இதை தவிர்க்க வழியேதும் இருக்கிறதா?அறிந்தவர்கள் கூறவும் :(


.

August 21, 2010

ரோபோட்ஸ் - 2

சென்ற வாரம் ரோபோட்ஸ் - 1 ல் கூறியது போல இந்த வாரம் சந்தையில் அறிமுகமாயிருக்கும் ரோபோட்களை பற்றி பார்ப்போம்..( ஏற்கனவே இதைப்பற்றி அறிந்தவர்கள் இருப்பீர்கள் இந்த அறிமுகங்கள் இதுவரையிலும்  இவைபற்றி தெரியாதவர்களுக்கானது)

BIPEDAL ROBOTS

டொயோட்டா நிறுவனத்தின் Humanoid Robot கள் உருவாக்கத்தின் முதல் வெர்சனில் மனிதனைப்போன்றே ஓடக்கூடிய நடக்கக்கூடிய ரோபோட் தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோட் மணிக்கு 7கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது.இந்த ரோபோட்டின் இயக்கம் சம தள தரையில் மட்டுமே சாத்தியம்.இதனால் மேடு பள்ளமான தளங்களில் இயங்கமுடியாது இதன் பெயர் Bibedal Robot.Bibedal என்றால் Two feet (இரண்டடி).

                              


இசைக்கும் ரோபோட்

டொயோட்டா நிறுவனம் Bipedal Robot களின் அடுத்த வெர்சனாக இசைக்கும் ரோபோட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.இந்த ரோபோட் 1.5 மீட்டர் உயரம் உடையது.மனிதனைப்போன்றே இருக்கும் இந்த ரோபோட்டின் கைகளில் 17 எந்திரமூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் எடை 35 கிலோ.இந்த ரோபோட்களின் பெயர் Segway ரோபோட்ஸ்

இசைக்க மட்டுமல்ல இவை மனிதர்களுக்கு உதவி செய்யவும் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு உதவி புரியவும் பயன்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.இதில் இரண்டுவகை ரோபோட்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஒன்று மனிதனைப்போலவே நடந்து செல்லக்கூடிய வகையில் கால்களுடையதாகவும் , மற்றொன்று உருண்டு செல்லக்கூடிய வீல்கள் உடையதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

(வரும் காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்க ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)

ஆர்கெஸ்ட்ரா நடத்தும் ரோபோட்கள்
                        
                          

I-foot ROBOTS

இந்த PARTNER ROBOTSகளின் லேட்டஸ்ட் வெர்சன் I-Foot Robots கள் மனிதனை சுமந்து செல்லும் யானையைப்போலவே நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு அலேக்காக தூக்கி செல்வதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற பதிவில் வடுவூர் குமார் கேட்டிருந்தார் படியில் முதியோர்களை எடுத்து செல்லும் வகையில் ரோபோட்கள் இருக்கின்றதா என்று. இந்த ரோபோட்கள் அந்தப்பணியை கச்சிதமாக செய்கின்றன என்பதை வீடியோ பார்த்தால் புரியும்.

இதன் முந்தைய வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோட்கள் சமச்ச்சீரான தளத்தில் மட்டுமே நடந்து மற்றும் உருண்டு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த ஐ-ரோபோட்கள் எந்த வகை தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இந்த ரோபோட்களின் கால்களில் வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் வசதி.

                           

அடுத்த வாரம் வேறு ஒரு ரோபோட்டினை பற்றி காண்போம்... நன்றி,,,



.

August 18, 2010

உமாசங்கர் IAS பணிநீக்கம் ஏன்? அரசு விளக்கம் - ஏற்றுக்கொள்ள முடியாது

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:



இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

_________________________________________________________________________


புலம்பல்-1

தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பாவம் , தீண்டாமை ஒரு கொடுஞ்செயல் என பள்ளி பாடப்புத்தகத்தின் முதற்பக்கம் போட்டுவிட்டு அதே பாடப்புத்தகத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா அதை தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் பாவம் என்ற மகாகவி பாரதியாரின் பாடலும் வைத்திருப்போம் நாங்கள் அதே நேரம் படிப்புக்கும் அந்த படிப்பை முடித்தபின் வேலைக்கும் ஜாதிச்சான்றிதழும் கேட்போம், இதுதானே எங்கள் நீதி, கொள்கை, தர்மம் , நியாயம், வெங்காயம், சீரகம், கடுகு எல்லாம்...
_________________________________________________________________________


புலம்பல்-2

போலிஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் அமர்ந்தார் என்று 27ஆண்டுகள் முன்பே  தெரியவில்லையா ? கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து தற்பொழுது போலிச்சான்றிதழ் கொடுத்ததனால் பணி நீக்கம் என்பது பழி வாங்கும் நடவடிக்கை என்பதை தவிர வேறொன்றும் இல்லை. திறமைக்கும்,படிப்புக்கும் மரியாதை அளிக்காமல் ஜாதிப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டாகவே அரசுப்பணிகள் இருப்பதால் திறமையில்லாத வீணர்களின் கையில் அரசு இயந்திரம் சிக்கி கொண்டு முழி பிதுங்கி எண்ணற்ற தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.
_________________________________________________________________________

                                                            


இப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியல் வாதிகள் இருக்கும் தமிழ் நாட்டிற்க்கு திரு உமா சங்கர் IAS போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதினால்தான் ஓரளவாது பயத்தோடு ஆட்சி செய்வார்கள் என்பதனாலும் ஒரு நேர்மையான அரசாங்க ஊழியர் தண்டிக்கப்படக்கூடாது என்பதாலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திரும்ப பெற்று அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கருத்துக்களுடன் சக பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு திரு.தருமி ஐயா அவர்களின் வேண்டு கோளின் படி...

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.



__________________________________________________________________________________

இந்த செய்தியை வாசிக்கும் படிக்கும் பதிவர்கள் தாங்களும் தங்களின் எதிர்ப்பை கண்டனங்களை இன்று புதன்கிழமை தங்களின் வலைப்பதிவில் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

வரும் நாட்களில் இதுபோல் எந்த ஒரு தனி மனிதரும் அவர்களின் நேர்மைக்காக, பழிவாங்கப் படுவோராயின் இதே உணர்வுடன் ஜாதி, மத , பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக...

இது பற்றிய சில இடுகைகள்:




August 15, 2010

நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?





மூன்று பக்கங்கள் இந்திய

அரசியலை சாடி எழுதியிருந்ததை

பற்றி கிழித்துபோட்டுவிட்டேன்

வெளிநாட்டில் உட்கார்ந்துகொண்டு

வெட்டியாய் எழுதி கிழிக்கமட்டும்தான்

எனக்கு தெரிந்திருக்கிறது

இலக்கணம் மீறாமல் காதல் கவிதைகள்

எழுத தெரிந்த எனக்கு

ஒருநிமிடம் எந்த பக்கங்களையும்

புரட்டாமல் இந்திய தேசிய கீதத்தை

தப்பில்லாமல் எழுதவோ சொல்லவோ

தெரிந்திருக்கவில்லை

வெட்கி கூசி கூனி குருகிப்போனேன்

எனக்கென்ன தகுதியிருக்கிறது

இது எத்தனையாவது சுதந்திர தினம்

என்று கூட தெரிந்திருக்கவில்லை

ஆனால் வாய் கிழிய சுதந்திரத்தை

வீணடிப்பவர்களைப்பற்றி

வீணாய் பேசியிருக்கிறேன்...

இந்தியாவில் பசுமை புரட்சி

வேண்டும் என்று காகிதங்களில்

பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன்

அந்த பசுமை காணாமல்

போவது காகிதத்தில்தான்

என்றுகூட தெரியாமல்..

இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்

என்னால் இப்படி சுதந்திரமாக

எதையும் எழுத முடிந்திருக்காது

இந்தியாவைச்சாடி எழுத

முன்னூற்றி அறுபத்தி நான்கு

நாட்கள் இருந்த பொழுதும்

மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்

இந்தியாவை போற்றி பாடுகிறேன்

எத்தனை உயிர்கள் இழந்து

பெற்ற என் தாய் நாட்டின்

சுதந்திரத்தை எல்லை சென்று

காக்கமுடியாவிடினும்

போற்றுகிறேன் வாழ்க இந்தியா

வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...!



    


அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..!

August 14, 2010

ரோபோட்ஸ் -1

ரோபோட்கள் அறிமுகம்

ரோபோட்கள் கி.மு.400லே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றது.முதன்முதலாக கிரீஸ் நாட்டில் ஆர்க்கிமிடிஸ் எனும் கணித மேதை இறகுகளை அசைக்க கூடிய மரத்தால் ஆன புறா ஒன்றை தனது எந்திர தொழில் நுட்பத்தின் மூலமாக சுமார் 200மீட்டர் தூரம் பறக்க கூடிய அளவில் தயாரித்தார். இதுவே இப்பொழுது இருக்கும் ஆகாய ஜெட் விமானங்கள் இயங்குவதற்க்கான மூல விதியாகும்.இந்த மரத்தால் ஆன புறாவே முதல் ரோபோட் எனவும் வரலாறுகள் மூலம் அறியப்படுகிறது.

ரோபோட் பெயர்க்காரணம்

ரோபோட் என்ற பெயர் செக் மொழியிலிருக்கும் ரோபோடோ எனும் வார்த்தையிலிருந்து வந்ததாகும் . இந்த வார்த்தையை செக் எழுத்தாளர் காரல் கபெக் (Karel Capak) பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அடிமைத்தொழிலாளி என்பதாகும்.

ரோபோட்கள் எப்படி இயங்குகின்றது?

மனிதர்கள் நாம் எப்படி உடலளவில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் இயங்குவது மூளையின் கட்டுப்பாட்டில்தான் என்பது அனைவரும் அறிவீர்கள்.இதே போலவே ரோபோட்கள் வடிவங்கள் , அவை செய்யும் வேலைகள் பொறுத்து வேறுபடினும் அனைத்து ரோபோட்களின் அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றுதான்.ரோபோட்களின் உடலமைப்பு நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.ரோபோட்கள் நகருவதற்க்கு 12க்கும் மேற்பட்ட நகரக்கூடிய பாகங்கள் பயன் படுகின்றன,இந்த நகரும் பாகங்களை இயக்க மின்சார மோட்டாரினால் சுற்றக்கூடிய சக்கரங்கள் பயன்படுகின்றன்.ரோபோட்களின் நகரும் பாகங்கள் பெரும்பாலும் உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கும்.





நம் உடலின் கை,கால்களில் இருக்கும் எலும்பு மூட்டுக்கள் போலவே இந்த ரோபோட்டின் நகரும் பகுதிகள் அனைத்தும் மின்சார மோட்டார்களால் இயங்கும் எந்திர மூட்டுக்கள் ,பிஸ்டனின் மூலம் இயக்கப்படுகின்றன.இந்த மின் மோட்டார்களை இயக்குவதற்க்கான மின்சாரம் பேட்டரியிலிருந்து பெறப்படுகிறது.கீழ்கண்ட ரோபோட்டின் அடிப்படை மின்சுற்று(சர்க்யூட்)ல் இருந்து பெறப்படும் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் மின்சாரத்தின் மூலம் வால்வுகள் செயல்படுத்தப்பட்டு கால்கள் மற்றும் ரோபோட்டின் அசையும் அனைத்து பாகங்களும் உயிரூட்டப்பட்டு முன்னும் பின்னோ அல்லது மேலும் கீழோ இயங்குகின்றன.


.

இந்த சர்க்யூட்ல் இருக்கும் மைக்ரோசிப்ல் ரோபோட்டின் இயக்கங்கள் முன்பே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.ரோபோட்டின் இயக்கங்களை தேவைப்படும்பொழுது மாற்றியமைத்துகொள்ளவும் இயலும்.இந்த ரோபோட்கள் சென்சார்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.சில ரோபோட்கள் ஒளியை உணரக்கூடிய வகையிலும் சில ரோபோட்கள் சுவையை உணரும் வகையிலும் ,கேட்கும் திறனுடைய வகையிலும் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ரோபோட்டில் இருக்கும் சில சென்ஸரிங் திறனுக்காக ரோபோட்களின் கால்களின் இருக்கும் மூட்டுப்பகுதியில் ஒளியை உமிழும் டையோட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன(LED). இந்த LED கள் மூட்டுகளின் இயக்கத்தினை கணக்கிட்டு மெமரிசிப்க்கு அனுப்புகிறது. இதுபோல நிறைய நுண்ணிய பாகங்கள் மூலம் அமையப்பெற்ற ரோபோட்கள் நடைமுறை வாழ்வில் மனிதனால் செய்யக்கூடிய அனைத்து வகை வேலைகளையும் செய்கின்றன.
(நான் அறிந்த மட்டிலும் என்னால் முடிந்த அளவு விளக்கம் இது.விரிவாக விளக்க ஒரு புத்தகமே தேவைப்படும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன)


இயந்திரகை வகை சேர்ந்த ரோபோக்கள்


கார் உற்பத்திக்களின் தேவை அதிகரித்திருப்பதால் காரின் உற்பத்தி வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஃபோர்ட் கார் கம்பெனி தொழிற்ச்சாலையில் 90 ரோபோட்கள் பயன்படுகின்றன என்பதை அறிவீர்கள்.இந்த வகை ரோபோட்கள் பற்றி பார்ப்போம் . இயந்திரகை ரோபோட்கள் என அறியப்படும் இவ்வகை ரோபோட்கள் உலோகத்தால் ஆன ஏழு பகுதிகளும் ஆறு எந்திரமூட்டுகளும் கொண்டிருக்கும்.இந்த எந்திர மூட்டை இயக்க ஸ்டெப் மோட்டார்கள் பயன்படுகின்றன.நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மோட்டாரைபோன்று இல்லாமல் இந்த ஸ்டெப் மோட்டார்கள் துல்லியமான வேகமும் இயக்கமும் உடையதாகும்.இதனால் இந்த ரோபோட்டை இயக்கும் கணிணி ரோபோட்டை எந்த குளறுபடியும் இல்லாமல் இயக்குகிறது . இந்த ரோபோட்கள் இயக்கம் சென்சார் மூலம் கண்காணிக்கப்படுவதாலும் எந்த இடையூறுமின்றி ரோபோட்கள் இயங்குகின்றன.



இந்த எந்திரக்கை ரோபோட்கள் தோள்பட்டை , முழங்கை,மணிக்கட்டு என்று மனிதன் கைகள் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.கைகளின் இறுதியில் இருக்கும் எண்ட் எஃப்ஃபெக்ட்டர்தான் இதன் முக்கிய பகுதியாகும் இதன் மூலமே அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன. இதில் தோள்களோடு இணைந்திருக்கும் கைகள் நமது கைகள் போலவே சுமார் 6டிகிரி கோண அளவில் சுழலும் தன்மையுடையவை. இந்த எந்திரக்கரங்கள் ப்ரஸ்ஸர் சென்சார் அமையப்பெற்றிருப்பதால் இது பிடித்திருக்கும் பொருள் எந்த அழுத்தத்தில் பிடித்திருக்கிறது என்பதை அறியவும் , பொருட்களை எண்ட் எஃப்ஃபெக்ட்டர் பிடியிலிருந்து நழுவி விடாமலும் இருக்கவும் உதவுகிறது.

கார் தொழிற்ச்சாலையில் பயன்படும் ரோபோட்கள் வெல்டிங், ட்ரில்லிங், ஸ்பேர்பார்ட்ஸ்கள் பொருத்துதல் மற்றும் மனிதன் செய்யக்கூடிய கடினமான பணிகளையும் எளிதாக விரைவாக செய்கின்றன.போல்ட்கள் பொருத்தும்பொழுது கணிணியிலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி சரியான வேகத்திலும் விசையிலும் பொருத்துகின்றன.அதே போலவே ட்ரில்லிங் பண்ணும்பொழுது சரியான அளவில் சரியான இடத்தில் துல்லியமாக ட்ரில் செய்கின்றன.

கார் தொழிற்சாலையில் வெல்டிங்கில் ஈடுபடும் ரோபோட்கள்


கார் உதிரி பாகங்களில் ஈடுபட்டிருக்கும் ரோபோட்கள்


இத்துடன் இந்த அறிமுகப்பகுதி முடிவடைகிறது. மேலும் என் நண்பர்கள் சிலரின் விருப்பத்திற்க்காக நான் அறிந்த ஆரம்பத்திலிருந்து இப்பொழுதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ரோபோட்களின் விபரங்களை உங்களுடன் ஓவ்வொரு சனி, ஞாயிறுகிழமைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி...


.

August 10, 2010

எந்திரனுக்கு அடுத்து கோகோ..!

சுமார் 300 வருடங்கள் முன்னோக்கி சென்று பார்க்கும் பொழுது அந்த காலம் எந்திரன் எனும் ரோபோக்கள் வாழும் ரோபோக்கள் காலம் என்று அழைக்கப்படுகிறது இந்த ரோபோக்கள் காலத்தில் சில நிகழ்வுகள் எப்படியிருக்கும் என்று ஒரு மகா மொக்கை கற்பனை உலகத்திற்க்கு உங்களை அழைத்து செல்கிறேன்...!

CC33 எனும் கணவரும் CC95 எனும் மனைவியும் திருவாளர் கணவருக்கு இரண்டு மாதங்களாக காது கேட்காத காரணத்தினால் The Robot Service center  எனும் ரோபோக்களின் மருத்துவமனைக்கு சென்று அங்கு Er.TT11 எனும் மருத்துவரை பார்க்கிறார்கள் அவர்களை பரிசோதித்த Er.TT11 மிஸ்டர் CC33 உங்களின் முக்கிய சத்தங்களை உணர பயன்படும் ஒயர் ஒன்று ஷார்ட் ஆகியிருந்ததால் இருந்த பிராபலம் இப்பொழுது சரி செய்யப்பட்டது என்றார்..

ரோபோக்களின் திருமண தளமான Robot Matrimonial .comல் மணமகன் தேவை எனும் பகுதியில் நல்ல 25% சார்ஜ் மட்டுமே தீர்ந்த மணமகளுக்கு அதே சார்ஜ் அளவே தீர்ந்து போன , AB மாடலைச்சேர்ந்த சேர்ந்த மணமகன் தேவை போன்ற விளம்பரங்கள் காணமுடிந்தது.




சென்னை ரிட்சி ஸ்ட்ரீட் எனும் இடத்தில் ரோபோக்களின் இனப்பெருக்கத்திற்க்கென்றென புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலை நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மடிக்கணிணிகள், மொபைல்கள் எனும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள்துறை இலாக அதிகாரி Mr.DH3456 செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என எலக்ட்ரிக் டிவியில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது அந்த நியூஸ் ரீடர் AA2231 ஒவ்வொரு செய்திகளின் முடிவிலும் ஓவர் ஓவர் என்று கூறி அழகாக செய்திகளை விவரித்துக்கொண்டிருந்தார்"

அதே எலக்ட்ரிக் தொலைக்காட்சியின் அன்றைய சிறப்பு பார்வையாக பண்டைய காலத்தில் வாழ்ந்து வந்த மனித நாகரீகங்கள் பற்றியும் , அழிந்துவரும் மனித இனம் இன்னும் 345 பேர்களே வாழ்ந்து வருகின்றனர் என்றும் ,நம் மெமரி சிப்களை அவர்களுக்கு பொருத்தியாவது அவர்களை அழியாமல் காப்பது நம் கடமை எனவும் சிறப்பு பார்வையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ரோபோக்களின் காலத்தில் மிகப்பெரிய மின்சாரபுரட்சி ஏற்பட்டது நீர்,காற்று எனும் மின்சாரத்தை தயாரிக்கும் மூலங்கள் தீர்ந்து போன சூழலில் சூரிய சக்தி மின்சாரம் எனும் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட விதியின் படியே அனைத்து ரோபோக்களும் சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றிக்கொள்ளும் பேட்டரியுடன் இயங்கின..

ரோ.பி.101 (ரோபோக்களுக்கு பின்) என்ற வருடத்தில் அதிக சக்திவாய்ந்த மெமரிசிப்களுடன் தயாரிக்கப்பட்டிருந்த QQ2990 எனும் மாடல் ரோபோக்கள் இனத்திற்க்கும், ரோபோக்களின் மிகப்பழமை வாய்ந்த WW3000 எனும் மாடல் ரோபோக்கள் இனத்திற்க்கும் இடையே மிகப்பெரிய யுத்தம் ஒன்று ஏற்பட்டது இந்த யுத்தத்தில் WW3000 எனும் மாடலைச்சேர்ந்த ரோபோக்கள் QQ2990 மாடல் ரோபோக்களால் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் அனைத்து மெமரி சிப்களின் மெமரிகளும் அழிக்கும்படியான கொடுமையான தண்டனை The Courts of QQ Robots எனும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

ரோ.பி.123 என்ற வருடத்தில் நிலாவிற்க்கு சுமார் 1கோடி ரோபோக்கள் பூமியிலிருந்து புலம் பெயர்ந்து சென்றிருப்பதாகவும் வரும் காலங்களில் இது இருமடங்காக உயராலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர் Mr.QQ3356 தெரிவித்தார்.

ரோபோக்களின் உயிர் எனப்படும் மெமரி சிப்களை தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருளின் பற்றாக்குறையால் ரோபோக்களின் எண்ணிக்கை உயர்வது தடுக்கப்பட்டிருந்தது ஒரு கட்டத்தில் மூலப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில் ரோபோக்கள் தங்களுக்கு அடுத்த சந்ததிகளை வேறொரு gogo எனும் மூலப்போருட்கள் மூலம் தயாரித்து சோதனைக்கு விட்டிருந்தனர் . 

இந்த புதியவகை gogo எனும் கனிமத்தினை உருவாக்கவும்,புதிய சந்ததிகள் அழியாமல் இருக்கவும் gogotree எனும் செயற்கை மரங்கள் பூமியெங்கும் நடப்பட்டன.இந்த செயற்கை மரங்களுக்கு உரமாக செயலிழந்து இறந்துபோனதாக கருதப்பட்ட ரோபோக்களின் பாகங்கள் உரங்களாக செலுத்தப்பட்டதால் பூமியெங்கும் வியாபித்திருந்த ரோபோக்கழிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டது...

இந்த புதுவகை சந்ததிகள் சூரிய மின்சாரத்திலே இயங்குபவையாகவும் இவற்றின் மூளையாக புதிய வகை gogo எனும் கனிமத்தினால் ஆன மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுபவையாகவும் இருந்தன இவற்றிற்க்கும் Gogo என்றே பெயரிடப்பட்டது நாளடைவில் ரோபோக்களின் இனம் அழிந்து இந்த Gogo எனும் சந்ததியினரால் பிரபஞ்சம் நிரம்பியிருந்தது... 


அப்பொழுது ரோ.பி 1023 என்ற வருடத்தில் மனித இனத்தின் கடைசி உயிரினமும் அழிந்ததாக கோகோக்களின் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன...

(கோ.பி) கோகோக்களுக்கு பின் என்ற காலமும் வரலாம்...!

..

August 7, 2010

கவிஞருடன் ஒருநாள் !!!!

கவிஞர் : சித்திரையிரவின்
                     நித்திரை கலைந்திருக்கிறேன்
                     நித்திரையில் வந்தவளால்
                     புண்பட்ட இதழ் இதமடைய
                     சூடான தேநீர் தருவாயா?
                     தந்தால் சொல்கிறேன்
                     நித்திரையில் வந்தவள்
                     யாரென்று!

கவிஞர் மனைவி : தூ காலங்காத்தாலே ஆரம்பிச்சுட்டீகளா ராஸா? எந்திரிச்சு பல்லு கூட விலக்கலை ஊத்தவாய்ல கவிதை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு...போங்க போயி பல் விலக்குங்க அப்புறம் டீ சாப்டலாம்...

கவிஞர் : ஏன் விலக்குகிறேன்
                     என்றே தெரியாமல் தினமும்
                     விலக்குகிறேன்
                     விரல் வலிக்க
                     விலக்கி விலக்கி
                     பார்த்தும் விலகவில்லை
                     பற்கள் இது என்ன மரபோ?

கவிஞரின் மனைவி : செருப்பு நேத்து ராத்திரி தின்ன பிரியாணி வாய்ல நின்னு ஊசிப்போய் இங்க கப்படிக்குது சீக்கிரம் பல்ல விலக்கிட்டு வாருமய்யா!

கவிஞர் : சூடான தேநீர் கேட்டேன்
                     சூடான்காரன் தேநீர்
                     கொடுக்கிறாய் ஏன்?
                     பாலில் தேநீர் உருவாக்கும்
                     வித்தை கற்கவில்லையா
                     பெண்ணே?

கவிஞரின் மனைவி : வெங்காயம் பால்காரனுக்கு மூணு மாச கடன் பாக்கி இதுல பால் டீ வேணுமாம்ல குடுத்தத குடிச்சுட்டு வேலைக்கு கிளம்ப வேண்டிய வேலைய பாருங்க ராஸா!!!!

கவிஞர் : ஒரு வாளி கடலில்
                     நான் குளிக்கும்
                     ஆனந்த குளியலே
                     ஒரு கவிதையாய்...
                     ஒருவேளை
                     ஆனந்த விகடனில்
                     வருமோ?

கவிஞரின் மனைவி : பிபிசியில வரும் பிச்சுபுடுவேன் பிச்சு குளிச்சுட்டு சீக்கிரம் வாங்க சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் தின்னுட்டு கிளம்புங்க...

கவிஞர் : இலைச்சோறு
                     சாப்பிடாமல்
                     இளைத்துவிட்டேன்
                     என்கிறேன்
                     நீயோ பழைய
                     சோறு சாப்பிடுங்கள்
                     பருத்து விடுவீர்கள்
                     என்கிறாய் எந்த ஊர்
                     நியாயம் இது?

கவிஞரின் மனைவி : மீந்தது யார் தின்னுவா உங்களை தவிர ? என் ராசா இல்ல மதியானத்துக்கு சூடா கொடுத்தனுப்புறேன் சாப்பிட்டு கிளம்புங்க என் கண்ணுல்ல...

கவிஞர் : பொடி போட்டுக்கொண்டே
                     பொடிநடையாய்
                     நடக்கிறேன்
                     பொறம்போக்கு
                     வீட்ல சொல்லிட்டு
                     வந்துட்டியா?
                     என்கிறான் சைக்கிள்
                     ஓட்டும் பொடிப்பையன் !

மனைவியின் மனசாட்சி : பிசினாரி காசு கொடுத்து பஸ்ல போக மாட்டீங்களாக்கும்?

கவிஞர் : ஓடிபோய் பஸ் ஏறி
                     பிடிங்க துட்டு
                     கொடுங்க சீட்டு
                     என்றேன் ஓட்டுனரிடம்
                     யோவ் கண்ணாடிய சரியா
                     போடுமய்யா நடத்துனர்
                     பின்னாடி இருக்கார்
                     என்றவரிடம்
                     எப்படிச்சொல்வேன்
                     மனைவியின் பிக்கல்
                     தாங்காமல் மேலோகத்திற்க்கு
                     செல்ல சீட்டு கேட்டது
                     அவரிடம் தானென்று !

மனைவியின் மனசாட்சி : சார் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்துடுங்க சார்!!!!!

முற்றும்...




.