சென்ற வாரம் ரோபோட்ஸ் - 1 ல் கூறியது போல இந்த வாரம் சந்தையில் அறிமுகமாயிருக்கும் ரோபோட்களை பற்றி பார்ப்போம்..( ஏற்கனவே இதைப்பற்றி அறிந்தவர்கள் இருப்பீர்கள் இந்த அறிமுகங்கள் இதுவரையிலும் இவைபற்றி தெரியாதவர்களுக்கானது)
BIPEDAL ROBOTS
டொயோட்டா நிறுவனத்தின் Humanoid Robot கள் உருவாக்கத்தின் முதல் வெர்சனில் மனிதனைப்போன்றே ஓடக்கூடிய நடக்கக்கூடிய ரோபோட் தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோட் மணிக்கு 7கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது.இந்த ரோபோட்டின் இயக்கம் சம தள தரையில் மட்டுமே சாத்தியம்.இதனால் மேடு பள்ளமான தளங்களில் இயங்கமுடியாது இதன் பெயர் Bibedal Robot.Bibedal என்றால் Two feet (இரண்டடி).
இசைக்கும் ரோபோட்
டொயோட்டா நிறுவனம் Bipedal Robot களின் அடுத்த வெர்சனாக இசைக்கும் ரோபோட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.இந்த ரோபோட் 1.5 மீட்டர் உயரம் உடையது.மனிதனைப்போன்றே இருக்கும் இந்த ரோபோட்டின் கைகளில் 17 எந்திரமூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் எடை 35 கிலோ.இந்த ரோபோட்களின் பெயர் Segway ரோபோட்ஸ்
இசைக்க மட்டுமல்ல இவை மனிதர்களுக்கு உதவி செய்யவும் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு உதவி புரியவும் பயன்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.இதில் இரண்டுவகை ரோபோட்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஒன்று மனிதனைப்போலவே நடந்து செல்லக்கூடிய வகையில் கால்களுடையதாகவும் , மற்றொன்று உருண்டு செல்லக்கூடிய வீல்கள் உடையதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
(வரும் காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்க ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)
I-foot ROBOTS
இந்த PARTNER ROBOTSகளின் லேட்டஸ்ட் வெர்சன் I-Foot Robots கள் மனிதனை சுமந்து செல்லும் யானையைப்போலவே நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு அலேக்காக தூக்கி செல்வதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற பதிவில் வடுவூர் குமார் கேட்டிருந்தார் படியில் முதியோர்களை எடுத்து செல்லும் வகையில் ரோபோட்கள் இருக்கின்றதா என்று. இந்த ரோபோட்கள் அந்தப்பணியை கச்சிதமாக செய்கின்றன என்பதை வீடியோ பார்த்தால் புரியும்.
இதன் முந்தைய வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோட்கள் சமச்ச்சீரான தளத்தில் மட்டுமே நடந்து மற்றும் உருண்டு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த ஐ-ரோபோட்கள் எந்த வகை தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இந்த ரோபோட்களின் கால்களில் வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் வசதி.
இதன் முந்தைய வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோட்கள் சமச்ச்சீரான தளத்தில் மட்டுமே நடந்து மற்றும் உருண்டு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த ஐ-ரோபோட்கள் எந்த வகை தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இந்த ரோபோட்களின் கால்களில் வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் வசதி.
அடுத்த வாரம் வேறு ஒரு ரோபோட்டினை பற்றி காண்போம்... நன்றி,,,
.




