Showing posts with label 150வது நாள் ஆரவார வெற்றி. Show all posts
Showing posts with label 150வது நாள் ஆரவார வெற்றி. Show all posts

July 4, 2010

இருவார்த்தை கதைகள் -3







தலைப்பு : இரட்டைக் கொலைகாரன்

கதை : சிகரெட் லைட்டர்

************************************************************

தலைப்பு : கோவில் வாசலில் உண்டியல்

கதை : கடவுளின் திருவோடு

************************************************************

தலைப்பு : மழைக்கு முன்னான தூரல்

கதை : வாசனை திரவியம்

************************************************************

தலைப்பு : கால்கள் வாசிக்கும் மேளம்

கதை : ஹவாய் செருப்பு

************************************************************

தலைப்பு : அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

கதை : டெஸ்க் டாப்(DESKTOP)

************************************************************

தலைப்பு : மருத்துவம் படிக்காதவர்களின் அறுவை சிகிச்சை வெற்றி

கதை : பிறந்தநாள் கேக்

************************************************************

தலைப்பு : அந்த நீச்சல் வீரர் வீடு எங்க இருக்குங்க?

கதை : குளத்து மேட்டுல

************************************************************

தலைப்பு : நியூஸ் ரீடர் திருமணம் 

கதை :  முக்கியச் செய்தி 

************************************************************

தலைப்பு : பூக்காரியின் விளம்பரப்பலகை

கதை : முடிந்த கொண்டை

***********************************************************

தலைப்பு : சாமியார் மடம்

கதை : விபச்சார விடுதி

***********************************************************

June 30, 2010

கற்பனை The Imagination & Creativity...

கற்பனை The Imagination & Creativity...


என்னுடைய பெரும்பாலான போஸ்ட்களில் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க , ரூம் போட்டு யோசிச்சீங்களா? , ரொம்ப யோசிக்கிறீங்க இப்படியான பின்னூட்டங்களே நிறைய வந்திருக்கின்றன...எப்படி யோசிக்கிறேன் என்பதைப்பற்றி  பார்ப்போமா? 


நான் டிப்ளோமா எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிக்கும்பொழுது என்னுடைய முதல் டெக்னிகல் ட்ராயிங் வகுப்பிலே என்னுடைய டெக்னிகல் ட்ராயிங் ஆசிரியர் சொன்னது ட்ராயிங் வரைவதற்க்கு பேப்பரோ பென்சிலோ ட்ராஃப்டரோ முக்கியம் இல்லை இமேஜினேசன்தான் முக்கியம் எனவும் அது இருந்தால் பேப்பர் பென்சில் ட்ராஃப்டர் இவைகள் இல்லாமலே நம்மால் படம் வரைய முடியும் என்பதுதான்...


இந்த டெக்னிக்கல் ட்ராயிங் படிக்கும்பொழுதுதான் நான் என்னுடைய இமேஜினேசனை வளர்த்து கொண்டேன் என கூறலாம். அதிலும் Orthographic Projection என்னும் 3டி dimension Drawings செம்ம இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். இதில் ஒரு Object ன் 3டி view நமக்கு கொடுத்து விட்டு அதன் front view, top view, side view வரையச்சொல்லுவார்கள் அல்லது இந்த மூன்று viewsம் கொடுத்துவிட்டு 3டி view வரைய சொல்லுவார்கள் பார்க்க படம்...




இந்த படத்துக்குபதிலா நீங்க மனிதனோட படத்தை வைத்து பார்ப்பது தவறு..ஆமா சொல்ட்டேன் இப்போ மேட்டருக்கு வருவோம்... 


இதே போலதாங்க நம்ம வாழ்க்கையும் நிறைய பக்கங்கள் நிறைந்து ஒரு முழுமையான வாழ்க்கையா அமைகிறது,சிலர் என்னுடைய இன்னொரு பக்கதை நீ பார்த்ததில்லையே என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்,அதேதான் இப்போ நான் சொல்லவருவதும். 


நான் கார்ல(என்னோடதில்ல) கொடைக்கானல் போயிட்டிருக்கேன்னு வச்சுக்கங்க கார் நல்லாத்தாங்க போயிட்டு இருக்கும் ஆனா என்னோட மனசு இருக்குல்ல அது என்னா நினைக்கும் தெரியுமா ? ஒரு வேளை இந்த கார் இப்படியே கவுந்துடுச்சுன்னான்னு ஆரம்பிச்சு நான் மலை அடிவாரத்தில் விழுந்து கிடப்பது மாதிரியும் எனக்கு காயமாகி மயக்கமடைந்து கிடக்கும்பொழுது சிலர் என்னுடைய பணம் நகைகளை எடுத்துகொண்டு ஓடுவது போலவும் இருக்கும் . அந்த நொடி நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு நான் பயணம் செய்து கொண்டிருக்கும் கார் டிரைவரை கவனமாக காரை செலுத்துமாறும், என்னுடைய பணத்தை பாக்கெட்டில் தொட்டு பார்த்து கொள்வதுமாகவும், அந்த பணம் போனாலும் ஏடிஎம் கார்ட் இருக்கிறதா என்றும், விபத்து அவசர அழைப்பு எண் என்ன என்பதை மனதில் ஓடவிட்டவாறும் பயணம் செய்வது வழக்கம்.இப்போ இந்த விபரீத கற்பனை எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தருகிறது...இது ஒரு நெகடிவ்இமேஜினேசனாக இருந்த பொழுதிலும் பெரிய ஆபத்தில் சிக்கினால் என்ன செய்வது என்பதற்க்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது...


இதே போல ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துகொள்வோம் அந்த இளைஞன் ஒரு சாதியை சேர்ந்தவன் அவனுடைய காதலி வேறொரு சாதியை சேர்ந்தவள் எனவும் கொள்வோம் இப்போ இரண்டு பேரும் திருமணம் செய்வதற்க்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்த பின் அவர்கள் இருவர் குடும்பத்தில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் அல்லது இரு வீட்டார்களும் அடித்துகொள்வார்களா? அல்லது சிறிது காலம் கழித்து அக்காதலர்களுக்கு குழந்தை பிறந்த பின்னாவது இரு குடும்பமும் ஒன்றாக செர்ந்து கொள்வார்களா? இப்படி பல விதமாக கற்பனை செய்து பார்த்தால் அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துகொள்வதற்க்கு முக்கிய நிகழ்வாக கற்பனை உதவுகிறது...


சில நேரம் இந்த கற்பனை சக்தி நாம் செய்யும் தொழிலில், அந்த தொழிலை மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் இப்படி செய்தால் என்ன அப்படி செய்து பார்த்தால் என்ன என்று புதுமைகள் புகுத்துவதன் மூலம் கண்டிப்பாக தொழில் வெற்றி பெற முடியும் இது தொழில்துறையில் வெற்றி பெற்ற பலரின் கூற்று...


நம்ம உலகத்திலே ரொம்பவும் ஃபாஸ்ட்டானது நம்ம கற்பனைதாங்க நம்ம நினைச்ச நேரத்தில் நிலாவுக்கு கூட போய்வரும் சக்தி கற்பனைக்கு இருக்கிறது...இந்தகற்பனைக்கு வானமே எல்லை என்று கூட சொல்லல்லாம்.....


இங்க ஒரு வீடியோ இருக்கு பாருங்க ....




இது ஒரு சின்ன மார்க்கர் விளம்பரம்தான் அதை எப்படி எதோட பொருத்தி பர்த்திருக்கிறார் இந்த விளம்பர இயக்குனர் இதுதாங்க இமேஜினேசன்...இப்போ புரிஞ்சுச்சா? இல்லியா சரி விடுங்க இன்னும் சொல்றேன்...


12B படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள் இயக்குனர் ஜீவா அதில் ஷ்யாம் பஸ்ஸை பிடிச்சு ஏறிப்போனா என்ன என்ன எல்லாம் நடக்கும் பஸ்ஸை மிஸ் பண்ணா என்ன என்ன எல்லாம் நடக்கும் என்று சூப்பரா சொல்லியிருப்பார் அருமையான ட்ரெண்ட் செட்டர் திரைக்கதை அது ஆனா யாருமே அதுக்கடுத்து அதை முயற்சி செய்யவே 
இல்லை...அந்தப்படம் இந்த இமேஜினேசனுக்கு சிறந்த ஒரு படமா சொல்லலாம் ...    




இந்த படத்தைப்பாருங்க இது வெறும் கேலிச்சித்திரம் இல்லீங்க அடுத்த நொடி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம் உலகத்தில் இன்னும் சில நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு மனிதனுக்கு தேவையான உடல் பாகங்களை வாங்கி நம் உடலில் பொருத்திக்கொள்ளலாம் என்ற நிலைவரும் பொழுது பல உடல் பாகங்கள் அந்தந்த ப்ராண்ட் பெயர்களின் பிரிண்டோட வரலாம்ன்னு நச்சுன்னு சொல்ற படம்தான் இது . இதுதாங்க கிரியேட்டிவிட்டி....




இப்போ இங்க பார்க்கும் படத்தில் சிகரெட் ஸ்மோக் பண்ணுவது தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்வது போன்ற ஒரு மெச்சேஜ் சூப்பரா சொல்லியிருக்காங்க பாருங்க...
இதுவும் கிரியேட்டிவிட்டி தாங்க...



சாதாரண பஸ்ல சின்னதா ரசிக்கும்படியான கிரியேட்டிவிட்டி மனித வாயிலிருந்து புகை வர்ற மாதிரி இன்னும் இது மாதிரி நிறைய கிரியேட்டிவிட்டி இருக்குங்க...




இப்போ புரிஞ்சுதா இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி ஏதோ எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லியிருக்கேன்...
சரி இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி பற்றி சொல்லியாச்சு அதை உங்களையும் எப்படி செய்ய வைக்கிறது நிறைய இருக்குங்க நிறைய டாபிக் யோசிச்சி எழுதணும்ன்னு மைண்ட்ல வச்சுருக்கேங்க ஆனா பாருங்க நேரம் கிடைக்குறது கஷ்டமா இருக்கு சரி நம்ம யோசிச்சா இப்படித்தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் அதையே உங்களை யோசிக்க வச்சு எழுத சொன்னா என்ன?


முதல் தலைப்பு


நம்ம கைகள் இரண்டும் இருக்குள்ள அதோட ஆரம்பம் நம்ம தோள்பட்டையில இருக்குன்னு தெரியும் அதே கைகள் நம்ம வயிற்றோட பக்கவாட்டில் முளைத்திருந்தால் நம்ம அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவர் நம்ம சீமான்கனி மாப்ள கனவுப்பட்டறைன்னு பேர் வச்சுருந்தா போதுமா மாப்ள எழுதுங்க மாட்டுனீங்களா? தலைப்பு மாறிய கைகள்...


இரண்டாவது தலைப்பு


தெருவெல்லாம் போஸ்ட்லைட் பாத்துருப்பீங்க ஒரு நாளைக்கு இதே மனித ஆறறிவோட அந்த போஸ்ட் மரமா நீங்க மாறினா நீங்க என்ன பார்க்குறீங்க? என்ன செய்வீங்க ? இந்த டாபிக் எழுதப்போறவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ்... தலைப்பு நானொரு தெருவிளக்கு...


மூன்றாவது தலைப்பு 


ஊரெல்லாம் ஆலமரம் அரசமரம்ன்னு பிள்ளையார் இருக்குறது எல்லாருக்கும் தெரியும் இந்த பிள்ளையாருக்கு உயிர் இருந்து எல்லா ஊர்லயும் ஒரு மனுஷ உருவுல பிள்ளையார்கள் உட்கார்ந்திருக்கிக்காங்கன்னு வச்சுக்கங்க(சில சாமியார் அப்படித்தான் இருக்காங்கன்னு சொல்லக்கூடாது ஆமா) அப்போ நடக்குற சம்பவங்கள் பற்றி எழுதப்போறவர் நம்ம நாஞ்சில் பிரதாப் (இந்த டாபிக் இவரத்தவிர காமெடியா யாராலயும் எழுத முடியாதுங்க) தலைப்பு ஆல மரத்து பிள்ளையார்கள்


நாலாவது தலைப்பு


நம்ம குழந்தையா பிறந்து படிச்சு வேலைக்கு போயி கல்யாணம் பண்ணி குழந்த பெற்று அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு கடைசில செத்துடறோம் ரொடேசனா போயிட்டு இருக்கு இதுவே தலைகீழா இறக்கும்போது இருக்குற வயசுல பிறந்து ஒவ்வொரு நாளும் பின்னோக்கி வர்றீங்க கடைசியில இறக்குறது அம்மாவோட மடியிலன்னு வச்சுட்டு இடையில என்ன சம்பவங்கள் நடக்கும்ன்னு எழுதப்போறவர்( கொஞ்சம் கஷ்டம்தான் மாப்ள ஆனாலும் நாமெல்லாம் யாரு எழுதுவோம்ல)  நம்ம கே ஆர் பி செந்தில்... தலைப்பு தலைகீழ் விதிகள்...


ஐந்தாவது தலைப்பு 


இது வெறும் ஈஸிங்க நீங்க ஆறறிவுடைய பட்டாம்பூச்சியா பிறந்துட்டீங்க உங்க ஆசைகள் எப்படியிருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவங்க ராமலக்ஷ்மி மேடம்...
தலைப்பு பட்டாம்பூச்சியின் கனவுகள்...


ஆறாவது தலைப்பு 


இந்த உலகம் சுற்றும் திசையில இருந்து ஆப்போசிட் திசையில சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் இது பற்றி எழுதப்போறவங்க எங்கள் பிளாக் ...
தலைப்பு மாறுதிசை...


ஏழாவது தலைப்பு


இந்த உலகத்தில் கரண்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திட்டு இருக்கும் யாரும் திரும்பவும் கரண்ட் கண்டுபிடிக்காத பட்சத்தில் ... இந்த டாபிக் எழுதப்போறவங்க யாவரும் நலம் சுசி....தலைப்பு வித் அவுட் கரண்ட்...


எட்டாவது தலைப்பு


இந்த உலகத்தில் இப்போ கடலில் வாழும் மீன்போலவே உங்களாலயும் பேசமுடியாதுன்ற மாதிரி ஒரு வாய் பேசமுடியாத பெண்ணின் மன ஆசைகள் எப்படியிருக்கும்... அவள் வாழ்க்கையில்  அதனால் பெறும் இன்ப துன்பங்கள் பற்றி எழுதப்போறவர் அமைதிச்சாரல் மேடம் தலைப்பு.. முள்ளில்லாத மீன்


அவ்ளோதாங்க இன்னும் இருக்கு அதெல்லாம் எனக்கு...


நிபந்தனைகள்


ஒருவர் இருவரை தொடரச்சொல்லி அழையுங்கள் கண்டிப்பாக இருவர் மட்டுமே ரொம்ப கூப்பிட்டீங்கன்னு வச்சுக்கங்க போரடிச்சுடும் ஆமா தலைப்பும் அதன் உட்கருவும் நீங்கதான் அவங்களுக்கு சொல்லணும்...ஆரம்பிங்க உங்க கிரியேட்டிவிட்டிய பட்டைய கிளப்புங்க .. கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் முழுவதும் கிரியேட்டிவ் கிங்கள் ராஜ்யமா அமையட்டும் வாழ்த்துகள் ...


புதியதாக எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.. தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பிளாக்கராக இருந்தாலும் சரி நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....







கண்டிப்பா இங்கு தொடர்பதிவெழுத அழைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அழைப்பை ஏற்று எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

ப்ரியமுடன்...வசந்த்








June 18, 2010

எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்...



ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காத காரணத்தால் அங்கு நம் நடிகர்கள் மாவாட்ட விடப்படுகின்றார்கள் அப்போ அவர்கள் பேசற டயலாக்ஸ்...



ரஜினி : இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...




**************************



கமல் : எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே...







**************************

விஜய காந்த் : இந்த குண்டால மொத்தம் 23000 அரிசி இருக்கு , அந்த குண்டால 2.5 லிட்டர் தண்ணியிருக்கு அதுக்கடுத்த குண்டால 12333 உளுந்து இருக்கு இதை அரைக்கணும்னா மொத்தம் 2 மணி 45 நிமிஷம் 32 விநாடி ஆகும் பரவாயில்லியா?



**************************


அஜீத் : சரித்திரத்தை ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணுதான் காசில்லாம நாம சாப்பிடணும்னா எங்க வேணும்னாலும் எந்த ஹோட்டல்ல வேணும்னாலும் மாவாட்டலாம் கேன் கேன்...ஐ ஆம் பேக்...






**************************

விஜய் : எவ்ளோவோ பண்றோம் இதப்பண்ணமாட்டோமாங்ண்ணா? வாழ்க்கை இந்த ஆட்டுரல் மாதிரியே வட்டம்ங்ண்ணா இன்னிக்கு தியேட்டர்ல மாவாட்டுறவன் நாளைக்கு ஹோட்டல்ல மாவாட்டலாம் இன்னிக்கு ஹோட்டல்ல மாவாட்டறவன் நாளைக்கு தியேட்டர்ல மாவாட்டலாம்...






*************************

சூர்யா : என்னால முடியும் , சட்னிக்கும் மாவுக்கும் நூலளவுதான் வித்யாசம் பொரிகடலையும் தேங்காயும் போட்டு ஆட்டுனா அது சட்னி, அரிசியும் உளுந்தும் போட்டு ஆட்டுனா அது இட்லி மாவு.ஒன் மோர் திங்க் கஷ்டப்பட்டு மாவாட்டுனா மாவரைக்க முடியாது இஷ்டப்பட்டு மாவாட்டுனாத்தான் மாவரைக்க முடியும்...



**************************



விக்ரம்: பூரிமாவு,சப்பாத்திமாவு,கடலைமாவு, முறுக்குமாவு, பஜ்ஜி மாவு, மைதாமாவு,இட்லிப்பொடி, ஆச்சி மசாலா, சிக்கன் மசாலா இதெல்லாம் டூப்பு தோசை மாவுதான் டாப்பு...








**************************


சிம்பு : ஆட்டுவேன் ஆட்டுவேன் அரிசி மாவு ஆட்டுவேன் பாரு , கலக்குவேன் கலக்குவேன் அதில உளுந்த மாவையும் கலக்குவேன் பாரு கலந்த பின்னெ நீயும் தோசையத்தான் சுட்டுத்தான் பாரு..



*************************


தனுஷ் : வெண்மேகம் அரிசியாக உருவானதோ இந்நேரம் அதைப்போட்டு மாவரைப்பதோ உன்னாலே பல தோசைதான் உருவாகுதே...



*************************

June 5, 2010

க்ளிக்ஸ் .....



தமிழ் நாட்டில் நான் எடுத்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு...

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம்


கோவிலின் உட் புறத்தில் தென் பட்ட சிறிய கோவில்


கோவிலின் நீண்ட வெளிப்புற பிரகாரம்


என் நிழல் பிரகாரத்தில்...


கோவிலில் வீற்றிருக்கும் மொட்டைத்தூண்கள் நான்கு....


என் சித்தி பையனுக்கு சுடிதார் போட்டு எடுத்த போட்டோ...



இன்னொருவன் பொம்மை மாடலில் போஸ் கொடுக்கிறான்...


பழநி முருகன் கோவிலின் தோற்றம்...


மலையேறும் விஞ்ச் ....


ரொம்ப நாளுக்கு பிறகு பார்த்த குதிரை வண்டி...


நம் முன்னோர்....


நீண்ட நாளுக்கு பிறகு பார்த்த யானை...


எங்கள் ஊர் அருகே மேற்க்கு தொடர்ச்சிமலை....


மேற்க்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் நான்...


பசுமையாய் விளைந்திருக்கும் பலா...


வான் நோக்கி வீற்றிருக்கும் பனை மரம்...


சிலு சிலுவென அடிக்கும் தென் மேற்க்கு பருவக்காற்று தேனிப்பக்கம்....


நீரில்லாததால் விளையும் நிலம் விதவையாய்....


இன்னும் நம் நாட்டில் பரவலாய் காணப்படும் ரூபாய் நோட்டுக்காதல்....


சென்னை மவுண்ட் ரோட்டில் எல் ஐ சி பில்டிங் அருகே இருக்கும் கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் ஏன் இன்னமும் இதை இடிக்காமல் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை எத்தனை உயிர்களை பழிவாங்கப்போகிறதோ?


இன்னும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது கூரையின் மேல் முளைத்திருக்கும் தாவரம்...




ஆசையாய் குடித்த கரும்பு ஜூஸ்....


ஹும் மீட்டர் இருக்குற ஆட்டோ ஒண்ணே ஒண்ணுதாங்க சென்னையில பார்த்தேன் அதும் ஓடாத மீட்டர்....


அண்ணாவையே மதிக்காத புதிய தலைமைச்செயலக கட்டிடம்....


யாரோ சொன்னாங்களாமே சர்க்கஸ் கூடாரம் என்று நிஜமாவே அப்பிடித்தாங்க இருக்கு நம்ம புதிய தலைமைச்செயலகம்....


கம்பிகளுக்கு உள்ளே தலைமைச்செயலகம்.....



சபாஷ் ரயில்வே துறை தாம்பரம் முதல் கோயம்பேடு செல்லும் புதிய மெட்ரோ ரயில் புராக்ஜெக்ட்டுக்காக...



விமானத்திலிருந்து எடுத்தது இன்னொரு விமானத்தை நான் பயணம் செய்யும் விமானம் முந்தி சென்ற பொழுது... ஆகாயத்திலுமா ?

மேகக்கூட்டங்கள் ...

வெளித்த வானம்....கூட விமான இறக்கையும்....

சோனி சைபர் சாட் கேமரா வைத்துக்கொண்டு அப்படின்னா என்னவென்று தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தவனுக்கு ஜமால் அண்ணா சொல்லிக்கொடுத்தது ஓடிக்கொண்டிருக்கும் மின் விசிறியை நிற்பதுபோல் படம்பிடிக்கும் என்பதால் சைபர் சாட்டாம்....





இந்த கேமராவில் இன்னொரு ஃபெசிலிட்டியும் இருக்கிறது ஸ்மைல் டிடெக்சன் புகைப்படத்திற்க்கு போஸ் கொடுப்பவர் சிரித்தால் போதும் ஆட்டோமேட்டிக்காக உடனே படம்பிடித்துவிடும் அதற்க்காக காலண்டரில் இருக்கும் முருகன் சிரிப்பதை கூட டிடெக்ட் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் தொழில்நுட்பத்தை....

இதுதான் நான் வைத்திருக்கும் கேமரா இதில் எடுத்த புகைப்படங்கள்தாம் இவை...