April 14, 2011

வர்ணங்கள் (சித்திரை - க)

வாழ்த்துகள்

என்னதான் தை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தாலும் நம் முன்னோர்கள் வழி வந்த மரபை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. உலகெங்கும் இருக்கும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் சித்திரைத்திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.



ஆலோசனை 

தமிழே எங்கள் மூச்சு என்று முழங்கிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் அவருக்கு அடியேனின் சிறு விண்ணப்பம் தமிழ்   மொழியில் உயிர் எழுத்துகள் , மெய்யெழுத்துகள் , உயிர்மெய்யெழுத்துகள் ஆயுத எழுத்து சேர்ந்து மொத்தம் 247 எழுத்துகள் இருக்கின்றன்.தற்பொழுது தமிழகத்தில் இருக்கும் 234 சட்டசபை தொகுதிகளையும் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப 247 சட்டசபை தொகுதிகளாக அதிகரிக்கும்படியும் அந்த ஒற்றை ஆயுத எழுத்திற்கான தொகுதியை திரு நங்கைகளுக்கான தொகுதியாக ஒதுக்கி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இது அடியேனின் சிறு விண்ணப்பம் சின்ன சின்ன ஆசை.ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு தமிழ் எழுத்து மாற்று பெயராக இருந்தால்தான் என்ன?

தகவல்

மனித உறுப்புகளில் முதலில் உருவாவதும் இதயம்தான் இறுதியில் இயக்கத்தை நிறுத்துவதும் இதயம்தான்.!!!


தூய தமிழ்ச் சொற்கள் சில

Auto - தானி
Bakery - அடுமனை
Bulldozer - இடிவாரி
Token - கிள்ளாக்கு
Shampoo - சீயநெய்

வித்யாசங்களை கண்டுபிடியுங்கள்




குறும்படம்  

நண்பா :)))



ஒரு கவிதை

காதலியண்டர் மாதங்கள்

கண்வரி
ஹிப்வரி
மார்ச்
கூந்தல்
இமை
கை
கால்
மூக்கஸ்ட்
இதழம்பர்
நெக்டோபர்
புருவம்பர்

ஃபேஸம்பர்

சிரிக்கப்படாது சிரிச்சா இன்னும் இது மாதிரி கவிதை நிறைய வரும் ஜாக்ரத..! :)))

24 comments:

Unknown said...

ஆலோசனை ரொம்ப பிடிச்சிருக்கு.

தகவலில் "முதலில்" இயக்கத்தை நிறுத்துவது என்றிருக்க வேண்டுமோ?

Sibhi Kumar SenthilKumar said...

'நண்பா'-குறும்படம் அருமை. உங்களுக்கு எங்கள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Unknown said...

1.வவ்வாலின் இறக்கை
2.ஆந்தையின் உடல்வரிகள்
3.gum leaves
4.stethoscope
5.syringe direction
6.microscope lens tuner

வித்தியாசங்களை கண்டுபிடித்துவிட்டேன். எல்லாம் சொல்லத்தெரியல...

சக்தி கல்வி மையம் said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>திமிர்,கோபம்,நக்கல்,ப்ரியம், காதல்,கற்பனை நிறைந்த ஒரு கவிதை நான்.(காசா பணமா அடிச்சுவிடு)

haa haa ஓப்பனிங்க்லயே பின்றீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு கவிதை

காதலியண்டர் மாதங்கள்

m m டிஃப்ரண்ட் திங்க்கிங்க்.. மைண்ட்ல வெச்சுக்கறேன்

Anonymous said...

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சி! :)

Unknown said...

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள...

rajamelaiyur said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nagasubramanian said...

ஆலோசனை அருமை !!!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஆலோசனை. காதலியண்டர் மாதங்கள் அருமை.

அருண் பிரசாத் said...

மாப்ஸ்.

ஆலோசனை நல்லாதான் இருக்குது... அப்படியே அந்த மஞ்சதுண்டுகாரர்கிட்ட தொழில்துட்ப ஆலோசகரா சேர்ந்துடுய்யா...

அருண் பிரசாத் said...

சரி உன் ஆலோசனைப்படி சேப்பாக்கம் போகனும்னா.... போற பஸ்ல ஏறனுமா

சேப்பாக்கம் பேரை “ஈ”னு மாத்தினா

வைகை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு!

sulthanonline said...

இனிய ”கர” தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குறும்படம் சூப்பர் பாஸு

சுசி said...

உங்களுக்கும் வாழ்த்துகள் வசந்த்.

குறும்படம் க்யூட்டா இருக்கு..

கவிதை :)))))

ஸ்ரீராம். said...

குறும்படமும் காதலியண்டரும் சூப்பர்.
ரெக்கை விரித்த வவ்வால்.
stamps புத்தகத்தின் பாதி.
Gum leaves.
மைக்ராச்கோப்பின் திருகு.
திரும்பியிருக்கும் ஊசியின் கோணம்!

Mahi_Granny said...

அடிச்சு விட்ட அறிமுகமும் ஆலோசனையும் கூடவே குறும்படமும். அருமை வசந்த்

ஹேமா said...

மனம் நிறைந்த சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் வசந்த்.

தமிழ் வார்த்தைகள் புதிது அறிந்துகொண்டேன்.பேக்கரிக்கு வெதுப்பகம் என்று சொல்லலாம் !

தகவல் அருமை.கவிதை ம்ம்ம் !

வித்தியாசம் பாக்கல.
குறும்படம் ரசிச்சேன் !

Unknown said...

உங்களின் ஆலோசனை மிகவும் அருமை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் வசந்த்..

குறும்படம். கடைப்பெயின்ட்டை எடுத்து வந்து பிள்ளையாருக்குப் பூசறாங்க :) குட்டீஸ் நல்லா செய்திருக்காங்க.. சுவத்துல பேரும் நம்பரும் எழுதி வைக்கும் வழக்கம் புதுசா இருக்கே :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்...;))

//தூய தமிழ்ச் சொற்கள் சில//
சும்மா இருக்காம தமிழ் வளக்கறேன் பேர்வழினு என் ப்ளாக்ல இப்பதான் சொந்த செலவுல சூனிய வெச்சுட்டு இருக்கேன்... சோ இந்த ஆட்டத்துக்கு நான் வல்ல...:)))

//காதலியண்டர் மாதங்கள்//
ஹா ஹா ஹா...;)))

//சிரிக்கப்படாது சிரிச்சா இன்னும் இது மாதிரி கவிதை நிறைய வரும் ஜாக்ரத//
கவிதை எங்க சார்... தேடி தேடி ஏமாந்து போயிட்டேன்... ஜஸ்ட் கிட்டிங்...ஹா ஹா...;)))

ப்ரியமுடன் வசந்த் said...

அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி :)

இமா க்றிஸ் said...

லேட்டா தான் பார்த்தேன். //சிரிக்கப்படாது// அது எப்புடீ!! ;)))