December 11, 2009

அர்த்தமற்றேற்று...



ஐந்து முனையாய்
ஒற்றை கண் ஆயிரம் காவல்
பல்லக்கில்லா ஊர்வலம்
ஆழிநிற நேரற்ற வீதியில்
ஓட நடக்க நிற்க...

தினம் ஒரு முகமூடி
முகமற்று மூன்று
நாலாறும் ஆராரோ
யார் யாருக்கோ...

நகராத வீட்டின்
நகரும் ஆடையில் நாணம்
தென்றல் வீசும் பொழுது
தென்றல் வீசாத தென்றல்...

களவிப்படுக்கை
காரணி,அத்தாட்சி
தினம் ஒரு ஜனனம்
தினம் ஒரு மரணம்

வளர்ச்சியில்
மன சேர்க்கை
யாரோ ஒருவனின்
உணவாய் ஒரு நாள்

இரவாறில் ஜோடி முத்தம்
யாருங்காணா ஓரிடத்தில்
சந்திப்பு பகலாறும்
பெண் ஒப்புமை
பெண் ஆசை யை
அர்த்தமற்றேற்று
ஆண் வீரம் வீரமற்று...

31 comments:

ஜெட்லி... said...

கவிஞர் வஸந்த்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் வசந்த் ; அருமை

சீமான்கனி said...

//களவிப்படுக்கை
காரணி,அத்தாட்சி
தினம் ஒரு ஜனனம்
தினம் ஒரு மரணம்


வளர்ச்சியில்
மன சேர்க்கை
யாரோ ஒருவனின்
உணவாய் ஒரு நாள்//

ஆஹா...கவிதா....கவிதா.. இல்லை இல்லை கவித..கவித..கலக்கல் கவிஞர் வசந்த்...

Menaga Sathia said...

நல்லாயிருக்கு வசந்த்!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

வலைச்சரத்தில் கமெண்ட் போடமுடியவில்லை.எரர் வருது வசந்த்.

அதனால் வாழ்த்தை இங்கையே சொல்கிறேன்.

ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்!!

என்னையும் இந்த பாரதியார் பிறந்தநாளில் அறிமுகப்படுத்தி சந்தோஷபடுத்திருக்கிங்க.மிக்க நன்றி வசந்த்!!

வினோத் கெளதம் said...

பிறந்தநாளா சொல்லவே இல்லை வாழ்த்துக்கள்ப்பா..:))

M.S.R. கோபிநாத் said...

சூப்பரா இருக்கு கவிதை.

Anonymous said...

எங்கே இருந்து புடிக்கறீங்க அர்த்தமற்றேற்றுன்னு வார்த்தையெல்லாம். :)

கலகலப்ரியா said...

good & happy bday..!

சுசி said...

உ.பி... என்னப்பு இது...

எங்க இருந்தார் இந்த கவிஞர் இவ்ளோ நாளா?

பின்றீங்க போங்க.

சுசி said...

அன்புத் தம்பிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

தலைப்பும்,கவிதையும் ரொம்ப அருமையா இருக்கு வசந்த்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

thiyaa said...

கவிஞர், வாழ்த்துகள்

சிங்கக்குட்டி said...

பாத்து வசந்த், வைரமுத்து தாமரைக்கு போட்டியா வந்துடிங்கன்னு எதாவது பிரச்னை வந்து விட போகிறது :-)

வார்த்தைகள் அத்தனையும் அருமையாக இருக்கிறது.

எங்கள மறந்துட்டிங்களா என்ன? நாங்களும் இருக்கோம் அப்ப அப்ப எங்க பக்கமும் உங்கள் பார்வையை திருப்புங்க நண்பா :-)

கலையரசன் said...

கவித எல்லாம் நல்லாதான் எழுதுற... ஆனா, டெம்லேட்டைதான் மாத்தி தொலைக்க மாட்டுற?

க.பாலாசி said...

//நகராத வீட்டின்
நகரும் ஆடையில் நாணம்
தென்றல் வீசும் பொழுது
தென்றல் வீசாத தென்றல்...//

ம்ம்ம்....

கவிதை அழகு...

SUFFIX said...

கவிதை கலக்கலா இருக்கு வசந்த், செம சூப்பரு!!

S.A. நவாஸுதீன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.

கவிதை பிறகு வந்து பார்க்கிறேன்.

Kabilan said...

கவிதை அருமை!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த் : )

புலவன் புலிகேசி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்...கவிதை அருமை...

angel said...

belated b'day wishes vasanth sir

http://www.zanyimages.com/Belated%20Birthday/Wish%20You%20a%20Belated%20Birthday%20!!.jpg

சிநேகிதன் அக்பர் said...

கவிதை அருமை வசந்த்.
பிறந்த நாள் வாழ்த்துகள்.

Anonymous said...

எல்லாருக்கும் புரிந்த கவிதை எனக்கேன் புரியவில்லை....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்..

Kala said...

அருமையோ!அருமை!!
நன்றி

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

அத்திரி said...

நீங்களும் ரவுடி ஆகிட்டீங்க போல

ஹேமா said...

அழகான வரிகளோடு கொஞ்சம் சிக்கலாய் சிக்கிய கவிதை.

balavasakan said...

சூப்பர் தல.. நல்ல அடுக்கடுக்காய் வாரத்தைகள்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஜெட்லி :)

நன்றி ஸ்டார்ஜன் :)

நன்றி சீமான் கனி :))))

நன்றி மேனகா மேடம் :)

நன்றி வினோத்

நன்றி கோபிநாத்

நன்றி சின்ன அம்மிணி :)

நன்றி பிரியா

நன்றி சுசிக்கா :)

நன்றி பூங்குன்றன்

நன்றி டி.வி.ஆர் சார்

நன்றி தியா

நன்றி சிங்ககுட்டி :))))

நன்றி கலையரசன் ஏண்டாப்பா சரி விடு மாத்திடலாம்...

நன்றி பாலாசி

நன்றி சஃபி

நன்றி நவாஸ்

நன்றி கபிலன்

நன்ரி புலவன் புலிகேசி

நன்றி ஏஞ்சல் லொல்

நன்றி அக்பர்

நன்றி தமிழரசி

நன்றி கலா

நன்றி நிகே

நன்றி அத்திரி

நன்றி ஹேமா

நன்றி வாசு

ஆ.ஞானசேகரன் said...

படமும்,... வரிகளும் அருமை