December 24, 2009

பிள்ளையின் கனவு...!


(அம்மாக்கும் புள்ளைக்கும் நடக்குற உரையாடல் புள்ளைக்கு எத்தனை வயசு தெரியுமா ஒரு மணி நேரம் தான் பிறக்குற குழந்தை பிறக்கும் போதே பேசுற சக்தியோட பொறந்துருந்தா எப்படியிருக்கும்? )

மகன் : அம்மா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்........ம்க்கும் ம்க்கும் ம்க்கும்......

அம்மா: ஏண்டா ராஸா வரும்போதே அழுதுட்டே வர்ற கண்ணை துடைச்சுக்க என் செல்லம்ல ..! வாடா ராஸா இவ்வளவு நாளா உன்னை பாக்காம சோறும் இறங்கலை தண்ணியும் இறங்கலை...! எப்பிடி ராஸா இருக்க நல்லாயிருக்கியா?

மகன் : ஏதோ உன் புண்ணியத்தில ரொம்ப நல்லாயிருந்தே(கே)ன்...!நீ எப்படிம்மா இருக்க? ஆமா இங்கன சுத்தி நிக்கிற பய புள்ளைகல்லாம் யாரும்மா?

அம்மா : அடப்பாவி ரொம்ப வாயாடியா இருக்க உங்கப்பா மாதிரியே அவங்களையெல்லாம் உனக்கு தெரியாது எல்லாம் நம்ம சொந்த பந்தம்தான் ரொம்ப நாள் கழிச்சு நீ வந்துருக்கியா அதான் உன்னைய பார்க்க வந்துருக்காங்க ராஸா...!

மகன் : ஓஹ் அப்படியா ஆமா அப்பா எங்கம்மா எங்க போயிருக்கார் எப்படியிருப்பார்?

அம்மா : நல்லா இருக்கார் ராஸா நீ இன்னிக்கு வந்துடுவேன்னு தெரிஞ்சதும் நல்ல கைகால் சுகத்தோட வரணும்ன்னு கோவிலுக்கு அர்ச்சனை பண்ண போயிருக்கார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்...!

மகன் : அம்மா வர்ற வழியில பயணம் ரொம்ப களைப்பா இருந்துச்சும்மா குளிப்பாட்டி விடுறியா?

அம்மா : அப்படியா ராஸா ரொம்ப கஷ்டமா? இரு ராஸா பாட்டி உனக்காக வெந்நீர் போடபோயிருக்கா வரட்டும் அவ கையாலே குளிப்பாட்டி விடச்சொல்றேன்...!

மகன் : ம்ம் ரொம்ப நேரம் முழிச்சுட்டு இருந்தியா உன்னைய இவ்வளவு நேரம் காக்க வச்சு கஷ்டப்படுத்திட்டேனாம்மா?

அம்மா : இது என்னப்பா கஷ்டம் எல்லா அம்மாக்களும் அனுபவிக்கிற பாசவலிதானே சுகமான சுகம் ராஸா அதெல்லாம் ஒண்ணும் கவலையில்லை நீ நல்ல கை கால் சுகத்தோட வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம் இதுக்காக உங்கப்பாவும் நானும் வேண்டாத சாமியே இல்லைப்பா...!

மகன் : சரிம்மா அதான் வந்துட்டேன்ல நான் எப்டிம்மா இருக்கேன் ?உனக்கெல்லாம் நீளமா முடியிருக்கு எனக்கு முடியவே காணோம்...!

அம்மா : ம்ம் உங்கப்பா மாதிரியே நல்ல கலராத்தான் வந்துருக்க ! முடியா அது இனிமேல்தாண்டா வரும் இப்போ உனக்கெதுக்கு அந்த ஆசையெல்லாம்..!

மகன் : கலர்ல அப்பா மாதிரியே இருந்தாலும் குணத்துல உன்னை மாதிரியேதாம்மா இருக்கணும்ன்னு ஆசை...!

அம்மா : சரி ராஸா இதுலயும் அப்படியே உங்கப்பா மாதிரியேதான், உங்கப்பாவும் அம்மா புள்ளையாக்கும் ....!

மகன் : சரிம்மா என்னைய இந்த அக்கா யாருன்னே தெரில என்னைய ரொம்ப நேரம் பின் தொடர்ந்து வர்றாங்க முறைச்சு முறைச்சு பாக்குறாங்க யாருன்னு நீதான் கேளும்மா...!

அம்மா : டேய் அவங்கள உன்னைய பத்திரமா கூட்டிட்டு வர்றதுக்கு நாங்கதாண்டா அனுப்புனோம் ...!

மகன் : ஓஹ் அப்டியா சரி என்னைய அப்பிடி முறைச்சு பாக்க வேணாம்ன்னு சொல்லும்மா எனக்கு அவங்கள பாக்க பிடிக்கலை அவங்களும் அவங்க ட்ரெஸ்ஸும் குண்டுக்கத்திரிக்காய் ம்க்கும்...!

அம்மா : ராஸ்கல் குட்டிக்கத்திரிக்காயாட்டம் இருந்துட்டு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பெரியவங்கள ...!

மகன் : அம்மா பசிக்குதும்மா...!

அம்மா : ராஸா இரு ராஸா முதன் முதல்ல வந்துருக்க மாமா கையால கொஞ்சம் சக்கரையள்ளி குடுப்பாரு வாயில போட்டுட்டு அப்பறமா சாப்பிடலாம் சரியா?

மகன் : யாரும்மா அது ?க்கும் ம்க்கும் ம்க்கும்..!

அம்மா :அடேய் ரொம்ப பேசுற நீ அவரு என்னோட அண்ணன் தெரியுமா? அழாதடா செல்லம் ...!

மகன் : சரிம்மா அம்மா என்னோட வயித்துல சின்னதா ஒண்ணு தொங்கிட்டே இருக்கேம்மா என்னாதிது உங்களுக்கு யாருக்குமே இல்லை எனக்கு மட்டுமிருக்கு ஏன்?

அம்மா : ஹ ஹ ஹா டேய் பொறுடா இன்னும் ரெண்டு நாள்ல அதை எடுத்துடலாம்...!

மகன் : ஓஹ் அப்டியா சரி இந்தக்கா அப்போல இருந்து முத்தம் வேற கொடுத்துட்டு இருக்கு எனக்கு பிடிக்கலை வேணாம்ன்னு சொல்லு அவங்க மட்டுமில்லை உன்னைய தவிர யார் தொட்டாலும் அழுகையா இருக்கு...

அம்மா : என்னடா நீ எல்லாம் உம்மேல இருக்குற பாசத்துலதான அழகா வேற இருக்க அதான் போல...!

மகன் : யம்மா என்னம்மா இடம் இது பினாயில் நாத்தம் ரொம்ப கப்பு அடிக்குது உவ்வே...!

அம்மா : உனக்கு ரொம்ப லொள்ளு ராஸா...!

மகன் : சரிம்மா ரொம்ப நேரமாச்சு அப்பா வந்ததும் சொல்லு நான் இப்போ தூங்கப்போறேன் சரியா...!

அம்மா : சரி ராஸா நல்லா தூங்கு அப்பா வந்ததும் உசுப்புறேன்...!

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
எங்கண்ணுறங்கு...

மகன் : யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!

அம்மா : டேய் இப்போ நீ உதை வாங்காம துங்கப்போறியா இல்லியா ரொம்ப பேசுற நீ....!




55 comments:

பா.ராஜாராம் said...

சார்,இன்னொரு துப்பாக்கி கடன் கிடைக்குமா,ப்ளீஸ்..

pleesssssssssssss..

:-)))))))))))))

உங்க பிராண்ட்!பாஸ்!

ரொம்ப பிடிச்சிருக்கு..

பா.ராஜாராம் said...

புகை படமும் அற்புதம் வசந்த்!

Anonymous said...

//யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!//

ப்ரின்சி ஸ்பியர்ஸ் பாட்டு கேக்காம இருந்தா சர் :)

அன்புடன் நான் said...

அம்மா... மகன் கற்பனைத்தொகுப்பு மிக அருமை..... அந்த படம் நல்லா பொறுத்தமா இருக்கு பாராட்டுக்கள்.

நட்புடன் ஜமால் said...

சிரிப்பாக இருந்தாலும் ...

அந்த தாயின் உள்ளம் - நல்லா உள் வாங்கியிருக்கே வசந்த்.

ஜெட்லி... said...

நல்ல வேளை ரீமிக்ஸ் பாட்டு கேக்காம விட்டிங்களே...

பாலா said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Anonymous said...

யப்பா இது என்ன பொறந்ததுமே இத்தனை கேள்விகள் கேக்குது....

நாஸியா said...

எப்படி சகோதரரே இவ்வளவு அழகா யோசிச்சு இருக்கீங்க.படிக்கும்போது ரொம்ப சந்தோசமா இருந்தது... நீங்களும் இப்படித்தான் கேள்வி கேட்டீங்களோ?

பூங்குன்றன்.வே said...

ரொம்ப அழகான கற்பனையும், உரையாடல்களும்..நல்லா இருக்குப்பா.

S.A. நவாஸுதீன் said...

வசந்த்,

அருமையான கறபனை. ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை (லொள்ளு) அதிகம்.

///மகன் : கலர்ல அப்பா மாதிரியே இருந்தாலும் குணத்துல உன்னை மாதிரியேதாம்மா இருக்கணும்ன்னு ஆசை...!

அம்மா : சரி ராஸா இதுலயும் அப்படியே உங்கப்பா மாதிரியேதான், உங்கப்பாவும் அம்மா புள்ளையாக்கும் ....!///

மாமியார குறை சொல்றத எந்த சூழ்நிலையிலும் விடமாட்டாங்கய்யா.

கலையரசன் said...

டேய்.. உங்க அம்மாகிட்ட கேட்ட கேள்வி எல்லாம் இப்ப யாரு உன்னை கேட்டது????

தமிழ் உதயம் said...

அந்த பையன் எதிர்காலத்துல், அரசியல்கட்சி ஆரம்பிச்சு சீரும் சிறப்பும்மா இருப்பார்ன்னு நம்புறேன்

Paleo God said...

இங்கு சிதறியிருப்பது அத்தனையும் கற்பனை என்பதை தவிர வேறொன்றுமில்லை.....//

RAITTU.....:))

அத்திரி said...

superb......... vasanakarththa vasanth

சப்ராஸ் அபூ பக்கர் said...

/////சரிம்மா அம்மா என்னோட வயித்துல சின்னதா ஒண்ணு தொங்கிட்டே இருக்கேம்மா என்னாதிது உங்களுக்கு யாருக்குமே இல்லை எனக்கு மட்டுமிருக்கு ஏன்?////

உண்மையில அந்தக் குழந்தை நீங்களாகத் தான் இருக்க வேண்டும்.... (லொள் .....)


அருமையாக இருந்தது (வித்தியாசமான கற்பனை ) வாழ்த்துக்கள் அண்ணா......

க.பாலாசி said...

சுவாரசியமா எழுதியிருக்கீங்க வசந்த். க்யூட் அண்ட் நைஸ்.....

ஹேமா said...

ம்க்கும்...ம்க்கும்.
நல்லாத்தான் இருக்கு.
வசந்து....அம்மாச் செல்லமோ !

சத்ரியன் said...

ஓவர் குசும்பு ஒடம்புக்கு ஆகாது வசந்த்.

என்னா லொள்ளு...!

சிவாஜி சங்கர் said...

:))))

க‌ரிச‌ல்கார‌ன் said...

பிளாட் வாங்கி யோசிக்கிறிங்க‌ளோ

சுண்டெலி(காதல் கவி) said...

photo nallarukku....

சீமான்கனி said...

//டேய் இப்போ நீ உதை வாங்காம துங்கப்போறியா இல்லியா ரொம்ப பேசுற நீ....!//

ஆமா வசந்த ரெம்ப பேசுறாரு ராசா....
நல்லா இருக்கு மாப்ஸ்...
பிறந்த குழந்தை வாய்திறந்து பேசாமலே தாய் எல்லாம் புருஞ்சுபா பேசுனா கேக்கவா வேணும்...அதுவும் உன் கற்பனைல வந்தா.....க்கும் ம்க்கும் ம்க்கும்..!
ரசித்தேன்

jothi said...

போன பதிவில் கல்யாண ஆசை, இந்த பதிவில் குழந்தையா? நல்ல ஸ்பீடாத்தான் இருக்கிங்கப்பா,..

வினோத் கெளதம் said...

ஒரே கேள்வியா இருக்கே ..

VISA said...

கற்பனை சூப்பர். ஆனா மேட்டர் இன்னும் கொஞ்சம் சேத்திருந்தா ஜோரா இருந்திருக்கும்.

சிங்கக்குட்டி said...

புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)

http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html

ஸ்ரீராம். said...

குழந்தை அழுததைப் பார்த்து சந்தோஷத்தில் தாய் சிரிக்கும் ஒரே நேரம் பிரசவம்தான் என்று சமீபத்தில் ஒரு குறுங்கவிதை படித்தேன்....அது நினைவு வந்தது...

- இரவீ - said...

அருமை.....

பின்னோக்கி said...

பதிவுலக பார்த்திபன் அவர்களே. இந்த பட்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.

M.S.R. கோபிநாத் said...

ஏன் ராஸா இப்படி..?

balavasakan said...

இதனால் தான் ஒண்ணரை வயசுமட்டும் குட்டிங்களுக்கு இறைவன் வாய பூட்டி வச்சிருக்கானோ என்னமோ...

அன்புடன் அருணா said...

:)

Thenammai Lakshmanan said...

//ஜெட்லி said...
நல்ல வேளை ரீமிக்ஸ் பாட்டு கேக்காம விட்டிங்களே//

hahaha superb

Thenammai Lakshmanan said...

//jothi said...
போன பதிவில் கல்யாண ஆசை, இந்த பதிவில் குழந்தையா? நல்ல ஸ்பீடாத்தான் இருக்கிங்கப்பா//

vasanthai ellorum pottuth thakuriingalee
ithuvum super

Thenammai Lakshmanan said...

//Balavasakan said...
இதனால் தான் ஒண்ணரை வயசுமட்டும் குட்டிங்களுக்கு இறைவன் வாய பூட்டி வச்சிருக்கானோ என்னமோ//

நிச்சயம் வசந்தை பார்த்துட்டுத்தான் கடவுள் மத்த புள்ளைங்க வாய பூட்டுனதா கேள்வி

Kala said...

என்ர ராசா என்ர தங்கமே!!
ஏன்டா பிஞ்சுல பழுத்துவிடாய்!
யாரோ உன்னை{ புகை} ஊதி ஊதிப்
பழுக்க வைக்கிறார்கள்

மேல நாட்டுச் சகவாசம் வேண்டாம்டா
ராசா பெட்டியக் கட்டிட்டு ஊர் வந்து
சேருடா பெத்த வயிறு இதெல்லாம்
பார்த்துப் பார்த்து கொதிக்குதுடா


பையனுக்கு ஏதோ என்னவோ ஆச்செட்டு
ஊரில எவரும் உனக்கு பொண்ணு
கொடுக்க...யோசிக்கும் முன்.......
அம்மாகிட்ட ஓடி வாடா!!

அந்த படத்தப் பாருடா எம்புட்டு
அழகா நானும் ..கொள்ளை அழகா நீயும்...
ம்மம்மம்மம்மம்.....
அந்தக் காலம்..........

அம்பிகா said...

கற்பனையும், உரையாடலும் ரொம்ப நல்லாயிருக்குது.
படமும் கச்சிதமாக பொருந்துகிறது, உரையாடலுக்கு.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அருமை அருமை - படமும் உரையாடலும் அருமை

நல்ல் கற்பனை

நல்வாழ்த்துகள் வசந்த்

ஹுஸைனம்மா said...

(கீழை)ராஸா மேல உங்களுக்கு எதுவும் கோவமா?

//மீ குப்பை கொட்டுற இடம்...!//

ஏங்க அந்த அழகான இடத்தில போய் குப்பை கொட்டி அழுக்காக்குறீங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லாயிருக்கு மாமேய்..:-))))

priyamudanprabu said...

மகன் : யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!


////

பயபுள்ளைக்கு ரவுச பாரு

priyamudanprabu said...

நல்லாயிருக்கு


அப்புறம்
உங்க பெயரால ஒரே குழப்பம்
http://priyamudan-prabu.blogspot.com/2009/12/blog-post_7234.html


இந்த பதிவின் பின்னுட்டங்களை படிக்கவும்

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி தனித்தனியாக பின்னூட்டம் அளிக்காததற்க்கு மன்னிப்பீர்களாக இன்றைக்கு மூட் அவுட் ஆஃப் சிலபஸில் இருப்பதாலும் ஓய்வு எடுத்ததினாலும் முடியவில்லை நான் உங்கள் வீட்டு பிள்ளைதானே கோபித்து கொள்ள மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்...!

சுசி said...

அதெல்லாம் கோச்சுக்க மாட்டோம். பதிலுக்கு இத மாதிரி சூப்பராவே தொடர்ந்து எழுதணும்.
ஓகேவா உபி?

யாழினி said...

நல்லாயிருக்கு வசந்த்!

சுரபி said...

மகன் : அம்மா வர்ற வழியில பயணம் ரொம்ப களைப்பா இருந்துச்சும்மா குளிப்பாட்டி விடுறியா?

cute babe.. :)

Jaleela Kamal said...

நல்ல கற்பனை பிறந்ததும் குழந்தை பேசிவது போல், ரொம்ப குசும்பான கற்பனை போல

ஜான் கார்த்திக் ஜெ said...

//சரிம்மா அதான் வந்துட்டேன்ல நான் எப்டிம்மா இருக்கேன் ?உனக்கெல்லாம் நீளமா முடியிருக்கு எனக்கு முடியவே காணோம்...!
//

நல்லா அருமையா எழுதுறீங்க வசந்த்!! நெகிழ வைக்குது!!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சுசிக்கா :) கண்டிப்பா..

நன்றி யாழினி...! :)

நன்றி சுரபி :)

நன்றி ஜலீலா :)

நன்றி ஜான் :)

vanathy said...

வசந்த், சூப்பரா இருக்கு. இருந்தாலும் உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு அளவே இல்லையா. நல்லா தானே எழுதி இருக்கிறீங்க. கடைசி வரிகள் படித்ததும் தானகவே சிரிப்பு வந்து விட்டது.
படம் சூப்பர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வானதி ப்ளாக்ல இருந்து வந்தேன்.. ஹாஹ்ஹா.. நல்லாயிருக்கு.. படமும் பொருத்தம்..

ப்ரியமுடன் வசந்த் said...

@ வானதி ஹிஹிஹி நன்றிங்க...ஆனாலும் உங்க சாம்பு லெவலுக்கு வராதுங்க...

@ சந்தனா வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றிங்க..

ரேவா said...

மகன் : யம்மா கொஞ்சம் புதுசா வந்த பாட்டு படிம்மா இதெல்லாம் ரொம்ப பழசு...!

அம்மா : டேய் இப்போ நீ உதை வாங்காம துங்கப்போறியா இல்லியா ரொம்ப பேசுற நீ....!


வசந்த் உங்கள மாதிரியே பாசக்கார பயபுள்ளயா இருக்கு... ஹி ஹி கலக்கல்