January 23, 2010

அன்புள்ள கிறுக்கன்!!!


நான் கலந்த வண்ணம்
அவள் அழகென்றாள்
வாசமாய் என் பெயர்
தினம் தினம் தன் வாசல்
வருதென்கிறாள்..!

காதலாய் காற்றாய்
நிலவாய் வானமாய்
பூவாய் புற்களாய்
சந்தோசத்தின்
அத்தனை இயல்பிலும்
என்பெயராம்...
அங்கெல்லாம்
என்னை கண்டு
களவெடுத்தேன் என்கிறாள்...!

குனிந்து கொள்
குட்டவேண்டுமென்கிறாள்
சரி என்றேன்...!

கன்னம் காட்டு
முத்தமிட என்றாள்
மெய்யணைத்து
மெல்ல கன்னம் சரித்து
கிட்ட சென்று
கட்டிக்கொண்டேன்...!

எப்படித்தான்
திட்டினாலும்
என்னடா ?
என்பதோடு சரி..!

ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!


34 comments:

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு வசந்த்.

நவாஸ் மக்கா,
தம்பிக்கும் ஒரு டிக்கட் போட சொல்லுங்க.முன்னாடி பிப்ரவரியில் போய் ஆகவேண்டிய வேலைகளை பாருங்க.

:-)

Chitra said...

ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!

............ரசித்து எழுதி இருக்கிறீர்கள். அருமை.

சீமான்கனி said...

நான்தான் பாஸ்ட்டா ...அசத்தலா இருக்கு மாப்ஸ்...
//எப்படித்தான்
திட்டினாலும்
என்னடா ?
என்பதோடு சரி..!//

இந்த வரிகள் ரசித்தேன்...வாழ்த்துகள்...

புள்ள நல்ல புள்ள மாப்ஸ்...

பாலா said...

ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ

ஸ்ரீராம். said...

வண்ணங்களும் எண்ணங்களும் மாறாமல் காலமெல்லாம் தொடரட்டும்..

M.S.R. கோபிநாத் said...

கவிதை அருமை வசந்த். .. Keep Going..

ஆ.ஞானசேகரன் said...

//ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!//

நல்லாயிருக்கு தல

திவ்யாஹரி said...

எப்படித்தான்
திட்டினாலும்
என்னடா ?
என்பதோடு சரி..!

நல்லா இருக்குங்க..

Sarathguru Vijayananda said...

ரொம்பவும் ரசித்தேன் வசந்த். அதிமேதாவித்தனமாய் எழுத்துக்களை பிரயோகிக்காமல் அற்புதமாய் ஒரு கவிதை. எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மணல்கயிறு விஜயசாரதி

நட்புடன் ஜமால் said...

கன்னம் காட்டு
முத்தமிட என்றாள்
மெய்யணைத்து
மெல்ல கன்னம் சரித்து
கிட்ட சென்று
கட்டிக்கொண்டேன்...!]]

பா.ரா சொன்னதை சீக்கிரம் செய் நவாஸேஏஏஏஏஏஏ ...

---------------

எளிமை - அருமை.

தமிழ் உதயம் said...

அவளுக்கு நீங்கள் கிறுக்கண். உங்களுக்கு அவள் ............?

சிங்கக்குட்டி said...

ஆஅ...அபிராமி...அபிராமி நடுவுல நடுவுல மதுரை, தேனி ஓ...இல்ல இல்ல மானே தேனே எல்லாம் போடுங்க வசந்த் :-)(சும்மா) .

ரொம்ப நல்லா இருக்கு கவிதை வரிகள்.

S.A. நவாஸுதீன் said...

வசந்த்,

ஏன் ஏன் ஏன், என்னாச்சு, நல்லாத்தானே இருந்தீங்க. மாட்டிகிட்டாச்சா?

வசந்த் மாட்டிகிட்டாரு வசமா மாட்டிகிட்டாரு.

//////ஆசையாய்
ஆயிரம் பெயர்வைத்தும்
கடைசியில்
அன்புள்ள கிறுக்கனாய் நீ
என்றாள்...!///////

ஆசையாய்
தினம் ஒரு
பெயர் வைத்தாலும்
இனிஷியல் என்னவோ
எப்போதும் “டேய்” தான்.

வாங்க வாங்க சீக்கிறம் வாங்க.

ராமலக்ஷ்மி said...

நன்றாக இருக்கிறது வசந்த்:)!

sathishsangkavi.blogspot.com said...

//கன்னம் காட்டு
முத்தமிட என்றாள்
மெய்யணைத்து
மெல்ல கன்னம் சரித்து
கிட்ட சென்று
கட்டிக்கொண்டேன்...!//

ரசிதத வரிகள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ல்தகா சைஆ வந்திருச்சின்னு நினைக்கிறேன் .

சிநேகிதன் அக்பர் said...

என்ன தல ஒரே காதல் கவிதையா இருக்கு பா.ரா அண்ணன் சொன்னது உண்மையா.

அப்துல்மாலிக் said...

இங்கேயும் அதே காய்ச்சலா, சிக்கன்குனியாவைவிட மோசமாவுலே இருக்கு

Ashok D said...

இப்படிதான் நல்லபுள்ளையா ஒழுங்கா இருக்கனும் :)

Kala said...

நிஐத்தில் நடத்தியவைகளையெல்லாம்
கவிதை வடித்து , உன்மேல் நான்
கிறுக்காய்த்தான் இருக்கின்றேன்
என இடுகையில் கூடப் போட்டாச்சு!!

என்ன!செய்ய...அந்தக் கல் கரையும்
சாத்தியம் எனக்கில்லை!!
இருந்தாலும் உளி என்றொன்று உண்டல்லவா!!
செதுக்க முயற்சிக்கவும்.

வசந்த் என்ன கிறுக்கனாலும்...பரவாயில்லை
காதல் கிறுக்கனாக மட்டும் வேண்டாம்.

காதலுடன்....கவிதை...மணக்கிறது
உன்னில் பதிவேறிய..
“அவளின்” செய்கைகளுடன்.....!

அன்புடன் அருணா said...

அதுசரி!

அத்திரி said...

ஆஹா ரசனையான வரிகள்....... ஊருக்கு எப்ப வர்றீங்க

balavasakan said...

எனக்கும் ஒண்ணு இப்பிடி வேணும் போல இருக்கு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை இயல்பான வரிகளால் ஏற்றம்
பெற்று இருந்தது!!

ஹேமா said...

வசந்து...இந்தக் கவிதை கிறுக்கன் கிறுக்கின கிறுக்கல்போல இல்லலையே ! காதல் உணர்வின் அழகான வெளிப்பாடு.சந்தோஷமா இருக்கிங்கன்னு மட்டும் தெரியுது.கிறுக்கனுக்கு வாழ்த்துகள்.

கயல் said...

அன்புள்ள கிறுக்கன்?

அவங்க குடுத்த பெயர் தானா?

கவிஞர் வசந்து! ம்ம் ! இப்படி தான் இருக்கணும் காதல் கவிதை!
எளிமை + அருமை + இனிமை!

சுசி said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை..

இப்போ புரியுது உ.பி நீங்க ஏன் கிறுக்கானீங்கன்னு.. :)))

சுசி said...

சைட்டு மாறிடுச்சு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பிரியமுடன் வசந்த் பெயர் ' அன்புள்ள கிறுக்கன் ' ஆகி விட்டதா?
நன்றாக இருக்கிறது கவிதை. ரசித்தேன்.

Anonymous said...

ம்ம்ம். நடக்கட்டும்... :))

Ramesh said...

ம்ம்ம் அருமை... ஓ இது அது ல்ல... அப்படித்தான் இருக்கும் ஊருக்கு போய்ச்சேர்ந்துட்டீங்க போல... பழைய டயரியில் இருந்து ஒரு நோட்டு விழுந்திருக்கு இங்கு...

சத்ரியன் said...

//குனிந்து கொள்
குட்டவேண்டுமென்கிறாள்//

வசந்த்,

நேக்கு புரிஞ்சிட்டது ஓய்.. !

(மீதிய “ஆல்பம்” வந்ததும் தெரிஞ்சிக்கிடலாம் உறவுகளே்!)

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி பாரா அண்ணா வீட்ல ஏற்பாடு அல்ரெடி நடந்துட்டு இருக்குண்ணா...
:)))

நன்றி சித்ரா

நன்றி சீமான்கனி மாப்ள

நன்றி நெகமம் பாலா

நன்றி ஸ்ரீராம்

நன்றி கோபிநாத்

நன்றி ஞான சேகரன்

நன்றி திவ்யா

நன்றி வித்யாசாரதி சார்

நன்றி ஜமாலண்ணா

நன்றி பிரபு

நன்றி தமிழுதயம் கிறுக்கன் X கிறுக்கி :)

நன்றி நவாஸ்

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி சங்கவி

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி அக்பர்

நன்றி அபு

நன்றி அசோக் அண்ணா

நன்றி சி ஐ டி கலா கல் உருகி இப்போ துகள் துகளாக என்னோட பாக்கெட்ல...

நன்றி அருணா

நன்றி அத்திரி ஏப்ரல்ல வாறோம்ல

நன்றி வாசு

நன்றி ராமமூர்த்தி சார்

நன்றி ஹேம்ஸ்

நன்றி கயல்

நன்றி சுசிக்கா

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி மயில் விஜிக்கா

நன்றி றமேஷ்

நன்றி சத்ரியன் அண்ணா

பின்னோக்கி said...

பிப் 14 ஸ்பெஷல் ?. இன்னும் நாள் இருக்கே ? :).

அழகான கவிதை.

சேரன் போட்டோ எதுக்கு போட்டீங்க. நிறைய பேருக்கு புடிக்காதே ?