January 19, 2010

ம்க்கும் கவிதை...




காலங்கள்


அரிக்கேன் விளக்கு இறந்தகாலம்(பிறப்பு)

கேஸ் ஸ்டவ் நிகழ்காலம்(வாழ்க்கை)
விறகும் சில நேரம்
மண்ணெண்ணையும்
எதிர் காலம் (இறப்பு)
மாந்தர்க்கு...

புவி(உயிர்) ஈர்ப்புவிசை



புவியும் ஆணும் காந்தமில்லை
ஆப்பிளும் பெண்ணும் இரும்பும் இல்லை
ஆனாலும் ஈர்த்து கொண்டது
இரண்டு ஜோடிகளும்
அந்தோ...சுவைக்கவுமில்லை...

அகந்தை



வென்றவனைப்பார்த்தும்
வரவில்லை அகந்தை
பொறாமை
வயிற்றெரிச்சல்
சு(ய)க வீனம் என்று
எனக்கு நானே
சொல்லிப்பார்த்தேன்
அப்பொழுதும் அகந்தை வரவில்லை
இப்பொழுது எனக்கு
அகந்தை பிடித்திருக்கிறது
அகந்தையில்லை என்ற அகந்தை

அந்தஸ்து


அந்தஸ்தும் நற்பெயரும்
தானாக கிடைக்காது
என்று தெரிந்து
முட்டி மோதி முயற்சித்த
பின்பும்
கிடைக்கவில்லை
தற்சமயம் கொடுத்த விருந்துக்கோ
இல்லை
கொடுத்த விலைக்கோ கிடைக்கிறது
புற வாசலில்

பந்து



பந்தும் மனிதனும்
ஒன்றுதான்
கிடைத்தவர்கள் கையிலிருந்து
எப்பொழுது வேண்டுமானாலும்
தூக்கிவீசப்படலாம்
அதுக்குரிய தேவையில்லாத
பொழுதுமட்டுமல்ல
தேவையிருக்கும்பொழுதும்...
அது கிடைப்பவர்கள்
கைகளை பொருத்து....

நாணயமும் தானமும்




இருப்பவன் கொடுக்கிறான்
இல்லாதவன் வாங்குகிறான்
இடையில் நாம்யார்
தட்டிப்பறிக்க
தலையுமில்லை
பூவுமில்லை...
ஆனால் பிடுங்க கையிருக்கிறது...
பிடிங்கியதை தின்ன வாயுமிருக்கிறது
அதை செரிக்கத்தான் வயிறு இல்லை


43 comments:

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அருமையான கவிதைகள்

தானம் செய்யாவிட்டாலும் செய்பவர்களைத் தடுக்கக்கூடாது

பந்து - மனிதன் - அருமை

அந்தஸ்து இன்றைய உலகில் தானாகக் கிடைக்காது - உண்மை

அகந்தை இல்லை என்பதும் ஒரு அகந்தையா

ஈர்க்கப் படுவதெல்லாமே சுவைக்காது

காலங்கள் அருமை

சிந்தனை நன்று

நல்வாழ்த்துகள்

Anonymous said...

கடைசிக்கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு.

Kala said...

கவிதை! ம்க்கும்........

புள்ளி {எத்தனை}போடலாமா என
அவகளை கேட்டுவிட்டுச் சொல்கிறேனப்பு.

ஸ்ரீராம். said...

இப்பல்லாம் கேஸ்லயே எரிக்கறாங்க...(இறப்பு)

சுவைக்கவில்லைக்க்கு பதில் ஒட்டவில்லை பொருந்துமோ?

அகந்தையில்லா அகந்தை டாப்.

பந்து நியாயம் பக்கா நியாயம்

வயிறு செரிக்காது...குட்.

நட்புடன் ஜமால் said...

இப்பொழுது எனக்கு
அகந்தை பிடித்திருக்கிறது
அகந்தையில்லை என்ற அகந்தை]]

அருமை வசந்த் ...

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை வசந்த், அதை வீட சூப்பர் பிரபஞ்ச நாயகன் ரித்தீஷ் படம். நன்றி.

VISA said...

//அகந்தையில்லை என்ற அகந்தை//

NACH!!!!!

Vidhoosh said...

பந்து கவிதை ரொம்ப பிடிச்சுது.

-வித்யா

Anonymous said...

கவிதைகள் அனைத்தும் தத்துவமாய் மிக அற்புதமாய்......

நடைமுறை எதார்த்தத்தை கவிதையாய் சொன்னவிதம் அழகு

இன்றைய பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு
வசந்த்....

Unknown said...

கலக்கலா இருக்குங்க ஒவ்வொரு கவிதையும்... பந்து கவிதைய ரொம்ப ரசிச்சேன்.

தமிழ் உதயம் said...

ரெம்ப நல்லா இருக்குங்க கவிதை. கவிதைகளின் எளிமை, கவிதைக்கு மிகப்பெரிய பலம்.

பின்னோக்கி said...

ஆனந்தவிகடனுக்கு அனுப்புங்க.

Ashok D said...

அகந்தையும் அந்தஸ்தும் பிடித்துயிருக்கு வசந்த் (எல்லோருக்கும்) :)

Chitra said...

படங்களும் உங்கள் கவிதை குறிப்பு மாதிரியே அதிரடியா இருக்குங்க.

சீமான்கனி said...

//ஆனாலும் ஈர்த்து கொண்டது
இரண்டு ஜோடிகளும்
அந்தோ...சுவைக்கவுமில்லை...//

என்னதான் ஈர்த்து கொண்டாலும் சுவைத்தால் தானே சுகம்....

//அகந்தை பிடித்திருக்கிறது
அகந்தையில்லை என்ற அகந்தை//

ஒ அப்படியா??

//கொடுத்த விலைக்கோ கிடைக்கிறது
புற வாசலில்//

அப்படி போடு அருவாள..

//பிடுங்க கையிருக்கிறது...
பிடிங்கியதை தின்ன வாயுமிருக்கிறது
அதை செரிக்கத்தான் வயிறு இல்லை//

நேசம்தே மாப்ளே...அட இவ்ளோ விஷயம் இருக்கா?? சூப்பர் கவிதைகள் மாப்ளே...

சந்தனமுல்லை said...

super!

/இப்பொழுது எனக்கு
அகந்தை பிடித்திருக்கிறது
அகந்தையில்லை என்ற அகந்தை

/

நச் தத்துவம்! கலக்குங்க! :-)

Akashkrishna said...

அன்புள்ள வசந்த்
எனக்கு கொடி காத்த குமரனின் புகைபடம் வேண்டும் என் மகனின் பள்ளீகூட ப்ராஜக்ட்க்கு தயவுசெய்து உதவவும்
என்னுடைய இமெயில்
akashkrishna@hotmail.com
thank you
with kind regards
krishna

கமலேஷ் said...

ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்...வாழ்த்துக்கள்...

kovai sathish said...

padam kaatunga...

S.A. நவாஸுதீன் said...

எதிர்காலம் - மூன்றாம் உலகப்போரில் என்னென்ன விதமான ஆயுதங்கள் உபயோகிப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரில் கல்லும், தடிகளும்தான் பயன்படும் என்று எங்கோ படித்தது தேவையில்லாமல் நினைவிற்கு வருவதை தடுக்க முடியவில்லை வசந்த். (சாரி)

அகந்தையில்லா அகந்தை - நல்லா இருக்கு, ஆசையை துறக்க ஆசை போல.

Paleo God said...

அடேங்கப்பா..ஒவ்வொரு கவிதையும் அதற்கேற்ற படங்களும்..வசந்த்..கலக்கி..மோனே..:))

Thenammai Lakshmanan said...

அகந்தையில்லை என்ற அகந்தை ..கலக்குறே வசந்த் கவிதைகள்ல

ஹேமா said...

வசந்து....ராத்திரி ராத்திரியா தூங்காம இருந்து யோசிக்கிறீங்களோ !வயசுக்கு மீறின சிந்தனைன்னு தோணுது எனக்கு.

ஆனாலும் அத்தனையும் உண்மை.
அத்ற்கேற்ற படங்களோடு உங்கள் பதிவுகளில் இதுவும் ஒரு முக்கிய பதிவு.

மாதேவி said...

அனைத்துக் கவிதைகளும் அருமை வசந்.

"உங்கள் பதிவுகளில் இதுவும் ஒரு முக்கிய பதிவு." என்னுடைய கருத்தும் இதுதான்.

சிங்கக்குட்டி said...

அருமை வசந்த்.

எதிர் காலம் மற்றும் அந்த ஈர்ப்புவிசை ம்...ம்...ம்ம் சூப்பர்.

priyamudanprabu said...

நல்லாத்தானே இருக்கு

கிருபாநந்தினி said...

குட்டிக்குட்டிக் கவிதைகள். சிலது புரிஞ்சுது; சிலது புரியலை. கையிலிருந்து நாக்கு தொங்குற படம் கொடூரமா இருக்குங்ணா!

அண்ணாமலையான் said...

கலக்கிட்டீங்க.. சாரி இப்பத்தான் பாத்தேன்..

balavasakan said...

வசந்து நான் படித்தத உங்கள் கவிதைகளுக்குள் பெஸ்ட் சொட்...இவைதான்
கலக்கிட்டீங்க பாஸ்...

Unknown said...

KAALANGAL MAARUM VASANTH SIR
KAVITHAI SUPER KISS YOUR HANDS

CHITTU

Unknown said...

aganthai maarum
aganthai maatum
aganthai maarum

maaramal ponal MAATRUVOM

CHITTU
9842635226

Radhakrishnan said...

மிகவும் அருமையான கவிதைகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

குட்டிப்பையா|Kutipaiya said...

அகந்தையும் பந்தும் அருமையான வரிகளைக் கொண்டிருக்கின்றன..

Priya said...

கவிதையும் படங்களும் அருமை!!!

கயல் said...

எல்லா கவிதைகளும் மிக மிக அருமை வசந்த்!

சுசி said...

காலங்கள் சொன்ன விதம் புதுமை.

புவி(உயிர்)ஈர்ப்புவிசை ஈர்க்கிறது.

இந்த அகந்தை பிடிக்கலாம் தப்பில்ல.

இப்டி ஒரு அந்தஸ்து நமக்கு வேண்டாம்.

ஓ.. இதுதான் பந்தாடுறதா??

நாணயமும் தானமும் ரொம்ப சரி.

உ.பி படங்கள் ரெண்டு இப்டி பயமுறுத்துதே..

சைட்டோட படங்கள் மாதிரியே கவிதையும் விதவிதமா இருக்கு.. :))

பா.ராஜாராம் said...

//புவியும் ஆணும் காந்தமில்லை
ஆப்பிளும் பெண்ணும் இரும்பும் இல்லை
ஆனாலும் ஈர்த்து கொண்டது
இரண்டு ஜோடிகளும்
அந்தோ...சுவைக்கவுமில்லை...//

வாவ்!

அற்புதம் வசந்த்!எல்லாக் கவிதைகளிலுமே புது டோன் பார்க்கிறேன்.இந்த கவிதை மிரட்டுகிறது!

its fantasic!

SUFFIX said...

பந்து கவிதை ரொம்ப டாப்பு வசந்த்!!

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை வசந்த்!

பந்து ரொம்பப் பிடித்தது. இதுவும்..

//இருப்பவன் கொடுக்கிறான்
இல்லாதவன் வாங்குகிறான்
இடையில் நாம்யார்
தட்டிப்பறிக்க
தலையுமில்லை
பூவுமில்லை...
ஆனால் பிடுங்க கையிருக்கிறது...
பிடிங்கியதை தின்ன வாயுமிருக்கிறது
அதை செரிக்கத்தான் வயிறு இல்லை//

வாழ்த்துக்கள் வசந்த்! தொடருங்கள்!

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே சூப்பர்.. பந்து சூப்பரோ..சூப்பர்!!!!

கலக்குறீங்கப்பா.!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

பந்து - பட்டாசு..:-)))))))

ப்ரியமுடன் வசந்த் said...

மிக்க நன்றி சீனா ஐயா சரியா புரிஞ்சுருக்கீங்க...

நன்றி அகிலா அகிலான்னு சொல்லும்போது எனக்கு நேருக்கு நேர் பாட்டுதானுங்க ஞாபகம் வருது... :)

நன்றி கலா கேட்டாலும் சொல்ல மாட்டாங்களே கலா பாட்டி...நன்றி கலா

ஸ்ரீராம் ஒட்டவில்லை சூப்பர் மேட்ச் ஆவுது நன்றி ஸ்ரீராம்

ஜமாலண்ணா அருமைன்றதுல ஆயிரம் நட்சத்திரங்கள் பிடித்த மகிழ்ச்சியை உணர்கிறேன் அண்ணா

சுதாகர் நன்றி

விசா சார் நன்றி சார் உங்க கதை படிச்சுட்டேன் பின்னூட்ட டைம் இல்ல இன்னிக்கு கிளியர்...

வித்யா நன்றிங்க

தமிழரசி மேடம் நன்றிங்க

முகிலன் நன்றிங்க

தமிழுதயம் மிக்க சந்தோசம் :)

பின்னோக்கி சார் ஆஹா அனுப்பிடலாம் சார்...

அசோக் அண்ணா டாங்ஸ்ண்ணா

சித்ரா மேடம் நன்றிங்க

மாப்பு சீமான்கனி வரி வரியா பிரிச்சு மேய்ஞ்சிட்டீங்க நன்றி மாப்ள...

சந்தனமுல்லை மிக்க நன்றிங்க

கிருஷ்ணா அப்பிடியா இருங்க அனுப்புறேன்,,,,

கமலேஷ் நன்றி கவிஞரே

சதீஷ் நக்கலா இல்லை நிஜமா?

நவாஸ் கண்டிப்பா ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுகிட்டுத்தான் சாவப்போறோம்...

நன்றிங்க நவாஸ் ஆசையை துறக்க ஆசை சூப்பர்

ஷங்கர் நன்றி

தேனம்மா ஆடு எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயுமாமே ஹா ஹா நன்றிம்மா

ஹேமா கவிதை எழுதுறதுக்குமா வயசு இந்தப்பாழாப்போன வயசுனால எதையெல்லாம் இழக்க வேண்டியிருக்கு...

நன்றி மாதேவி சரிதான்

சிங்க குட்டி நன்றி

அண்ணமலையான் நன்றிங்க தல

பிரபு ம்ம் டவுட்டா இருந்துச்சு அதான்
நன்றி பிரபு

கிருபா மேடம் புரியும் புரியும் நன்றிங்க

வாசு நன்றி

சித்து நன்றிங்க சாம்லி கோச்சுக்குவாங்களே பரவாயில்லியா மெயில் ஐடி கொடுத்திருந்தா தொடர்புகொள்ள வசதியா இருக்கும் சரி ஒகே கால் பண்ணுறேன்

ராதாகிருஷ்ணன் சார் நன்றி சார்

யோகா நன்றி

குட்டிபையா நன்றிங்க

பிரியா நன்றிங்க

கயலு டாங்ஸ்...

சுசிக்கா சூப்பர் பின்னூட்டம் :)

பாரா உங்களை மிஞ்சமுடியுமா?

சஃபி நன்றி நண்பா

ராமலக்ஷ்மி மேடம் நன்றி

அமைதிச்சாரல் தலைவி நன்றிங்க

கார்த்திகேய பாண்டியன் நன்றி....