December 26, 2010

Love & Love Only





ஒரு நாள் உனக்கு ஒரு பாலிசி போட்ருக்கேன் சைன் பண்ணுடா என்றபடி என் முகத்துக்குநேரே ஒரு பாரத்தை நீட்டியவளின் கைகளிலிருந்த பாரத்தை பிரித்து பார்த்தால் MIC பாலிசி என்றிருந்தது, என்னடியிது என்றால் என் மீசைக்கு பாலிசியெடுத்திருக்கிறாளாம்...


என்னைப்பிரிந்திருக்கும்பொழுது எப்படியிருக்கும் உனக்கு என்றவளிடம் ஒரு இமையில் தேனையும் ஒரு இமையில் வலியையும் தடவி தூங்கும்பொழுது வரும் கனவைப்போன்று இருக்கும் என்றேன்,கட்டிப்பிடித்துக்கொண்டாள்.


என்னோட அழகை வர்ணித்து சொல்லேன் என்றவளிடம் கவிஞர் கண்ணதாசன் போதையில் இருக்கும்பொழுதுதான் அருமையான கவிதைகள் எழுதுவாராம் அதுபோல பிரம்மனும் உன்னை எழுதும்போது போதையிலிருந்திருக்கவேண்டும் என்றதும் வெட்கப்பட்டு எனக்கு போதையேற்றுகிறாள்...


எப்பவும் உன்னையே பார்த்துகிட்டு இருக்குற என்னுடைய கண், உன்னோட பேரையே உச்சரித்துகொண்டிருக்கும் என் குரலைப்பற்றியும் கொஞ்சம் சொல்லேன் என்றதும் உன் குரல் மைனாகுரலென்றால்,உன் விழிகள் மைனாகுலர் என்று சொன்னதும் இன்னும் கொஞ்சம் வெட்கப்பட்டு அழகை கூட்டுகிறாள்.


உன்னோட லைஃப்ல யாரெல்லாம் இன்ஸ்பிரேசனா இருக்காங்க என்ற கேள்விக்கு , முயற்சிகளுக்கு கஜினியும், சினத்திற்க்கு கட்டபொம்மனும் ,கவிதைக்கு தபூசங்கர், முத்ததிற்க்கு மட்டும் கமலஹாசன் என்று சொன்னதும் ஒரு எட்டு பின் வைக்கிறாள்.


உனக்கு முன்னாடியே நான் செத்துப்போயிட்டா என்னடா செய்வ என்று கொஞ்சம் கூட பயமில்லாது கேட்டவளுக்கு உன்னை புதைத்த கல்லறைக்கு அருகிலே உன்னுடைய கல்லறையை பார்க்கும்படியான சாளரம் வைத்த கல்லறையை எனக்கும் கட்டி விழிமூடா சாவை எமனிடம் வாங்கிக்கொள்வேன் என்றது கண்ணீரோடு காதல் பொங்க கட்டிக்கொண்டாள்.


ஒரு நாள் உன் மடியில் படுத்து அழணும்ன்னு ஆசையா இருக்குடா என்றவளை அப்போ வா கட்டுமரம் கட்டி கடலுக்குள்ளாற கூட்டிப்போகிறேன் நல்லா அழு என்றேன் ஏன் கடலுக்குள்ள போய் அழணும் என்று எதிர் கேள்விக்கு,  இல்ல கடலுக்குள்ள உன்னுடைய கண்ணீர்த்துளி விழுந்தால் முத்தாக மாறிடும் அதையெடுத்து வித்துடலாமே அதான் என்றதும் புன்னைகைக்கிறாள்...


நான் உன் கைக்கு சிக்கிட்டா என்னை என்ன பண்ணுவ என்று ரொமாண்டிக் லுக்கோட கேள்வி கேட்டவளிடம் நான் காதலமைப்பாளர் ஆகிடுவேனே என்றதும் எப்படி எப்படின்னு பதில் கேள்விக்கு இசைய மீட்டுனா இசையமைப்பாளர்ன்னு சொல்றாங்க இல்லியா அதுமாதிரி காதலிய மீட்டுனா கதலைமப்பாளார்தானே என்றதும் ஹைய்யோ கடிக்காதாடா என்றவளின் உதட்டை கடித்து நிஜமாகவே அவளை மீட்ட ஆரம்பித்திருந்தேன்...


ஒரே காதல் மூடோடவே இருக்கியே காதல்ல எதுவும் பிஹச்டி வாங்கப்போறியா என்று எடக்கு மடக்கு கேள்விக்கு நானும் எடக்குமடக்காகவேஆம் காதல் கல்லூரியில் பேச்சலர் ஆஃப் கிஸ் எனும் பட்டப்படிப்பில் முத்தவியல் பாடத்தில் பிஹச்டி பண்ணுவதற்க்காக உன்னை ஆராய்ச்சி செய்து காதலரேட் வாங்கப்போகிறேன் என்றதும் மயக்கமடைந்துவிட்டாள்.


பதிவை வாசித்த அனைவருக்கும் மிக்க நன்றி...


பின்னூட்டப்பெட்டி காலவரையின்றி மூடிவைக்கப்படுகிறது...

5 comments:

சீமான்கனி said...

ஆமா மாப்பி பின்னுட்ட பெட்டிய மூடிட்டு லவ்வுட்ட பெட்டிய தொறந்து வை...கமண்ட்ஸ் கலைகட்டும் இல்லை காதல்கட்டும்...

சீமான்கனி said...

உன் பக்கத்திற்கு வந்ததும் எனக்கு இந்த அறிவிப்பு வருதுடா...மாப்பி...

ஜாக்கிரதை:
கற்பனைக் காதலனை காதல் வைரஸ் தாக்கி விட்டது .என்று....

சுசி said...

ரெண்டாவது சிம்ப்ளி சூப்பர்ப்..

//வெட்கப்பட்டு எனக்கு போதையேற்றுகிறாள்...//
ஓஹோ.. அதான் நீங்களும் அழகா எழுதி இருக்கிங்களா??

//கமலஹாசன் என்று சொன்னதும் ஒரு எட்டு பின் வைக்கிறாள்.//
ஹஹாஹா..

எனக்கும் ரெண்டு முத்து பார்சேல் காதலமைப்பாளரே.

மாணவன் said...

ம்ம்ம்....ஒரு மூடுடோடதான் இருக்கீங்க போல

நல்லாருக்குண்ணே, சூப்பர்

Unknown said...

லவ்வாலஜி....