பிறந்த நாள் அதுவுமா கோவிலுக்குப்போய் சாமிகிட்ட ஆசீர்வாதம் வாங்காம ஏன் என் வீட்டு வாசல்ல வாட்ச்மேன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்குற என்றவளிடம் சாமிதரிசனத்துக்கு சிறப்புகட்டணம் கேட்குறான் உன் வீட்டு வாட்ச்மேன் என்றதும் சிரித்துவிட்டு சரி சரி அவன் கேட்குறதை கொடுத்துட்டு மறக்காமல் அர்ச்சனைக்கு முத்தசீட்டும் வாங்கிவா என்கிறாள்.
பிறந்தநாளுக்கு சாக்லேட் எங்கடா என்று உரிமையுடன் கேட்டாள், சாக்லேட்தானே இருக்கே ஆனா அந்த சாக்லேட்டை ஒரே நேரத்தில் ரெண்டுபேர் மட்டும்தான் சாப்பிடமுடியும்ன்னு சொன்னதும் அப்படியென்னடா வித்தியாசமான சாக்லேட் என்ன பேர் அதுக்கு என்றாள் , அந்த சாக்லேட்டுக்கு பேர் முத்தசாக்லேட் என்றதும் நான் கொடுப்பதற்க்கு முன்பே அவளே எடுத்துக்கொண்டாள்.
உன்னோட பிறந்த நாளுக்கு தங்க மோதிரம் பரிசா தர்றேன் கையை நீட்டு போட்டு விடறேன் என்றாள், கையை நீட்டியதும் அவள் சுண்டுவிரலை என் மோதிரவிரலோடு கோர்த்துக்கொண்டு எப்படி என்னோட பரிசு பிடிச்சுருக்கா என்றாள், எங்கடி மோதிரத்தையே கண்ணுல காட்டல பிடிச்சுருக்கான்னு கேட்குற என்றேன்,நீதான் என்னை எப்போ பார்த்தாலும் தங்கம் பொன்னுன்னு கொஞ்சுவியே அப்போ என்னோட விரல் தங்கத்துல செஞ்ச மோதிரம்தானே என்று சொல்லிவிட்டு வக்கனை காட்டுகிறாள்.
பிறந்த நாள் அன்று எழுந்து என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன் உதட்டையொட்டி கீழே வடிந்திருந்த மீசையை முறுக்கிவிட்ட மாதிரி கண்மையால் வரைந்திருந்தது, இவளோட வேலையாகத்தான் இருக்கும் என்று சமையலைறையில் இருந்தவளிடம் என்னடி இது என்று வரைந்த மீசையை காட்டி கேட்டேன் உங்க பிறந்தநாளைக்கு நான் எழுதிய என்னோட கவிதை நல்லாருக்கா என்று வழக்கமாக முத்தத்தால் வாயை அடைப்பவள் அன்று வார்த்தையாள் என் வாயை அடைத்தாள் .
சரி பசிக்குது பிறந்தநாள் ட்ரீட் சாப்பிட எங்க போகலாம் சரவணபவன், வசந்தபவன் இதுல எதுக்கு கூட்டிட்டு போகப்போற என்ன மெனு ஆர்டர் பண்ணப்போற என்று கேள்வி மேல் கேள்வி கேட்டவளிடம், காதல்பவன் போகலாம் முத்ததோசை வாங்கித்தர்றேன் என்றேன், காதல்பவனா அது எங்க இருக்கு என்றவளை அலேக்காக தூக்கி எங்கள் காதல்பவனான படுக்கையறைக்கு தூக்கிச்சென்று முத்ததோசை பரிமாறினேன்.
Title Card : Inspiration of this post - Thabusankar
.பரிசு1: ரமேஷ்(ரொம்ப நல்லவன் சத்தியமா)
பரிசு 2: மயாதி
