August 15, 2010

நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?





மூன்று பக்கங்கள் இந்திய

அரசியலை சாடி எழுதியிருந்ததை

பற்றி கிழித்துபோட்டுவிட்டேன்

வெளிநாட்டில் உட்கார்ந்துகொண்டு

வெட்டியாய் எழுதி கிழிக்கமட்டும்தான்

எனக்கு தெரிந்திருக்கிறது

இலக்கணம் மீறாமல் காதல் கவிதைகள்

எழுத தெரிந்த எனக்கு

ஒருநிமிடம் எந்த பக்கங்களையும்

புரட்டாமல் இந்திய தேசிய கீதத்தை

தப்பில்லாமல் எழுதவோ சொல்லவோ

தெரிந்திருக்கவில்லை

வெட்கி கூசி கூனி குருகிப்போனேன்

எனக்கென்ன தகுதியிருக்கிறது

இது எத்தனையாவது சுதந்திர தினம்

என்று கூட தெரிந்திருக்கவில்லை

ஆனால் வாய் கிழிய சுதந்திரத்தை

வீணடிப்பவர்களைப்பற்றி

வீணாய் பேசியிருக்கிறேன்...

இந்தியாவில் பசுமை புரட்சி

வேண்டும் என்று காகிதங்களில்

பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன்

அந்த பசுமை காணாமல்

போவது காகிதத்தில்தான்

என்றுகூட தெரியாமல்..

இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்

என்னால் இப்படி சுதந்திரமாக

எதையும் எழுத முடிந்திருக்காது

இந்தியாவைச்சாடி எழுத

முன்னூற்றி அறுபத்தி நான்கு

நாட்கள் இருந்த பொழுதும்

மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்

இந்தியாவை போற்றி பாடுகிறேன்

எத்தனை உயிர்கள் இழந்து

பெற்ற என் தாய் நாட்டின்

சுதந்திரத்தை எல்லை சென்று

காக்கமுடியாவிடினும்

போற்றுகிறேன் வாழ்க இந்தியா

வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...!



    


அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..!

40 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க நண்பா.
வாழ்த்துக்கள் .

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

எல் கே said...

மிகச்சரி வசந்த். உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . ஜெய் ஹிந்த்

ஆ.ஞானசேகரன் said...

நானும் ஒரு இந்தியன் என்பதில் ஆணந்தம்.....

Anonymous said...

சுதந்திரதின வாழ்த்துக்கள்

பெசொவி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஜெய் ஹிந்த்!

Unknown said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

சொல்லியிருப்பவை அனைத்தும் மிகச்சரி.

சுதந்திரதின வாழ்த்துக்கள் வசந்த்.

raja said...

இலங்கையில் எம்தமிழ் குழந்தைகளை பெண்களை ஆண் மக்களை, பாஸ்பரஸ் குண்டுகளை கொண்டு கொன்ற இந்த கேடு கெட்ட இந்திய நாடு எக்கேடு கெட்டு ப்போனால் எங்களுக்கென்ன.....?

சீமான்கனி said...

//இந்தியாவில் பசுமை புரட்சி


வேண்டும் என்று காகிதங்களில்


பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன்


அந்த பசுமை காணாமல்


போவது காகிதத்தில்தான்


என்றுகூட தெரியாமல்..//

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..!

Mahi_Granny said...

அருமை அருமை . சுதந்திர தின வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரியாக சொன்னீர்கள் அன்பரே...

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..!

ஜெய் ஹிந்த்!

kavisiva said...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்

// raja said...
இலங்கையில் எம்தமிழ் குழந்தைகளை பெண்களை ஆண் மக்களை, பாஸ்பரஸ் குண்டுகளை கொண்டு கொன்ற இந்த கேடு கெட்ட இந்திய நாடு எக்கேடு கெட்டு ப்போனால் எங்களுக்கென்ன.....? //

எங்களுக்கு எங்கள் இந்தியா மீதும் பாசமிருக்கிறது. அங்கே மடிந்து கொண்டிருக்கும் மக்கள் மீதும் அக்கறை இருக்கிறது. உங்களைப்போன்றவர்கள் எங்களைப் போன்றவர்களின் எண்ணங்களை குலைக்காமல் இருந்தால் போதும்.

நீங்கள் இப்படி சொல்வதால் எங்கள் நாடு ஒன்றும் அழிந்து விடப்போவதில்லை.

Jey said...

இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்

என்னால் இப்படி சுதந்திரமாக

எதையும் எழுத முடிந்திருக்காது

இந்தியாவைச்சாடி எழுத

முன்னூற்றி அறுபத்தி நான்கு

நாட்கள் இருந்த பொழுதும்

மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்

இந்தியாவை போற்றி பாடுகிறேன்இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்

என்னால் இப்படி சுதந்திரமாக

எதையும் எழுத முடிந்திருக்காது

இந்தியாவைச்சாடி எழுத

முன்னூற்றி அறுபத்தி நான்கு

நாட்கள் இருந்த பொழுதும்

மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்

இந்தியாவை போற்றி பாடுகிறேன்///


க்கு கவிதை எழுத தெரியாதாதலால், மேலுல்ல வரிகளை, பங்காளியிடம் , கத்தியின்றி, ரத்தமின்றி , ஓசியில் பெற்று உங்களுடன், சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். ஜெய் ஹிந்த் ( தாய் மண்ணே உன்னை வணங்குகிறேன்)

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் வ‌ச‌ந்த்.. இனிய‌ சுத‌ந்திர‌ தின‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள்.

நட்புடன் ஜமால் said...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

--------------

நாம் என்ன செய்தோம் நல்ல கேள்வி வசந்த்

சத்ரியன் said...

வாழ்த்துக்கள் வசந்த். கேள்வியும் நல்லாத்தன் இருக்கு.

பின்னோக்கி said...

கவலை வேண்டாம் நண்பரே.
ஒழுங்காக வருமான வரி கட்டுகிறோமே. அதுவே நாம், நம் நாட்டுக்குச் செய்வது. இதை ஒழுங்காகச் செய்வது சுமார் 75 லட்சம் பேர் தான் இந்தியாவில்.

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நன்று.

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

maha said...

சுதந்திர தினம் நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அதற்கு முதலில் சுதந்திரம் கிடைக்க வேண்டும் தோழரே.
இந்தியாவை நேசியுங்கள், இந்திய விடுதலைக்காக போராடுங்கள் (விடுதலை யாரிடமிருந்து என்பது ஊரறிந்த ரகசியம்). ஜெய் ஹிந்த் !!

Palani said...

அருமையான பதிவு

நிறைய மேதாவிகள் இந்தியாவை ஆங்கிலேயர்களே ஆண்டிருக்கலாம் என்கிறார்கள்.

"இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்
என்னால் இப்படி சுதந்திரமாக
எதையும் எழுத முடிந்திருக்காது"

நமது தேசத்தின் சில அவலங்களைப் பட்டியலிட்டுள்ளேன். படித்துப்பாருங்கள்!
http://solvalavan.blogspot.com/2010/08/blog-post_11.html

கார்த்திகைப் பாண்டியன் said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள் தல..:-)))

சிங்கக்குட்டி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் வசந்த்.

ஜெய்ஹிந்த்.

'பரிவை' சே.குமார் said...

சரியா சொன்னீங்க நண்பா.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

Happy Independence Day

சுஜா செல்லப்பன் said...

என்னுடைய மனவோட்டத்தை அப்படியே பிரதிபலித்திருக்கு உங்கள் கவிதை..படித்து சிலிர்த்தேன்..ஒவ்வொரு வரியும் அருமை...வாழ்த்துக்கள்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

Happy independence day Sir

Gayathri said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

யோ வொய்ஸ் (யோகா) said...

இலங்கைபதிவர்கள் சார்பில் சுதந்திர வாழ்த்துக்கள் நண்பா

சுசி said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் உ.பி :))))

அருமையா இருக்கு கவிதை.

புலவன் புலிகேசி said...

//
சுதந்திரத்தை எல்லை சென்று

காக்கமுடியாவிடினும்
// காப்பாத்த வேண்டியது எல்லையை விட உள்ளுக்குள் தான். நம்ம அரசியல்வியாதிகளத்தான் சொல்றேன்...

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமையான உண்மையான வரிகள் வசந்த்.

சுதந்திர தின வாழ்த்துகள்.

Unknown said...

Kavithai nandraga erunthathu..

aakrosamum,vevegamum ulla kavithai..

SurveySan said...

மிகவும் ரசித்தேன்.

R.பூபாலன் said...

****
** **********************
**** *
** ***********************
**** # *
** **********************
**** *
** ***********************
**
**
**
**
**
சுதந்திர தின வாழ்த்துக்கள்"

கோட்டைக்கு கொடியேற்ற போனதால்
நேத்தே சொல்ல முடியல வசந்த் அண்ணா,

Anonymous said...

எனக்கென்ன தகுதியிருக்கிறது.....
unmai thaan......kavithai romba peeidhi irukkunu sonna romba satharanama irukum ,,,,,evalavu pedichirukkunu solla theriyalai vasanth,,,, i like verymuch.....

Anonymous said...

சரியான சாட்டையடி..

Priya said...

அருமையான வரிகள்...வாழ்த்துக்கள் வசந்த்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ நண்டு நன்றி

@ ஞானம் நன்றி நண்பா

@ எல் கே நன்றிங்க தல

@ அகிலா மேடம் நன்றி

@ பெ.சொ.வி. சார் நன்றி

@ சாரல் மேடம் நன்றி

@ ராஜா அப்படியா நண்பா மிக்க நன்றி

@ சீமான்கனி நன்றி மாப்ள

@ மஹி நன்றிம்மா

@ வெறும்பய நன்றி பாஸ்

@ கவி நச் ரிப்ளை:) நன்றிப்பா

@ ஜெயக்குமார் நன்றி பங்கு

@ ஸ்டீபன் நன்றி நண்பா

@ ஜமால் அண்ணா நன்றிண்ணா :)

@ சத்ரியன் அண்ணா நன்றி

@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி

@ மஹா :(

@ பழனி நன்றி படிச்சேன் தல எல்லாமே இன்றைய காலகட்ட்த்தில் நடக்குறது எல்லார் மனசுலயும் ஓடறது

@ கா.பா.நன்றி தல :)

@ சிங்ககுட்டி நன்றி பாஸ்

@ சே.குமார் நன்றிங்க

@ அருண்பிரசாத் நன்றி மச்சி

@ சுடர்விழி அப்படியா மிக்க நன்றிங்க ஸ்டார்

@ பனங்காட்டு நரி நன்றிங்க

@ காயத்ரி நன்றிப்பா

@ சுசி :( i miss that word last two months y now? pls forget..

@ யோகா நன்றி மாப்பு

@ புலிகேசி :(

@ அக்பரண்ணா நன்றி

@ சிவா நன்றிங்க

@ சர்வேஷன் நன்றிங்க பாஸ்

@ பூபாலன் :)) மிட்டாய் எங்க?

@ தமிழரசி நன்றிங்க :)

@ இந்திரா நன்றிப்பா

@ ப்ரியா நன்றி :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நியாயமான கேள்விகள்...