October 24, 2010

உடன்பேட்டை!

என்னோட வழக்கமான போஸ்ட் எதிர் பார்க்குறவங்களுக்கு சாரிம்மா கண்ணு! இது ஆத்ம திருப்திக்காக எழுதுனது !


"என்னத்தா இன்னிக்கு இம்புட்டு சீக்கிரத்துல சமச்சுட்டீக?"


"அதொன்னியுமில்லீங்க மாமா உடன்பேட்டையில இருந்து என்ர அமச்சியும் அப்பச்சியும் வந்துருக்குறாங்க மாமோவ் அதானுங்க வெரசா சமச்சுப்போட்டு அவுகளுக்கு நம்ம ஊர சுத்தி காட்டிப்போடலாம்ன்னு இருக்கேனுங்க மாமா!"


"அதுசரி ஏன்த்தா கல்யாணமாகி புருசன் ஊருக்கு வந்து பத்து வருஷமானபிறகும் உன்னை விட்டு உன் ஊர் பாஷை போகவேமாட்டேங்குதே!"


"இதென்ன ஊரு கெரகம் புடிச்ச ஊரு கெரகம்புடிச்ச பாசை எப்ப பாருங் உப்புசமாவே இருக்கு எங்கூரு உடன்பேட்டைக்கு வந்துருக்கீங்கதானே மாமா அது மாதிரி சிலு சிலுன்னு காத்து எந்த நாட்டுல கெடைக்கும்ங்க சொல்லுங்க?"


ஆமாங்க இவங்க சொல்ற மாதிரி உடுமலைப்பேட்டை சிலு சிலுன்னு காத்து வீசிட்டெ இருக்குற ஊருங்க ! என்னோட அப்பா ஊர் தேனியா இருந்தாலும் நான் பொறந்தது எங்கம்மாவோட ஊரான உடுமலைப்பேட்டையில தான்! அந்த ஊர் பற்றிய சில ஞாபகங்கள்! 


எனக்கு விவரம் தெரிஞ்சு ஐந்தாம் வகுப்புல இருந்து ஒவ்வொரு காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறைக்கு கண்டிப்பா உடுமலைக்கு சென்றுவிடுவதுண்டு . ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்க இருக்குற அம்மாச்சி வீட்டுக்கு போய் எப்படியாவது ஒரு புது ஃப்ரண்ட் பிடிச்சுடுவேன்  !


சின்ன வயசுல இன்ஃபாக்சுவேசன் அப்படின்ற எதிர் பாலின ஈர்ப்பு எல்லாருக்கும் வர்றதுண்டு எனக்கும் வந்துச்சு உடுமலைப்பேட்டையை சுத்தியிருக்கும் கிராமங்கள் பெரும்பாலும் கரும்பு விவசாயம் செய்றவங்க அவங்க கரும்பை பிழிஞ்சி வெல்லமா உருட்டறதில்லை அச்சுவெல்லம் செய்வாங்க அந்த அச்சுவெல்லம் தயாரிக்க அச்சுகுழிபலகை பயன்படும் அந்த அச்சுக்குழிப்பலகை செய்யுற  பட்டறை எங்க தாத்தா வச்சுருந்தார். அப்போ அவருக்கு அந்த அச்சுக்குழிக்கு தேவையான குச்சி வீட்லயே அம்மாயி செதுக்கும் பக்கத்துல இருந்து நான் அது எத்தனை குச்சி செதுக்கியிருக்குன்னு எண்ணிட்டே இருப்பேன் அம்மாச்சி குச்சி செதுக்கி முடிச்சதும் நான் அதை வச்சு விளையாடிட்டு இருப்பேன்..!


அப்படித்தான் ஒரு விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தப்போ அம்மாச்சி வீட்டுக்கு பக்கத்து வீட்டுல இருக்குற காமராஜ் அண்ணா வீட்டுக்கும் மஹான்னு ஒரு பொண்ணு விடுமுறைக்கு வந்துருந்துச்சு அதோட ஊர் பொள்ளாச்சி, நான் குச்சியை வச்சு விளையாடிட்டு இருக்கும்போதே அந்தபொண்ணும் பக்கத்துல வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் ரெண்டு மூணு நாள்ல ரெண்டு பேரும் நல்ல ஃப்ரண்டாயிட்டோம் அந்த பொண்ணு ஊர்ல கத்துகிட்ட விளையாட்டெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கும் ஒவ்வொரு விளையாட்டையும் இப்போ வரைக்கும் நான் ஞாபகம் வச்சிருக்கேன் நிறைய வித விதமான வளையல் துண்டுகளை உடைச்சு மொத்தமா குலுக்கி போட்டு அதை சோடி சோடியா ஒவ்வொரு துண்டையும் அலுங்காம எடுக்கணும் . நான் இதுல நல்லா விளையாட கத்துகிட்டேன் . இப்படி இன்னும் நிறைய விளையாட்டுகள் சொல்லிக்கொடுத்துச்சு அந்த பொண்ணு.அவ பேசற அந்த கோயம்புத்தூர் ஸ்லங் எனக்கும் தொத்திக்கும் விடுமுறை முடிஞ்சு ஊருக்கு போன பிறகும் ஒரு மாதத்திற்க்கு கோயம்புத்தூர் ஸ்லங்லயே  பேசிட்டு இருப்பேன்!

ரெண்டுபேரும் தேங்காய் பர்பி முட்டாய் வாங்கி சாப்பிட்டுக்கிட்டே அந்த ஊர்ல சைக்கிள் கத்துகிடறதுக்கு பேமஷான குட்டைத்திடலுக்கு போய் வாடகைக்கு ஆளுக்கொரு சைக்கிள் எடுத்து தெரு தெருவா சுத்துவோம் அந்த மஹாவை பார்க்குறதுக்காகவே ஒவ்வொரு விடுமுறையையும் ஆர்வமாய் எதிர்பார்ப்பேன் நான் அது ஏதோ இனம்புரியாதசந்தோஷம்.அப்போ எட்டாம் வகுப்பு முழுஆண்டுத்தேர்வு முடிச்சுட்டு ஊருக்கு போய்ட்டேன் மஹாவும் வந்திருந்தா ஆனா வழக்கமா என்கூட விளையாட வரலை என்னாச்சுன்னு கேட்டா நான் பெரிய பொண்ணாயிட்டேன்ன்னு சொல்லிட்டா அப்பறம் அதுக்கடுத்த விடுமுறைகளில் அவள் ஊருக்கு வருவதே இல்லை !அத்தோடு முடிந்தது அந்த சிறு வயது காதல்!


இன்னும் நான் கொஞ்சம் பெரிய பையன் ஆயிட்டேன் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன்!அப்போ அந்த ஊர்ல இருக்குற மாரியம்மன் கோவில் சுத்து வட்டாரத்துல எல்லாம் ஃபேமஸ் அந்த கோவில் திருவிழாவின் போது தேரோட்டம் நடக்கும் அந்த தேரோட்டமும் அந்த குட்டை திடலில்  தான் நிறைய பொண்ணுங்க வருவாங்க அவங்களை சைட்டடிக்கிறதுக்காகவே பசங்களோட போறதுண்டு! தேரோட்டம் முடிஞ்சதும் அந்த கோவில் தெருவில் இருக்கும் தங்கநகை கடைக்காரங்க எல்லாம் வான வேடிக்கை நடத்துவாங்க அது பார்க்கிறதுக்கு கண் நூறு வேணும் அவ்ளோ அழகாஇருக்கும்...அத்தோடு சினிமா பார்த்து பழகியதும் அந்த ஊரில்தான் கல்பனா, தாஜ், லதாங்கி, அனுஷம், ப்ரவோன்னு எல்லா தியேட்டருக்கும் போய் படம் பார்ப்பேன் இதுல அனுஷம் தியேட்டர் சத்யராஜோட மாமனார் தியேட்டர் அப்படின்னு தெரிஞ்சதும் ஊர்ல போய் நான் சத்யராஜ் தியேட்டர்ல படம் பார்த்தேனேன்னு பெருமையடிச்சுகிடறதும் உண்டு...

ப்ளஸ் டூ முடிச்சுட்டு பாலி டெக்னிக் படிக்கறபோது வந்த விடுமுறைக்கு போயிருந்தப்போ அந்த ஊர்ல இருக்குற பெரிய நூலகம் அறிமுகமாச்சு நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சது அப்போதான் என்னத்த பெரிய புத்தகம் சிறுகதைகள் , கவிதைகள், நாவல்கள்ன்னு அவ்ளோதாங்க..


பிற்பாடு எனக்கு இந்து மதத்தின் மீது நிறைய நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு விடுமுறைக்கு போகும்போதும் தளி ரோட்ல குட்டைதிடலுக்கு பக்கத்தில் இருக்குற சர்ச்சுக்கு போகாமல் வந்தது கிடையாது , ரம்ஜான் மாதத்தில் குட்டைக்கு அருகிலுருக்கும் மசூதிக்கு தினமும் சென்று நோம்புகஞ்சி வாங்கி குடிப்பது இப்போ வரைக்கும் பிடிக்கும்! 


அந்த ஊர் அம்மணிகள் தாலியை நூல் நூலா கட்டியிருக்குற ஸ்டைல் பிடிக்கும், அந்த ஊர் கொங்கு பாசை பேசறதை கேட்கவும் , பேசவும் பிடிக்கும், சுடச்சுட அங்க கிடைக்கிற தேங்காய்ப்பால் சாப்பிட பிடிக்கும்,திருமூர்த்தி டேம் போய் ஆசை தீரகுளிக்க பிடிக்கும் , அமராவதி ஆத்து தண்ணி குடிக்க நிறைய பிடிக்கும் , சர்க்கரையை அண்ணாச்சி கடையில் அஸ்கான்னு சொல்லி வாங்க பிடிக்கும்.இப்படி நிறைய என் சொந்த ஊரை விட என் மனசுக்கு பிடிச்ச ஊர் உடுமலைப்பேட்டைங்க!இப்போ விடுமுறைக்கு ஊருக்கு போயிருந்தப்போ ஆசை தீர பத்து நாள் இருந்துட்டு வந்தேன்!


இப்போவும் யாராச்சும் கோயம்புத்தூர் பாசை பேசறவங்கள பார்த்தாலே சீக்கிரமே ஒரு வித பிணைப்பு ஏற்படறதுண்டு!


இப்போ கூட பொண்ணு பார்த்துகிட்டு இருக்கற அம்மாகிட்ட ஒரு விண்ணப்பம் வச்சுருக்கேன் அது என்னான்னு சொல்லமாட்டேனே வவவ்வ்வவ்வே!




ஓவ்வொரு முறையும் ஊருக்குப்போகும் போது குட்டைத்திடலில் இருக்கும் இவரை பார்க்க மிஸ் பண்ணுனதில்லை இந்த முறையும் வழக்கம்போலவே சிறை வைக்கப்பட்டிருந்தார்!


.

49 comments:

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான நினைவலைகள்! பகிர்ந்ததற்கு நன்றி!!

pudugaithendral said...

ஆஹா கொசுவத்தியா. நல்லா இருக்கு.
நானும் சமீபத்துலதான் அம்மம்மா வீட்டைப்பத்தி கொசுவத்தி சுத்தினேன்.

மாணவன் said...

நினைவலைகளை அழகாக ஞாபகபடுத்தியுள்ளீர்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

இது போன்ற பதிவுகள் தான் உங்ககிட்ட நிறைய எதிர்ப்பார்க்கிறேன் ...

அம்மாகிட்டே சொல்லியிருக்கும் உங்கள் கோரிக்கை --- என்னாலையும் கொஞ்சம் யூகிக்க முடியுது --- அவ்வண்ணமே கிடைக்க பிரார்த்தனைகள் வசந்த்.

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
sakthi said...

ஏனுங்க வசந்த் தம்பி அம்மாகிட்ட விண்ணப்பம் வைச்சு இருக்கீங்களே அது நிறைவேறட்டும் என வாழ்த்திக்கறேன்.

எங்க ஊரு பாஷை மேல் இத்தனை அபிமானம் வைத்திருப்பது கண்டு நெகிழ்வாயிருக்கு!!!!

அஸ்கா மாதிரி இனிப்பா இருக்கட்டும் உங்க வாழ்கையும்!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையா இருக்கு நண்பரே உங்க நினைவலைகள்....

உங்க விருப்ப படியே வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆஹா

Anisha Yunus said...

வாவ்....ரெம்ப நாளைக்கு அப்புறம் குட்டைத்திடல், திருமூர்த்தி மலை, அமராவதி, தளி ரோடு என ஏகப்பட்ட நினைவுகளை கிளறி விட்டுருக்கீங்க அண்ணா. எனக்கும் மிக மிக பிடித்த ஊர் உடுமலை. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அங்கே இருந்திருக்கேன். குட்டைத்திடல் எதிர்த்தாப்புல சிந்தாமணில கிடக்கிற ஃப்ரெஷ் மீனை இப்ப வரை அடிச்சுக்க ஆளில்லை. அதே போல குட்டைல போடற எக்ஸிபிஷன்லயும் இப்ப வரை அந்த பாம்பு பெண் ஒரு ஃபேசினேஷந்தான் எனக்கு. ஹ்ம்ம்...எல்லாம் அமெரிக்காவுக்காக இழந்த சொத்துக்கள்ல ஒன்னு. நன்றி, அழகான இந்த பதிவுக்காக. அடுத்த முறை உடுமலைய ஃபோட்டோக்களோட போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான நினைவுகள்! கோயமுத்தூர் ஸ்லாங் ரொம்ப அலாதியானது, அவங்க பேசுற விதம், ஹாஸ்ப்பிட்டாலிடி, சாப்பாடு, அதுவும் சிறுவாணித்தண்ணில செய்யற சாப்பாடு ருசியே தனி...அப்பிடியே சொல்லிக்கொண்டே போகலாம்! கோவை வட்டாரத்த எல்லாருக்கும் உடனே பிடிச்சிடும்! ஆனா மாப்பு உங்களுக்கு கோவை புடிச்சதுக்கு ஒரு விஷேஷ காரணமும் இருக்கு! அதுபோலவே அமைய வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தமாதிரியும் அடிக்கடி எழுதுங்கப்பு!

எல் கே said...

அண்ணே வேண்டாம் , அந்த ஊரு பொண்ணு வேண்டாம்.. சொல்லிபுட்டேன் . அப்புறம் உங்க இஷ்டம்

நாணல் said...

நினைவலைகள் உங்க ஊருக்கு கூட்டிட்டு போகுது படிக்கறவங்கள....

Anonymous said...

நைஸ் தல :)

தினேஷ்குமார் said...

நினைவுகள் எங்கெங்கோ செல்கின்றன உங்கள் பதிவை பதிக்கும்போது நண்பரே
பகிர்வுக்கு நன்றி நண்பரே

செல்வா said...

Kalakitinka anna. Appuram naan kooda coimbatore paasai pesuven. Yenna naan erode. Appuram LK anna yean enka ooru ponnu venakarinka.?

செல்வா said...

Kalakitinka anna. Appuram naan kooda coimbatore paasai pesuven. Yenna naan erode. Appuram LK anna yean enka ooru ponnu venakarinka.?

சுந்தரா said...

பழைய நினைவுகளை, அழகா,சுவாரசியமா சொல்லியிருக்கீங்க.

உங்க விருப்பத்துக்கேத்தமாதிரி பொண்ணு அமைய வாழ்த்துக்கள் :)

நிலாமகள் said...

வீட்டை தூசி தட்டுற மாதிரி அப்பப்போ பழைய நினைவுகளை தட்டிப் பார்க்கற சொகமே தனிதான். அம்மா ஊருல பொண்ணு தேடுங்க... பரவாயில்ல... அம்மா போலவே கேட்டாத்தான் கஷ்ட்டம். புள்ளையாரே தடுமாறிப் போன விஷயம். அதென்னமோ தெரியல... அம்மா வழி உறவும், ஊரும் எல்லோருக்குமே அதிகப் பசையோட ஒட்டிக்குது! புதுப் பொண்ணுகிட்ட பேச, பழைய கதையெல்லாம் ரொம்பவே உதவும். சேமிச்சிக்கிடுங்க.

Thanglish Payan said...

Superb..

Sirai vaithal than ulagam avari vittu vaikkirathu :(

நவீன் said...

கலக்கல் பதிவு

நானும் உடுமலையில் நாலு வருஷம் இருந்தேன்...
அந்த சிலு சிலுன்னு வீசுற காத்தும், அந்த பாஷையும்,
மரியாதையோட பழகுற மனுஷங்களும்,
திருமூர்த்தி அணை, அருவி குளியல்களும்...
அந்த வான வேடிக்கைகாகவே ஒவ்வொரு முறையும்
திருவிழாவுக்கு போய் இருக்கேன்...

இன்னிக்கும் ரெண்டு நாள் விடுமுறை கிடைச்சா அந்த ஊர்
நண்பர்களை பார்க்க போய்டுவேன்..
ரொம்ப மிஸ் பண்ணுறேன் உடுமலைபேட்டைய...

vinu said...

nalaakeeethupaaaaaaaa

naanum coimbatore kaaran thaanungoooooooo

'பரிவை' சே.குமார் said...

நெகிழ்ச்சியான நினைவலைகள்!

காந்தி படத்துக்கான உங்கள் கமெண்ட் ரொம்ப நல்லாயிருந்தாலும் அதுதான் தலைவர்களின் சிலைகளுக்கான நிலைதான்.

Mahi_Granny said...

இதுவும் வழக்கமான போஸ்ட் போலத் தான் அருமையாய் இருக்கு. அம்மாவிடம் கேட்டுள்ள வேண்டுகோள் சீக்கிரமே பலிக்கட்டும்.

Philosophy Prabhakaran said...

ஏய் சூப்பரப்பு... இந்த மாதிரி நீங்க பேசி நாங்க கேட்டாதே இல்லை... இதே மாதிரி வாரம் ஒரு முறை எழுதுங்க...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நினைவலைகள் அழகு!

அஸ்கா சக்கரை :))

குட் லக் வசந்த்!

அருண் பிரசாத் said...

சிறைப்பட்ட காந்தி

சுதந்திரத்திற்கு பின்

சூப்பர் படம் வசந்த்

Anonymous said...

//தாலியை நூல் நூலா கட்டியிருக்குற ஸ்டைல் பிடிக்கும், //

எனக்கும் பிடிக்கும்...பலவ்ருடங்கள் இப்படி போட்டிருந்தேன்...

Unknown said...

மலரும் நினைவுகள் அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி

Geetha6 said...

me too! Belong to Coimbatore..
suppppperrrrrr.

Anonymous said...

மலரும் நினைவுகளா??
கொசுவத்தி எல்லாம் சுத்திட்டீங்களா???

erodethangadurai said...

உங்கள் ஆத்ம திருப்திக்காக எழுதுனது எங்களின் மனதிலும் ஆத்ம திருப்தி அளிக்கிறது.. !

ஜெயந்தி said...

ரொம்ப சின்ன காதல் கதை.

அதே மஹாவ பொண்ணு பாக்கச் சொல்லியிருப்பீங்க. இல்லன்னா உடுமலைப்பேட்டை பொண்ணா பாக்கச் சொல்லியிருப்பீங்க சரிதானே?

தேவா said...

பாஸ் வருங்கால பொள்ளாச்சி மாப்ளையாக வாழ்த்துக்கள்.

//ஒரு மாதத்திற்க்கு கோயம்புத்தூர் ஸ்லங்லயே பேசிட்டு இருப்பேன்!//

மருவாத குடுத்தே பழக்கப்பட்டவங் நாங்கலாக்கும்.....

R.பூபாலன் said...

ஹய்யோ.....

Feelings... Feelings....

முடியலையே......

R.பூபாலன் said...

வர sunday திருமூர்த்தி dam போகலாம்னு இருக்கேன்ணா....
வரீங்களா.....?

R.பூபாலன் said...

எனக்கு தேங்காய் பர்பி வேணும் ..
எனக்கு தேங்காய் பர்பி வேணும்....
ம்ம்..
ம்ம்..ம்ம்..ம்ம்

மாதேவி said...

இனிய நினைவலைகள்.

வவவ்வ் :))) வாழ்த்துகள் வசந்த்.

Thenammai Lakshmanan said...

கோயமுத்தூர் பொண்ணுதான் வரப்போகுதா.. வசந்த்..:))

சாந்தி மாரியப்பன் said...

அம்மா மாதிரியே பொண்ணு வேண்ணா கிடைக்கிறது கஷ்டமாருக்கலாம். ஆனா, அம்மா ஊர்லேர்ந்து பொண்ணு ஈசியா கிடைச்சுடும். உங்க ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் சகோ..

சுசி said...

அம்மா பொண்ணு பாத்துட்டாங்களாப்பா??

ப்ரஃபைல் ஃபோட்டோ பாத்தப்பவே நினைச்சேன் :))

ப்ரியமுடன் வசந்த் said...

@ எஸ்.கே. நன்றி பாஸ்!

@ நன்றி புதுகைத்தென்றல் மேடம் நேரம் வாய்க்கும்போதுவாசிக்கிறேன் கண்டிப்பா!

@ மாணவன் நன்றி பாஸ் :)

@ ஜமாலண்ணா ஆஹா ரைட்டுண்ணா!

@ சக்தி சகோ மிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்தைக்கண்டு நன்றி சகோ!

ப்ரியமுடன் வசந்த் said...

@ வாழ்த்துக்கு நன்றி ஜெயந்த் :)

@ ரமேஷ் நன்றி மாம்ஸ்

@ அன்னு ஆஹா அதே அதே தங்கச்சி அந்த சிந்தாமணி ஃப்ரெஷ் மீன்கடை அப்பறம் எக்சிபிசன் மறந்துவிட்டுட்டேன் ஞாபகப்படுத்தியமைக்கு மிக்கநன்றி போட்டோஸ் அடுத்தமுறை கண்டிப்பா போனா எடுக்குறேன்! :))

@ ராம்சாமி மாம்ஸ் உங்களுக்கும் கோவை மேல ஒரு ஈர்ப்பு இருந்திருக்கு!நன்றி எழுதறேன்ப்பு!

@ எல் கே மாமு அக்காகிட்ட சொல்லிகொடுக்கவா?

ப்ரியமுடன் வசந்த் said...

@ நாணல் நன்றிங்க:)

@ பாலாஜி சரவணா நன்றி பாஸ் :)

@ தினேஷ்குமார் நன்றிங்க :)

@ செல்வக்குமார் அப்டியா தம்பி சந்தோஷம் பேசலாம் ஒரு நாள் !

@ சுந்தரா மேடம் வாழ்த்துக்கு நன்றி மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ நிலாமகள் சகோ ஆவ் பிள்ளையார் கதயெல்லாம் சொல்லி பயமுறுத்தாதீங்க கண்டிப்பா அம்மா மாதிரி பொண்ணு கிடைக்காதுதான்! நன்றி சகோ!

@ தங்லிஷ் பையன் பேரே டெர்ரரா இருக்கே பாஸ் நன்றி!

@ நவீன் ரைட்டு ரீடர்ல படிக்கிற நவீன் நீங்கதானா இதுவரைக்கும் படிச்சதுக்கும் நன்றி முதல்ல அப்பறம் உடுமலை உங்களுக்கும் பிடிக்குமா சந்தோஷம்!

@ வினு ஆமாவாங்ண்ணா ரைட்டு!

@ சே.குமார் அதே அதைத்தான் மறைமுகமா சொல்லியிருந்தேன் நன்றி குமார்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ மஹிம்மா உங்கள் வாக்கு பலிக்கட்டும் மிக்க நன்றியும் அன்பும்!

@ பிரபாகர் நன்றி தலைவா எழுதிடலாம்!

@ சந்தனா ஏன் சிரிக்கிறீக? நன்றிங்க!

@ அருண் மாம்ஸ் நச் கமெண்ட் நன்றி!

@ தமிழ் மேடம் நான் ஆந்திராபொண்ணுகளப்பத்தி பேசவே இல்லியே வவவவ்வே :))))))

ப்ரியமுடன் வசந்த் said...

@ ஜிஜி நன்றிங்க :)

@ கீதா ஓஹோ நன்றிங்க :))

@ இந்திரா :))

@ ஈரோடு தங்கத்துரை நன்றி பாஸ் :)

@ ஜெயந்தி மேடம் அப்டில்லாம் இல்லீங்க மகாவுக்கு எப்பவோ மேரேஜ் ஆயிடுச்சு செகண்ட்தான் பாதி சரி! நன்றி மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ தேவா நன்றி பாஸ் அதுதேஞ்சரி :))

@ பூபாலன் போலாமே தந்துட்டா போச்சி!

நன்றிடா செல்லம்!

@ மதேவி மேடம் நன்றி ஹ ஹ ஹா :)

@ தேனம்மா ஆமா ஆமா நன்றி :)

@ சுசி உங்களுக்கு மேரேஜ் நாள் வரைக்கும் சஸ்பென்ஸ் காட்டுறதா முடிவு பண்ணிட்டேன் :)))

ப்ரியமுடன் வசந்த் said...

@ அமைதிச்சாரல் சகோ அதேதான் வாழ்த்துக்கு நன்றி சகோ!