February 21, 2011

ஆணி வியாபாரியாகலாம் வாங்க...!


''எல்லாரும் எல்லாமும் ஆகிவிடுவதில்லை'' ஒரு நணபர் நீங்க ஒரு ஆணி வியாபாரியாக இருந்தால் எப்படி வியாபாரம் பண்ணியிருப்பீங்க என்பதை பதிவில் எழுதுங்களேன் என்றார். நானும் முயற்சி பண்ணியிருக்கேன் இது எல்லாமே எல்லாரும் ஃபாலோ பண்றதுதான்... நான் ஆணி வியாபாரம் செய்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பேன் எப்படியெல்லாம் வியாபாரத்தை பெருக்கியிருப்பேன்?? என்ற கற்பனை. என்னடா ஆணி வியாபாரம் அப்படின்னு சுளுவா நினைச்சிடாதீங்க..இந்த ஆணிக்கும் எனக்கும் இருக்கும் உறவு பற்றி Behind the postல் சொல்கிறேன்..

கடை இட தேர்வு மற்றும் அமைப்பு
முதலில் வியாபாரம் நடத்த ஏதுவான இடம் தேர்ந்தெடுக்க வேண்டும். இனம் இனத்தோடு சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் ஆம் ஆணிக்கடையை மெடிக்கல் ஷாப்பிற்க்கு பக்கத்திலோ இல்லை காய்கறிக்கடைக்கும், மளிகைக்கடைக்கும் அருகிலோ அமைக்க எனக்கு மனம் வரவில்லை . ஆதலால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வீடு கட்டுவதற்க்கு தேவையான மர விற்பனை கடை,மற்றும் ஹார்டுவேர் ஷாப்களுக்கு அருகில் ஆணிக்கடைக்கான இடத்தை வாங்கியோ இல்லை வாடகைக்கோ கடை பிடித்துவிட்டேன். கடைக்குள் ஆணிகளை அதன் அளவு வாரியாக பிரித்து வைக்கும் அடுக்குகள்(கப்போர்ட்கள்) செய்து, வர்ணங்களும் பூசிவிட்டேன் இந்த வர்ணங்கள் கண்ணுக்கு உறுத்தாத அளவிற்க்கு இருக்கும்படி இளம்பச்சை நிறம் அடித்தாகிவிட்டது.அடுத்து கடை விளம்பர பலகையும் அமைக்க வேண்டும் அதிலும் ஆணி சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் அதுவும் அமைத்துவிட்டேன்.





விலைப்பட்டியல்

அடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடையில் விற்கப்படும் ஆணிகளின் அளவும் விலையும் தெரியப்படுத்தும் விலைப்பட்டியல் கடையின் முகப்பில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்க்கேற்ற அளவு மட்டுமே வாங்கி கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

கொள்முதல் .


கடை அமைத்தாகிவிட்டது அடுத்து கடையில் விற்பதற்கு தேவையான ஆணிகளை மொத்த விலைக்கு வாங்க வேண்டும். மொத்த விற்பனையாளரிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னுடைய வியாபார நுணுக்கங்கள் சிலவற்றையும் அவரிடம் கூறி வாங்கிய ஆணிகளுக்கான முழுப்பணத்தையும் அவரிடம் முடக்கிவிடாமல் பகுதி மட்டுமே கொடுத்துவிட்டு ஆணிகளை வாங்கி வந்து கடையில் அளவு வாரியாக பிரித்து வைத்தேன். அப்படி பிரித்து வைக்கும்பொழுதே சில யோசனைகள் தோன்றியது ஆணிகளை ஒருகிலோ மற்றும் இரண்டுகிலோ பேக்கேஜ்களாக செய்து அடுக்கி வைத்தால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து எடைபோட்டு பொட்டலம் கட்டும்வரை காக்க வைப்பதை தவிர்க்கலாம் . ஏதேனும் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட்டால் கடையின் முன் டேபிளில் இருக்கும் எடை இயந்திரத்தில் வைத்து எடை சரியாக இருப்பதையும் காட்டலாம்.


விளம்பரம் & சலுகைகள்
காட் என்னதான் கடையில் தரமான ஆணிகள் விலைகுறைவாக விற்றாலும் ஆணிகள் விற்கும் என்கடையை பலருக்கும் தெரிய வைப்பதற்க்கு விளம்பரமும் சில சலுகைகளும் தேவைப்பட்டது யோசித்தேன்.ஒரு கிலோ இரண்டுகிலோ ஆணி பேக்குகளில் கடையின் பெயரை அச்சடித்தேன், கடையில் ஆணி வாங்க வரும் கஸ்டமர்களிடம் எங்களிடம் வாங்கும் ஆணி பேக்குகளில் ஒரு பத்து காலியான பேக்குகள் கொண்டுவந்தால் கால் கிலோ ஆணி இலவசமாக தரப்படும் என்று வாய்வழி விளம்பரம் செய்தேன். அதையே ஒரு விளம்பர போர்டில் எழுதி கடை வாசலில் மாட்டினேன்...


அடுத்து கடையினைப்பற்றிய விளம்பரங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டது. இது எல்லாருமே பின்பற்றுவதுதான் இதற்கு அடுத்து வரப்போபவைகள் யாரேனும் செய்திருக்கிறார்களா தெரியாது, பார்ப்போம்..

ஆணி வாங்குபவர்களுக்கு சில சலுகைகள்


இதுவரைக்கும் செய்த சில விளம்பரங்கள் சலுகைகள் வைத்து ஓரளவு கடை நஷ்டத்தில் இயங்காமல் எனக்கு வரக்கூடிய மாத வருமானத்தோடு சென்று கொண்டிருந்தது. பொதுவாக ஆணிகளை வாங்க வருபவர்களில் பெரும்பாலானோர் கார்பெண்டர்களாக இருப்பார்கள்.அவர்களை அடிக்கடி நம் கடைக்கு வரவழைக்க அவர்களுக்கு தேவையான ஆணிக்கும் சம்பந்தப்பட்டிருக்கும்படி ஒரு பொருளை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஆரம்பித்தேன் அது என்ன பொருள் என்று கேட்கிறீர்களா? ஆணிகளை போட்டு வைக்கும் லெதர் பை இந்த லெதர் பை உயரமான கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் மெசர்மெண்ட் டேப் மற்றும் பென்சில்கள் வைத்து இடுப்பில் கட்டி வேலை செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் ஆணிகள் அடிக்கடி எடுத்து சிதறி வீணாவது தடுக்கப்படும்.


ஆணிகளை வாயில் வைத்து கொண்டு ஆணி அடிக்கும் கார்பெண்டர்களை பார்த்திருப்பீர்கள் அவர்களுக்கு ஆணிகளையும் பென்சிலையும் மீட்டரையும் ஒரே இடத்தில் வைத்து க்கொள்ளவும் இலகுவாகவும் இருக்கும் இந்த பை இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த லெதர் பேக்கிலும் கடையின் விளம்பரம் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். ஓரளவு இந்த யுக்தியும் பரவலாக பயன் பட்டது அதிகப்படியான கார்பெண்டர்கள் கடைக்கு வர ஆரம்பித்திருந்தனர் அவர்கள் வாங்கும் ஆணிகளின் எண்ணிக்கைக்கேற்ப லெதர் பைகள் கொடுத்தேன்.இந்த லெதர்பைகளுக்கான விலையை கடையில் வரும் லாபத்தில் இருந்தே எடுத்தேன் முதலில் இருந்து எடுக்கவில்லை.

இன்னும் ஆணிகளை வள வள கொல கொலவென்ற சுத்தியல்களில் அடித்தால் ஒன்று கையில் அடிபடும் இல்லை ஆணி தெறித்து ஓடும் ஆதலால் ஆணியை கச்சிதமாக அடிக்க ஒத்தக்கண் சுத்தியல்கள் ஒருபக்கம் ஆணிகளை லாவகமாக பிடுங்கும் சுத்தியல்களை , சுத்தியல் தயாரிக்கும் இடத்திலிருந்து வாங்கி வந்து கடையில் விற்பனைக்கு வைத்தேன்.இந்த சுத்தியல்களை பற்றியும் கார்பெண்டர்களிடம் அறிமுகப்படுத்தினேன். இந்த சுத்தியல்களுக்கு கார்பெண்டர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து சுத்தியல் விற்பனையும் கணிசமான லாபத்தை கொடுத்தது.

வாடிக்கையாளர் குறைகள்

ஆணிகள் அடிக்கடி வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ ஆணியில் நூறு கிராம்கள் ஆணிகளில் கொண்டைகள் இருப்பதில்லை என குறைகள் கூறினர்.இது நானும் கவனிக்கவில்லை உடனடியாக இந்த விஷயத்தை மொத்த கொள்முதல் வியாபாரியிடம் எடுத்துச்சென்று ஆணி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருக்கும் டெஃபெக்ட்டுகள் மூலம் இது ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு குறை நிவர்த்தி செய்யப்பட்டது.இப்பொழுதெல்லாம் குறைகள் வருவதில்லை. மேலும் பழைய வளைந்த ஒடிந்த ஆணிகளை வாங்கி அதற்கு பதில் பாதிவிலையில் புதிய ஆணிகளை தரும் திட்டத்தையும் செயல்படுத்திப்பார்த்தேன் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லாததால் அதை அப்படியே நிறுத்தி வைத்தேன்..

கடை இப்பொழுது ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இலாபத்தை தந்துகொண்டிருந்தது இந்த இலாபத்தொகையை வங்கியில் முடக்கிவிடாமல் கடையின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொண்டேன் ஏற்கனவே இருக்கும் கார்பெண்டர்களின் ஆதரவுகளோடு வசந்த் ஹார்ட் வேர் ஷாப்பாக மாற்றி புதிய கட்டிட வேலைகளுக்கு தேவையான இரும்பு சாமான்கள் அனைத்தையும் வாங்கி விற்க ஆரம்பித்தேன் . இன்னும் விலை குறைப்பு சலுகைகள் ஆகியவற்றைக்கொண்டே கடையை இலாபகரமாக நடத்திக்காட்டினேன்...

இப்பொழுது அடுத்த பிசினஸ் ஆரம்பிப்பது பற்றிய எண்ணமே மேலோங்கியிருக்கிறது...

Behind The Post:

நீங்க எல்லாம் வேலை மிகுதியா இருந்தா ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு ஈசியா சொல்றீங்க இல்லையா? அந்த வார்த்தையின் வலியும் கஷ்டமும் அதிகம் அறிந்த காரணத்தினாலோ என்னவோ இதுவரை ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு நான் சொன்னதே கிடையாது. இந்த ஆணி பிடுங்குவது ஆணியடிப்பதை (செண்ட்ரிங் ,கார்பெண்டரிங்கை) குலத்தொழிலாக கொண்டவன் நான். எனக்கு ஆணியடிப்பது பிடுங்குவதில் 6 வயதிலிருந்தே அனுபவம், விளைவு ஆணி அடிக்கும் பொழுது சுத்தியல் தவறுதலாக என்னுடைய நகத்தில் பட்டு நகங்களை பல முறை இழந்திருக்கிறேன். ஆணி பிடுங்கும் பொழுது பலகைகளில் நீட்டிக்கொண்டிருக்கும் ஆணியை தவறுதலாக மிதிக்கும் பொழுது போட்டிருக்கும் ஹவாய் செப்பலையும் குத்திக்கிழித்து ஒரு இஞ்ச் உள்ளே சென்று பொதக்கென்றி இரத்தம் எட்டிப்பார்க்கும் அதுவும் இலேசாக துருப்பிடித்த ஆணிகள் செப்டிக் ஆகிவிடாமால் எண்ணையை சுட வைத்து வேது வைப்பது பின் அதுவும் கேட்காவிட்டால் மட்டுமே டாக்டரிடம் செல்வது இதுபோல பல முறை நடந்திருக்கிறது...இதுவரை மட்டுமல்ல இனி எப்பொழுதும் என் வாயிலிருந்து ஆணி பிடுங்கிட்டு வர்றேன் என்பது வராது..

,


56 comments:

எஸ்.கே said...

ஆணி தொழில்! ஆனால் நிறைய தகவல்கள்!

ஆணி புடுங்கிட்டு வரேன்னு சொல்றதுக்கு பின்னாடி ஒரு வலி இருக்கும்னு இப்பதான் தெரியுது!

சுதர்ஷன் said...

ஆணிக்கு பின்னாடி இவ்வளவு விஷயமா ? நன்றி

தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்

sathishsangkavi.blogspot.com said...

ஆணி தகவல் அறுமை...

ரேவா said...

வேலை மிகுதியா இருந்தா ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு ஈசியா சொல்றீங்க இல்லையா? அந்த வார்த்தையின் வலியும் கஷ்டமும் அதிகம் அறிந்த காரணத்தினாலோ என்னவோ இதுவரை ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு நான் சொன்னதே கிடையாது


ஒரு ஆணிக்குள் இவ்ளோ அழமான கதையா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆணிப்பற்றி நி றைய தகவ ல்கள் அருமை..

அது சரி இது தேவையுள்ள ஆணியா.?
தேவையில்லாத ஆணியா..?

என்னா நான் எடுக்கறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்..

வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு அப்படியே ஆடி,ஆவணி,புரட்டாசி பற்றியும் விளக்கவும்..

Anonymous said...

ஆணித் தொழில் பற்றிய உங்களது பதிவு அருமை. அதிலுள்ள வலிகளும் உங்கள் ஆதங்கமும் புரிகிறது.

ஆனா “ஆணி புடுங்கிட்டு வரேன்“னு சொல்றது அந்தத் தொழிலை கிண்டல் பண்றதுக்கு இல்லையே..

சீமான்கனி said...

ஐயோ!!! அப்போ நானும் இனிமேல் ஆணி புடுங்குறத பத்தி பேசமாட்டேன்...

இமா க்றிஸ் said...

ரசித்தேன். ;))

ஆர்வா said...

ஆணிபிடுங்கி ரொம்ப எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க போல...

மாணவன் said...

ஆணிபற்றிய தகவல்களை உங்கள் கற்பனை ஸ்டைலில் தெளிவா சொல்லியிருக்கீங்கண்ணே... சூப்பர்

மாணவன் said...

//இதுவரை மட்டுமல்ல இனி எப்பொழுதும் என் வாயிலிருந்து ஆணி பிடுங்கிட்டு வர்றேன் என்பது வராது..//

உங்களின் இந்த சொந்த அனுபவம் யோசிக்க வைக்குது அண்ணே...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)

middleclassmadhavi said...

எல்லாம் இந்த friends சினிமாவால வந்த வினை! :)

Ashok D said...

//ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு//

இப்படி நான் சொன்னதே இல்லை தம்பி.. பின்னூட்டங்களில் கூட :)

ராமலக்ஷ்மி said...

ஆணித் தொழிலைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக சொல்லிவிட்டுள்ளீர்கள்:)!

Mahi_Granny said...

பெரிய தொழில் அதிபராக வர சான்ஸ் உங்களிடம் நிறைய இருக்கு. முயற்சி பண்ணுங்க

Anonymous said...

பயனுள்ள பதிவுன்னு சொல்ல நினைத்த போது பிகைண்ட் த போஸ்ட் உணர்வுகளை தொட்டதால் ஆணி பிடிங்குதல் என்ற வார்த்தை அழுத்தமாய் பதிந்தது மனதில்..

கலா said...

பெண்ணே!
இந்த ஆணைப்பாத்தாயா?
ஆணிக்கடை வைத்தாவது
ராணியைக் காப்பாற்றுவார்
கவலை தேவையில்லை
ம்ம்ம்.......
எழுத்தாணியால்
ஒரு ஓலைவரைந்துவிடு
இவர்...
காதலாகிக் கசிந்து
பழுத்தாணி போல்
இவர்...
இதயம் சிவப்பாக
உன் மருதாணிக் கை தேடி
மாலையிட இவர் வருவார்

{அப்பாடா...வசந்துக்குப் பொண்ணு
கேட்டு வலைத்தளத்தில் கவி விரிப்பு}
எங்கே?எங்கே??அந்த வெண்ணிலா???

VISA said...

தேனியில் ஒரு ஆணி(க்கடை).

சுசி said...

உ பி :((((((

சுசி said...

பதிவு நல்லாருக்குன்னு சொல்ல கூட மனசு வர்லை போங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

//எஸ்.கே said...
ஆணி தொழில்! ஆனால் நிறைய தகவல்கள்!

ஆணி புடுங்கிட்டு வரேன்னு சொல்றதுக்கு பின்னாடி ஒரு வலி இருக்கும்னு இப்பதான் தெரியுது!//

ஆமா எஸ்கே மற்றவங்களுக்கு அது தெரியாததால நோ பிராப்லம் ..

நன்றி எஸ்.கே.!

ப்ரியமுடன் வசந்த் said...

//S.Sudharshan said...
ஆணிக்கு பின்னாடி இவ்வளவு விஷயமா ? நன்றி //

நன்றி சுதர்ஷன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//சங்கவி said...
ஆணி தகவல் அறுமை...//

நன்றி சங்கவி

ப்ரியமுடன் வசந்த் said...

//ரேவா said...
வேலை மிகுதியா இருந்தா ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு ஈசியா சொல்றீங்க இல்லையா? அந்த வார்த்தையின் வலியும் கஷ்டமும் அதிகம் அறிந்த காரணத்தினாலோ என்னவோ இதுவரை ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு நான் சொன்னதே கிடையாது


ஒரு ஆணிக்குள் இவ்ளோ அழமான கதையா....//

ஆமா நன்றி ரேவதி :)

ப்ரியமுடன் வசந்த் said...

// கவிதை வீதி # சௌந்தர் said...
ஆணிப்பற்றி நி றைய தகவ ல்கள் அருமை..

அது சரி இது தேவையுள்ள ஆணியா.?
தேவையில்லாத ஆணியா..?

என்னா நான் எடுக்கறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான்..

வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..
//

ஹிஹிஹி

நன்றி சௌந்தர்!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மாப்பு அப்படியே ஆடி,ஆவணி,புரட்டாசி பற்றியும் விளக்கவும்..//

ஹஹஹா ;-)))))

ங்கொய்யால உனக்கு நான் தமிழ் சொல்லித்தர்றேன் மாப்ள வா ..

ஆனி ஆவணி தான்

ஆணி பிடுங்கிதான்

ஆண்டியானேனே...

இரண்டு சுழி னவுக்கும் மூணு சுழி ணவுக்கும் வித்யாசம் தெரியாம உன்னையெல்லாம் போலீஸ் ஆக்குனது யாரு?

நன்றி மாப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்திரா said...
ஆணித் தொழில் பற்றிய உங்களது பதிவு அருமை. அதிலுள்ள வலிகளும் உங்கள் ஆதங்கமும் புரிகிறது.

ஆனா “ஆணி புடுங்கிட்டு வரேன்“னு சொல்றது அந்தத் தொழிலை கிண்டல் பண்றதுக்கு இல்லையே..//

கண்டிப்பா இல்லை இந்திரா

ப்ரியமுடன் வசந்த் said...

//சீமான்கனி said...
ஐயோ!!! அப்போ நானும் இனிமேல் ஆணி புடுங்குறத பத்தி பேசமாட்டேன்...//

ஹ ஹ ஹா நீ பேசு மாப்ள நான் என்னையத்தான் சொன்னேன்

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//இமா said...
ரசித்தேன். ;))//

நன்றி இமா மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

// கவிதை காதலன் said...
ஆணிபிடுங்கி ரொம்ப எக்ஸ்பர்ட் ஆகிட்டீங்க போல...//

கொஞ்ச நஞ்ச எக்ஸ்பர்ட் இல்ல வேர்ல்ட் கிலாஸ் எக்ஸ்பர்ட்டாக்கும் ஹ ஹ ஹா
நன்றி மணி :)

ப்ரியமுடன் வசந்த் said...

//
மாணவன் said...
//இதுவரை மட்டுமல்ல இனி எப்பொழுதும் என் வாயிலிருந்து ஆணி பிடுங்கிட்டு வர்றேன் என்பது வராது..//

உங்களின் இந்த சொந்த அனுபவம் யோசிக்க வைக்குது அண்ணே...

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)//

நன்றி மாணவன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

// middleclassmadhavi said...
எல்லாம் இந்த friends சினிமாவால வந்த வினை! :)//

கரெக்ட் மேடம்

நன்றி :)

ப்ரியமுடன் வசந்த் said...

// D.R.Ashok said...
//ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு//

இப்படி நான் சொன்னதே இல்லை தம்பி.. பின்னூட்டங்களில் கூட :)//

சந்தோசம் அஷோக் அண்ணா

நன்றியும் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//ராமலக்ஷ்மி said...
ஆணித் தொழிலைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக சொல்லிவிட்டுள்ளீர்கள்:)!//

ஹ ஹ ஹா கரெக்டான சொலவடை பயன்படுத்தியிருக்கீங்க நன்றி மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//Mahi_Granny said...
பெரிய தொழில் அதிபராக வர சான்ஸ் உங்களிடம் நிறைய இருக்கு. முயற்சி பண்ணுங்க//

தங்கள் வாக்கு பலித்தால் நிச்சயமாய் நன்றி மறவேன் நன்றி Mahi-granny மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
பயனுள்ள பதிவுன்னு சொல்ல நினைத்த போது பிகைண்ட் த போஸ்ட் உணர்வுகளை தொட்டதால் ஆணி பிடிங்குதல் என்ற வார்த்தை அழுத்தமாய் பதிந்தது மனதில்..//

அப்படியா ? நன்றி மேடம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//கலா said...
பெண்ணே!
இந்த ஆணைப்பாத்தாயா?
ஆணிக்கடை வைத்தாவது
ராணியைக் காப்பாற்றுவார்
கவலை தேவையில்லை
ம்ம்ம்.......
எழுத்தாணியால்
ஒரு ஓலைவரைந்துவிடு
இவர்...
காதலாகிக் கசிந்து
பழுத்தாணி போல்
இவர்...
இதயம் சிவப்பாக
உன் மருதாணிக் கை தேடி
மாலையிட இவர் வருவார்

{அப்பாடா...வசந்துக்குப் பொண்ணு
கேட்டு வலைத்தளத்தில் கவி விரிப்பு}
எங்கே?எங்கே??அந்த வெண்ணிலா???
//

கலா பாட்டி இந்த பதிவிலயுமா? நக்கல் :( எதிர்பார்க்கலை

ப்ரியமுடன் வசந்த் said...

//VISA said...
தேனியில் ஒரு ஆணி(க்கடை).//

ஹ ஹ ஹா

நன்றி விசா சார் ;)

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
உ பி :((((((//

என்னாச்சு உ.பி.? Y?

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
பதிவு நல்லாருக்குன்னு சொல்ல கூட மனசு வர்லை போங்க..//

Behind The Post எழுதியிருக்க கூடாதோ? :( சாரிக்கா

சாந்தி மாரியப்பன் said...

உண்மையிலேயே நீங்க ஆணிக்கடை வெச்சாலும், பெரிய தொழிலதிபரா வருவீங்க..

ஆணிக்கடைக்கு லொகேஷன் சொன்னீங்க பாருங்க, மும்பையிலும் அதேமாதிரி பாத்திருக்கேன்.

b.t.p: :-(

ப்ரியமுடன் வசந்த் said...

//
அமைதிச்சாரல் said...
உண்மையிலேயே நீங்க ஆணிக்கடை வெச்சாலும், பெரிய தொழிலதிபரா வருவீங்க..//

கண்டிப்பா ஆவேன்ற நம்பிக்கையிருக்கு மேடம் உங்கள் வாழ்த்தை கேட்கும்போது இப்போவே தொழிலதிபர் ஆகிட்ட மாதிரிதான் இருக்கு..

//ஆணிக்கடைக்கு லொகேஷன் சொன்னீங்க பாருங்க, மும்பையிலும் அதேமாதிரி பாத்திருக்கேன்.//

ம்ம் நம்ம ஊர்லயும் சில இடங்களில் இருக்கு மதுரையில பெரியார் பாலத்துக்கு கீழ பார்க்கலாம்

நன்றி சாரல் மேடம்

Unknown said...

ஆணித்தரமான பதிவு!

Unknown said...

தேனியில் ஒரு ஆணிக்கடை,
ஆடியில ஆரம்பிசீங்களோ !

Anisha Yunus said...

ஆணியை விற்பதற்கே இவ்வளவு சிரமம்ன்னா ஆணிய தயாரிப்பவர்களுக்கு எவ்வளவோ??

நல்ல பதிவு, பதிவின் இறுதிப்பகுதி யோசிக்க வைக்கிறது. நன்றிங்ண்ணா.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

//வைகறை said...
ஆணித்தரமான பதிவு!//

:)) நன்றி வைகறை !!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆகாயமனிதன்.. said...
தேனியில் ஒரு ஆணிக்கடை,
ஆடியில ஆரம்பிசீங்களோ !//

ஹ ஹ ஹா ஆடியில ஆரம்பிக்க கூடாதே !!!

ப்ரியமுடன் வசந்த் said...

//அன்னு said...
ஆணியை விற்பதற்கே இவ்வளவு சிரமம்ன்னா ஆணிய தயாரிப்பவர்களுக்கு எவ்வளவோ??

நல்ல பதிவு, பதிவின் இறுதிப்பகுதி யோசிக்க வைக்கிறது. நன்றிங்ண்ணா.. :)//

ம்ம் நன்றி தங்கச்சி!!!

R.பூபாலன் said...

2" ஆணி 2 கிலோ வேணும்பா .....

R.பூபாலன் said...

ஆணி 10 கிலோவுக்கு மேல வாங்குறவங்களுக்கு டோர் டெலிவரி வசதி எல்லாம் இருக்குதுங்களா....?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

செய்யும் வேலையை ஆணி என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை.. பிற்காலத்தில் என்னைக்காவது இப்படி ஒரு வியாபாரம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா?

ப்ரியமுடன் வசந்த் said...

@ பூபாலா நீதான் கல்லாப்பெட்டியில உட்காரப்போற நீயே இப்படி கேட்கலாமா?
`

ப்ரியமுடன் வசந்த் said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
செய்யும் வேலையை ஆணி என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை.. பிற்காலத்தில் என்னைக்காவது இப்படி ஒரு வியாபாரம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறதா?//


புரிந்து கொண்டமைக்கு நன்றி மேடம்

ஆணி பிஸினெஸ் ஆரம்பிக்கப்போவது இல்லை என்னுடைய தற்போதைய மின் துறை சம்பந்தமான பிஸ்னெஸ் ஆரம்பிக்கற எண்ணமும் சின்ன ஃபாஸ்ட்ஃபுட் ஆரம்பிக்கிற எண்ணம் மட்டும்தான் இருக்கு ...

Unknown said...

எங்க வீட்ல நானும் பல முறை ஆணி அடிக்க முயற்சி பண்ணிருக்கேன்.

ம்ஹூம்... ஒன்னு கூட ஒலுங்க அடிக்க முடியல.. கைலதான் ரெண்டு அடி வாங்கியிருக்கேன்..

எந்த வேலையையும் குறைத்து எடை போட்டு விட கூடாது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க வசந்த்..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெ.ஜெ said...
எங்க வீட்ல நானும் பல முறை ஆணி அடிக்க முயற்சி பண்ணிருக்கேன். //

ஆணி அடிக்காமலே இறங்கியிருக்குமே பொண்ணுங்கனா பேயும் இறங்கும்ன்னு சொல்லியிருக்காங்க ஆணியா இறங்காது?? ஹ ஹ ஹா

//ம்ஹூம்... ஒன்னு கூட ஒலுங்க அடிக்க முடியல.. கைலதான் ரெண்டு அடி வாங்கியிருக்கேன்.. //

ஹைய்யய்யோ ஆணிக்கு என்ன தண்டனை கிடைச்சதோ?

//எந்த வேலையையும் குறைத்து எடை போட்டு விட கூடாது என்பதை மிக தெளிவாக சொல்லியிருக்கீங்க வசந்த்..//

மிக்க நன்றி ஜெ.ஜெ.