Showing posts with label எனக்கு வாழ்க்கைன்னா என்ன?. Show all posts
Showing posts with label எனக்கு வாழ்க்கைன்னா என்ன?. Show all posts

September 21, 2010

குடும்ப குறள்கள்

தாலியென்ப நெற்றி பொட்டென்பர் இவையிரண்டும்
கண்ணென்ப குடும்ப பெண்ணுக்கு

(பொட்டு வைக்கிறதுக்கு சில சென்மங்களுக்கு உடம்பு வலிக்குது அதுக்கு மேல தாலியை பாசிபோல் அடிக்கடி கழட்டி வச்சுக்கிறாங்க)

கணவனையும் பெற்ற பிள்ளையையும் பேணியும் 
காத்தலும் வல்ல இல்லத்தரசி

(கணவனையும் குழந்தையும் விட்டுப்போட்டு சீரியலும், வெட்டிப்பேச்சும் கெதியா கெடப்போர்க்கு)

மனைவியுடையார் எல்லா முடையார் மனைவியிலார்
என்னுடைய ரேனும் இலர்

(மனைவியில்லாத வாழ்க்கை வீண்)

உடல் கற்பென்பது கற்பன்று உள்ளத்தால்
அழியா கற்பதே கற்பு

(குஷ்பூ வாழ்க)

விவாகரத்து தீவினை என்றும் அதை
கேட்காமை குடும்பத்திற்க்கு நன்று

(பல்லு வெலக்காததுக்கெல்லாம் விவாகரத்து கேட்குறாங்கப்பா ஆவ்வ் )

சந்தோசம் வித்தாகும் கூட்டுகுடும்பம் தனிக்குடித்தனம்
என்றும் சோர்வைத் தரும்

(கூட்டுக்குடும்பத்தை இந்த காலத்தில் யார் விரும்புறாங்க?)

மாமனாரையும் மாமியாரையும் மதிக்காத மருமகள்
ஒருநாள் தானும் மதிக்கப்படார்

(ப்ச்)

தாய்மை எனப்படுவது யாதெனில் குடும்பத்தார்
யாவரையும் அன்பாய் நடத்தலேயாகும்

(ம்ம்)

சொம்பெடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு பால் ஊற்றப்படும்,....