August 7, 2009

கலைஞர் விருதுகள்



நம்ம பதிவுலகத்துல நாம கொடுக்குற பட்டாம்பூச்சி விருது ,இண்ட்ரெஸ்டிங் ப்லாக்கர் விருது மாதிரி அரசியல் உலகத்துல நம்ம கலைஞர் சில விருதுகள் கொடுக்குறார் பாருங்க முதல்ல

பச்சோந்தி விருது: அடிக்கடி கூட்டணி மாறுகிறவர்களுக்கு....


இந்த விருதை முதலில் வாங்க வருபவர் மருத்துவர் இராமதாஸ் (இவர் மாதிரி பதவிக்கும் பணத்துக்காகவும் அடிக்கடி கூட்டணி மாறுவதற்க்கு ஆளே இல்லைங்க)

இரண்டாவதாக வருபவர் வைகோ (பாவம் திங்கவும் முடியாம மெல்லவும் முடியாம திரியுறாருங்க)

மூன்றாவதாக வருபவர் டி.ஆர் (அப்போ அப்போ ல.தி.மு.க அப்பிடின்னு ஒருகட்சி வச்சுக்கிடுறார் திடீர்ன்னு தி.மு.க வுக்கு வந்துடுறார்)

அடுத்து இண்ட்ரெஸ்டிங் பொலிடிசியன் விருது: சிறந்த அரசியல் நடத்துபவர்களுக்கு?!




இந்த விருதுக்கு முதலில் தேர்வானவர்: திரு.விஜயகாந்த் (கூட்டணியே இல்லாம எல்லா தேர்தல்லயும் போட்டியிடுறதுக்கு)

அடுத்ததாக செல்வி. ஜெயலலிதா(இவங்க இல்லாட்டினா நான் எப்படி அரசியல் நடத்துறது?

அடுத்து அழகிரி (முதல் தடவையே பிரம்மாண்டமா ஜெயிச்சதுக்கு)

அடுத்தது ஸ்டாலின் (இவ்ளோ நாளா அமைதியா இருக்குறதுக்கு)

அடுத்து க.அன்பழகன் (பொறுமையா இருப்பதற்க்கு)

அடுத்து ஆற்காடு வீராசாமி(மின் பற்றாக்குறைக்கான கேள்விகளுக்கு திறமையா சமாளிச்சதுக்கு)


27 comments:

Raju said...

sema Comedy...

நட்புடன் ஜமால் said...

ஏன் ஏன் ஏன்

ஒரு விருதை ஏந்துகிறேன்

பல விருதை ஏந்துகிறேன்

ஏன் ஏன் ஏன்

தமிழ் அமுதன் said...

ஹா.. ஹா... சூப்பர்!
பச்சோந்தி விருது!
இவங்களுக்கு மட்டும்தானா?

Admin said...

நான் எதோ நமக்குத்தான் தரப்போறாங்க என்று ஓடி வந்தேன். இப்படி ஏமாத்திப்போட்டிங்களே வசந்த்...

இருந்தாலும் ரசித்தேன்.சிரித்தேன், சிந்தித்தேன்....

. said...

நல்லா, நகைச்சுவையா எழுதி இருக்கீங்க அண்ணா நீங்க!!

ஆனா திடீர்னு வரிசையா ரெண்டு பதிவுலையும் ஏன் அரசியல் பக்கம் போயிட்டீங்கன்னு தான் தெரியல?!

க.பாலாசி said...

//அடுத்து அழகிரி (முதல் தடவையே பிரம்மாண்டமா ஜெயிச்சதுக்கு)//

அவரு எங்க ஜெயிச்சாரு.


பச்சொந்தி விருதுக்கு மூனு பேருதானா. எல்லாத்துலையும் காமெடி பண்ணாதிங்க தலைவா. எத்தன பேரு இருக்காங்க.

ஹேமா said...

வசந்த்,இப்படிக் கொடுத்தாலும் இந்த அரசியல்வாதிகள் "ஏன் இதைத் தந்திருக்கிறாங்க"ன்னு நினைப்பாங்கன்னு நினைக்கிறீங்களா!எதுக்கும் முயற்சி பண்ணுங்க!

யோ வொய்ஸ் (யோகா) said...

திரும்பவும் அரசியல் தானா நேற்று சொன்ன மாதிரி அக்கம் பக்கம் பார்த்து தான் உங்க கடைல ஷாப்பிங் பண்ணனும்

ஈரோடு கதிர் said...

ஏஏஏஏஏஏன்...
இந்த கொலவெறி

குடந்தை அன்புமணி said...

ம்... ம்... நடக்கட்டும்.... ஆட்டோ சத்தம் கேட்டா எஸ்கேப் ஆகிடுங்க...

நையாண்டி நைனா said...

எங்க தல J.K.ரித்தீசை இருட்டடிப்பு செய்த உங்களுக்கு நாங்கள் "அமுக்குணி ஆந்தை" பட்டத்தை வழங்குகிறோம்

Anonymous said...

வசந்த் என்ன விருது மழையா? சும்மா சொல்லக் கூடாது சூப்பர்..விருதுக்கு பெயர் வச்சதுக்கே உன்னை வாழ்த்தலாம்..ஆமாம் அதிலும் விருது நேர்மை தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு இருப்பது மேலும் சிறப்பு..இது எனக்கு தரலை உனக்கு மட்டும் என்று இதுக்கு அடிச்சிகிட்டாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை....

Anonymous said...

பாலாஜி said...
//அடுத்து அழகிரி (முதல் தடவையே பிரம்மாண்டமா ஜெயிச்சதுக்கு)//

அவரு எங்க ஜெயிச்சாரு.


பச்சொந்தி விருதுக்கு மூனு பேருதானா. எல்லாத்துலையும் காமெடி பண்ணாதிங்க தலைவா. எத்தன பேரு இருக்காங்க.

ஆமாம் ஏன் வசந்த் இந்த கஞ்சத்தனம்....

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில்
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரான தங்களது பதிவு தானாகவே இணைந்துள்ளது...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



உங்கள் படைப்பை பார்க்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

வழிப்போக்கன் said...

நல்ல கற்பனை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலைஞர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல விருதுகள் வாழ்த்துக்கள் ..:-))

sakthi said...

ரொம்ப தைரியம் ஜாஸ்தியாயிடுச்சு

வசந்த்

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

காமெடி பீஸ் விருது இல்லையா தல!

Sukumar said...

வசந்த் பிரியமாதானே இருந்தாப்புல......???
யாரோ சிங்கத்தை சீண்டி விட்டிருக்காங்க...
மக்கா... இனி எத்தனை தலை உருள போகுதோ தெரியலயே ...

jothi said...

//ம்... ம்... நடக்கட்டும்.... ஆட்டோ சத்தம் கேட்டா எஸ்கேப் ஆகிடுங்க...//

இப்ப ஆட்டோலாம் இல்ல சுமோதான்

அப்துல்மாலிக் said...

இந்த விருது வழங்கும் விழா அமைப்பாளருக்கு என்ன விருது கொடுப்பீங்க‌

Beski said...

என்ன மச்சி... வர வர அரசியல் வாடை அதிகம் அடிக்கிது?

ஆனா செம்ம காமிடி... கலக்குறீங்க.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பச்சோந்தி விருதை கலைஞருக்கும்,ஜெயலலிதாவுக்கும் பரிந்துரைக்கிறேன்.

எதுக்கு? :-

பிஜேபி மற்றும் காங்கிரசுடன் மாறி மாறி பச்சோந்தியைப் போல் கூட்ட(த்த)ணி வைத்துக் கொண்டதற்காக...

S.A. நவாஸுதீன் said...

Interesting Blog விருது நிஜமாவே உங்களுக்குத்தான் சரியாய் பொருந்தும்.

ரொம்ப நல்லா இருக்கு வசந்த்

ப்ரியமுடன் வசந்த் said...

கருத்துக்கள் விட்டுச்சென்ற அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி

kavi said...

விருதுகள் தொடருமா ? அல்லவது இதோடு முடிந்ததா ?