August 31, 2010

நானும் நித்யாவும் காதலும் ! 2


ஹேய் கீதா நேத்து வெள்ளிக்கிழமைதானே அதான் கொஞ்சம் கோவிலுக்கு போனா நிம்மதியா இருக்கும்ன்னு இவர்கிட்ட "கோவிலுக்கு போகலாம் வர்றீங்களா"ன்னு கேட்டேன் இவரும் "சரி நான் சரியா 6.30க்கு எல்லாம் வந்துடறேன்"னு சொன்னார் நானும் இவர் பேச்சை நம்பி 6 மணிக்கு எல்லாம் கோவிலுக்கு போய் காத்திட்டு இருந்தேன் மணி 7 ஆச்சு 8 ஆச்சு ஆள் வரவே இல்லை மொபைலுக்கு கூப்பிட்டாலும் ஸ்விட்ச்ட் ஆஃப்ன்னு சொல்லுது அதுக்கு மேலயும் அங்கயே உட்கார்ந்திருந்தா நல்லதில்லைன்னு நினைச்சு வீட்டுக்கு கிளம்பிட்டேன் பின்ன நேத்து ஏன் கோவிலுக்கு வரலைன்னு கேட்கறதுக்காக இவரோட மொபைலுக்கு திரும்பவும் கூப்பிட்டேன் ரிங் போகுது ஆன்சரே இல்லை சரின்னு ஆபிஸ்க்கு போன் பண்ணுனா இவரு "அங்க இருந்துகிட்டே நான் இல்லைன்னு சொல்ல சொல்றார்".


வர வர இவர் சரியில்லை என்கிட்ட சரியா பேசறதில்லை என்னை தவிர்த்துடறார் என்ன காரணம்ன்னே தெரியலை என்னை அவாய்ட் பண்ணுனார் கீதா உனக்குத்தான் தெரிஞ்சிருக்குமே நாம நல்லா பழகுற ஒருத்தர் காரணமில்லாம நம்மளவிட்டு விலகிப்போனா நம்மளால தாங்கிக்க முடியாதுதானே அதான் கோவம் வந்து அடிச்சுட்டேன் இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஏன் இவர் என்னை அவாய்ட் பண்ணனும்?


"ஏண்ணா நீ அப்டி பண்ணுன அட்லீஸ்ட் போன் பண்ணியாச்சும் சொல்லியிருக்கலாம்ல நீ அவளுக்கு?"


"இல்ல கீதா ஆபிஸ்ல அன்னிக்கு வேலை ஜாஸ்தி மொபைல் கூட சார்ஜ் சுத்தமா தீர்ந்துடுச்சு"


உச்சி மண்டையில சுர்ருன்னு கோபம் வந்து நித்யா "திரும்ப திரும்ப பொய் மேல பொய் சொல்லி என்ன பத்ரகாளியா மாத்தாதீங்க வசந்த் அப்பறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் ,இப்போ உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும் என் கூட வர முடியுமா?முடியாதா?"


"எங்க?"


"எங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது வர முடியுமா முடியாதா?"


"போகலாம் வா!"


முன்னாடி வேகமா நடந்து போன நித்யா அவளோடா ஆக்டிவா ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணுனா பின்னாடி என்னை உட்கார சொன்னா நானும் பின்னாடி உட்கார்ந்து அவளோட போனேன்


வண்டி எடுத்த வேகத்துலயே பறக்க ஆரம்பிச்சுச்சு வண்டி போற ரூட்ட பார்த்தா எக்கோ பார்க்தான் போவான்னு நினைச்சேன் சரியா அங்கதான் போனா வண்டிய பார்க்கிங்க்ல போட்டுட்டு ரெண்டு பேரும் உள்ளாற போனோம் அன்னைக்கு ஆள் நடமாட்டம் கொஞ்சம் குறைவாத்தான் இருந்துச்சு ரெண்டு பேரும் புல் தரையில உட்கார்ந்தோம் ஒரு பத்து நிமிசம் அவ என்கிட்ட எதுவுமே பேசலை 


என்ன நித்யா என்கிட்ட எதுவோ பேசணும்ன்னு கூட்டிட்டு வந்திட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்ன்னு கேட்டுட்டு அவ பக்கம் திரும்புனா முழங்காலை மடக்கி முகத்தை அதுல வச்சு குலுங்கி குலுங்கி அழுதிட்டு இருந்தா


என்னால அவ அழுவறதை தாங்க முடியலை "என்னாச்சு நித்யா ஏன் இப்போ அழுவுற"ன்னு கேட்டேன்


"போடா அழறதையும் அழ வச்சிட்டு இப்போ இப்போ ஏன் அழுவுறன்னு வேற கேட்குறியா?"


அவ கோபத்துல போடான்னு சொல்றது கூட அழகா இருந்துச்சு "சரி என்னாச்சு இப்போ?"


ஏண்டா இப்பிடி பண்ற? ஏன் இப்படி இம்சை பண்ற ? கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? இப்போ உயிரோட ஏன் என்னை கொல்லுற?


நீ முதல்ல கண்ணை தொடச்சிக்கோ ப்ளீஸ் அப்பறம் நான் சொல்றேன்


நான் சொன்னதும் கர்ச்சீப் எடுத்து கண்ணை தொடச்சிக்கிட்டா லேசா மூக்கை உறிஞ்சுகிட்டே "ம்ம் சொல்லு"ன்னாள்


"நீ என்னை லவ் பண்றேன்னு தெரியும் நித்யா" நான் கண்டு பிடிச்சுட்டேன்


ஆமா பெரிய உலக அதிசயம் இவரு கண்டு பிடிச்சுட்டாரு ஆமா நான் உன்னை லவ் பண்றேன் உன்கிட்ட சொன்னது இல்ல அதுக்கென்ன இப்போ?


"இந்த காதல் வேணாம் நித்யா!"


"ஏன்? என்னை பிடிக்கலியா ?என்னை விட பணக்காரியா அழகானவளா எதிர்பார்க்குறியோ?"


"இல்லை நித்யா உன்னைப்போய் யாராச்சும் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா?"


"அப்புறம் என்ன?"


"இல்லை நித்யா நான் உனக்கு பொருத்தமானவன் இல்லை"


"ஏன் அப்பிடி சொல்ற?"


என்ன நித்யா நீ எவ்வளோ வசதியான வீட்டு பொண்ணு நீ உனக்கு நிறைய சொத்து இருக்கு கார் இருக்கு பங்களா இருக்கு நிறைய படிச்சுருக்க உனக்குப்போய் நான் சரிவராது நித்யா உனக்கேத்த மாதிரி வசதியான வீட்டை சேர்ந்த பையன் தான் உனக்கு சரி


உனக்கு என்னடா குறைச்சல் இந்த ஊர்லயே எனக்கு நீதான் அழகா தெரியுற நல்ல வேலையில இருக்க குடும்பத்தை நடத்தற அளவுக்கு வருமானம் இருக்கு இதை விட வேறென்ன எனக்கு வேணும்?


"அதெல்லாம் சரியா வராது நித்யா ப்ளீஸ் சொன்னா கேளு"


இப்போ உனக்கென்ன பிரச்சினை நான் உன்னைவிட வசதியா இருக்கேன்ன்னுதான சொல்லு இப்பவே என்னோட சொத்து சொந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடறேன் அப்போ சரின்னு சொல்லுவியா?


சே சே எனக்காக எதுக்கு உன்னோட சொந்தபந்தத்தையெல்லாம் விட்டுட்டு வரணும்


"பின்ன ? நான் என்ன பண்ணுனா நீ என்னை லவ் பண்ணுவன்னு சொல்லு?"


அப்படியே சொல்லிவிட்டு திரும்பவும் முழங்காலுக்குள் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள் இந்த முறை அழுகை பலமானதாகவே இருந்தது என்னால அதுக்கு மேல என்னோட அழுகைய கட்டுப்படுத்த முடியாம சே எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றாளேன்னு நினைச்சு எனக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.


"வேணாம் நித்யா சொன்னா புரிஞ்சுக்கோ!"


அவ அவ்வளவு சொல்லியும் பலவந்தமா நான் அவளோட காதலை ஏற்க மறுத்தேன் இன்னும் அவளோட அழுகை அதிகமாகி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்


ஏண்டா என்னை புரிஞ்சுக்க மாட்டேன்ற நான் இவ்வளவு சொல்லியும் நீ புரிஞ்சுகிடவே இல்லைல எப்போதாண்டா என்னை புரிஞ்சுக்குவ ஒரு வேளை நான் உயிரை விட்டுட்டா புரிஞ்சுகிடுவியா?


"அவ சொல்லி முடித்த மறு நிமிடம் நான் அவளோட கண்ணாத்தில் பளார் என்று அறைந்தேன்"


நீ போய்ட்டா நான் மட்டும் சந்தோஷமா இருப்பேனா நித்யா? நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நித்யா என்னை கட்டிகிட்டு நீ கஷ்டப்படக்கூடாதுன்றதுக்காகத்தான் இப்படில்லாம் நடந்துகிட்டேன்


உன்னை கட்டிகிட்டா கஷ்டப்படுவேனா "உன்னை கட்டிக்கிடலைன்னாத்தாண்டா உயிரே போனமாதிரி கஷ்டப்படுவேன்"




சொன்ன நித்யா பட்டென்று தன்னோட உதடுகளை என் உதட்டோடு பொருத்திக்கொண்டாள் நான் எதிர் பார்க்கவேயில்லை அவள் கூந்தல் நறுமணமும் பட்டு மாதிரியான உதடுகளும் உதடு ஓரம் வழிந்த தேன் போன்ற ஈரமும் என்னை மறக்க செய்தது அப்படியே என்னை இறுக கட்டிக்கொண்டாள் .


ரொம்பவே இருட்டிவிட்டிருந்தது நானும் நித்யாவும் எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்றே தெரியாமல் உலகை மறந்து இருந்தோம் .


"இங்க பார்டா சூப்பர் பிட்டு ஓடுது" என்ற சத்தம் கேட்டு சட்டென்று விலகி திரும்பினோம்


அங்கே நான்கு இளந்தாரிகள் நின்று எங்களை என்று சொல்வதை விட நித்யாவை ஒரு வித வெறியுடன் பார்த்தனர் அவர்களின் உடையையும் பாவனைகளையும் பார்க்கையில் யோக்கியமானவர்களாக தெரியவில்லை 


"நானும் நித்யாவும் கொஞ்சம் சுதாரித்து எழுந்து ஓட ஆரம்பிக்கலானோம்"


அவர்கள் எங்களை துரத்த ஆரம்பித்திருந்தனர்


தொடரும்






.

49 comments:

வேலன். said...

அருமை நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

உயிரோட்டமான வரிகள்.
very emotional....

ஜெய்லானி said...

நல்லாதான் இருக்கு . இந்த மாசம் முடியுமா தொடர்..ஹி..ஹி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. தமிழ் சினிமா பார்க்கற மாதிரி இருக்கு வசந்த்..

ஸ்ரீராம். said...

நாயகியை அவங்க கைல மாட்ட விட்டுடாதீங்க வசந்த்... தப்பிக்க விட்டுடுங்க!

ஜெயந்த் கிருஷ்ணா said...

படம் பார்த்த மாதிரியே இருக்கு... ஆனா கடைசியில இப்படி தொடரும் போட்டு சீரியல் பாக்குற பீல் கொண்டு வந்திட்டீங்களே...

சைவகொத்துப்பரோட்டா said...

சினிமா ஸ்டைலில் செல்கிறது.

Anonymous said...

டெரராத்தான் போகுது

KUTTI said...

சிறப்பாக செல்கிறது. நித்யாவை காப்பாத்திடுங்க..

மனோ

யாரோ ஒருவர் said...

வில்லன்ஸ் கைல மாட்டாதீங்க.ஓஓஓடுங்க வசந்த்!
Run Fast......R..R...........
அருமை.

Jey said...

பங்காளி... விடாதே அப்ப்டியேதொடரும் போட்டுகிடே போனின்னா...ஒரு மெகா சீரியல் எடுக்க ஒரு தயாரிப்பளரை பிடிசிடலாம்... அப்படியே அம்மனிகளுக்கு பிடிச்சா சீரியல் கதை மாதிரி இருக்கு...இடையில் ஒரு வில்லிய கொண்டுவா... சூடு பிடிக்கும்...நல்லா எழுதுர ராசா..

Chitra said...

உன்னை கட்டிகிட்டா கஷ்டப்படுவேனா "உன்னை கட்டிக்கிடலைன்னாத்தாண்டா உயிரே போனமாதிரி கஷ்டப்படுவேன்"


...... அட, அட, அடடா...... காதல் வசனத்தின் உச்சம்! தொடருங்க!!!! :-)

Anonymous said...

கதை நல்லா இருக்கு ..முடிவு சோகமா வேண்டா ப்ளீஸ்..

Sindhu said...

ஐயோ என்ன வசந்த் இப்படி suspensela முடிச்சி இருக்கீங்க......சீக்கிரமா அடுத்த பார்ட் போஸ்ட் பண்ணுங்க......

Sindhu said...

ஐயோ என்ன வசந்த் இப்படி suspensela முடிச்சி இருக்கீங்க......சீக்கிரமா அடுத்த பார்ட் போஸ்ட் பண்ணுங்க......

Thenammai Lakshmanan said...

த்ரில்லர் எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா வசந்த்,..:)) நல்லா இருக்கு. ஆனா நல்ல முடிவா கொடுங்க..

நாடோடி said...

ஆஹா வ‌ச‌ந்த்.. அடுத்து பைட் எல்லாம் இருக்குமா?.. ந‌ல்லா போதுது வ‌ச‌ந்த்.

Gayathri said...

cinema maathiri poguthe....

Anonymous said...

டிவி“ல தான் சீரியல் தொல்லைனா இங்கயுமா??

Unknown said...

அன்பிற்கினிய வசந்த்..,

/ /...சொன்ன நித்யா பட்டென்று தன்னோட உதடுகளை என் ...நானும் நித்யாவும் எவ்வளவு நேரம் அப்படி இருந்தோம் என்றே தெரியாமல் உலகை மறந்து இருந்தோம் .../ /

அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.இரண்டாம் பாகத்தில் சுவை சிறிது குறைவாக உள்ளது போல் தெரிகிறது அடுத்த பாகத்தில் சரிசெய்துவிடுங்கள்.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

சுசி said...

//நாம நல்லா பழகுற ஒருத்தர் காரணமில்லாம நம்மளவிட்டு விலகிப்போனா நம்மளால தாங்கிக்க முடியாதுதானே //
ஓ.. அட ஆமாம்ல..

கன்னத்தில அறையிறது அவசியமா வசந்த்?? போன பகுதியிலையே கேக்க நினைச்சேன் :((((

தொடரும்னுட்டு ஓடரிங்களா?? ரைட்டு!

sakthi said...

ரொம்ப சுவாரசியமாக செலிகின்றது தொடருங்கள் வசந்த்

சசிகுமார் said...

கதை விறு விறு நண்பா வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

ஹீரோ போட்டோ கிட்டதட்ட உன்ன மாதிரி தான் இருக்கு :P

நல்லா போகுது வசந்த், அந்த முத்த நேரம் இன்னும் கொஞ்டம் ரொமான்ஸா இருந்திருக்கலாம் (எழுத்தில்)

அருண் பிரசாத் said...

இப்போ எப்படி வசந்த்

வேகமா ஓடி போய் பார்க் கேட்டை சாத்திட்டு சண்டையா?

நிலாமகள் said...

ஸ்பீட் எடுத்துடுச்சு தம்பி தொடர் பதிவு...

kavisiva said...

இந்த பார்ட்டில் வில்லனின் அடிபொடிகள் எண்ட்ட்ரியா?! ஹீரோ இப்படி ஓடலாமோ?! பறந்து பறந்து ஃபைட்டு பண்ணணுமே :)

ராமலக்ஷ்மி said...

நல்லாப் போகுது. தொடருங்கள்:)!

கலா said...

வர வர இவர் சரியில்லை என்கிட்ட சரியா பேசறதில்லை என்னை தவிர்த்துடறார் என்ன காரணம்ன்னே தெரியலை என்னை
அவாய்ட் பண்ணுனார்\\\\\\

இப்பவாவது இதை ஒத்துக் கொண்டீர்களே!
அப்புறமென்ன தொடருங்கள்.....

கலா said...

என்னால அவ அழுவறதை தாங்க
முடியலை\\\\\

அழவைக்கிறது அப்புறம்....
ஒரு.....
வசந்துப் புள்ளைக்குப் பூப்போல..
மனசுங்கப்பா..!!

கலா said...

அவ கோபத்துல போடான்னு
சொல்றது கூட அழகா இருந்துச்சு\\\\

சரிடா....நீங்க ரசித்ததை
நானும் ரசிக்கட்டுமாடா..........

கலா said...

ஏண்டா இப்பிடி பண்ற? ஏன் இப்படி இம்சை
பண்ற ? கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்
எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா?
இப்போ உயிரோட ஏன் என்னை கொல்லுற\\\\\\\\

அவக...கேட்கிறாக பதில் சொல்லுங்கோ
ஏன்? ஏன்? ஏன்?

கலா said...

நீ என்னை லவ் பண்றேன்னு தெரியும் நித்யா"
நான் கண்டு பிடிச்சுட்டேன்\\\\
நான் கற்பூரம் என்று நினைத்தேன்
இவ்வளவு பால் வடியும்.....???

rempradeep said...

hai vasanth waiting for youe next scipt

rempradeep said...

very nice story opening ok.. but finishing..??????????

கலா said...

அதுக்கு மேல என்னோட அழுகைய
கட்டுப்படுத்த முடியாம \\\\\\\
இவ்வளவு ஈரமா? உங்க..???

உன்னை கட்டிகிட்டா கஷ்டப்படுவேனா "உன்னை கட்டிக்கிடலைன்னாத்தாண்டா

{ உயிரே போனமாதிரி கஷ்டப்படுவேன்}
இங்க கொஞ்சம் இடிக்குதே....
என்ன சம்மதமா?

அவள் கூந்தல் நறுமணமும் பட்டு மாதிரியான உதடுகளும் உதடு ஓரம் வழிந்த தேன்
போன்ற ஈரமும் என்னை \\\\

அப்பா... ரொம்பதான்......

'பரிவை' சே.குமார் said...

ஆஹா வ‌ச‌ந்த்.. அடுத்து பைட் எல்லாம் இருக்குமா?...

நல்லாப் போகுது. தொடருங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

இப்ப ஹீரோ வசந்த், விஜயகாந்த் அங்கிள் ஸ்டைல்ல சண்டை போடப்போறாரா?????

velji said...

கதை சொல்லும் பாணி... நன்று! தொடருங்கள்.

சீமான்கனி said...

நான் பின்னுட்டம் போடும் பொது ஏதோ ஒரு இடைஞ்சல்...மாப்பி இந்த கதைய எழும்போது உன் பீலிங்க்ஸ் எப்படி இருந்திருக்கும்னு என்னால இப்போ உணர முடியுது...ம்ம்ம்ம்...நடத்து நடத்து...தொடரட்டும்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. என்னங்க ஆச்சு அப்ப்புறம்.. சீக்கிரம் வந்து சொல்லுங்க..
ரொம்ப நல்லா இருக்கு தொடர் கதை..

ஹேமா said...

எப்போதும் போல ஒரு சின்னத்திரையோ சினிமாவோ மாதிரியான சாயல்.ஆனால் உங்களிடமிருந்து வித்தியாசமான பதிவு.ரசித்தேன்.

சிங்கக்குட்டி said...

// கண்ணை தொடச்சிக்கிட்டா லேசா மூக்கை உறிஞ்சுகிட்டே "ம்ம் சொல்லு"ன்னாள் //

காதலித்த அனைவருமே கடந்து வரும் ஒரு எதார்த்தமான விசையம் இது. அருமை...அருமை :-)

RVS said...

ம். நல்லா இருக்கு.. கிளைமாக்ஸ் என்ன?

அன்புடன் ஆர்.வி.எஸ்.

prince said...

//நாம நல்லா பழகுற ஒருத்தர் காரணமில்லாம நம்மளவிட்டு விலகிப்போனா நம்மளால தாங்கிக்க முடியாதுதானே//

நம்மளோட மனநிலையை எந்த அளவுக்கு பாதிக்கும்னு அனுபதித்தவர்களால் உணர முடியும் ...

கதை ரொம்ப எதார்தமாக அமைந்திருக்கு வசந்த்

R.பூபாலன் said...

கதைய அன்னைக்கே படிச்சுட்டேன்..

அடுத்தது என்னவா இருக்கும்னு
நாமலே கண்டுபிடிச்சு வசந்த் அண்ணாவுக்கு
முன்னாடி நாமலே சொல்லிடணும்னு
நேத்துலேர்ந்து முயற்சி பண்றேன்.....


ம்ஹூம் . முடியலையே...

இப்பவே கண்ண கட்டுதே .......

அண்ணிய Scootyla ல அனுப்பிட்டு நீங்க நம்ம வில்லன்ச புரட்ட ஆரம்பிக்கலாமே....

seekiramaa பைட் சீன ஆரம்பிங்க....

ஜெயந்தி said...

எழுத்து நடை நல்லாயிருக்கு. விறுவிறுப்பா போகுது.

ப்ரியமுடன் வசந்த் said...

@ வேலன் சார் மிக்க நன்றி

@ கலா நேசன் :))))))

@ ஜெய்லானி முடிச்சுடலாம் தல அம்புட்டு மோசமாவா இருக்கு ஆவ்வ்

@ சந்தனா நம்ம வாழ்க்கையைத்தானே சினிமாவிலும் காட்டுறாங்க அதான் போல...நன்றி சந்தனா :)

@ ஸ்ரீராம் அப்படியே ஆகட்டும் நன்றி ஸ்ரீராம்

@ ஜெயந்த் மிக்க நன்றி தல சீரியல் :))))))

@ பிரசன்னா நன்ரி பாஸ்

@ அகிலா மேடம் நன்றி

@ மனோ சரிங்க நன்றி!

@ திருமதி ஜெயசீலன் நன்றிங்க சகோ ஹ ஹ ஹா,,,

@ ராதாகிருஷ்ணன் சார் நன்றி :)

@ ஜெயக்குமார் பங்காளி முதல்ல உன்னை மெட்டி ஒலி திரு முருகன்கிட்ட அசிச்டண்டா சேர்த்துவிடணும் போல இருக்கே நன்றி பங்கு..

@ சித்ரா நன்றி மேடம் :)

@ சந்த்யா அப்படியா? நன்றி சந்த்யா :)

@ ப்ரியா மேடம் ம்ம் போட்டாச்சு மேடம் நன்றி

@ தேனம்மா ஆமாம் பரவாயில்லையா நன்றி...

@ ஸ்டீபன் மிக்க நன்றி நண்பா :)

@ காயத்ரி :)

@ இந்திரா :)))))))))) ஏ.இ.கொ.வெ

@ ரமேஷ் அய்யய்யோ அப்டியில்ல பாஸ் பார்த்ததை எழுதியிருக்கேன் ஆவ்வ்வ்வ்வ் நன்றி பாஸ் :)

@ சுசி ஓஹ் கண்ணத்தில்ன்னு பிழையா எழுதியிருக்கிறதை சொல்லியிருக்கீங்களா? கதைதானே சுசி நிஜத்தில் அப்டியெல்லாம் நடக்காது கவலைப்படாதீங்க இப்போவே சப்போர்ட்டா இருக்கட்டு இருக்கட்டு...! நன்றி சுசி

@ சக்தி நன்றி சகோ

@ சசி குமார் நன்றி பாஸ்

@ ஜமால் அண்ணா உஷ் சத்தம் போட்டு சொல்லாதீங்கண்ணா நன்றிண்ணா!

@ அருண் பிரசாத் கிகிகிகி நன்றி தல :)

@ நிலாமகள் நன்றி சகோ!

@ கவி சிவா எப்டில்லாம் யோசிக்கிறாய்ங்க எல்லாம் சீரியல் படுத்தும் பாடு போல நன்றி கவி!

@ ராம லக்ஷ்மி மேடம் நன்றி :)

@ கலா நீங்க கேட்ட கேள்வி எதுவுமே எனக்கு புரியலை கடைசியா என்ன சொல்ல வர்றீங்க ? செம கலாய் நான் அவுட் நன்றி மேடம்

@ ப்ரதீப் நன்றிங்க எல்லாம் ப்ளாக் விட்ட வழி பார்க்கலாம்

@ குமார் நன்றிங்க

@ வேல்ஜி நன்றி பாஸ் :)

@ சீமான்கனி நம்பாதடா டேய் நம்பாத நன்றி மாப்ள!

@ ஆனந்தி மேடம் சொல்லிடலாம் நன்றிங்க:)

@ ஹேமா அதானே இங்கு எதுவுமே எதுவோ ஒன்றின் சாயலில்தான் இருக்கின்றன என்ன செய்யலாம்?

@ சிங்ககுட்டி நன்றி அப்போ நீங்களும் காதல் ராஜாதானா?

@ ஆர்.வி.எஸ் நன்றிங்க ! சொல்லலாம்

@ ப்ரின்ஸ் யெஸ் நன்றி பாஸ்

@ பூபாலன் என்னடா இவனைக்காணோமேன்னு பார்த்தேன் இதானா சங்கதி இருக்கட்டு இருக்கட்டு நன்றிடா தம்பி

@ ஜெயந்தி மேடம் மிக்க மகிழ்ச்சி மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ அமைதிச்சாரல் பெயர் மிஸ்ஸாயிடுச்சுங்க சாரி நன்றி..!