December 12, 2011

'காமன்' வெல்த் (U/A)



ஒரு நாள் இருவரும் வெளியிலிருக்கும் ஒரு பார்க்கில் சந்தித்து கொண்ட பொழுது அவள் கையிலிருக்கும் மச்சத்தை பார்த்துவிட்டு ஹைய்யோ இத எப்படி கவனிக்காமல் போனேன் எங்கே சொல் உன் உடம்பில் எத்தனை மச்சம் இருக்கிறதென்று? என்று அவளிடம் கேட்டேன் ஏன் கேட்கறடா என்று வினவியவளிடம் சும்மா ஒரு லவ் நாலேட்ஜிற்க்குத்தான் சொன்னால்தான் என்னவாம் என்றேன் சிணுங்கியபடியே மொத்தம் பத்து இருக்கிறது என்றாள் எங்கெல்லாம் என்றேன் ஆச தோச நீயே கண்டுபிடிச்சுக்கோ என்றாள் பாவம் நீயாகவே சொல்லிவிட்டாயென்றால் உனக்கு நல்லது இல்லையென்றால் எனக்கு நல்லது ம்ஹூம் சொல்லமாட்டேன் என்றாள் அப்படியா மேடம் அப்போ நம்ம மேரேஜிற்க்கு பிறகு நானே கண்டுபிடித்துக்கொள்கிறேன் ஆனால் ''நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு மச்சங்களையும் வரிசையாக இணைக்கும்படி என் உதட்டால் உன் உடம்பில் மச்சக்கோடு வரைவேன் பரவாயில்லையா?'' என்றேன் ஆஆங் அதெப்படி முடியாது என்றாள் அப்போ சொல் என்றேன் ம்ஹூம் என்றாள் அப்போ மச்சக்கோடு ஒகேவா என்றேன் ஒகே என்றாள் கீழ் உதட்டை கடித்தபடியே..

திருமணத்திற்க்கு பிறகொரு நாள் புத்தம் புதிய ஒரு சேலை அணிந்துகொண்டிருந்தவள் என்னருகில் வந்து இந்த காட்டன் சாரி எனக்கு நல்லா இருக்கா என்று வினவினாள் சூப்பரா இருக்கு ஆனால் ''உனக்கு கூந்தல் சேலைதான் கொள்ளையழகு'' என்றதும் கூந்தல் சேலையா? என்று ஆச்சரியத்தோடு வினவியவளிடம் அதான் கண்ணே நேற்றைக்கிரவில் ''உன் உடம்பெங்கும் விரவியிருந்த உன் கூந்தலைத்தான் சொன்னேன்'' என்றபடி அவளை கட்டியணைத்தேன் ச்சீய் சரியான காட்டான்டா நீ என்று என்னிடமிருந்து விடுவித்துக்கொண்டு ஓடியவளை கூந்தல் சேலை அணிவிக்க வெகு நேரமாயிருக்கவில்லை..

மறுநாள் , குளித்துமுடித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட தலையை சிலுப்பியபடி சிணுங்கல்முகத்துடன் என்னிடம் வந்தவள் உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருந்தா இப்படிலாம் பண்ணுவியா நீ என்றாள் என்ன சொல்ற நீ ? ம் ஆமாம் உடம்புல சுடு தண்ணீர் விழுந்ததும் ஒரே எரிச்சல் என்னவென்று பார்த்தால் உடம்பெல்லாம் உன் நகக்கீறல் முதலில் உன் நகத்தை வெட்டிவிட வேண்டும் என்றாள் சிணுங்கலுடனே ஓஹ் அதுவா? அது ''நேற்றைக்கு நாம் கலந்துகொண்ட காமன்வெல்த் கேம்ஸில் நீ வாங்கிய பரிசுகள்'' கண்ணே என்றதும் இன்னும் வெட்கப்பட்டு சிரித்தாள் ஈரக்கூந்தல் அள்ளிமுடித்தவளை இன்னொரு காமன்வெல்த் கேம்ஸிற்க்கு தயார் படுத்தினேன்.

இன்னொரு நாள் பகல் பொழுதில் என் மடியில் தலை வைத்து படித்திருந்தவள் என்னிடம், நான் சாரிகட்டுறது பிடிச்சிருக்கா இல்லை சுடிதார் போட்டிருப்பது பிடிச்சிருக்கா என்றாள் சாரிதான் என்றேன் ஏன் என்றாள் சேலையில்தான் உன் வனப்பான பிரதேசங்கள் என்னை இன்புறச்செய்கின்றன என்றபடி உனக்கெது சவுகர்யமாக இருக்கிறது என்று வினவினேன் சுடிதார் என்றாள் ஏன்? என்றதும் , ''உங்களோட ப்ராபர்டிஸ் எல்லாம் பத்திரமா பாதுகாப்பா இருக்க ஹெல்ப் பண்ணுதே '' என்று வெட்கியவளை அடிக்கள்ளி என்றபடி அவள் உதட்டில் மென் முத்தமிட விடுங்க பட்டப்பகலிலேவா என்றாள் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றதும் சிவந்த அவள் முகம் இன்னும் சிவக்க ஆரம்பித்தது..

ஒரு நாள் மாலைப்பொழுதில் நான் புத்தகம் படித்துக்கொண்டிருக்கையில் என் நெற்றியில் முத்தமிட்டவள் நீங்க எனக்காக எழுதிய கவிதைகள் அத்தனையும் ஏன் அந்த கருப்பு வண்ணத்திலிருக்கும் டயரியில் எழுதினீர்கள் எல்லோரும் வெள்ளை டயரியில்தானே எழுதுவார்கள் என்றாள் அதுவா ''நீ இந்த விமானத்தில் இருக்கும் கருப்புப்பெட்டி கேள்விப்பட்டிருப்பாய் விமானம் விபத்துக்குள்ளானால் அந்தகருப்புப்பெட்டியிலிருக்கும் ரகசியத்தை அனைவரும் தெரிந்துகொள்வார்கள் அதுபோலவே நான் உன் மேல் வைத்திருக்கும் அத்தனை காதலையும் இந்த கருப்புடயரி ரகசியமாய் வைத்திருக்குமென்றேன்'' , உணர்ச்சிவசப்பட்டவள் மிக தைரியமாக ஃப்ரெஞ்ச் கிஸ் ஒன்று கொடுத்தபடி என்னை வாரியணைத்தாள்.

மங்கிய நீல நிற இரவு விளக்கில் இருவரும் ஆதாம் ஏவாளாய் இருக்கையில் சின்ன சின்னதாய் காதல்ஸ்வரங்களாய் அவளின் கொலுசும் வளையல்களும் சத்தங்கள் எழுப்பிக்கொண்டிருந்தன இந்த கொலுசும் வளையலும் ஏன் சத்தம் போடுகிறதென்று தெரியுமாவென்றேன் இல்லையே என்றாள் நான் உன்னிடம் சரணடைந்துவிட்டதை பார்த்த கேலிச்சிரிப்புதான் அது என்றேன் ஓஹ் அப்படியா என்றவளிடம், கலைந்து போடப்பட்ட ஆடைகளை காட்டி ' அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்கபோல' என்றேன் சிரித்தபடி ஏன் அப்படி சொல்றீங்க என்றாள் அவங்கள நம் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லையே அதுதான் காரணமாயிருக்கும் என்றதும் க்ளுக்கென்று சிரித்தவளும் நானும் மீண்டுமோர் கள்ளாட்டம் விளையாட ஆரம்பித்திருந்தோம்..



5 comments:

வெளங்காதவன்™ said...

மச்சி....

செம.....

செமையோ செம!!!!

ஹேமா said...

வசந்து...உங்கள் பக்கம் வந்து உங்களையே தேடிக்கொண்டிருக்கிறேன்.ஆரம்பகாலம் நாங்கள் ரசித்த வசந்தை யாராவது கண்டீர்களா ?!

ப்ரியமுடன் வசந்த் said...

sivasankar நன்றி மச்சி

ஹேம்ஸ் மாற்றம் ஒன்றே மாறாதது

NAAI-NAKKS தாங்க்யூ டியர்

நிகழ்காலத்தில்... said...

வேலைப் பளுவிற்கு இடையே இதை வாசித்தேன். மனம் சட்டென உற்சாகமாகிவிட்டேன் ..:))

ரசிப்புத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய ஒன்று.,

ப்ரியமுடன் வசந்த் said...

நிகழ்காலத்தில் சிவா தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி பாஸ்