சென்ற வாரம் ரோபோட்ஸ் - 1 ல் கூறியது போல இந்த வாரம் சந்தையில் அறிமுகமாயிருக்கும் ரோபோட்களை பற்றி பார்ப்போம்..( ஏற்கனவே இதைப்பற்றி அறிந்தவர்கள் இருப்பீர்கள் இந்த அறிமுகங்கள் இதுவரையிலும் இவைபற்றி தெரியாதவர்களுக்கானது)
BIPEDAL ROBOTS
டொயோட்டா நிறுவனத்தின் Humanoid Robot கள் உருவாக்கத்தின் முதல் வெர்சனில் மனிதனைப்போன்றே ஓடக்கூடிய நடக்கக்கூடிய ரோபோட் தயாரிக்கப்பட்டது. இந்த ரோபோட் மணிக்கு 7கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது.இந்த ரோபோட்டின் இயக்கம் சம தள தரையில் மட்டுமே சாத்தியம்.இதனால் மேடு பள்ளமான தளங்களில் இயங்கமுடியாது இதன் பெயர் Bibedal Robot.Bibedal என்றால் Two feet (இரண்டடி).
இசைக்கும் ரோபோட்
டொயோட்டா நிறுவனம் Bipedal Robot களின் அடுத்த வெர்சனாக இசைக்கும் ரோபோட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.இந்த ரோபோட் 1.5 மீட்டர் உயரம் உடையது.மனிதனைப்போன்றே இருக்கும் இந்த ரோபோட்டின் கைகளில் 17 எந்திரமூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.இதன் எடை 35 கிலோ.இந்த ரோபோட்களின் பெயர் Segway ரோபோட்ஸ்
இசைக்க மட்டுமல்ல இவை மனிதர்களுக்கு உதவி செய்யவும் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு உதவி புரியவும் பயன்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கிறது.இதில் இரண்டுவகை ரோபோட்கள் உருவாக்கப்பட்டுள்ளன ஒன்று மனிதனைப்போலவே நடந்து செல்லக்கூடிய வகையில் கால்களுடையதாகவும் , மற்றொன்று உருண்டு செல்லக்கூடிய வீல்கள் உடையதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
(வரும் காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்க ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)
I-foot ROBOTS
இந்த PARTNER ROBOTSகளின் லேட்டஸ்ட் வெர்சன் I-Foot Robots கள் மனிதனை சுமந்து செல்லும் யானையைப்போலவே நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு அலேக்காக தூக்கி செல்வதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற பதிவில் வடுவூர் குமார் கேட்டிருந்தார் படியில் முதியோர்களை எடுத்து செல்லும் வகையில் ரோபோட்கள் இருக்கின்றதா என்று. இந்த ரோபோட்கள் அந்தப்பணியை கச்சிதமாக செய்கின்றன என்பதை வீடியோ பார்த்தால் புரியும்.
இதன் முந்தைய வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோட்கள் சமச்ச்சீரான தளத்தில் மட்டுமே நடந்து மற்றும் உருண்டு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த ஐ-ரோபோட்கள் எந்த வகை தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இந்த ரோபோட்களின் கால்களில் வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் வசதி.
இதன் முந்தைய வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோட்கள் சமச்ச்சீரான தளத்தில் மட்டுமே நடந்து மற்றும் உருண்டு செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்தன ஆனால் இந்த ஐ-ரோபோட்கள் எந்த வகை தளத்திலும் நடந்து செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.இந்த ரோபோட்களின் கால்களில் வெளிச்சம் தரக்கூடிய டார்ச் லைட்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் வசதி.
அடுத்த வாரம் வேறு ஒரு ரோபோட்டினை பற்றி காண்போம்... நன்றி,,,
.
34 comments:
ரோபட் பற்றி புதிய செய்திகளை அறிந்துகொள்ளமுடிந்தது.
Super Robots! :-)
நல்ல தொகுப்பு. வீடியோ அருமை
ரோபோட் இல்லாம வருங்காலமில்லைன்னு மட்டும் தெளிவா புரியுது.. :-))
திரைப்படங்களுக்கு ரோபோ இசையமைத்தால் பிளாட்டாகதானே இருக்கும் மாப்ள ..
ரோபோ பற்றிய உனது ஆராய்சிகள் அற்புதம் மாப்பி தொடரட்டும் நாங்களும் இன்னு நிறைய தெரிந்துகொள்கிறோம்...வாழ்த்துகள்...
அறியாத விஷயங்கள். வீடியோ பகிர்வும் வெகு அருமை. நல்ல பதிவு. தொடருங்கள்.
ரோபோடா...
இன்னும் வரட்டும்..
நல்ல தொகுப்பு.. ரோபட் பற்றி புதிய செய்திகளை அறிந்துகொள்ளமுடிந்தது.
i-foot robot இது ரொம்ப கவர்கிறது
தொடருங்கள் வசந்த் நாங்களும் கற்கிறோம்
ரைட்டு. இதுக்குதான் ரொம்ப படிச்சவங்கிட்ட சேர கூடாதுனு சொல்லுறது
உபயோகமான தகவல்கள் வசந்த். தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.
கலக்குறே பங்காளி...., ரோபோட்ஸ் பதி நெறய தகவல்கள், தெரிஞ்சிகிட்டாச்சி.
mmm நடக்கட்டும்
நடக்கட்டும்
நடக்கட்டும்
ரோபாட்கள் உண்மைலேயே
The Miracle In Electronics.
ஆனால் வாரம் ஒருமுறைதான் சொல்லுவீர்கள்
என்பது சற்று வருத்தம்..
இன்னும் சில உணர்ச்சியற்ற மனித ரோபோக்கள் நம்மிடையே உள்ளன...
இங்கே....
http://sethupathicheemai.blogspot.com/2010/08/blog-post_20.html
ஓ ரோபாவா...
புதிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி வசந்த்.
வசந்த்,
அறியாத அறிவியல் தகவல்கள் . பகிர்விற்கு நன்றி.
(குழந்தைப் பெத்துக்கற ரோபோவுமா இருக்குது?)
//(வரும் காலத்தில் திரைப்படங்களுக்கு இசையமைக்க ரோபோட்கள் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.)//
அதுக்கும் நாங்க விமர்சனம் எழுதுவோம் இல்லை..
நல்ல பகிர்வுப்பா..
super information.. thankyou
I foot robot நன்றாக இருந்தாலும் அதனை நம்வீட்டு மாடிப்படிகளில் உபயோகப்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன்..
முதல் காரணம்-படிக்களுக்கு இடையே உள்ள உயரம்.நகர் படத்தில் பார்க்கும் போது அதன் உயரம் 2 மீட்டர் வரை இருக்கும் போல் இருக்கு.
இரண்டாவதாக அதன் விலை- நிச்சயமாக ஒரு லிப்டே கட்டிவிடலாம்.
நான் எதிர்பார்பதெல்லாம்,எளிமை,அளவில் சிறியன மற்றும் குறைந்த விலை அதோடில்லாமல் நம் ஊர் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி இருக்கனும்.
எனினும் ஞாபகம் வைத்து விபரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
வாவ்.. வீடியோக்கள் ரொம்ப அருமை வசந்த்.. அதுவும் இசைக்கும் வீடியோ - கடைசியில கைய உயர்த்தி காமிக்குதுங்களே :))
எனக்கு காரோட்டற மாதிரி ஒரு ரோபோட் இருந்தா நல்லாயிருக்கும் :)
அருமையான பகிர்வு வசந்த்.
சூப்பர் வசந்த், அந்த நிஜம் சுடும் இடுகையும் மிக அருமை :-)
@ அக்பர் அண்ணா நன்றிண்ணா
@ சித்ராம்மா நன்றி :)
@ கலா நேசன் நன்றிங்க :)
@ சாரல் மேடம் கண்டிப்பா நன்றி மேடம்
@ செந்தில் மாம்ஸ் பிளாட்டா? ஆவ்வ் :)
@ சீமான்கனி நன்றி மாப்ள..
@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி மேடம்
@ யோகா நன்றி மாப்ள
@ வெறும்பய நன்றி மச்சி
@ ஜமால் அண்ணா யெஸ் நானும் அந்த வீடியோவ கிட்டதட்ட 10 தடவிக்கு மேலயாச்சும் ரிப்பீட்டடா பாத்திட்டேன் எவ்ளோ யோசிச்சுருக்காங்க ம்ம் நன்றிண்ணா
@ அருண் பிரசாத் ஏ. இ. கொ.வெ?
@ கவி சிவா நன்றிங்க :)
@ ஜெயக்குமார் பங்கு கண்டிப்பா படிச்சியா?
@ ரமேஷ் மாம்ஸ் நன்றி :)
@ பூபாலன் படிச்சேன் என்னோட பஸ் ஃபேஸ் புக்கில் பகிர்ந்துகிட்டேன்
@ சதீஷ் குமார் நன்றிங்க ஆமாங்க
@ சரவணக்குமார் அண்ணா நன்றிண்ணா
@ சத்ரியன் அண்ணா :)))))) கிகிகிகி இருங்க கண்டுபிடிச்சு வீடியோவா போடறேன்... ரொம்ப பேராசைதான் உங்களுக்கு?
@ சுசி எழுதுங்க எழுதுங்க நன்றிப்பா
@ புஷ்பா நன்றிப்பா :)
@ வடுவூர் குமார் ம்ம் கொஞ்ச நாளைக்கு முன்ன மொபைல் லேப்டாப் கம்ப்யூட்டர் இதோட விலை கூட ஜாஸ்திய்யாத்தான் இருந்துச்சு உபயோகம் அதிகமாக உற்பத்தி அதிகமாகும் அப்போ விலை குறையும்...
@ சந்தனா ட்ரைவர் ரோபோ கூட இருக்குப்பா நன்றி
@ மாதேவி மேடம் நன்றி
@சிங்க குட்டி நன்றிப்பா
ரோபட் பற்றி புதிய செய்திகளை அறிந்துகொள்ளமுடிந்தது.
திரைப்படத்துக்கு ரோபாட் இசையமைத்தால் எப்படி? ஒரே மெலடி இல்ல ஒரே டிரம்மா!!!!!!!!!
சூப்பர் வீடியோ &சூப்பர் ரோபோட்ஸ் ..பகிர்வுக்கு நன்றி
நல்ல எந்திரன்-கள்(?) சார்
@ நன்றி குமார்
@ நன்றி ஆதிரா
@ நன்றி சந்த்யா
@ நன்றி மங்குனி அமைச்சர்
எந்திரன் படம் வருவதற்கு கவுண்ட்டவுன் மாதிரி இருக்கிறது இந்தத் தொடர்.
@ பின்னோக்கி சார் அப்படியில்லை சார் :)) நன்றி
Post a Comment