March 2, 2010

சைக்கிள்,சாலிடேர்,கருத்தம்மா,(18-)

இளமைக்காலம் ம்ம்ம்ம்....திரும்பகிடைக்காத ஒரு பொக்கிஷம் இந்த தொடர் பதிவெழுத அழைத்த என் உடன்பிறவா அண்ணன் பா.ரா அவர்களுக்கும் கயல்விழி , திவ்யா ஹரி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்...

கொஞ்சம் பெரிய பதிவா இருக்கும் நேரம் கிடைக்கும்போது வாசித்துவிடுங்கள்...
(படிப்பு தவிர்த்த விசயங்கள் மட்டுமே ஞாபகமா இருக்கு)

சைக்கிள்


எனக்கு வயது 13 இருக்கும்பொழுதெல்லாம் சைக்கிள் ஓட்ட அலாதி பிரியம் அப்பாவோட பழைய சைக்கிள் டொக் டொக் போட்டு ஓட்டி பழகி ரெண்டு கையும் உடைஞ்சு எங்க ஊருக்கு பக்கத்தில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பெயர் போன பூசனம்பட்டி கட்டு போட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்ட லைசன்ஸ் எடுத்திருந்தேனுங்க...எங்க ஊர்ல இருந்து நான் படிச்ச அரசினர் மேல்நிலைப்பள்ளி ரெண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் எட்டாப்பு படிக்கிற வரைக்கும் நடந்தே போயிட்டு நடந்தே வந்தேன் அதுக்கப்புறம் அப்பாகிட்ட சைக்கிள் வாங்கி கொடுத்தாதான் ஸ்கூலுக்கு போவேன்னு அடம்பிடிச்சு அட்லஸ் முக்காவண்டி புளூகலர் சைக்கிள் வாங்கினேன். பிறகு அந்த சைக்கிள் வச்சுகிட்டு நான் பண்ணுன அலும்பு இருக்கே எல்லாரும் அவங்க அவங்க சைக்கிள்ல அவங்க பேரை இங்கிலீஸ்ல எழுதிருப்பாங்க எனக்குத்தான் ஆங்கிலம் எதிரியாச்சே நான் என்னோட பெயரை தமிழ்ல தே.வசந்தகுமார்ன்னு எழுதிட்டு அதுக்கு ரெண்டு புறமும் ஒட்டாத ஸ்டிக்கர் இல்லைங்க அம்புட்டு டெக்கரேசன் சைக்கிளுக்கு பின்ன இருக்காத ஆசை ஆசையா வாங்குன சைக்கிளாச்சே..பிறகு கூட படிக்கிற புள்ளைகள சைடு வாங்கி கிராஸ் பண்ணும்போது யாரும் கண்டுக்கிறதே இல்லை ஆனா பைக் ஏதாச்சும் கிராஸ் ஆச்சுன்னா திரும்பி பார்ப்பாளுங்க அப்போ எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு சைக்கிள் ரிம் ஃபோஸ்ட்ல தட்டுற மாதிரி முக்கோண கம்பியில ஒரு பலூன் சின்னதா ஊதி கட்டி ஸ்டாண்ட் போட்டு நானே ஒரு வாட்டி சுத்தி பாத்தேன் நல்ல தட தடன்னு சவுண்ட் வந்துச்சு...எப்பிடி நம்ம கண்டுபிடிப்புன்னு நானே என்னை பாராட்டிகிட்டு அடுத்த நாள் சைக்கிள் எடுத்துட்டு ஸ்கூலுக்கு போறேன் ரோட்ல நிக்கிற அம்புட்டு பேரும் நான் சைக்கிள் ஓட்டுறதை வித்யாசமா பார்த்தாங்க...இதோட ஒரு காதலும் வந்துச்சு....

SOLIDAIRE TV

என் இனிய இயந்திரா நாடகம் அப்போ ஃபேமஸா போயிட்டு இருந்த சமயம் பக்கத்துவீட்டு கோவிந்தராஜ் அண்ணா வீட்டுல அது எங்கூர்ல நாலாவது டிவியாக்கும் அதுல பாத்துட்டு இருந்த சமயம் எங்கப்பா சாலிடேர் டிவி வாங்கிட்டு வந்தார் இது எங்கூர்ல அஞ்சாவது டிவியாயிடுச்சு அதுல வர்ற ஒலியும் ஒளியும் ஞாயிற்றுகிழமை படம் பார்ப்போம் ஒரு மூணு வருசத்துக்கப்புறம் டிவி மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சு இதோ இந்த படத்தில இருக்குற மாதிரி புள்ளி புள்ளியா தெரியும் லேசா டிவிய தட்டுனா நல்லா தெரியும் ஒரு நாள் வீட்ல யாரும் இல்லாத நேரம் இதே மாதிரி ஆகிப்போக ஆண்டென்னா ஏரியல் வயர எடுத்துட்டு அதுல ப்லக் மாட்டி கரண்ட் குடுத்தா நல்லா தெரியும்ன்னு நினைச்சு அதே மாதிரி ஏரியல் மாட்டுற இடத்தில பேஸ் நியூட்ரல் கனெக்சன் கொடுத்து சுவிட்ச் ஆன் செய்றச்சே டமார்ன்னு ஸ்பீக்கர் வெடிச்சதுதான் தெரியும்...நான் எஸ்கேப்...அன்னிக்கு தெரியாது பின்னாடி நான் ஒரு எலக்ட்ரிகல் என்சினியரா ஆவேன்னு....

சினிமா சூட்டிங்


(இந்த போட்டோ பத்தாவது படிக்கிறப்போ ஹால் டிக்கெட்டுக்காக எடுத்ததுங்க நம்புங்க மீசை கூட முளைக்காத வயசு அது)

1996-1997 வருட பத்தாம் வகுப்பு பேஜ்ங்க , அன்னிக்கு திங்கள் கிழமை முதல் பீரியட் ஆங்கில வாத்தியார் பீரியட் JACKCROW essay டெஸ்ட் வச்சுருந்தாருங்க அப்போ தேனியில பைபாஸ் ரோட்ல சூட்டிங் நடக்குதுன்னு பக்கத்துல இருக்குற வடபுதுப்பட்டி ஃப்ரண்ட்ஸ் ஸ்டடி ஹவர்ல வந்து சொன்னாய்ங்க எஸ்ஸே வேற படிக்கலை ,அப்போ நானும் இன்னும் அஞ்சாறு பசங்களும் ஆறு கிலோமீட்டர் சைக்கிள்ளயே போயிப்பார்த்தா எட்டுப்பட்டி ராசா பட சூட்டிங் நெப்போலியனுக்கு டான்ஸ் மாஸ்டர் டான்ஸ் சொல்லிக்கொடுத்திட்டு இருந்தார் பிறகு இன்னும் கொஞ்ச பேரும் வந்தும் கூட டான்ஸ் ஆடுனாங்க அதுல ரெண்டு பொண்ணுக மட்டும் செவேலுன்னு இருந்தாங்க யாருன்னே அடையாளம் தெரியலை ஒரு வழியா சூட்டிங் பாத்து முடிச்சுட்டு வீட்டுக்கு போயாச்சு டெஸ்ட்டும் எழுதலை,மறு நாள் கிளாஸ் லீடர் நாங்க சூட்டிங் பாக்கப்போனதை வாத்திகிட்ட வத்தி வச்சுட்டான்.வாத்தியார் கிளாஸுக்கு வந்து எவன் எவண்டா சூட்டிங் பாக்கப்போனது எந்திரிங்கடான்னு சொல்ல எனக்கு கை காலெல்லாம் உதறுது கூட்டாளிகளோட சேர்ந்து நானும் எந்திரிச்சு நின்னேனுங்க அப்போ வாத்தி சொன்னதகேட்டு கிளாஸே சிரிச்சுடுச்சு என்னையும் ஏண்டா கூட்டிட்டு போகலைன்னு கேட்டுப்போட்டாருங்க...பொறவு அந்த எட்டுப்பட்டி ராசா படம் ரிலீஸ் ஆகி எட்டுப்பட்டி ராஸா காதக்கொடுங்க லேஸான்னு பாட்டு டிவியில போடும்போது ஊர்வசியும் குஷ்புவும் நெப்போலியனோட சேர்ந்து ஆடுறாங்க அப்போ நாங்க வெள்ளையா ரெண்டு பொண்ணுக பாத்தேன்னு சொன்னேனே அது குஷ்புவும் ஊர்வசியும்தான்னு அப்புறம்தான் தெரிஞ்சு ரொம்பவே குஷியாகி ஹேய் நாங்க குஷ்புவும் ஊர்வசியும் பாத்துட்டோமேன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு திரிஞ்சேனுங்க அது ஒரு காலம்....அதுக்கும் அப்புறம் ரொம்ப நாளு கழிச்சுதான் தேனியில இருக்குற கிருஷ்ணா, கோபி கிருஷ்ணா தியேட்டர் ரெண்டுத்தையும் விஜிகிருஷ்ணா விஜி கோபிகிருஷ்ணான்னு மாத்தி கஸ்தூரிராஜா வாங்கினதுக்கப்புறம்தான் அவரு தேனிஅல்லிநகரத்தை சேர்ந்தவர்ன்னு தெரியும்ங்க...

கருத்தம்மா


கருத்தம்மா படம் தெரியும்தானே பாரதிராஜா சார் படம் அதுல சின்ன ராஜஸ்ரீ கேரக்டர்ல நடிச்ச ஒரு புள்ள நான் பத்தாவது படிக்கும்போது அது ஆறாப்பு வந்து சேர்ந்துச்சு அது பண்ணுற அலும்பு இருக்கே ஆத்தாடி உலக அலும்புடா சாமீய்ய்..பசங்க கிட்ட கேட்டப்போதான் தெரிஞ்சது அம்மூரு காமக்காபட்டில இந்த படம்புடிக்கிறப்போ இந்த புள்ளைய இத்துனூண்டு சீன்ல நடிக்க வச்சுருக்காய்ங்கன்னு ஒரு நாள் என்னோட சைக்கிள இடிச்சு தள்ளிவிட்டு அதோட சைக்கிள நிறுத்திடுச்சுங்க என்னடி கருத்தம்மா ரொம்ப திமிரான்னு கேட்டதுதாங்க தெரியும் அதுக்கப்புறம் போடா வெண்ணேய்ன்னு அது சொன்னது இன்னமும் காதில ஒலிக்குதுங்க...அப்பிடி என்ன இந்த புள்ள நடிச்சுடுச்சுன்னு கருத்தம்மா வீடியோ கேசட் வாங்கி பாத்தேனுங்க அப்போதான் பாரதிராஜாவும் தேனிய சேர்ந்தவருன்னு தெரியும் பொறவு தேனி பங்களா மேடு ரோட்ல இருக்குற அத்தை வீட்டுக்கு போற வழியில ஒரு வீட்ல மனோஜ் மாடியில நின்னுகிட்டு போஸ் குடுத்தத பார்த்ததுக்கப்புறம் பாரதிராஜாவும் அம்மூருதான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டேனுங்க...

பேரலல்-பெர்ல்ஸ்

நான் அப்போ 11வது வகுப்பு படிக்கிறேன் தலைவரோட பூவே உனக்காக பாத்துட்டு தீவிர ரசிகனா மாறின நேரம் அதுக்கப்புறம் நிலாவே வா படத்தில நீ காற்று நான் மரம்ன்னு ஒரு பாட்டுல தலைவரு பேரலல் பெர்ல்ஸ் ஃபேண்ட் போட்டு நடந்துவருவாருங்க எனக்கு அது ரொம்ப பிடிச்சு போய் அந்த வருஷம் எடுத்த புளூகலர் யூனிஃபார்ம் ஃபேண்டையும் அதே மாதிரி தச்சு ஸ்கூலுக்கு போட்டு போனேனுங்க அம்புட்டு பேரையும் திரும்ப பார்க்க வைக்கிறது சுலுவா என்ன? ஆனா அம்புட்டு பேரும் என்னோட ஸ்டைல் பார்த்துட்டு அந்த மாதிரி ஃபேண்ட் தச்சு போட்டு வர ஆரம்பிக்க ஸ்கூல்ல இருக்க அம்புட்டு பசங்களும் பேரலல் - பெர்ல்ஸ் ஃபேண்ட் போட்டு வந்தானுங்க அப்போவும் நானும் ஒரு ட்ரெண்ட் செட்டர் தான்னு பெருமையா காலர் தூக்கிவிட்டு நடந்தேனுங்க....
இன்னும் அதே ஸ்டைல் ஃபேண்ட் போடறதுதான் இஷ்டமா இருக்கு காலை இருக்கி பிடிச்சு ஃபேண்ட் போட்ருக்கவங்கள பார்த்தா ஏனோ பிடிக்கிறதில்லை....

சினிமா,காதல்,மீசை,

அடி ஃபிஃப்டீன் போனது சிக்ஸிடீன் வந்தது தாவனி பார்த்தேன் மீசை வந்தது தடவி பார்த்தேன் பருக்கள் இருந்தது உன்னாலே...

நிஜமும் கூட ஒரே ஒரு பொண்ணு நான் ப்ளஸ்டூ படிக்கிறப்போ க்ராஸ் ஆனா ரெண்டு பேரும் பாத்துகிட்டே இருப்பம் பேசலாம்ன்னு நான் போகும்போதெல்லாம் அவளோட ஃப்ரண்ட் யாராச்சும் வந்துடுவாங்க அப்போ ஒரு ஏக்கப்பார்வை வீசுவாளே அதெல்லாம் அனுபவிச்சு பார்த்தாதாங்க தெரியும் அப்புறம் ஒரு நாள் நான் பேனா எடுத்துட்டு போகலை அவகிட்டயே போயி பேனா ஒண்ணு இருந்தா கொடுக்கமுடியுமான்னு கேட்டு வாங்கி திரும்ப கொடுக்குறப்போ பேனா மூடிக்குள்ள ஐ லவ் யூன்னு எழுதி கொடுத்துட்டேன்.மறு நாள் பேனா வேணுமான்னு அவ கேட்டப்போ ஒரு சந்தோஷப்பூ பூக்குமே ப்ச் இது வரைக்கும் அது போல அனுபவிக்கல..பப்லிக் எக்சாமுக்கு முன்னே பிராக்டிகல் எக்சாம் முடிஞ்சு நான் என்னோட சைக்கிள்ளயும் அவ அவளோட சைக்கிள்ளயும் ஓட்டாம உருட்டிகிட்டேமும் ரெண்டு பேரும் ரெண்டு கிலோமீட்டர் ஒருத்தர் ஒருத்தர் பார்த்துட்டே நடந்து வந்தது இன்னும் அப்படியே நெஞ்சுல பதிஞ்சிருக்குங்க...
இப்போ மே பீ அவள் ஒரு குழந்தையோடவும் கணவனோடவும் சந்தோசம் இருப்பான்னு நினைக்கிறேன்....


முதல் முதலா சினிமாவுக்கு ஸ்கூல் கட்டடுச்சுட்டு போய் பார்த்த படம் பார்த்திபன் கவுண்டமணி நடிச்ச டாட்டாபிர்லா இன்னும் ஞாபகம் இருக்கு அப்புறம் நிறைய படம் பார்த்தாலும் அந்த படம் எப்பவும் மறக்குறதில்லை,பிறகு ப்ளஸ்டூ கடைசி எக்சாம் எழுதிட்டு தேனி வசந்த் தியேட்டர்ல (என்னோட தியேட்டர் இல்லீங்கோ) என்றென்றும் காதல் படம் பசங்களோட பார்த்ததும் இன்னும் ஞாபகமா இருக்கு...

இந்த இடைப்பட்ட சமயத்தில மூஞ்சில மீசை அரும்புச்சு பசங்க எல்லாம் கிண்டல் பண்ணுனானுங்க உன்னோட மீசை முடி சின்னதா இருக்கு அப்பிடின்னு கூட்டாளிககிட்ட கேட்டப்போ சேவ் பண்ணுடா சீக்கிரம் பெரிய மீசையா முளைக்கும்ன்னு சொன்னாய்ங்களா அப்பாவோட ஷேவிங் செட் எடுத்து நானே ஷேவ் பண்ணுனேன் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் அந்த மூஞ்சிய எனக்கே பிடிக்கல ஸ்கூல்ல எல்லாம் இன்னும் நிறைய கிண்டல் பண்ண ஆரம்புச்சுட்டானுங்க அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் மீசை ஷேவ் பண்றதில்லை அதிகமா மீசையில வளர்ற முடிய வெட்டுறதோட சரி...

எவ்வளவு இனிமையான காலங்கள் மீண்டும் இவற்றையெல்லாம் நினைவு கூற வைத்தமைக்கு பாரா கயலு திவ்யாக்கு நன்றி சொல்லிக்கிறேன்

நிறைய பேர் எழுதிட்டாங்க அதனால யாரையும் அழைக்கவிரும்பலை....


32 comments:

நசரேயன் said...

//இப்போ மே பீ அவளுக்கு ஒரு குழந்தையோடவும் கணவனோடவும் சந்தோசம் இருப்பான்னு நினைக்கிறேன்....//

ஆட்டோகிராப் ???

நசரேயன் said...

//வரைக்கும் மீசை ஷேவ் பண்றதில்லை அதிகமா மீசையில வளர்ற முடிய வெட்டுறதோட சரி...//

வசந்த் யூத் இல்லையா ?

Porkodi (பொற்கொடி) said...

ஸ்கூல் பையன் ஃபோட்டோ நல்லாருக்கு! :) அநியாயத்துக்கு கொசுவத்தி சுத்துறீங்களே எல்லாரும்.. ஹும்ம்ம்..!

Santhini said...

Child/teen hood is always lovely!

பா.ராஜாராம் said...

திரும்பி பார்ப்பது ஒரு சுகம் வசந்த்.

அதிலும் பால்யத்தையும்,பதின்மத்தையும் எனில் எவ்வளவு சந்தோசம்!

இல்லையா?

முல்லைக்குதான் நாம் எல்லோரும் நன்றி சொல்லியாக வேணும்.

அருமையாய் எழுதி இருக்கீங்க தம்பு.

திருநூறு, அப்பாவி முக சாயல்.. :-) போட்டோ அவ்வளவு பிடிச்சிருக்கு வசந்த்!

Anonymous said...

நீளமா இருந்தாலும் நல்லா இருக்கு

Kala said...

வசந்த் உங்களின் இனிமையான நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அதுக்கப்புறம் வேறு யாரையும் பார்த்துக்
காதல் வரவே இல்லையா....!!??
இந்தப் பொய்தானே வேணாங்கிறது

ஆண்மைக்கு அழகே அவர்களின்
மீசைதான்,உங்கள் போட்டோவில்
உங்களைவிட....அதுதான் அழகாய்
இருக்கிறது{ரொம்ப்ப பறக்க வேண்டாம்}


இப்படி..ஒரு அழகான பையனுக்கு மேல..
அப்படியொரு பெண் படம் தேவையா?

முதல் மரமண்டயர் என்று ஒன்று...
அப்புறம் இது இதெல்லாம் பார்த்தால்
ம்மம்மம்மம்மம்.......முடியவே முடியவில்லை
ரசிக்கின்றமாதிரிப் போடப்பு

புலவன் புலிகேசி said...

//அதுக்கப்புறம் போடா வெண்ணேய்ன்னு அது சொன்னது இன்னமும் காதில ஒலிக்குதுங்க.//

காதுல பஞ்சு வச்சிக்குங்க...நல்ல நினைவுத் திரும்பல்கள்

ஸ்ரீராம். said...

பால் வடியும் முகம்...

kavisiva said...

சுவாரசியமா இருக்குங்க!

சாந்தி மாரியப்பன் said...

//(படிப்பு தவிர்த்த விசயங்கள் மட்டுமே ஞாபகமா இருக்கு)//

அட.. ஏன் வசந்த்..சிவபூஜையில் கரடியை (படிப்பை) நினைக்கிறீங்க!! :-))

இயந்திரமாகிவிட்ட லைஃப்ல இதையெல்லாம் நினைச்சிப்பாத்துக்கறதே
ஒரு இனிமைதான்.

சீமான்கனி said...

ஆஹா.... ஆட்டோகிராப் அருமை மாப்ளே...ரசிக்கும்படிய வந்திருக்கு...உன் பதிவா படிச்சதும் எனக்கும் நிறைய நியாபகம் வருது....சுபெர்ர்ர்....

pudugaithendral said...

இந்த மாதிரி பதிவுகள் எழுதும் பொழுது அந்தக்காலத்துக்கே போய்விட்டா மாதிரி ஒரு சந்தோஷம் வருதுல்ல..

பதிவு நல்லா இருந்தது

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த பலூன் மேட்டர் நல்லா இருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

நினைவலைகள் அருமை வசந்த்.

தமிழ் உதயம் said...

வாழ்க்கையில் மறக்க முடியாத, மறக்கவே கூடாத பதின்ம காலங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.

சத்ரியன் said...

//அவகிட்டயே போயி பேனா ஒண்ணு இருந்தா கொடுக்கமுடியுமான்னு கேட்டு வாங்கி திரும்ப கொடுக்குறப்போ பேனா மூடிக்குள்ள ஐ லவ் யூன்னு எழுதி கொடுத்துட்டேன்.மறு நாள் பேனா வேணுமான்னு அவ கேட்டப்போ ஒரு சந்தோஷப்பூ பூக்குமே ப்ச் இது வரைக்கும் அது போல அனுபவிக்கல.//

வசந்த்,

படிக்கவும் ரசிக்கவும் நல்லாத்தன் இருக்கு. இருந்தாலும் .... விரவில் கல்யாணம் பண்ணப்போற.. எச்சரிக்கை அவசியம்.

அன்புடன் நான் said...

அருமையான நினைவுகளை சொன்னிங்க.....

///பிராக்டிகல் எக்சாம் முடிஞ்சு நான் என்னோட சைக்கிள்ளயும் அவ அவளோட சைக்கிள்ளயும் ஓட்டாம உருட்டிகிட்டேமும் ரெண்டு பேரும் ரெண்டு கிலோமீட்டர் ஒருத்தர் ஒருத்தர் பார்த்துட்டே நடந்து வந்தது இன்னும் அப்படியே நெஞ்சுல பதிஞ்சிருக்குங்க...///

இந்த இடம் மனம் கனத்தது..... காரணம் எனக்கும் அதுபோல நிகழ்ந்த்தது.... அது ஒரு உனர்வுங்க அதெல்லாம் உணர்ந்தாதான் தெரியும்.... நல்லது.

ஸாதிகா said...

சுவாரஷயம் பட அழகாக அந்த நாட்களை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.

சிவாஜி சங்கர் said...

அருமையா இருந்தது அண்ணா... நினைவுகளை திரும்பி பார்ப்பதே சுகம்.. சின்ன வயசு போட்டோவில் அழகா இருக்கேங்க..!

சுந்தரா said...

அருமையான நினைவலைகள்...

தேனிப்பக்கம் நிறைய சினிமாக்காரங்க இருக்கிறாங்கபோலிருக்குதே...

Unknown said...

உ.பி. முதல்ல அந்த திருஷ்டிய எடுங்கப்பா.. கண்ணாடில என்னய பாக்குறாப்லவே இருக்கு..

க ரா said...

இந்த கொசுவர்திசுருள் பதிவு ரொம்ப நல்லா இருக்குங்க.

Prathap Kumar S. said...

//இப்போ மே பீ அவள் ஒரு குழந்தையோடவும் கணவனோடவும் சந்தோசம் இருப்பான்னு நினைக்கிறேன்....//

அதுல என்ன சந்தேகம்டே உனக்கு... உங்கிட்டேருந்து எஸ்கேப் ஆனா நல்லாத்தான்டே இருப்பா...

நல்லவேளை மாமா பாவம் அந்தப்பொண்ணு தப்பிச்சுது...

Prathap Kumar S. said...

மாமா எங்கவீட்டுலயும் முதல்ல
சாலிடேர்தான் வந்துச்சு...

//அதுக்கப்புறம் போடா வெண்ணேய்ன்னு அது சொன்னது இன்னமும் காதில ஒலிக்குதுங்க..//

ஹஹஹ... இதை பெருமையா வேற சொல்லுதியாக்கும்....

எப்படிய்யா அந்தபோட்டோவுல திருநீருல்லாம் போட்டு பழுத்த பழமா இருக்கே... ஒரு சோடாபுட்டியும் போட்டிருந்தா நம்ம பசங்க படத்துல வர்ற மங்களம் மாதிரியே இருப்ப... ஹஹஹ.....நல்லாருடே...

கயல் said...

ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்..!

அழைப்பினை ஏற்று பகிர்ந்தமைக்கு நன்றி!

எல்லாம் அருமை! அதுசரி 'அவங்க' இப்போ எங்க இருக்காங்க?

அது யாரு அந்த பச்சபுள்ள திருநீறு சகிதமா! என்னமாதிரியே வசந்தும் ரொம்ப நல்லவரு போல!

ஒரு ஆட்டோகிராஃப் தானா... பொய் பொய்.. என‌க்கு ம‌ட்டும் மெயில் ப‌ண்ணுங்க‌ ச‌ரியா?

க‌ல‌க்கிபுட்டீங்க‌ போங்க‌!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சூப்பரா நினைவுகளை பகிர்ந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி

அப்படியே கிரிக்கெட் தொடர்பதிவு... போட்டு தாக்குங்க.

வாழ்த்துகள் வசந்த்.

Thenammai Lakshmanan said...

யார் இந்தக் குழந்தைப்பையன் வசந்தோட தம்பியா..?

நினைவுகள் அருமை வசந்த்

திவ்யாஹரி said...

//எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு சைக்கிள் ரிம் ஃபோஸ்ட்ல தட்டுற மாதிரி முக்கோண கம்பியில ஒரு பலூன் சின்னதா ஊதி கட்டி ஸ்டாண்ட் போட்டு நானே ஒரு வாட்டி சுத்தி பாத்தேன் நல்ல தட தடன்னு சவுண்ட் வந்துச்சு.//

இது மாதிரி நிறைய வண்டில பார்த்திருக்கேன்.. ரொம்ப ரசிச்சிருக்கேங்க .. பலூனை..


//வீட்ல யாரும் இல்லாத நேரம் இதே மாதிரி ஆகிப்போக ஆண்டென்னா ஏரியல் வயர எடுத்துட்டு அதுல ப்லக் மாட்டி கரண்ட் குடுத்தா நல்லா தெரியும்ன்னு நினைச்சு அதே மாதிரி ஏரியல் மாட்டுற இடத்தில பேஸ் நியூட்ரல் கனெக்சன் கொடுத்து சுவிட்ச் ஆன் செய்றச்சே டமார்ன்னு ஸ்பீக்கர் வெடிச்சதுதான் தெரியும்//

உங்கள மாதிரி தான் வசந்த் நானும.. ஆனா எலக்ட்ரிகல் என்சினியரா தான் ஆகல.. :(

//ஏண்டா கூட்டிட்டு போகலைன்னு கேட்டுப்போட்டாருங்க..//

ஹா..ஹா..ஹா.. நல்ல சார்..

//அதுக்கப்புறம் போடா வெண்ணேய்ன்னு அது சொன்னது இன்னமும் காதில ஒலிக்குதுங்க.//

ஹா..ஹா..ஹா.. :)

உங்க சினிமா, காதல், மீசை ம்ம்ம்..

சைக்கிள்..சாலிடேர்..கருத்தம்மா.. (18-) தலைப்பே அருமையா இருக்கு வசந்த்.. ரொம்ப நல்லா இருந்துச்சி.. எழுத சொல்லிட்டு இவ்ளோ late-ஆ பின்னூட்டம் போடுறேன். நேரமின்மை தான் வசந்த் காரணம்.. கலக்கிட்டீங்க.. குட்டி வசந்த் நல்லா இருக்காங்க..

பித்தனின் வாக்கு said...

// எஸ்கேப்...அன்னிக்கு தெரியாது பின்னாடி நான் ஒரு எலக்ட்ரிகல் என்சினியரா ஆவேன்னு.... //
இதைத்தான் விளையும் பயிர் முளையில் தெரியும்ன்னு சொல்வாங்க.
நல்ல பகிர்வுகள் நன்றி வசந்த்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

யதார்த்தமான பதிவு வசந்த்..

அன்புடன் அருணா said...

நல்லாத் திரும்பிப் பார்த்திருக்கீங்க!