March 29, 2010

யஹி ஹேய் ரைட் சாய்ஸ் பேபி ஆஹா...


ஒரு மனிதனுக்கு தனக்கு குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்க்கு நல்ல நாள் பார்த்து எந்த நாளில் அழைத்து வருவது என சாய்ஸ் இருக்கு...

வீட்டிற்க்கு வந்த பிறகு அந்த குழந்தைக்கு அப்பா பெயர்வைப்பதா குலசாமி பெயர் வைப்பதா இல்லை மனைவி சொன்ன பெயர் வைப்பதா தன்னுடைய முன்னாள் காதலி காதலன் பெயர் வைப்பதா என்று சாய்ஸ் இருக்கு...

குழந்தையை ஆங்கில வழிக்கல்வி கற்க வைக்கலாமா இல்லை தமிழ் வழி கற்க வைக்கலாமா என்ற சாய்ஸ்ம் இருக்கு...ஸ்கூலுக்கு போய் படிச்சதும் இறுதியில் வைக்கும் தேர்வில் எந்த விடையை தேர்ந்தெடுக்க என்ற சாய்ஸ் இருக்கு...

பையன் பத்தாவது படித்து முடித்தது அடுத்து ப்ளஸ் ஒன் போகலாமா பாலிடெக்னிக் போகலாமா ஐடிஐ போகலாமா என்று சாய்ஸ் ப்ளஸ் டூ முடித்ததும் இன்ஞினியரிங் காலெஜ் போகலாமா இல்லை மருத்துவக்கல்லூரி இல்லை ஆர்ட்ஸ் காலேஜ் இப்படி மேல்நிலைக்கல்வியில் எதை தேர்ந்தெடுக்கலாம் என ஆயிரம் சாய்ஸ் இருக்கு...

படிப்பு முடிஞ்சதும் எந்த கம்பெனிக்கு அப்ளிகேசன் போடலாம் என சாய்ஸ் இருக்கு..ரெண்டு மூணு கம்பெனியில் இருந்து இண்டெர்வியூ வந்தாலும் எந்த கம்பெனிக்கு போவது என்று சாய்ஸ் இருக்கு..இண்டெர்வியூல நம்மல மாதிரியே நிறைய பேரிலிருந்து ஒருத்தரை தேர்வு செய்ய கம்பெனிக்கு சாய்ஸ் இருக்கு...

வேலை கிடைச்சதும் வர்ற சம்பளத்தை வைப்பு நிதியில் போடலாமா இல்லை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமான்னு சாய்ஸ் இருக்கு...

பணம் நிறைய சேர்ந்ததும் அதை வைத்து ரெடிமேடாக அனைத்து வசதியும் இருக்கும் அபார்ட்மெண்டில் ஃப்ளாட் வாங்கலாமா இல்லை காலிமனை வாங்கி வீடு கட்டலாமா என்று சாய்ஸ் இருக்கு...


வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வர கார் வாங்கலாமா இல்லை பைக் வாங்கலாமா பைக் வாங்கினால் எந்த மாடல் வாங்கலாம் என நிறைய சாய்ஸ் இருக்கு...

திருமணத்துக்கு பெண் பார்க்கும் வகையில் அழகா இருக்கற பெண்கள் , அதிக வரதட்சணை கொடுக்குற பெண்கள், படிச்ச பொண்ணா பெரிய குடும்பமா என பார்க்க பொருத்தமான ஜாதகம் பார்த்து திருமணத்துக்கு பொண்ணு தேட நிறைய சாய்ஸ் இருக்கு...

திருமணம் நிச்சயமானதும் அதை ஏதாவது ஒரு மாதத்தில் வரும் நல்ல நாட்கள் நாளில் எதில் வைக்கலாம் என்று சாய்ஸ் இருக்கிறது...திருமணத்தை மண்டபத்தில் வைக்கலாமா இல்லை கோவிலில் வைக்கலாமா என்ற சாய்ஸ் திருமணத்துக்கு விருந்து சாப்பாடு போடலாமா இல்லை டிபனோட முடிச்சுடலாமா என்று சாய்ஸ் நிறைய இருக்கு....


திருமணத்துக்கு உடுத்துற உடையில் ஆயிரம் சாய்ஸ் இருக்கு...ஃபேண்ட் சர்ட் போடலாமா இல்லை வேட்டி சட்டை போட்டுக்கிடலாமா புடவை கடைக்கு போனா எந்த புடவை என்ன கலர் எடுக்கலாம் என்று சாய்ஸ் இருக்கு....

திருமணம் முடிந்து வரும் நாட்களில் மனைவி காலையில் கணவனுக்கு காபி தருவதா இல்லை டீ தருவதா என்று சாய்ஸ் இருக்கு...

அதற்கு பிறகு வீட்டில் தினமும் இட்லி வைக்கலாமா தோசை ஊத்தலாமா சாப்பாடு செய்யலாமா தோசைக்கு தேங்காய்சட்னியா இல்லை தக்காளி சட்னியா என்ற சாய்ஸ் சிக்கன் வாங்கினால் வறுக்கிறதா இல்லை குழம்பு வைக்கறதா முட்டை ஆம்லேட் போடறதா ஆஃப்பாயில் போடறதான்ற சாய்ஸ் இருக்கு...

வீட்டிலிருக்கும்பொழுது விஜய் டிவி பார்க்கிறதா இல்லை சன்னா கலைஞரா என சாய்ஸ் இருக்கு...

ஞாயிற்றுகிழமை விஜய் படத்துக்கு போகலாமா அஜீத் படத்துக்கு போகலாமா இல்லை பீச்சுக்கு போகலாமான்னு சாய்ஸ் இருக்கு...

மொபைல் நோகியா வாங்கலாமா இல்லை சோனிஎரிக்சன் வாங்கலாமா வாங்கிய பிறகு ஏர்டெல்லா,ஏர்செல்லா,ஹட்ச்சா இப்படி நிறைய சாய்ஸ் இருக்கு...

பத்திரிக்கை வகையில் தினமலர்,தினத்தந்தி,தினகரன், குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாரு, ஜெமோ, சுஜாதா இப்படி நிறைய சாய்ஸ்...

இவ்வளவு ஏங்க ஆயிரம் வலைப்பூ இருக்குற பதிவுலகத்தில் இவங்களை மட்டும் படிச்சா போதும்ன்னு குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் செலக்ட் பண்ணி படிக்க கூட சாய்ஸ் இருக்கு...

இப்படி வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாய்ஸ் இருக்கிற மனிதனுடைய வாழ்க்கையில் நமக்கு அம்மா அப்பாவாக இவர்தான் இருக்க வேண்டும் என்ற சாய்ஸ் இல்லை,ஏனென்று சிந்தனைகள் பறக்கவிட்டால் அவர்களுக்கும் நாம்தான் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை..

இறக்கும்பொழுது என்றைக்கு இறக்கப்போகிறோம்? வலிக்க வலிக்க இறக்கபோகிறோமா? இல்லை வலியில்லாமல் தூக்கத்திலே இறந்துவிடுவோமா? என்று சாய்ஸ் இல்லை(தற்கொலை செய்பவனை தவிர்த்து) ஆனால் செத்தபிறகு புதைக்கிறதா எரிக்கிறதா என்ற அதிமுக்கியமான சாய்ஸ் இருக்கிறது...இப்பொழுதுதான் தெரிகிறது தன்னுடைய சாவை தீர்மானித்து கொள்ளும் தற்கொலை செய்து கொள்ளும் கோழை எவ்வளவு அதிர்ஷ்டசாலியென்று...

வாழும்போதே வரிசையாக ஆள்களை நிற்கவைத்து அதிலிருந்து நண்பர்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...நட்புங்கூட எப்பொழுது வருகிறது எப்பொழுது பிரிகிறதென்று தெரியாமல் தானாகவே வந்து தானாகவே பிரிந்துவிடுகிறது...

பிறப்பு கூட நாம ஆணாக பிறக்கணும் இல்லை பெண்ணாக பிறக்க வேண்டும் இந்த மதத்தில் இந்த சாதியில் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் இருந்திருந்தால் நிறைய பெண் சிசு கருக்கலைப்புகள்,சாதி மத சண்டைகள் இருந்திருக்காது..

காதல் கூட ஜாதி சமயம் பணம் அழகு இதெல்லாம் பார்த்து வருவதாய் இருந்திருந்தால் இப்போ இருக்குற காதலி காதலர்களுக்கு எவ்வளவு வசதியாய் இருந்திருக்கும்? ஹும்...

(ஒரு குழப்பவாதியின் ஆதங்கம்)

34 comments:

Anonymous said...

தெளிவாத்தான் குழம்பி இருக்கீங்க .... குழப்பியும் இருக்கீங்க்...ஏன் நல்லாத் தானா இருந்தீங்க...என்ன ஆச்சு?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு...
புரிஞ்ச மாதிரி தான் இருக்கு..

Chitra said...

ஒரு மனிதனுக்கு தனக்கு குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்க்கு நல்ல நாள் பார்த்து எந்த நாளில் அழைத்து வருவது என சாய்ஸ் இருக்கு...


..... அந்த சாய்ஸ் அமெரிக்காவில இல்லை. :-(

மற்றபடி, குழப்பவாதி - எதை choose செய்வது என்று தெரியாமல் நன்றாக குழப்பி இருக்கிறார்..... :-)

திவ்யாஹரி said...

என்ன ஆச்சி வசந்த் ஏன் இவ்வளவு கேள்விகள்? எதற்காக இவ்வளவு கோபம்?

//இவ்வளவு ஏங்க ஆயிரம் வலைப்பூ இருக்குற பதிவுலகத்தில் இவங்களை மட்டும் படிச்சா போதும்ன்னு குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் செலக்ட் பண்ணி படிக்க கூட சாய்ஸ் இருக்கு...// :))

பதிவுக்கு ஏற்ற படம் குட் சாய்ஸ்.. :))

Anonymous said...

ரொம்ப தெளிவா இருக்கீங்க நண்பா...
சாய்ஸ் இல்லாத சில விஷயங்கள் தான் பொக்கிஷங்கள்,அவைகளுக்கும் சாய்ஸ் தேடினா அப்புறம் சிந்தனைகளுக்கும் வார்த்தைகளுக்கும் பிளவு வந்த மாதிரி ஒரு feeling தான் மிஞ்சும். என்ன சொல்றீங்க...

S Maharajan said...

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

இப்படி குழப்புகிறாய் வசந்த்!
இதுக்கு கமெண்ட்ஸ் மட்டும் போதுமா?
இல்லை வோட் போடனனுமா?

இதுவும் ஒரு சாய்ஸ்

தமிழ் உதயம் said...

சாய்ஸே சில நேரம் குழப்பும். மேலும் சாய்ஸ் இல்லாம வர்ற சில சிறப்பாகவே இருக்கும்.

Subankan said...

சாய்சே இல்லாம இருக்கிறதும் த்ரில்தான் வசந்த்.

நாடோடி said...

உங்க‌ளை வெண்ணை தான் குழ‌ப்பி இருக்குனு என‌க்கு புரியுது.. நான் உங்க‌ளுக்கு முத‌ல் முறையா பின்னுட்ட‌ம் போடுகிறேன். ஆனால் உங்க‌ளுடைய‌ இடுகைக‌ளை மிஸ் ப‌ண்ணிய‌து இல்லை.

சைவகொத்துப்பரோட்டா said...

இப்ப நான் எப்படி வெளியேறுவது........
ஒரே குழப்பமா இருக்கே......
எஸ்கேப்பு.

kavisiva said...

புரிஞ்சுது...ஆனா புரியல :(. இப்போ இங்கிருந்து எஸ்கேப் ஆவறது என்னோட சாய்ஸ் :)

Jaleela Kamal said...

சாய்ஸ போட்டு ரொம்ப குழப்பு போட்டிங்க..

சிநேகிதன் அக்பர் said...

குழப்பவாதி?

எல்லோரும்தான் :)

தக்குடு said...

ஏன் இந்த கொலைவெறி...:)

Rajeswari said...

nalla karuthukkal.

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் வசந்த்..

இராகவன் நைஜிரியா said...

வசந்தானந்தா சுவாமிகளே...

ஏன் இப்படி? தாங்க முடியலைங்க...

அவ்....அவ்....அவ்.

"தாரிஸன் " said...

இது புரியுது... ஆனா சுத்தமா புரியல....

பனித்துளி சங்கர் said...

ஆஹா !
என்ன ஆச்சு நண்பரே !
எதற்காகவோ முயற்சி பண்ணி இருக்கீங்க .
ஆனால் அந்த முயற்சி பல வாசகர்களை க்லோஸ் பண்ண வேண்டும் என்பதோ ?

Menaga Sathia said...

புரிந்தும் புரியாத மாதிரி இருக்கு...

300க்கு வாழ்த்துக்கள் வசந்த்!!

ஸாதிகா said...

வசந்த் தம்பி,போன வாரம் கத்தார் வில்லேஜ்ஒ மாலில் போட்டிங்கில் ரொம்ப யோசனயுடன் உங்களையே மாதிரி ஒருத்தர் உட்கார்ந்திருந்தார் போட்டே மூழ்கிப்போனப்பாதிப்புடன்.அதனுடைய பாதிப்போ இந்த மொக்கையுடன் கூடிய தத்துவம்.நீங்களும் குழம்பி,எங்களையும் குழப்பிவிட்டீர்கள்.இருந்
தாலும் மொக்கை பிளஸ் தத்துவம் நன்றாகத்தான் உள்ளது.

சாந்தி மாரியப்பன் said...

படிச்சாச்சு..

இப்ப ஓட்டு போடணுமா, இல்லையான்னு ச்சாய்ஸே வெச்சுக்கலை.ஸோ ... போட்டாச்சு.

lolly999 said...

சிந்தனை அற்புதம்!!! எல்லாம் இறைவன் செயல்.

வினோத் கெளதம் said...

எப்பா சாமி..ஏன் சாய்ஸ் எல்லாம் கொடுக்குற இங்க பாரு ஒருத்தனை..:)

Ashok D said...

vasanth தம்பி, சிலருக்கு அடுத்த வேளை சோறு கிடைக்குமா கிடைக்காதா.. என்ற எண்ணம் இருக்கிறது.

சிலருக்கு சாப்பிட உணவில்லையென்றாலும் பரவாயில்லை குடிக்க தண்ணீர் இருந்த ஒரு 2 நாள் உயிர வைச்சியிருக்கலாம்ன்னு இருக்கிறது

ஏதோ ஆப்ரிக்க தேசத்தை பற்றி சொல்லவில்லை... இந்தியாவிலேயே இந்த நிலம இருக்கிறது...

Ashok D said...

happy life vasanth ;)

(போன பின்னூட்டம் ரொம்ப சீரியஸ் ஆகிடுச்சு... :) keep rocking man)

சீமான்கனி said...

ஊருக்கு போக வேண்டிய நேரத்தில் தேவையான சிந்தனைதான்...வாழ்த்துகள்..மாப்பி முதல் பதிவு என்ன ஆச்சு டா....

Santhini said...

என்னாச்சு வசந்த் ? ஏன் இப்படி ?
தத்துவம் சொல்ல ஆயிரம் பேர் இருக்காங்க.
சந்தோஷப்படுத்த நீங்க மட்டும்தானே ?
எப்படி இருந்த நீங்க ........இப்பிடி ???????

சுசி said...

வழக்கம்போல அள்ளி வீசி இருக்கீங்க.

முதல்ல சிரிச்சிட்டே படிச்சிட்டு வந்தாலும் சீரியஸ் ஆகிட்டேன் போகப் போக.

நல்லா எழுதி இருக்கீங்க வஸந்த்.

Kala said...

நல்லது,கெட்டது எதுவெனப் பகுத்தறிவுடன்
செயல்ப் படத்தான் மனிதனை ஆறறிவுடன்
படைத்தான்,ஆனால் வாழ்க்கையே ஒரு
குழப்பமாய் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றான்
மனிதன்.

மனித மனமொரு குரங்கு அது தாவிக் கொண்டேதான்
இருக்கும்.....இதற்கு முடிவே கிடையாது
அதில் நான்,ஏன்! நீங்களும் அடக்கம் மகனே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு...

Ahamed irshad said...

குழப்பத்துல இது எந்த வகை..?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

arumai arumai.. gud vasanth..

ஸாதிகா said...

தம்பி வசந்து..என்ன ஆச்சு?