March 19, 2010

ஒரு சூப்பர்வைஸரின் நிராசைகளும்,தற்கொலை ஆசையும்...

ஒரு சூப்பர்வைசரின் நிராசைகள்

1. நிறைய சாப்பிடும் உணவுப்பொருள்ல இருந்து உயிர் காக்குற மருந்து பொருள் வரைக்கும் கலப்படம் செய்ற தொழிற்சாலை விற்பனை கூடத்தில் வேலை பார்த்து மக்களை கலப்படத்துல இருந்து காப்பத்தலாம்ன்னு ஆசையா இருந்துச்சுப்பா என்னோட ஆசையெல்லாம் நிராசையாயிடுச்சே....

2.ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலயும் அலுவலர்கள் எல்லாம் எப்பிடி தூங்குறாங்கன்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு அதுவும் நிறைவேறலை...

3.தேர்தல்ல எல்லாரும் நல்ல ஓட்டுத்தான் போடறாங்களான்னும் பாக்க ஆசையா இருக்கும் தெரியுமா அது கூட பார்க்க முடியலை...

4.அரசியல்வாதியாகி எம் எல் ஏ ஆகி எம்பி ஆகி வேலைப்பாக்குற எல்லாரும் சரியாத்தான் லஞ்சம் வாங்காம வேலை பாக்குறாங்களான்னும் தெரிஞ்சுகிட ஆசையா இருந்துச்சு ப்ச் அதுவும் நடக்கலை...

5.கவர்ன் மெண்ட் சர்வண்ட் ஆகி அரசு மருத்துவமனையில சேர்ந்து டாக்டரு நர்ஸ் சரியாத்தான் வேலை செய்றாங்களா எந்த மாதிரி மக்களுக்கு உபயோகமா இருக்காங்களான்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு...அதுவும் நிறைவேறலை..

6.ஊர்ல நடக்குற கவர்ன்மெண்ட் அலுவலக கட்டிடம் , ரோடு போடற வேலை இதெல்லாம் ஒழுங்கா நடக்குதான்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு அதுவும் நடக்கலை...

7.தலைமைச்செயலகத்தில சேர்ந்து அங்க இருக்குற வரிப்பணம் சரியா செலவழிக்கிறாங்களா இல்லையான்னும் பார்க்கணும்ன்னு ஆசையா இருந்துச்சு அதுவும் நடக்கலை...

8. ஊர்ல இருக்குற ஸ்கூலுக்கு எல்லாம் போய் பசங்களுக்கு வாத்தியார்க சரியா பாடம் சொல்லித்தர்றாங்களா இல்லை கொடுமை பண்றாங்களான்னும் பார்க்க ஆசை இருந்துச்சு அதுவும் நடக்கலை...

9.ஒரு மலர் பூங்கால கூட வேலைக்கு சேர்ந்து பூ எப்டி பூக்குதுன்னு கூட வாட்ச் பண்ணனும்ன்னு நினைச்சேன் அதுங்கூட நடக்கலை...

இவ்ளோ நல்ல வேலையெல்லாம் விட்டுட்டு கடைசியா இப்போ எனக்கு போயும் போயும் சே வெளில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு இதைப்போய் சூப்பர்வைசிங் பண்ற வேலை கிடைச்சுருக்கு நான் என்ன செய்வேன் எங்க போய் சொல்லுவேன் ...

அப்பிடி என்ன வேலை செய்தேன்னு பார்க்கணுமா இங்க கிளிக்குக...இதுவும் திருட்டு கண்டுபிடிக்கிறதும்தாங்க இப்போ எனக்கு முக்கிய வேலையா இருக்கு... :)

இப்போ சொல்லுங்க நான் செய்றதெல்லாம் ஒரு வேலையா இதுக்கு தற்கொலை பண்ணிக்கிடலாம் போல இருக்கு... என்னைய படைச்ச இவ்ளோ நல்ல வேலையெல்லாம் விட்டுட்டு கடைசியா இப்போ எனக்கு போயும் போயும் சே வெளில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு இதைப்போய் சூப்பர்வைசிங் பண்ற வேலை கிடைச்சுருக்கு நான் என்ன செய்வேன் எங்க போய் சொல்லுவேன் ...


Johann Zahn(இவருதாங்க வீடியோ கேமரா கண்டுபிடிச்சவர்ன்னு நினைக்கிறேன்)

இந்த ராஸ்கலையும் தேடிட்டு இருக்கேன்...பாவம் அந்த மனுஷன் எதுக்கு என்னைய படைச்சான்னு தெரில ஆனா நான் இப்போ பாக்குற வேலை தெரிஞ்சது உசிர விட்ருவான்....சத்தியம்....

நான் யார்ன்னு இன்னும் தெரியலையா நாந்தாங்க வீடியோ கேமரா...

23 comments:

சீமான்கனி said...

மாப்பி எனக்கு அந்த வீடியோ தெரியலடா...

ஸ்ரீராம். said...

என்னங்க இது...

VISA said...

நல்லா தானே போய்கிட்டு இருந்திச்சு!!!

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... அய்யோ... அய்யோ... திரும்பவும் ஒருத்தர் இங்க ஆரம்பிச்சுட்டாருப்பா...

அந்த வீடியோவில் யாராவது இவரைப் படம் எடுங்கப்பா..

Santhini said...

//////ஆனா நான் இப்போ பாக்குற வேலை தெரிஞ்சது உசிர விட்ருவான்....சத்தியம்////
உண்மைதான். நவீன தொழில் நுட்பங்கள் , மனித வக்கிரங்களை தூண்டுகிறதா அல்லது வெளிப்படுத்துகிறதா?
வசதிகள் என்கிற பெயரில் மனம் செம்மையுருவதற்கான வாய்ப்பு தள்ளிபோடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.--

சுசி said...

அவ்வ்வ்வ்வ்வ்..

நாங்க ரொம்ப பாவம் உ.பி..

உங்க லெவலுக்கு நீங்க யோசிக்கிறீங்க.ரைட்டு.. எங்கள பத்தி யோசிக்கிறீங்களா??

ஆவ்வ்வ்வ்வ்வ்..

ப்ரியமுடன் வசந்த் said...

சுசிக்கா சாரிக்கா

உலகமே ஒரு ஈக்காக்கா கூட விடாம பாத்திட்டாங்க இன்னும் என்ன கெடக்கு ?

தப்புத்தேன்...

Rajalakshmi Pakkirisamy said...

ஆஹா.. நீங்களுமா?

Kala said...

வசந்த் ! இதை காட்டுவதற்கு
இவ்வளவு சுற்றிவளைப்பா?

உங்களை..............

சைவகொத்துப்பரோட்டா said...

ஹையோ............ஹையோ..........

புலவன் புலிகேசி said...

அவ்வ்வ்......

நட்புடன் ஜமால் said...

கேமராவின் பார்வையில் இருந்து உனது பார்வை - மீண்டும் வித்தியாசம் வசந்த் (அதை கிளிக்கல)

Anonymous said...

ஏன் வசந்த்?

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழரசி மேடம் இது ஒரு கேமராவின் ஆதங்கம்...

நிறைய நல்லவிஷயங்கள் தவிர்த்து கெட்ட விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுகிறதே என்ற ஆதங்கம்...

ஜமால் அண்ணா சரியா சொல்லியிருக்கார் பாருங்க

:(

sathishsangkavi.blogspot.com said...

எப்படி இப்படி எல்லாம் பின்றீங்க...

Veliyoorkaran said...

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

பனித்துளி சங்கர் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !

Thenammai Lakshmanan said...

வசந்த உண்மை கமிராவுக்கு வாய் இருந்த இப்படித்தான் சொல்லி இருக்கும் நல்ல கற்பனை

Atchuthan Srirangan said...

இது என்ன கேமராவின் இன்பத் தொல்லையா???

shanuk2305 said...

This is not the fault of camera it is the fault of people's who giving importance and interest see the things shown through camera.however nice thought.sooner i will also start to post my comment in my thaimozhi

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

நீங்களுமா !

திவ்யாஹரி said...

நித்தியானந்தாவையும், ரஞ்சிதாவையும் நினைத்தோமே.. தவிர காமராவை யாருமே நினைக்கல.. வசந்த் நீங்க மட்டும் தான் அதை பத்தி யோசிச்சிருக்கீங்க.. again good post..